“ஈழத் தமிழர்களை வாழ வைப்போம்” என்றும் “ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தற்கு உயிரையும் கொடுப்போம்” என்றும் வீர வசனம் பேசிய / பேசும் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் நலனுக்காக ஒரு துரும்பைக் கிள்ளி எறியவும் முடியவில்லை. இதைத் தான் பொரியார், ஈழத் தந்தை செல்வாவிடம் “இந்தியத் தமிழர்கள் டெல்லி பார்ப்பன அரசுக்கு அடிமையாக இருப்பதால் இன்னொரு அடிமையான ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாது” என்று கூறினார்.
உண்மையில் நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் முதலில் டெல்லியிலுள்ள பார்ப்பன அரசை நீக்கி விட்டு அங்கே சூத்திரர்களின் அரசை அமைக்க வேண்டும். அவ்வாறு பார்ப்பன அரசை நீக்கி விட்டு, சூத்திரர்களின் அரசை அமைப்பதற்கான வேலைகளைச் செய்யாமல் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாக் கூறினாலும் சாரி; இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் கூறினாலும் சாரி; அது அறியாமையாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோ தான் இருக்க முடியும்.
காஷ்மீர் மக்கள் தங்களுடைய சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதை அம்மாநிலத்து பண்டிட்டுகள் எனப்படும் பார்ப்பனர்கள் விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் பண்டிட்டுகள் தான் காஷ்மீர் மக்களை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆகவே மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களால் காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காஷ்மீரை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் இருக்கிறார்கள்.
இந்தப் பண்டிட்டுகள் இருக்கிறார்களே இவர்கள் காஷ்மீரத்தில் ஈழத் தமிழர்களைப் போலப் பதுங்கு குழிகளிலா வாழ்கிறார்கள்? மற்ற மக்களின் வாழ்விட வசதியை விட இவர்களுடைய வாழ்விட வசதிகளில் ஏதாவது குறை உள்ளதா? அப்படியெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. சாரி! இடம் பெயர்ந்த பண்டிட்டுகளின் நிலை எப்படி இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வி நிலையங்களில் (கவனமாகப் பாருங்கள் ஆரம்பக் கல்வியில் அல்ல; உயர்கல்வியில்) போதுமான (?!) பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினார்கள்.
அதாவது புலம் பெயர் வாழ்க்கையிலும் அவர்களுடைய வசதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைதிக் கால வாழ்க்கை வசதியை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
‘இமய மலையில் இருக்கும் பார்ப்பானுக்குத் தேள் கொட்டிளால் கன்னியாகுமாரியில் உள்ள பார்ப்பானுக்கு நெறி கட்டும்’ என்பார்கள். அதுவே தவறு என்று தோன்றுகிறது. இமயமலையிலுள்ள பார்ப்பனன் தேளைப் பார்த்தாலே கன்னியாகுமாரியிலுள்ள பார்ப்பனனுக்கு நெறி கட்டுகிறது. நம் நாட்டு மக்களின் சராசாரி வாழ்க்கைத் தரத்தை விடப் பல மடங்கு அதிக வசதியடன் வாழும் புலம் பெயர் பண்டிட்டுகள் படும் வேதகைளைப் புரிந்து (?!) கொள்ள வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் 24-4-20011 அன்று சென்னையில் அதற்கென ஒரு கருத்தரங்கை நடத்தி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரங்களை இப்போதைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளவே இல்லை என்றும் இது ஏதோ நாட்டின் வட கோடியில் நடக்கும் பிரச்சினை என்று நினைக்காமல் நம்முடைய பிரச்சினையாக நினைத்துக் கொண்டு காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரங்களைத் தீர்க்க முனைய வேணடும் என்றும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நிச்சயமாகத் தோல்வி என்ற பாதையில் வீர வசனம் பேசிக் கொண்டு செல்கிறோம். பார்ப்பனர்கள் அமைதியாகத் தங்கள் நலன்களை அரசதிகாரத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்த பொரியாரின் சாரியான கணிப்பைக் கணக்கிலேயே கொள்ளாமல் நாம் குருட்டுப் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் பார்ப்பன ஆதிக்க அரசை ஆணி வேர், பக்க வேர், சல்லி வேருடன் பெயர்த்து எறிந்து விட்டு அங்கே சூத்திரர்களின் அரசை நிறுவாத வரையிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதற்கு, இந்தியத் தமிழர்களுக்கு அருகதை இல்லை.
ஈழத் தமிழர்களின் மீது உண்மையில் அக்கறை இருக்குமானால், முதலில் டெல்லியில் உள்ள பார்ப்பன அரசைக் கெல்லி எறிந்து, அங்கே சூத்திரர்களின் அரசை அமைக்க முன் வாருங்கள்.
ராமியா அவர்களே தில்லியில் சூத்திர ஆட்சியை அமைப்பதுஅல்லது அதன் பிடியில் இருந்து விலகுவது என்பது நல்ல கருத்துதான் ஆனால் அதை செய்த பிறகு தமிழ் நாட்டிற்கு என்று வைத்திருக்கும் செயல் திட்டம் என்ன? என்னவகை ஆட்சி நடை பெறும்?வெறும் சூத்திர ஆட்சி என்று சொல்லவேண்டாம் இப்போதே அதுதான் நடை பெறுகிறது! என்வே எதை நோக்கி நீங்கள் அழைக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரியாதவரையில் உங்களுடன் பய்ணிக்க தயக்கமாக இருக்கிறது “ஆயிரம் உன்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்ற பழைய பல்லவியைப்,பாட வேண்டாம் அது பலிக்கவில்லை அந்நியர் போனபிறகு சாதிக் கொடுமைகள் அதிகரித்துதான் உள்ளது குறையவில்லை
