– தேர்தலுக்கு பின்னரான இலங்கை நிலைமைகளை முன்னிறுத்தி-
1
நடந்து முடிந்த இலங்கையின் சனாதிபதித் தேர்தல் குறித்து பலரும் அவரவர் பார்வையில் பலவாறான அபிப்பிராயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவற்றுள் அதிகமானவை தேர்தலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பானவை. அதிகமான எழுத்துக்கள் எதிர்கட்சிகளின் பிரச்சாரங்களுடன் ஒத்துப் போவனவாகவே தெரிகின்றன. தமிழ்த்தேசிய நோக்கு இணையங்கள் எதிர்கட்சிகளின் பிரச்சாரங்களில் கவனம் கொண்டதற்கு கடந்த தேர்தலின்போது வடகிழக்கில் தமிழ் மக்கள் பெருவாரியாக எதிர்கட்சி வேட்பாளரை ஆதரித்திருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
ஆனால் எனது நோக்கில், மோசடி குறித்த வாதங்கள் மிகவும் பலவீனமானதென்றே சொல்வேன். 18 லட்சம் வாக்குகளை ஒரு வேட்பாளர் மோசடி மூலம் பெற்றுக் கொண்டார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக தெரியவில்லை. இவ்வாறான புரிதல்கள் சிங்கள மக்களின் மனோநிலை, சரத் போன்சேகா குறித்து தென்பகுதியினர் மத்தியில் நிலவிய அபிப்பிராயங்கள் எவற்றையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. எனினும் தேர்தல் மோசடி குறித்த அபிப்பிராயங்கள் விரைவில் இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் விடைபெறக் கூடும் அல்லது மேலும் சூடுபிடிக்கலாம்.
சிங்கள மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் பெருவாரியாக திரு.மகிந்த ராஜபக்சவையே விரும்பினர். இதனை சிங்கள தேசியவாதத்தின் பின்புலத்திலேயே நாம் நோக்க வேண்டும். குறிப்பாக விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பின்னனியில் சிங்கள தேசியவாதம் பெறும் புதிய பொலிவு அதாவது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக பலமாக இருந்த சூழலில் சிங்கள தேசிவாதம் ஒருவகை தோல்வி மையவாதத்திற்குள் நிலை கொண்டிருந்தது ஆனால் புலிகளின் தோல்விக்கு பின்னர் அது புதிய பொலிவுடன் எழுச்சியடைந்துள்ளது.
எழுச்சியடைந்த தேசியவாத்திற்கு யார் அதிகம் உரித்துடைவர்கள் என்பதே தேர்தலின் பிரதான கோசமாக இருந்தது. இதற்கு தானே காரணம் என்று திரு.மகிந்தவும் இல்லை நான்தான் காரணம் என்று ஜெனரல் பொன்சேகாவும் உரிமை கோரினர். இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது எனது நன்பர் ஒருவர் சொன்னார், சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு மரபு இருக்கிறது அரசனா தளபதியா என்று வந்தால் அவர்கள் எப்போதுமே அரசனையே ஆதரிப்பர். இறுதியில் சிங்கள மக்கள் செய்ததும் அதனைத்தான்.
2
இலங்கை அரசியலைப் பொருத்தவரையில் தேர்தலுக்கு பின்னர் கவனம் பெறும் முக்கிய விடயம் சர்வதேச அரசியலில் இலங்கை பெறும் முக்கியத்துவம் ஆகும். இனிவரப் போகும் காலங்களில் இலங்கைக்குள் நிகழப் போகும் அனைத்தையும் மேற்படி சர்வதேச அரசியலே தீர்மானிக்கும். எப்போதுமே ஒரு தேசத்தின் அரசியல் என்பது ஒரே நேரத்தில் தேசிய அரசியலாகவும், பிராந்திய அரசியலாகவும், சர்வதேச அரசியலாகவும் இருப்பதே அரசியலின் இயங்கு விதியாகும். அரசியலை தனித்துப் பார்ப்போர் தோற்றுப் போகும் இடமும் இதுவே. இன்று இலங்கையின் அரசியல் என்பது இலங்கையின் அரசியலாக இருக்கும் அதே வேளை அது பிராந்திய அரசியலாகவும் இருக்கிறது, அதே பிராந்திய அரசியல் பிறிதொரு வகையில் சர்வதேச அரசியலாகவும் இருக்கிறது.