இன்னும் சிலகுழுவினர் தமிழ்த் தேசியம் என்றபெயரில் தமிழ் நாட்டைவிட்டு .மார்வாரிகளை வெளீயேற்றுவோம் என்று ஆரம்பித்து பின் மலையாளிகள் அப்புறம் வடுகர்கள் என்று வந்து பிறகு பெரியாரும் வடுகர்தாம் திராவிடத்தால் தமிழன் கெட்டான் என்று ஒப்பாரி வைப்ப்பவர்கள். ஒரு நாள் பால்தாக்கரே ராஜ்தாக்கரே பெருமகன்{Gஏண்TளேMஆண்)என்பார்கள். தேவர் சிலைக்கு மாலை போடுவார்கள். மு க அழகிரியை சந்திதுப் பேசுவாரகள் சசிகலா கணவன் நடராசனைக் கூப்பிட்டு விழாஎடுப்பார்கள் ஆனால் தாங்கள் தூய தமிழ்த் தேசியம் பேசுபர்கள் என்று மார் தட்டி கொள்வார்கள் முடை நாற்றம் வீசும் அளவிற்கு பழமை வாதம் பேசும் இவர்களுக்கு அகஸ்தியயர், ராமன் , கிருட்டிணன் எல்லோரும் தமிழர்க்ளே .ராசராசசோழன் தான் முன் மாதிரித்தமிழன் . அவனுடைய முதுகிற்குப்,பின் நின்று பார்ப்பனியத்தின் அடிவருடிகளாக விளங்குமிவர்கள் .ராசராசசோழன் பார்ப்பனர்களை எதிர்த்தவன் பறையருக்கு இறையிலி கொடுத்தவன் என்று சிறிது நாணமின்றி ஆயவுக்கட்டுரைகளை வெளியிடுபவர்கள். ஆனால் இவர்க்ளுக்குகுள் ஒரு ஒற்றுமை உண்டு . இவர்கள் எல்லாம் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் நாடார் நாயுடு , முக்குலத்தோர் என்று நாட்டுப்,புறங்களில் தலித்களுக்கு எதிராக பஞ்சாயத்து பண்ணுபவர்கள். தலித் விடுதலை ,பெண்ணுரிமை ,தீண்டாமை என்று எல்லாம் பேசுவார்கள் நடை முறையில் தங்களுடைய சாதியை காட்டுவதில் மற்ற அரசியல் வாதிகளுக்கு எந்த விததிலும் சளைத்தவர்கள் அல்லர். இவர்கள்பேசும் வீரியமான தமிழ்த்தேசியம் ஃபாசிசத்திற்கு நிகரானது. தமிழ் மொழி முதற் கொண்டு அனைத்தையும்” தரப்,படுத்த” விரும்பும் இவர்கள் வட்டார வழக்கு , தலித் மொழி நடை இவற்றிற்கெல்லாம் எதிரிகள் சுருக்கமாக சொன்னால் இவர்கள் தலிதகளின் அய்யத்திற்கு உரியவர்களகாக இருக்கிறார்கள் . எதிரிகள் என்று கூட சொல்லலாம் /தமிழ்த் தேசியத்தை தலிதகள், மொழி மற்றும் மத சிறுபான்மையினர் கையில் போய்விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கும் பெருமை இவர்களுக்கு உண்டு . இவர்களுடைய தீவிரமான பழமைவாதம் தலித்களை சற்று எட்டியே நிற்க செய்கிறது இந்திய விடுதலைப் போரை ஒரு காரணமாகக் காட்டி பார்ப்பனியத்தை வளர்த்த திலகர் , காந்தி,போல் இவர்கள் தமிழதேசியத்தை ஒரு காரணமாக காட்டி சாதிக் கொடுமைகள் நிறைந்த பண்டைய தமிழகதை மீட்டுருவாக்க நினைப்ப்பவர்கள் இது தலித்களுக்கு அச்சதைஉண்டு பண்ணுவதில் வியப்பு ஏதும் இல்லை தமிழ்ப்,பொற்காலத்தைக்கொண்டு வருகிறேன் என்ற பெயரில் சாதிக்கொடுமைகள் நிறைந்த க்லவியைக்கூட பொதுவாக்காத கடந்த காலத்தை உருவாக்க மட்டர்கள் எனபது என்ன உறுதி? மரபு என்ற பெயரில் பழங்ககதைகளை சிலாகிக்கும் இவ்ர்கள் அவ்ற்றை நடைமுறைப்படுத்த மட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத கருத்துகளை மக்கள் மீது திணிக்க மாட்டர்களா?
· பழமையை மீட்டுக் கொணர்வது என்பது சாதியத்தையும் பெண்ணடிமைத்தனதையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு ஒப்பாகும் என்பதைப் பெரியார் திறம்பட தமிழ் மக்களிடம் பரப்,ப்புரை செய்துள்ளார் என்பதுவே இவர்களுக்கு அவர் மீது உள்ள சினத்தின் காரணமாகும் இவர்கள் கையில் தமிழ்த் தேசியம் சிக்கி இருக்கும் வரை தலித்கள் அதில் பங்கு வகிப்பது என்பதுஅரிது. ஆனால் அதை ஒரு காரனமாகக் காட்டி தலித்கள் தமிழ்த் தேசியம் பற்ற்றி பேசுவது கூடப்,பாவம் என்று எண்ணினால் அது சரி அன்று. தமிழ்த் தேசியப் போரட்டத்தில் தங்களுக்கு உரிய பங்கினை செலுத்தவேண்டும் பழமைவாதிகளின் கையில் இருந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு தலிதகள், மொழி மற்றும் மத சிறுபான்மையினர் உண்டு
· தமிழ்த் தேசியம் எனப்து பற்றி ஒரு மறு மதிப்பீடு செய்யப்,பட வேண்டும் . தன்னுரிமை என்றாலே பிரிந்து போதல் என்ற கருத்தை நீக்கவேண்டும்.இணை ந்தும் இருக்கலாம் . பிரிந்தும் போகலாம் என்பதே தன்னுரிமையின் அடிப்படை தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கை இன்றைய காலகட்டத்தில் சரிவருமா என்பது சிந்தனைக்குரிய செய்தியாகும்
· தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மொழி , மத சிறுபான்மையோர் இத்தகைய ஏற்பாட்டிற்கு முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பார்களா என்பது அய்ய்மே. அவர்கள் இந்தியம் என்பதற்குள் தாங்கள் பாதுகாப்ப்பாக இருப்பதாக உண்ர்கிறார்கள் என்று எண்ணுகிறேன் தலித்துகள் நிலையும் கிட்டத்த்தட்ட அதுதான். இவர்களின் முழுநம்பிக்கையயும்,ஆதரவும் இன்றி எந்த விதமான தன்னாதிக்கப்போராட்டமும் வெற்றி பெற இயலாது. என்வே அவர்களின் முழு நம்பிக்கையும் போரட்ட்திற்கு ஆதரவாகத் திரட்டப்பட வேண்டும் இதற்கு அடிபடையாக் இறையண்மை உடைய தமிழகத்திலும் அவர்களுக்கு முழு உரிமை [ வாழும் , தொழில் புரியும் உரிமையும்] உண்டு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். தன்னாதிக்கம் பெறுகின்ற நாளில் யாரெல்லாம் தமிழ் நாட்டில் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இணையான குடிமக்களாகக் கருத்ப்படவேண்டும் .அன்றி அது தேவையில்லை நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறிவிடுகிறோம் என்று கூறுகின்ற சிறுபான்மையோருக்கு அவ்விதம் செய்வதற்கு உரிய பாதுகாப்பும் பொருள் செலவும் வழ்ங்கப்படவேண்டும்
· இதைக் குறிப்பிட்டு சொல்லவேன்டியதற்கு காரணம் உண்டு பாகிச்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறை சிறிய அளவில் கூட நடக்கக் கூடாது எனபதே. மேலும் இப்பொழுதே சில தீவிர தமிழ் தேசிய குழுக்கள் “வடுகர் வல்லாதிக்கம், மலையாளிகளின் டீகடைகள் தமிழரை சுரண்டுகின்றன. கருநாடகருக்கும் ,தமிழருக்கும் சோழர் கால்த்தில் இருந்தே இனப்பகை , காவிரியில் நீர் வராவிட்டால் உட்லன்ட்ஸ் உணவகத்தை தாக்க்குவோம்” என்ற முழக்கம் எழுப்பி வருகின்றனர் . மேலும் தமிழ் பழமை வாத்தை முன்வைத்தும், இந்து மன்னர்கள் கட்டிய கோவில்களை மட்டுமே தமிழ் தேசிய அடையாளாமாகக் காட்டியும் வருகின்றனர். இந்த குறைகள் களையப்படவேண்டும்
· “ஈழத்தமிழர்க்ளுக்கு உதவுவதற்காக் தனித்தமிழ் நாடு வேண்டும் .தமிழ் நாடு தனி நாடாக இருந்தால் சிங்களவனுக்கு எதிராக தமிழ் படை தாக்குதல் தொடுக்கும்” போன்ற வாத்ங்கள் தவிர்க்கப் படவேண்டும். ஈழதமிழர்க்ளுக்காக தமிழ் நாடு தனியாகப் பிரிதல் வேண்டும் என்ற கருத்தே தவறான அடிபடையில் எழுந்த ஒன்று ஆகும்.