இலங்கை அரசியல் பிராந்திய அரசியலாக மாறும் போது, இந்திய-சீன முரண் அரசியல் களமாக உருமாறுகிறது இலங்கையின் அரசியல். அதே பிராந்திய அரசியல் அமெரிக்க நலன்சார் அரசியலுடன் முரண்படும் போது அதுவே சர்வதேச அரசியலாகிறது. இந்த முரண் அரசியல் நகர்வின் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதால் இதில் எவர் மோதிக் கொண்டாலும் நன்மை அடையப்போவது கொழும்பாகவே இருக்கும்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெளியான அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றிய அறிக்கைகள் மறைமுகமாக ஒரு செய்தியை தெளிவுபடுத்தியிருந்தன அதாவது இலங்கையுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பதே அந்த மறைபொருட் செய்தி. மறுபுறத்தில் இது வெள்ளிடைமலையாக்கும் அரசியல் என்னவென்றால் வென்றவர்களை வாழ்த்தி அரவைணைத்துக் கொள்ளுதலே இன்றைய உலக ஒழுங்காக இருக்கின்றது என்பதையே. இது குறித்துரைக்கும் மேலதிக விடயம், இதுவரை மேற்கு இலங்கை தொடர்பில் கூறிவந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ‘நலன்சார் அரசியல்’ என்னும் தந்திரோபாயத்தால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும் என்பதைத்தான். நலன்சார் அரசியலுக்கு அது தேவைப்பட்டால் மீண்டும் துசு தட்டப்படலாம். ஏற்கனவே அமெரிக்க செனட் இலங்கை தொடர்பில் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ‘இலங்கையில் அமெரிக்காவின் செவ்வாக்கை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அணுகுமுறையொன்று தேவை, அது பொருளாதார, வணிக, பாதுகாப்பு ஊக்குவித்தல்கள் மூலம் அடையப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த செனட், மனித உரிமைகளைப் பொருத்தவரையில் அவை முக்கியம் என்றாலும் அமெரிக்காவின் கொள்கையை இந்த ஒரு தனி விடயம் மட்டுமே தீர்மானிக்காது. உண்மையான சீர்திருத்தத்தை கொடுப்பதற்கு அதற்கு திறமையில்லை இப்பகுதியில் அமெரிக்க புவிசார் மூலோபாய நகர்வுகளை அது குறைத்துவிடும்’ என்றும் பரிந்துரைத்திருந்தது.
இவ்வளவுதான் எங்கள் பக்கம் திரும்பும் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சர்வதேச அரசியல். இது, நேற்று இன்று நாளை என்னும் வகையிலான ஒரு தொடர் கதை அரசியல். இதில் அப்படி நடக்கலாம் இப்படி நடக்கலாம் என்பதெல்லாம் நம்மை நாமே ஆற்றுப் படுத்திக் கொள்வதற்கான நமது எழுத்துக்களே!
3
சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத் தமிழர்கள் எப்போது பெறுகின்றார்களோ அப்போதுதான் அந்த சர்வதேச அரசியல் தமிழர்கள் பக்கமாக திரும்பும், அதுவரை அது கொழும்புடன்தான். ஆனாலும் நமது சூழலில் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்து மிகவும் எழுந்தமானமான பார்வையே நிலவி வருகிறது. இது இறுதியில் ஒரு அறிக்கையை வைத்து சிந்திக்கும் அளவிற்கு சுருங்கிவிடுவதுண்டு.
இதற்கு சிறந்த உதாரணம் ஹிலாறி கிளிண்டனின் ‘எல்லா பயங்கர வாதத்தையும் ஒன்றாக நோக்க முடியாது’ என்ற கூற்றும் நம்மவர்கள் அது பற்றி சிறுப்பிள்ளைத்தனமாக மேற்கொண்ட விவாதங்களையும் குறிப்பிடலாம். அமெரிக்கா என்ற ஒரு தேசத்தின் கொள்கை நிலைப்பாடு ஹிலாறியின் ஒரு கூற்றினாலோ அல்லது ஒபாமா பற்றி வைக்கோ ஒரு நூலை வெளியிடுவதாலோ மாறிவிடாது என்பது முள்ளி வாய்க்காலுக்கு பினர்தான் பலருக்கு விளங்கியது.
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம் என்று சொல்லுவோர் இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.