· சுருக்கமாகக் கூறின் தமிழ் நாட்டின் உழைக்க்கும் மக்களின் உரிமைக்கு ஆதரவாகவும் பெண்ணுரிமை , தீண்டமை ஒழிப்பு, நிகரரமையை நோக்கி நகர்தல் இவற்றை மய்யக் கருவாக வைத்தே தமிழத் தேசிய போராட்ட்ங்கள் நடத்தப்படவேண்டும் இந்த போராட்டங்களும் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கான போராட்டங்களுடன் இணைத்தே நடத்தப் பெறவேன்டும் . இல்லாவிட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
·
டெல்லியில் சூத்திரர் ஆட்சி அமைப்பது என்றாலே உழைப்பவர் ஆட்சியை அமைப்பது என்று தான் பொருள்படும். அதன் பின் தமிழ் நாடு அக்கூட்டமைப்பில் இருப்பதா அல்லது தனியாக இருப்பதா என்பதைப் பற்றி மற்ற இன மக்களைப் போலவே தமிழ் நாட்டு உழைக்கும் மக்களும் முடிவு செய்ய வேண்டும். உழைக்கும் மக்கள் ஆட்சி என்றாலே அது சோஷலிச அமைப்பை நோக்கிய ஆட்சி என்று சொல்லாமலேயே விளங்கும்.
இப்பொழுது சூத்திரர் ஆட்சி நடைபெறுவதாக நினைப்பது ஒரு மாய உணர்வு. இப்பொழுதும் பார்ப்பனர் ஆட்சி தான் நடைபெறுகிறது. (ஜெயலலிதா வெற்றி பெற்றதால் அப்படிக் கூறவில்லை. கருணாநிதி ஆண்டாலும் அது பார்ப்பனர் ஆட்சி தான். ஏனெனில் கருணாநிதியின் ஆட்சியிலும் பார்ப்பனர்களின் நலன்கள் தான் து}க்கிப் பிடிக்கப்பட்டனவே ஒழிய சூத்திரர்களின் நலன்கள் பரிசீலனை கூட செய்யப்படவில்லை.)
நான் அந்நியர்களை வரவேற்கவும் இல்லை; துரத்தவும் இல்லை. அந்நியர்கள் சென்ற பிறகு சாதிக் கொடுமைகள் அதிகரித்து உள்ளன என்பது உண்மை தான். ஏனெனில் அந்நியர்களின் ஆட்சியின் போதும் நிர்வாகம் பார்ப்பனர்களிடமே இருந்தாலும் அவர்கள் மேலிடத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை. இவர்களிடமே அனைத்தும் முடிந்து விடுகின்றன. ஆகவே சாதிக் கொடுமைகள் அதிகரித்து விட்டன.
தமிழ்இ தமிழ்த் தேசியம் இன்னும் பல முழக்கங்களின் கீழ் பலர் பலவிதமான திசைகளில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் மிக மிக………மிகப் பெரும்பான்மையோர் இந்திய சமூகத்தின் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் அடிப்படையாக விளங்கும் விஷயங்களை எடுத்துப் போராட முனையவில்லை.
மனு நீதிஇ பகவத் கீதை இன்னும் இந்து மதம் என்று சொல்லப்படும் சனாதன | பிராம்மண மத நூல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களை உயர்நிலைகளில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இன்னல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது. இக்கோட்பாடு இன்றளவும் பின்பற்றப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த அயோக்கியத்தனமான ஏற்பாட்டிற்கு எதிரான விழிப்பணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்குவதற்கும் இந்நிலையை மாற்றி வைப்பதற்குமஇ; பொருட்படத் தக்க அளவிற்கு உள்ள எந்த ஒரு அமைப்பும் முயலுவதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுடைய பிரதிநிதிகளும் மனம் போன போக்கில் ஏதேதோ செய்து கொண்டு இருக்கிறார்கள். அவற்றைத் தான் நீங்கள் பட்டியலிட்டுக் காட்டி இருக்கிறீர்கள்.
நம் முன்னே உள்ள அவசரமான அவசியமான கடமை என்னவென்றால் பார்ப்பனர்கள் நமக்காக முடிடெுக்கும் இன்றைய நிலையை அழித்து ஒழித்து விட்டு நமக்காக நாமே முடிவெடுக்கும் வலிமையைப் பெறுவது தான்.
இதை அடைவதற்கு வழியாக உள்ள இட ஒதுக்கீடு முறை சாpயாக அமல் படுத்தப் படாமலும் கருத்தியல் ரீதியாகக் கொச்சைப் படுத்தப்பட்டும் உள்ளது.
இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் நிலைகளுக்குச் செல்வார்;கள் என்றும் இது காலப் போக்கில் உயர்சாதிக் கும்பல் மட்டுமே உயர்நிலைக்குச் செல்ல முடிந்த நிலையை மாற்றிஇ திறமை உள்ளவர்கள் மட்டுமே உயர்நிலைக்குச் செல்லும் நிலையை உருவாக்கும் என்றுமஇ; திறமை இல்லாத உயர்சாதியினர் பழைய காலத்தைப் போல் உயர் நிலைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுஇ புதிய சூழ்நிலை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படி நடைபெறவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் அவர்களுக்கும் உயர்நிலைகளில் இடம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பொழுது உயர்நிலை வட்ட அளவைப் பெரிதாக்கிக் கொண்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே ஏறிய அளவிற்கு உயர்சாதிக் கும்பலினர் கீழே இறங்க வேண்டிய அவசியத்தைத் தவிர்;த்தார்கள். மேலும் உயர்நிலைக்குச் சென்றுள்ள ஒடுகக்கப்பட்ட மக்கள் தங்கள் சகோதரர்களுக்காகப் போராடாதவாறு கருத்தியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்தும்இ மனித பலவீனமான ஆசைகளுக்கும் அச்சத்திற்கும் அடிமையாக்கியும் தங்கள் போராட்ட உத்தியை முன்னெடுத்துச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களோஇ தாங்கள் பட்டியலிட்டுக் காட்டியிருக்குமஇ; தங்களுக்கு உதவாதஇ சொல்லப் போனால் தங்கள் நலன்களுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஓடுக்கப்பட்ட மக்கள் முனைப்புடன் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால்; கல்விஇ வேலைவாய்ப்புஇ உரிமம் வழங்குதல் உட்பட இந்திய சமூகஇ பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் உயர்சாதிக் கும்பல்இ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இ தாழ்த்தப்பட்ட வகுப்பினர்இ பழங்குடியினர்இ மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர்களின் விகிதத்திற்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து அதைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவது தான். இதைச் செயல்படுத்தினால் திறமையற்ற உயர்சாதிக் கும்பல் இன்று உயர் நிலைகளுக்குச் செல்வது போல் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள். இதைச் செய்யாத வரையில் இந்திய சமுதாயத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இதைச் செயல்படுத்தவதில் குறைபாடு நேரலாம். ஆனால் அக்குறைபாடுகள் நமக்குள் தீர்;த்துக் கொள்வதாக இருக்க வேண்டுமே யொழிய உயர்சாதிக் கும்பல் தலையிட விடக் கூடாது.
விகிதாசார ஒதுக்கீட்டிற்கான கருத்தியல் அடிப்படையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒதுக்கீடு என்பது திறமையற்றவர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்வது என்று கொஞ்சமும் கூசாமல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம். இட ஒதுக்கீட்டினால் வாய்ப்பு பெற்ற மருத்துவர்கள் நிறைந்துள்ள தமிழ் நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மையமாக விளங்குகிறது. பொதுப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்சாதி மருத்துவர்கள் நிறைந்துள்ள டெல்லி மற்றும் பிற இடங்கள் அத்தகைய சிறப்பைப் பெற முடியவில்லை. இது போன்று ஒடுக்கப்பட்ட மக்கள் திறமைசாலிகள் என்று பல இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது. இவையெல்லாம் இட ஒதுக்கீடு திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் வழி என்றும் பொதுப் போட்டி முறை திறமையற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் அயோக்கியத்தனமான வழி என்றும் தெளிவாகத் தெரிவிக்கவே செய்கின்றன.. இவ்வுண்மைகள் மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும்.
பார்ப்பனர்களில் திறமையற்றவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. ஆனால் அவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம்இ குறைந்தஇ உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்யாமல் தப்பித்து விடுகிறார்கள். அவையெல்லாம் திறமை குறைந்தவர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள. ஆனால் அவற்றை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகள் தான் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையை மாற்றி பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் இவ்வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பவிடக் கூடாது என்ற திசையில் போராட்டத்தைக் கொண்டு சென்;றால் இந்திய சமூகத்தின் முதன்மையான முரண்பாடு முன்னணிக்கு வரும். பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருந்தால் அவர்கள் தங்களிடையே உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாதஇ ஊதியம் குறைந்தஇ உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்ப முடியாதபடி பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு ஒத்துழைக்காத பார்ப்பனர்கள் நிச்சயமாக நமக்கு நண்பர்கள் அல்ல என்பது மட்டுமல்ல எதிரிகள் தான் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இதில் வெற்றி பெற்றால் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள இடங்களில் நமக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இருக்கும். பார்ப்பனர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு எண்ணிக்கை பலம் இருக்காது. இது போன்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் தான் மிக மிக……..மிகப் பெரும்பான்மை மக்களின் கருத்திற்கும் விருப்பத்திற்கும் எதிராக ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு (கருணாநிதியையும் உள்ளிட்டுத் தான்) நடந்து கெள்ள முடிந்தது|முடிகிறது. மற்ற பிரச்சினைகளிலும் முடிகிறது. ஆகவே முதலில் விகிதாசார ஒதுக்கீட்டிற்கான நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது பார்ப்பனர்களிடம் சோரம் போகும் பிற்படுத்தப்பட்டஇ தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் காட்டிக் கொடுக்கும்.
ராமியா, கருணநிதியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மாநில அளவில் தொடங்கி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வரை அரசின் நலத்திட்டங்கள், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், கண்மாய் தூர்வாருதல், சைக்கிள் ஸ்டாண்டு, கக்கூஸ் கான்ட்ராக்ட் உட்பட சகல கான்ட்ராக்ட்களையும் எடுத்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தது சூத்திரர்களா, பிராமணர்களா? சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிப்பணத்தைப் பங்குபோட்ட டி.ஆர்.பாலு பிராமணரா? ஒருலட்சம் கோடி 2ஜி ஊழலில் ஆதாயம் அடைந்தது சூத்திரர்களா, பிராமணர்களா? அல்லது மற்ற சூத்திரர்கள் யாருக்கும் பங்கு தர கருணாநிதி மறுத்துவிட்டாரா? வருமானத்திற்கு மீறிச் சொத்துக்குவித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் நலனைக் காப்பதற்கு கருணாநிதி முயற்சிக்கவில்லையா? எதை வைத்து //கருணாநிதியின் ஆட்சியிலும் பார்ப்பனர்களின் நலன்கள் தான் து}க்கிப் பிடிக்கப்பட்டனவே ஒழிய சூத்திரர்களின் நலன்கள் பரிசீலனை கூட செய்யப்படவில்லை.// என்று கூறுகிறீர்கள்? சற்று உதாரணங்களுடன் கூறினால் நல்லது.
துரை இளமுருகு அவர்களே சில சொந்தக் காரணங்களால் நான் 22-5-2011 வரையிலும் விடுமுறை. அதன் பின் தங்களுடைய கருத்தைப் படித்துப் பார்த்து விடையளிக்கிறேன். அதுவரை மன்னிக்கவும்.
இராமியா.
காஸ்மீர் பண்டிட் கள் உயர்கல்விக்காக போராட்டம் நடத்தியது உங்கள் உரிமையில் எதைப்பாதித்தது ராமியா? அடிப்படை உரிமைக்காக யாரும் குரல் கொடுக்கலாம்.காஸ்மீரி இந்துக்களூக்கு இந்தியா எதையும் தூக்கி கொடுத்து விடவில்லை அவர்களாகவே தமது உழைப்பின் ஊடாக முன்னேறீனார்கள்.கமல் தன் சினிமாப் படங்களீல் ஈழத்தமிழரை நக்கல் செய்வது அவரது பிராமணப் பொறாமை அது போலவே இந்தக் கட்டுரையும்.
தமிழ் மாறன் அவர்களே! இக்கட்டுரையின் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள். சாதாரண சூழ்நிலையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய முடியாத மிகப் பெரும் வசதிகளை எல்லாம் அடையும் அளவிற்கு அகதிகளாக உள்ள காஷ்மீர் பண்டிட்டுகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்? அவர்கள் அளவிற்கு மீறியே செளக்கியமாக இருக்கிறார்கள். பார்ப்பனர்களாக இல்லாத மற்ற எந்த அகதிகளாவது இப்படி வசதியுடன் இருக்கிறார்களா?
மற்றபடி பார்ப்பனர்கள் தங்கள் தகுதியை விட அதிகமான வசதிகளை அனுபவிக்கும் பொழுது அது ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டிய உரிமைகள் தானாகவே பறிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலேயே விளங்குகிறது அல்லவா?.
அய்யா ராமியா நாயுடுக்களூம்தான் நல்லாக இருக்கிறார்கள் அது ம்ட்டுமல்ல நாயர்கள் டீக்கடை போட் வந்து பெரும் கோட்டல்கள கட்டி கோடீஸ்வரர் ஆகி உள்ளார்கள்.எமது பார்வை பார்ப்பணர் மீது மட்டுமே பாய்கிறது இது ந்மது பார்வையின் பிழை.ப்ண்டிட் கள் இழ்ந்து போன காஸ்மீரை உங்களால் மீட்டுத் தர முடியுமா?
நாயுடுகளும் நாயர்களும் தங்களை அகதிகள் என்று கூறிக் கொள்ளவில்லை. மேலும் அவர்களுள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனர்களில் அப்படி இல்லை.
பண்டிட்கள் காஷ்மீரை இழந்து விட்டதாக யார் சொன்னது? அவர்கள் காஷ்மீரின் மற்ற மக்களை அடிமைப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கின்றன. அவ்வளவு தான். பண்டிட்களும் மற்ற மக்களுடன் கலந்து வாழ்ந்தால் பிரச்சினை இல்லை. அதிகார போதை இல்லாமல் வாழ முடியாது என்று அடம் பிடிப்பது தான் பண்டிட்களின் பிரச்சினை.
இடிந்து போன வீட்டைக் கட்டித் தாருங்க என்றூ கேட்டால் இருக்கிற் வீட்டில் வாழுங்கள் என்றூ சொல்லும் வ்ட்டாட்சியராக இருக்கிறீர்கள்.வாழும் மண்மீது வாழ்க கேட்பது அதிகாரமல்ல அடிப்படை உரிமை.
பங்களாக்களில் வாழ்பவர்கள் அரண்மனை வேண்டும் என்று கூக்குரலிடுவதைக் கேட்கத் தேவையில்லை என்றும் குடிசைகளிலும் தெருவோரங்களிலும் வாழ்பவர்களுக்கு நல்ல வீடுகளைத் தர வேண்டும் என்றும் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை.
அது சரி! பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுகிறார்களே அதைத் தடுப்பது பற்றி விவாதிப்பதே கூட பாவமா?