தமிழர்கள் உலக அரங்கில் சிறு துரும்பு தான்!ஒரு கட்டமைப்பாக,கூட்டமைப்பாக உலகம் பூராவும் பரந்திருக்கிறோம்.ஆனால்,இலங்கையின் தெற்கு அப்படியல்ல,உள் நாட்டிலேயே பரவும் முயற்சியை படிப் படியாக அய்ம்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை எங்கள் முற்றத்துக்கு வந்து விட்டார்கள்!கட்டுப்பாட்டில் இருந்த சில காலங்கள் விதி விலக்கு!புத்த பிரானே ஏ 9நெடுஞ்சாலை வரை வந்து விட்டார்,பாதுகாப்புக்காகவாஅல்லது பாதுகாக்கவா என்பது போகப் போகத் தெரியும்!!மெலியாரை வலியார் வருத்தினால்,வலியாரைத் தெய்வம் வருத்துமாமே?உண்மையா?
யோகா புதத சிலைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் உடைத்தபோது எனக்குள் கோபம் எழுந்தது அதுவே தமிழ்ர் பிரதேசங்கலில் வைக்கப்படும் போது சிங்களவர் மீது அனுதாபமே எழுகிறது.பெளத்தமும்,சைவமும் வேறூபட்டவை அல்ல,எமது கலாசசாரதுடன் பெரிய இடைவெளீ சிங்களவருடன் இல்லை நமது பிரச்சனை மொழி ரீதியானது.இதுவே இனப்பிரச்சனையாக்கப்பட்டு நாம் சண்டையிடும் நிலை வந்தது.
பெரும்பாலான சிங்கள மக்களூக்கு இருக்கும் புரிந்துணர்வு, அவர்களது விருந்தோம்பும் பண்பாடு ஆச்சரியமானது.காலம் நம்மை பிரித்திருக்கிறது இனைக்க நாம் எல்லோருமே உழைப்போம்.
யதீந்திரா,
நீங்கள் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஐம்பதாயிரம் மனித உயிர்களை துடிக்கத் துடிக்கக் கொன்றவர்களுக்கு 18 இலட்சம் வாக்குகள் ஒரு கேடா என்ன? தாங்கள் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றுகின்ற நவீன பாசிஸ்டுக்கள் அவர்கள்.
சரி சர்வதேசம், நமது பக்கம் என்றெல்லாம் பேசுகிறீர்கள். இந்த நாம், நம்மவர்கள் எல்லாம் இப்போது எங்கே, யார்பக்கம், சரத் பொன்சேகாவைக் கைது செய்ததையாவது விடுங்கள். எத்தனை ஊடகவியலாளர்கள் துவம்சம் செய்யப்ப்பட்டிருக்கிறார்கள். சம்பந்தன் கொம்பனி அதாவது புலிகளின் முன்னைநாள் பினாமிகள், குறைந்த பட்சம் ஒரு அறிக்கையாவது விட்டார்களா?
சர்வதேசம் என்பது இப்போது ஒடுக்கும் தேசம் மட்டும் தான். ஒரு குறித்த சிறுபான்மை பெரும்பான்மையை ஒடுக்கும் ஒழுங்கினுள் எமது கடமை பெரும்பான்மையோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது தான். இனிமேலும் அதிகாரத்தோடு சமரசத்தை நிராகரித்து அடக்கப்படுவோரு இணைந்துகொள்வோம்.
யதீந்திராவின் தேர்தல் பற்றிய பார்வை எழுந்தமானமாவே உள்ளது. மன்னன் தளபதி என்ற மரபைவிட> மாற்றுக்கான விருப்பம் சிங்கள மத்தியில் இருந்ததை காணத்தவறியுள்ளீர்கள்! மகிந்தா தோல்வியின் முடிவில் நினறு பலவற்றைச் செய்தார். கணனிக் களவில் இருந்து தோதல் ஆணையாளா. முதல் ஊழியர்கள்வரை சிறைக் கைதிகளாகக்கப்பட்டார்கள். தோற்றால் இராணுவத்தின் துணையுடணனும் பொன்சேகாவை சிறைப்படுத்தி வந்திருப்பார். 18லட்சம் வாக்குகள் என்பது மகிந்தாவிறகும் ஆச்சரியம்தான். அத்துடன் எதிர்வரப்போகும் காலம் என்ன> கடந்தகாலமும.> சர்வதேசியத்தின் தொங்கு தசையாகவே இலங்கை அரசியல் பொருளியல் வாழ்வு இருந்து வந்துள்ளது. உலகமயமாதலின் ஆசிய நோக்கிய குவிமையத்தில் இலங்கை கேந்திர மையமாகிறது. சர்வதேச சதுரங்கத்தில் தமிழ்மக்கள் பிரச்சினைை இபபோதும் ஓர் துரும்புச் சீட்டாகவே உள்ளது. அதை சரியாக சீட்டாடினால்> தமிழ்மக்கள் பக்கம் திரும்பும்.