ராமியா, பார்ப்பனர்களில் மட்டுமல்ல சூத்திரர்களில் திறமைக் குறைவானவர்கள் பலரும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுகிறார்கள். திறமைக் குறைவானசூத்திரர்கள் எத்தனை பேர் தங்களிடம் முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்பதற்காக உழைக்காமல் பணம் இல்லாத ஏழை சூத்திரர்களைத் தொழிலாளர்களாக்கிச் சுரண்டி வாழ்கிறார்கள்.இந்தியாவில் இன்று முதலாளிகளைப் பட்டியலிட்டால் பிராமண முதலாளிகளைவிட சூத்திர முதலாளிகளே அதிகம் இருப்பார்கள். இப்படி அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். அதுபோல இவர்களால் சுரண்டப்படும் தொழிலாளர்களும் எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். பிராமணர் உட்பட எல்லா ஜாதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, பிராமணர் உட்பட எல்லா ஜாதிகளிலும் உள்ள முதலாளிகள் அனைவரையும் வீழ்த்தி, உழைக்க முடிந்தவரெல்லாம் உழைத்தே ஆக வேண்டும்; உழைக்காமல் எவரும் உடல் வளர்க்க முடியாது என்ற நிலையை உண்டாக்குவோம். பார்ப்பணர்களை எப்படியாவது கடினமான உடலுழைப்பில் ஈடுபடுத்தவேண்டும் என்ற ஆதிக்க மனநிலைக்குப் பதிலாக, கடினமான உடலுழைப்பில் இருந்து மனித குலத்தையே விடுவிக்கும் சோசலிசத்தை நோக்கிப் பயணிப்போம்.
சிவக்குமார் அவர்களே! இன்று சூத்திரர்களுக்கு மிக முக்கியமாக வேண்டியது கல்வி. அதைத் தருவதற்கு அவர் முயல்வது போல் நடித்தாரே ஒழிய உண்மையில் அதற்கு எதிரான செயல்களைத் தான் செய்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் சூத்திரர்கள் கல்வி பெறுவதற்குப் போட்ட பாதையில் உராய்வை ஏற்படுத்தியதும் இப்பொழுது முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்ததும் கருணாநிதியின் கைங்கரியம் தானே? இது சூத்திரர்களுக்கு எதிரானதும் பார்ப்பனர்களுக்கு ஆதரவானதுமான போக்கு இல்லையா? பார்ப்பனர்களுடைய உயிர்க் கொள்கையான சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கக் கூடாது என்பதில் படு விசுவாசமாக இருந்த | இருக்கின்ற கருணாநிதி பாரப்பனர்களின் நலன்களைத் தான் து}க்கிப் பிடிக்கறார் என்றும் சூத்திரர்களின் நலன்களைப் பரிசீலனையும் செய்யவில்லை என்று தெரியவில்லையா?
ஊழல் நடக்கிறது என்று கூறி சூத்திரர்களின் தேவைகளைக் கவனிக்காமல் இருக்கும் போக்கு ஊழலை விடப் பன்மடங்கு கொடூரமானது ஆகும்.
ஐயா! பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைப் பற்றிய விவாதத்தை ஏன் மழுப்புகிறீர்கள்? நம்முடைய பங்கு பறி போகக் கூடாது என்று நினைப்பதை எப்படி ஆதிக்க மனநிலை என்று கூறுகிறீர்கள்?
சோஷலிசம் வந்த பின்னால் அனைத்து வேலைகளையும் சிரமமின்றி செய்யும் படியாக வைத்துக் கொள்வோம். அது வரையிலும் பார்ப்பனர்கள் திறமைக் குறைவானவர்களாக இருந்தாலும் சூத்திரர்கள் அவர்களை உயர்நிலைகளில் வைத்துச் சுமந்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் பார்ப்பனர்கள் சோஷலிசப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த அமைப்பே அவர்களுக்கு செளகரியமாகத் தானே இருக்கிறது?
சபாஷ் ரமியா! யார் எப்படி திசை திருப்பினாலும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதில் சளைக்காமல் இருக்கிறீர்கள்.
ராமியா அவர்களே, சூத்திரர்களுக்குக் கல்வி கிடைக்காமல் போகும்படி கருணாநிதி என்ன செய்தார்?
மக்களில் ஒருபகுதியினரை எப்படியாவது கடினமான உடலுழைப்பில் ஈடுபடுத்தவேண்டும் என்பது ஆதிக்க மனநிலை இல்லாமல் ஜனநாயக மனநிலையா? அல்லது பார்ப்பணர்களை நீங்கள் மக்களாகவே கருதுவதில்லை என்றால் அது ஒரு புதுவகை வர்ணாசிரமம்தானே.
பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைப் பற்றி உணர்ச்சிப் பிழம்பாய்க் கொந்தளிக்கும் நீங்கள், உழைக்காமல் ஏழைசூத்திரர்களைச் சுரண்டி வாழும் பணக்காரச் சூத்திரர்களைப் பற்றிச் சொன்னால் கண்டுகொள்ளாமல் போகும் உங்கள் போக்கிலிருந்து…. மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் சூத்திரர்களைப் பற்றிச் சொன்னால் //ஊழல் நடக்கிறது என்று கூறி சூத்திரர்களின் தேவைகளைக் கவனிக்காமல் இருக்கும் போக்கு ஊழலை விடப் பன்மடங்கு கொடூரமானது ஆகும்.// என்று கூறி சூத்திரர்களின் ஊழலுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதிலிருந்து….அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். அதுபோல இவர்களால் சுரண்டப்படும் தொழிலாளர்களும் எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். எனவே சூத்திரர்களுக்குள்ளும் சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்று இரண்டு வர்க்கங்கள் உள்ளன என்ற முழு உண்மையையும் மூடிமறைத்து //டெல்லியில் சூத்திரர் ஆட்சி அமைப்பது என்றாலே உழைப்பவர் ஆட்சியை அமைப்பது என்று தான் பொருள்படும்.உழைக்கும் மக்கள் ஆட்சி என்றாலே அது சோஷலிச அமைப்பை நோக்கிய ஆட்சி என்று சொல்லாமலேயே விளங்கும்.// என்று பசப்பு வார்த்தைகள் கூறி சூத்திர முதலாளிகளுக்கு எதிராக சூத்திர தொழிலாளர்கள் திரண்டுவிடாதபடி (ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது போல்) அவர்களை பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கோயபெல்ஸின் வேலையை நீங்கள் செய்து கொண்டிருப்பதிலிருந்து…. உங்கள் உண்மையான வண்ணம் நன்றாகவே வெளிப்படுகிறது.
சிவக்குமார் அவர்களே! பெருந்தலைவரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிராமப்புறப் பள்ளிகள் யார் காலத்தில் சீரழிய ஆரம்பித்தன? நகர்ப்புற உள்ளாட்சிப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி கிடைத்துக் கொண்டு இருந்ததே: அப்பள்ளிகளின் தரம் எப்பொழுதிலிருந்து குறைய ஆரம்பித்தது? இவை எல்லாம் தானாகவே நடந்தனவா? இந்த உள்ளறுப்பு வேலைகளில் கருணாநிதிக்குப் பங்கு இல்லையா?
ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுவும் பார்ப்பனர்களில் அறிவுத் திறன் குறைந்தவர்களும் உயர்நிலைகளை அபகரித்துக் கொள்வதால் ஒடுக்கப்பட்ட மக்களில் உயர்நிலைகளில் இருக்க வேண்டிய அறிவுத் திறன் மிகுந்தவர்கள் கூட அவர்களுடைய தகுதிக்குக் குறைந்த வேலைகளைச் செய்ய நேரிடுகிறது. உயர்ந்த அறிவுத் திறன் உடைய ஒடுக்கப்பட்ட மக்கள் கீழ் நிலையிலும் அறிவுத் திறன் குறைவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் என்பதற்காக அவர்களை உயர்நிலைகளில் வைத்துப் பூஜிக்க வேண்டும் என்பது தான் ஜனநாயமா?
பார்ப்பனர்கள் அறிவிலிகளாக இருந்தாலும் அயோக்கியர்களாக இருந்தாலும் அவர்களை உயர்நிலைகளில் வைத்துப் பூஜிக்க வேண்டும் என்று வர்ணாசிரம தர்மம் கூறுகிறது. அப்படிக் கூடாது: பார்ப்பனர்களில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும் திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலைகளிலும் இருக்க வேண்டும் என்று கூறுவது மனித நீதி தான். எந்த வகையிலும் தவறல்ல.
முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டும் அயோக்கியத்தனம் உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறுகிறது. இந்தியாவின் பிரத்யேகப் பிரச்சினையான ஜாதியக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்று கூறினால் அது வர்க்கச் சுரண்டலுக்கு ஆதரவானது என்று எப்படி முடிவு கட்ட முடிகிறது? ஜாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது: பாரிஸ் கம்யூன் வீழ்ந்தது போல் தோல்வி அடைந்து விடும். அதையும் மீறி ஜாதிக் கொடுமைகளை ஒழிக்காமல் வர்க்கப் புரட்சியைத் திணித்தால் அது பழைய வர்ணாசிரம அமைப்புக்குத் தான் இட்டுச் செல்லுமே ஒழிய சோஷலிச அமைப்புக்கு இட்டுச் செல்லாது. பார்ப்பனர்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. அதனால் தான் ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.
சூத்திரர்களுக்குக் கல்வி கொடுப்பதில் தடங்கல் இருக்கக் கூடாது என்றால் ஊழலுக்கு ஆதரவு கொடுப்பதாக அர்த்தமா? சூத்திரர்களின் ஆட்சி என்றால் அது சோஷலிசத்தை நோக்கிய ஆட்சியாகத் தான் இருக்க முடியும் என்று கூறினால் சூத்திர முதலாளிகளுக்கு எதிராக சூத்திரத் தொழிலாளிகள் திரண்டுவிடக் கூடாது என்று அர்த்தமா? தங்களுக்குத் தமிழ் மொழியில் பரிச்சயம் குறைவா? எப்படி இவ்வளவு தவறாகவும் புரிந்து கொள்ள முடிகிறது?
பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் கூட உயர்நிலைகளில் தான் இருக்க வேண்டும: கீழ்நிலை வேலைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் தான் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சுரண்டல் ஒழிப்பு பற்றிப் பேசுவதைப் பார்க்கும் பொழுது வருத்தமாகத் தான் இருக்கிறது. வேறொன்றும் செய்ய முடியவில்லை. சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்.
கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல் கருணாநிதியை கழட்டி விடுவதிலேயே குறீயாய் இருக்கும் ராமியா குறீக்கோள் வாழ்க,
தமிழ் மாறன் அவர்களே! எந்த வினாவிற்கு விடை இல்லாமல் போய்விட்டது? கருணாநிதியைக் கழட்டி விடுவதில் குறியாக இருக்கிறேனா? அவ்வளவு எளிதாகக் கழட்டி விடக் கூடிய வலுவற்ற நிலையிலேயா அவர் இருக்கிறார்? பெரியார் பங்களிப்பினால் தமிழ் நாடு பெற்ற நலன்கள் எல்லாம் முழுவதுமாக வற்றிப் போகும் வரையில் சூத்திரர்கள் அவரைத் தான் தலைவராக நினைக்க வேண்டும் என்பது தானே பார்ப்பனர்களின் திட்டம்? பார்ப்பனர்களிடம் சோரம் போகிறவர்கள் சூத்திரர்களின் தலைவர்களாக இருந்தால் தானே பார்ப்பனர்களுக்கு நல்லது?
நன்பர்களே ஊழலென்று குரல் கொடுக்கும் நலல உள்ளங்களே 2 ஜீ ஊழலில்2லடசம் கோடி ஊழல் நடந்த்து என்றே வைத்துக் கொள்ளுவோம் யாருடைய நன்மைக்காக நடந்தது அம்பானிக்கும் டாவிற்கும் தனே அவர்கள் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்க 200கோடி 2000கோடி ஊழல் செய்த கனிமொழியும் ராசாவும் ஏன் சிறையில் வாடவேண்டும்? அதில்தான் பார்ப்பன நீதி இருக்க்கிறது சூத்திரனுக்கு ஒரு நீதி தணட்சோறு உண்ணும் பார்ப்பனுக்கு ஒரு நீதி என்று பார்ப்பன பாரதியே பாடி இருக்கிறான் எண்ணிப்,பாருங்கள்
கருணாநிதிக்கு கல்லெறீய வேண்டும் அம்மாவுக்கு காவடி தூக்க வேண்டும் என்பதை தவிர றஜினிக்காக ப்ட்டினி கிடக்க வேண்டும் என்பதை தவிர தமிழனுக்கு என்ன தெரியும்
தமிழ் மாறன் அவர்களே! சரியாகச் சொல்கிறீர்கள். கருணாநிதி ஜெயலலிதா ரஜினி இன்னும் சூத்திரர்களின் நலன்களைப் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாதவர்களைப் புறந் தள்ளும் ஞானம் வந்தால் நாம் முன்னேற ஆரம்பித்து விடுவோம்.
துரை இளமுருகு அவர்களே, அம்பானியும் டாடாவும் பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனர்களுக்கெதிரான வெறிவாதம் உங்கள் கண்களை மறைக்கிறது. 2ஜி ஊழலில் அம்பானியும் டாடாவும் தப்பித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களது ஜாதி இல்லை. அவர்களது பணமும் வர்க்கமும்தான். அவர்கள்தான் இந்திய அரச முதலாளித்துவத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமைப் பிரதிநிதிகள். உங்களையும் என்னையும் ஜாதிகளின் பெயரால் அடித்துக் கொள்ளச் செய்துவிட்டு நிம்மதியாக நாட்டைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள். முதலாளி களுக்காக நடத்தப்படும் ஆட்சியில் முதலாளிகளையே சிறையில் அடைப்பார்களா? இதில் பார்ப்பன நீதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இது அப்பட்டமான முதலாளித்துவ நீதி. இந்த உண்மையை மூடி மறைத்து பார்ப்பன நீதி என்றுகூறி முதலாளித்துவத்தை காப்பாற்றப் பாடுபடும் உங்களைப் போன்றவர்களை என்ன சொல்வது!
அதே அள்விற்காண பணம் தயானிதி மாறனிடம் இருக்கிறதே அ ராசா1,70.000 கோடி ஊழல் செய்திருந்தால் அவரிடமும் இருக்கவேண்டுமே கனிமொழியும் ராசாவும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் புரட்சியாளர்கள் இல்லையே பிறகு ஏன் சிறையில் அடைபடவேண்டும் ??பார்ப்பானாய்ப்,பிறந்தவந்தான் பார்ப்பனன் என்பது இல்லையே பார்ப்பனித்தை எற்றுக் கோள்ளூம் அனைவரும் பார்பனர்க்ளே அந்தவரிசையில் தான் டாடா அம்பானி ரசனி காந்த் இவர்கள் வருகின்றனர் வெறும் வர்க்க வாதம் பேசி சாதியத்தைமறைக்க முயல்வது இந்தியாவில் எடுபடாது அதனால் தான் பொதுவுடமைக்கட்சிகளின் பார்ப்பனத்தலைமகள் புரட்சி செய்ய இயலாமல் தவிக்கின்றனர்
இந்தியாவில் சாதி இருப்பதால்தான் விசயகாந்த் நாளய முதல்வர்.வெள்ளக்காரர் நாடுகளீல் தமிழரில் சிலர் க்வுன்சிலர்.ஆக தமிழர் ஒரு எல்லையைத் தாண்டி சிந்திக்கிறார்களே இல்லை.பாரதி,பாரதி என்றூ அய்யரை தூக்கி வைப்பதும், எஸ்,பி,என்றூ இன்னொரு பிராம்ணரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் ஏழை சினிமா எழுத்தாளன் கருணாநிதியை காயப்படுத்துவதும் வர்க்க விடுதலை இல்லையே.