தேர்தல் பற்றிய சர்ச்சை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முடிவுக்கு வரும். சிங்கள் மக்கள் மத்தியில் மாற்றுக்கான விருப்பமா அப்படி ஒன்றும் இல்லை. சாதாரண சிங்கள மக்களுடன் உரையாடிப் பார்்தால் அவர்கள் என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் எ்னபது தொியும் தவிர பொன்சே குறித்து தற்போதைய சிங்கள மக்களின் அபிப்பிராயம் இதுவரை நாங்கள் நமக்கு பிடிக்காதவர்களை அல்லது நமக்கு எிதிரான அரசியலைக் கொண்டிருப்பவர்களை எப்படி துரோகி என்று அழைத்தோமோ அப்படித்தான் அவர்கள் பொன்சேகாவை கருதுகின்றனர். சிலவேளை இதனை அவர்கள் எம்மிடமிருந்தே கற்றிருக்கலாம்.
ஆரம்பத்திலிருந்தே தேர்தல் குறித்து அச்சப்பட்டிருந்த மகிந்த அணியினர் அதற்கு பின்னால் பல்வேறு வெிளியக நிகழ்ச்சிநிரல் இருப்பதாகவே கருதினர் அதற்காகவே அவர்கள் சில நடவடிக்கைளை எடுத்தனர். ஊழல் இருக்கிறது என்று சொல்லலாம் அது நிரூபிக்கப்பட வேண்டும். பல ஆயிரக்கணக்கான நிலையங்களில் நடைபெற்ற வாக்கு கண்க்கிடலின் போது நடைபெற்றதாக கூறப்படும் கணிணி மோசடிக்கு ஒரு இடத்திலாவது ஆதாரம் கிட்டவில்லையா? இலங்கையின் எல்லா தேர்தல்களிலும் மோசடிகள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. இதிலும் நடைபெறாமலில்லை ஆனால் நாங்கள் கற்பிதம் செய்யும் நிலையிலில்லை. நன்பர் குறிப்பிட்ட மாற்றம் வேண்டுமானால் தமிழர்களுக்கு தேவைப்பட்டிருக்கலாம் அதிலும் கணிசமான தமிழ் மக்கள் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை. ஒரு சிங்களத் தலைவாிடமிருந்து இன்னொரு சிங்களத் தலைவருக்குச் செல்வது தமிழ் மக்களுக்கு மாற்றமாக இருக்கலாம் அனால் பெருந்தொகையான கிராமப்புற சிங்களவர்களுக்கு அந்தத் தேவைப்பாடு இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். இலங்கையின் சிங்கள சமூக அமைப்பை அதன் பௌத்த கருத்தியலுடன் பேணிப் பாதுக்காக்க முயலும் அனைத்து தரப்பினரும் மகிந்தவையே ஆதாித்தனர். அவர்களைப் பொருத்தவரையில் இதுதான் சிறந்த தொிவு. இன்று பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்கட்சிகள் சொல்வது போன்று எதிர்தரப்பினரை பழிவாங்க முயல்வதல்ல காரணம். சில தினங்களுக்கு முன்னர் தான் போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியளிக்க தயார் என்று பொன்சேகாவின் அறிவிப்புத்தான் காரணம். பல்வேறு ரகசியங்களை தொிந்து வைத்திருக்கும் பொன்சேகா தற்போது மேற்கு கொழும்புடன் சுமூகமானதொரு உறவை கடைப்பிடிக்கும் நிலையில் இவ்வாறு நடந்து கொள்வது, தமது இராஜதந்திர நகர்வுகளை பெருமளவு பாதிக்கும் என்ற அடிப்படையிலேயே மகிந்த நிர்வாகம் பொன்சேகாவை தடுத்து வைக்க முயல்கிறது. அவரை நாட்டை விட்டு வெளியேறாதபடி தடுப்பதற்கும் இதுவே காரணம். வெறுமனே ஊகங்களை வைத்து நோக்குவது ஒரு விஞ்ஞான பர்வமான ஆய்வியல் நோக்கல்ல. அனைத்தும் கடந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் என்ற அடிப்படையில் ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வருதலே சமூக விஞ்ஞான ஆய்வாகும். வெறும் வதந்திகள், குற்றச்சாட்டுக்கள் ஆய்வுக்கு உகந்தவை அல்ல.
யதீந்திரா பிரச்சினைகளை சொந்த விருப்புவெறுப்புகளுக்ப்பால் நின்று பார்க்கிறார். இது மிகவம் வரவேற்கக்கூடியதே. வாழ்த்துக்கள்.
சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு > அப்பால் இப்பால் என்பது குடும்ப அரசியலுக்கு சரிவரும். சமூக விஞ்ஞானத்தள அரசியலக்கு பொருத்த முடியாது.
சார்பின்மை பற்றிய உங்கள் கருத்து மிகச் சரியானது.
“சர்வதேச சதுரங்கத்தில் தமிழ்மக்கள் பிரச்சினை இபபோதும் ஓர் துரும்புச் சீட்டாகவே உள்ளது. அதை சரியாக சீட்டாடினால்> தமிழ்மக்கள் பக்கம் திரும்பும்.”
என்ற கருத்து ஒரு பிரச்சனையயும் உள்ளடக்குகிறது.
சீட்டை ஆடுவோர் தமிழரல்லவே. எனவே யருடைய கையிலோ ஆடப்பெளம் சீட்டுக்களாக நாம் இருக்க முடியும?
முன்பும் இவ்வாறே பயன்படுத்தப்பட்டோம். எச்சரிக்கையாய் இருப்போமா?
சரியாக சீட்டாடினால் என்பதே இயங்கியகல் விதி சீறீ அழகாகச் சொல்கிரார்.அரசியல் அறீந்திருக்கிரார்.
“ஐய்யா சம்பந்தரை” சீட்டாட அனுப்பப் போகிறோமா, அல்லது றோ (RAW) ஒழுங்குபடுத்திவருகிற ‘மாற்றுத் தலைமையை சீட்டாட அனுப்பப் போகிறோமா?
இந்தச் சூதாட்டக் கும்பல்கள் பேச்சே வேன்டாம்?
சம்பந்தர் அய்யா அரசியல் சதுரங்கத்தில் அழகாகவே ஆடுகிறார்.ஆட்டத்தின் முடிவுவரை காத்திருக்காமல் அவசரப்பட்டால் எப்படி? சூதாட்டமாய் மாறீப்போன தமிழ் மக்கள் வாழ்க்கையை மாற்றவே கூட்டமைப்பு முயற்சிக்கிறது.சுடுகுது மடியைப்பிடி என்றூ அவசரம் அவசியமா?
சம்பந்தர் ஐயாவின் ஆட்டமென்ன சொல்லுவேன்!
மன்மோகன் சிங் தரிசனம் வேண்டி ஆடியது சொல்வேனா?
கருணாநிதி காலில் விழுந்து கிடந்தது சொல்வேனா?
பிரபாகரன் தன் தலைவன் என்றது சொல்வேனா?
தமிழீழம் கேட்டதை மறுத்தது சொல்வேனா?
ஐயாவின் ஆட்டமென்ன சொல்லுவேன்!
ஐயா போனாலும் ஓயாத புகழ் மிக்கதாய் விளங்கும் சம்பந்தர் ஆட்டமென்ன சொல்லுவேன்!
சம்பந்தர் ஐயா ஏற்கனவே பல பிற்போக்கு அரசியல் சதுரங்கங்கள் ஆடியவர்தான். ஆனால் பாருங்கோ கடைசியில் ஆடினாரே சரத்துக்கான அரசியல் சதுரங்கம் அத்தோடு நல்லாகக் களைத்து நொந்துபோயல்லவா இருக்கிறார். “சூதாட்டமாய் மாறிப்போன தமிழ்மக்கள் வாழ்க்கையை மாற்றவே கூட்டமைப்பு முயற்சிக்கிறது”-தமிழ்மாறன்- தமிழ்மாறன் நீங்கள் சொன்ன கூத்தமைப்பின் மாற்றம் எது? மீண்டும் அகதிவாழ்வும் அடிமைத்தனமுமா?? அல்லது வேறு ஏதாவது ? அது எந்த மாற்றம் என்பதை கூறினால் நல்லது!