சிறு திருத்தம் துரை இளமுருகு அவர்களே! பார்ப்பபனராயப் பிறந்தவர்கள் தான் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களுக்குத் துணை போகிறவர்கள் அவர்களுடைய சேவை தேவைப்படும் வரை சுகம் அனுபவிக்கும் வட்டத்தில் இருக்கலாம். அவர்களுடைய சேவை தேவைப்படாது என்றால் வெளியே வீசப்பட்டு விடுவார்கள். அவர்கள் அன்றைக்குமே பார்ப்பனர்கள் ஆக முடியாது.
சிறியதிருத்தத்தில்தான் பெரியபிழைகளே தொடங்குகின்றன. பிறப்பின் மூலமே அனைத்தும் முடிவு செய்யப்ப்டுகின்றன என்றால் அதற்கும் பார்ப்ப்னர்கள் சொல்லும் நால்வகைப்ப்குப்பிற்கு என்ன வேறுபாடு? பார்ப்பனர்களிலூம் வெகு வெகு அரிதாகபார்ப்பனர்க் கொள்கைகளை எதிர்த்தவர்கள் உண்டு பார்ப்பானாய்ப் பிறக்காமலேய பார்ப்பனிய்ததிற்கு சேவை செய்த சூத்திரர்கள் வெகு அதிகமுண்டு.பிறப்பு அல்ல உங்கள் நடை,முறையே உங்கள் அடையாளமாக இருப்பது நல்லது
ராமியா அவர்களே, 1) கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களெல்லாம் சூத்திரர்கள்தானே எதை வைத்து //கருணாநிதியின் ஆட்சியிலும் சூத்திரர்களின் நலன்கள் பரிசீலனை கூட செய்யப்படவில்லை.// என்று கூறுகிறீர்கள்? என்று கேட்டாலதெற்கென்ன பதில் ?2)சூத்திரர்களுக்குள்ளும் சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்று இரண்டு வர்க்கங்கள் உள்ளன என்ற முழு உண்மையையும் மூடிமறைக்கிறீர்களென்று விமர்சனம் வைத்தால், ஒன்று சூத்திரர்கள் முழுவதுமே உழைப்பவர்கள்தான் என்று நிரூபிக்கவேண்டும்; இல்லாவிட்டால் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் செய்யாமல் //தங்களுக்குத் தமிழ் மொழியில் பரிச்சயம் குறைவா? எப்படி இவ்வளவு தவறாகவும் புரிந்து கொள்ள முடிகிறது?// என்று கேட்டால் என்ன அர்த்தம்?3) //முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டும் அயோக்கியத்தனம் உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது// என்பதற்காக சூத்திர முதலாளிகள் சூத்திர தொழிலாளர்களைச் சுரண்டுவதை இப்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறீர்களா? அப்படித்தான் என்றால், சூத்திர முதலாளிகளுக்கு எதிராக சூத்திர தொழிலாளர்கள் திரண்டுவிடாதபடி (ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது போல்) அவர்களை பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கோயபெல்ஸின் வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற எனது விமர்சனம் சரியானதுதான். இல்லை, சூத்திர முதலாளிகளின் சுரண்டலை எதிர்க்க வேண்டும் என்றால் சூத்திரர்களின் பொது எதிரி பிராமணர்கள் என்று நீங்கள் சொன்னால் சூத்திர முதலாளிகளுக்கு எதிராக சூத்திர தொழிலாளர்களை எப்படித் திரட்டுவீர்கள்? 4) சூத்திரர்களைக் கீழான கடின உழைப்பில் ஈடுபட்டாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திய வர்ணாசிரமம் எப்படி பார்ப்பனர்களின் ஆதிக்க மனநிலையை பிரதிபலிக்கிறதோ, அப்படித்தான் பார்ப்பனர்களைக் கீழான கடின உழைப்பில் ஈடுபடுத்தியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உங்களைப் போன்ற சூத்திரர்களின் புதுவர்ணாசிரமமும் ஆதிக்க மனநிலையையே பிரதிபலிக்கிறது. முதலாளிகளால் இன்று சுரண்டப்படும் தொழிலாளிகளால் உருவாக்கப்படும் சமுதாயம் யாரும் யாரையும் சுரண்ட முடியாத சோசலிச சமுதாயமாக இருக்குமே ஒழிய, முதலாளிகளை தொழிலாளர்கள் சுரண்டும் அமைப்பாக அது இருக்காது. அதுமட்டுமல்ல, தன்னுடைய நன்மைக்காகக் குரல் எழுப்புவது தன்னலம் சார்ந்தது என்றாலும் அதனை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மற்றவர்கள் கஷ்டப் படாமல் வாழ்கிறார்களே அவர்களைக் கடின உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்பது ஆரோக்கியமான எண்ணமாகப் படவில்லையே. //பார்ப்பனர்களாக இல்லாத மற்ற எந்த அகதிகளாவது இப்படி வசதியுடன் இருக்கிறார்களா?// என்று காஷ்மீர் பார்ப்பனர்களைப் பார்த்து பொறாமையில் வெறுப்பை உமிழும் நீங்கள் என்றாவது தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ள அகதிகளின் வாழ்க்கைத்தரத்தை காஷ்மீர்அகதிகள் அளவிற்கு உயர்த்த வீதியில் இறங்கிப் போராடியதுண்டா? குறைந்தபட்சம், இலங்கைத் தமிழ் அகதிகள் பார்க்கும் வேலைக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சமமான கூலி வழங்க வேண்டும் என்றாவது கோரியதுண்டா?
சிவகுமார் சொல்வது போல செய்ய வேண்டியதைச் செய்யாமல் வைகோவும் சீமானும் நமக்கு மொட்டை அடிக்கப் பார்க்கிறார்கள்.
சூத்திரர்களை ஊழல்செய்து சம்பாதிக்க வைத்தால் அது சூத்திரர்களுக்கு நன்மை செய்ததாக ஆகுமா? ஐயா எனக்குத் தலை சுற்றுகிறது. ஆட்சியதிகாரத்திலும் சமூக நடவடிக்கைகளிலும் சூத்திரர்களை ஒதுக்க முடியாதபடி அவர்களுக்குக் கல்வியையும் வேலை வாய்ப்பையும் அளித்து வலிமைப்படுத்துவது தான் சூத்திரர்களுக்கு நன்மை செய்வதாக ஆகும். அவர்களை ஊழலில் சிக்க வைத்து சந்தி சிரிக்க வைப்பது சூத்திரர்களுக்கு எதிரான வேலையே ஆகும்.
பழைய காலத்தில் அரசர்களாக ~த்திரியர்கள் தான் இருந்தார்கள். ~த்திரியர்கள் பார்ப்பனர்களை மீறி எதுவும் செய்து விட முடியாது. அது போலத் தான் சூத்திர முதலாளிகள் பார்ப்பனர்களை மீறி எதுவம் செய்ய முடியாத நிலை உள்ளது. உலகில் எங்கும் இல்லாத இந்த விஷேசத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினால் அது எப்படித் தவறாகும்? ஒரு மனிதனுக்கு உடல் முழுவதும் புண்கள் இருக்கின்றன: இன்னொரு மனிதனுக்கு உடலில் புண்கள் மட்டுமல்லாமல் சர்க்கரை நோயும் இருக்கிறது. முதல் மனிதனுக்கு புண்கள் ஆற வேண்டிய சிகிச்சையை அளித்தால் போதுமானது: இன்னொருவருக்கு சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை அளிக்காமல் புண்கள் ஆறுவதற்கு மட்டும் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தால் அவருடைய புண்கள் ஆறுவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல உலகின் மற்ற பகுதிகளில் வர்க்கப் போராட்டம் போதும். ஆனால் இந்திய நாட்டின் சுரண்டலக்கு எதிராக வர்க்கப் போராட்டத்துடன் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புப் போராட்டம் மிக மிக அவசியமாகத் தேவை.
முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டு இருந்தால் அது ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை. கூடவே பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டினால் தான் இரண்டும் ஒரு சேர வெற்றி பெறும். இந்த அணுகுமுறை எந்த விதத்திலும் வர்க்கப் போராட்டத்தின் கூர்மையை மழுங்க அடிக்காது. இத்தகைய அணுகுமுறை இல்லாத காரணத்தால் தான்> அதாவது சோஷலிச சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இம்மியும் இல்லாத காரணத்தால் தான் இவர்களுடைய போராட்டம் கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே வருவதே இல்லை.
பார்ப்பன ஆதிக்கம் உள்ள சமுதாய அமைப்பைப் பார்ப்பனர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது முதலாளிகள் சோஷலிச சமுதாயத்தை அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது போலத் தான்.
வர்ணாசிரம அமைப்பைப் பற்றி ஏன் இப்படிக் குழப்பம் அடைந்து இருக்கிறீர்கள்? அவ்வமைப்பில் சூத்திரர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களுக் கல்வியை அளிக்கக் கூடாது: அவர்கள் கீழ் நிலை வேகைளைத் தான் செய்ய வேண்டுமே யொழிய உயர்நிலை வேலைகளுக்கு ஆசைப்படக் கூடாது. அப்படி ஆசைப்பட்டால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது கொடூரமான அமைப்பு. அதை அழித்து ஒழித்து விட்டு திறமைசாலிகள் எந்த ஜாதியினராக இருந்தாலும் அவர்கள் உயர்நிலைகளில் இருக்கட்டும். அதே போல் திறமைக் குறைவானவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் அவர்கள் கீழ் நிலைப் பணிகளைப் புரியட்டும் என்பது எந்த விதத்திலும் தவறல்ல. திறமை இல்லாவிட்டாலும் சொகுசான வேலைகளைச் செய்து கொண்டு உல்லாசமாக வாழும் பார்ப்பனர்களுக்கு இது பிடிக்காது தான். ஆனால் நாட்டு நிர்வாகம் பாழாகாமல் இருப்பதற்கும் மனித வளம் வீணாகாமல் இருப்பதற்கும் வர்க்க முரண்பாடுகள் கூர்மை அடைவதற்கும் இது மிக மிக……………………………………………மிக அவசியம்
திறமைக் குறைவான பார்ப்பனர்கள் கூட அதிகாரம் இல்லாத> ஊதியம் குறைந்த> உடலுழைப்பு மிகுந்த வேலைகளச் செய்யும் படி விட்டு விடக் கூடாது என்றும் அவர்களை உயர்நிலைகளில் வைப்பதால் திறமையுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அவ்வேலைகளைச் செய்ய நேரிடுவது பற்றியும் கவலைப்படாதவர்கள் சுரண்டலக்கு எதிராகப் போராடுவதாக நம்ப வக்க முயல்வது மிகவும் கொடூரமானது. என்ன செய்வது? சூத்திரர்களின் அறியாமை இருள் அளவுக்கு அதிகமாக இருப்புதால் இப்படி எல்லாம் பேச முடிகிறது
இன்று முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்கள் சோஷலிச அமைப்பில் முதலாளிகளைச் சுரண்ட மாட்டார்கள் சுரண்டலற்ற சமுதாயத்தையே அமைப்பார்கள் அது போல் பாhப்பனர்களும் கடின வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுதப்படக் கூடாது என்று கூறுகிறீர்கள். வர்ணாசிரம முறையில் ஒரு சிறு கீறல் கூட விழுந்து விடக் கூடாது என்பதில் தான் எவ்வளவு அக்கறை? ஓடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளும் குறைந்த ஊதியத்திற்கு கடினமான உழைப்பை அதிகமாகச் செய்ய வேண்டியுள்ளதை வெகு சாதாரணமாக ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளம் பார்ப்பனர்களில் உள்ள திறமைசாலிகளை விட்டு விடுங்கள்: திறமைக் குறைவானவர்கள் கூட செய்ய நேரிட்டு விடக் கூடாது என்று எப்படி பதைபதைக்கிறது? இது ஆதிக்க மனோபாவம் இல்லையா? திறமைசாலிகள் எந்த ஜாதியினராக இருந்தாலும் உயர்நிலையில் இருக்கட்டும்; என்றும>; திறமைக் குறைவானவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் கடினமான கீழ்நிலை வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறுவது ஆதிக்க மனோபாவம் ஆகிவிடுமா? புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறதே?
பார்ப்பனர்களாக இல்லாத மற்ற எந்த அகதிகளாவது இப்படி வசதியுடன் இருக்கிறார்களா?// என்று காஷ்மீர் பார்ப்பனர்களைப் பார்த்து பொறாமையில் வெறுப்பை உமிழும் நீங்கள் என்றாவது தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ள அகதிகளின் வாழ்க்கைத்தரத்தை காஷ்மீர்அகதிகள் அளவிற்கு உயர்த்த வீதியில் இறங்கிப் போராடியதுண்டா?
இதைத்தான் நானும் கேட்கிறேன். அகதிகள் பிரச்சினை மட்டுமல்ல: எந்த ஒரு பிரச்சினையிலும் ஒரே நிலையில் உள்ள பார்ப்பனர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு இருக்கிறதே: ஏன்? இதற்கு அடிப்படைக் காரணங்கள் யாவை? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? இந்தத் திசையில் சிந்திக்கவும்> விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதற்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்கவும் வேண்டும் என்று தான் கூறிக் கொண்டு இருக்கிறேன்.
ராமியா அவர்களே, கடைசியாக ஒன்று: அரசு, மாநகராட்சிப் பள்ளிகளின் சீரழிவிற்கு பார்ப்பனர்களின் சதியும் அதற்குத் துணைபோன கருணாநிதியும்தான் காரணம் எனக்கூறி உண்மையில் காரணமான முதலாளி வர்க்க அரசின் சதியை மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள். அதுபற்றிய ஆய்விற்கு படிக்க: i)கல்வியில் தலை தூக்கிவரும் முதலாளித்துவத் தனியார்மயம் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8949:2010-05-25-09-14-49&catid=1109:10&Itemid=379ii)வர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறைhttp://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10298:2010-08-08-05-21-28&catid=1162:10&Itemid=428iii)தமிழக ஆட்சியாளரின் கல்வி முதலாளிகளுக்கான சேவை http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10312:2010-08-08-18-38-28&catid=1162:10&Itemid=428iv)அறிவைக் கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10316:2010-08-08-18-58-21&catid=1162:10&Itemid=428v)ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10292:2010-08-07-19-55-58&catid=1162:10&Itemid=428
மேலும் இந்தியாவில் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறுகிறது என்றும் பழைய வர்ணாசிரம அமைப்பு மீண்டும் வரமுடியும் என்றும் யதார்த்தத்திற்குப் புறம்பாகவும் இயக்கவியல் உண்மைகளுக்கு முரணாகவும் கூறுகிறீர்கள். ஆனால் இன்று இந்தியாவில் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறவில்லை. மாறாக வர்க்க அடிப்படையில் தான் சுரண்டல் நடைபெறுகிறது. இந்தத் தொழில் அல்லது இந்த வேலை செய்பவர்கள் முழுவதும் இந்த ஜாதியில் பிறந்தவர்கள்தான் செய்கிறார்கள் என்பதில்லை. அவ்வாறு எவரையும் வர்ணாசிரமத்தின்படி கட்டாயப் படுத்தவும் முடியாது. எல்லா ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். துப்புரவுத் தொழில்போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களும் வர்ணாசிரமத்தின்படி எவரது கட்டாயத்தின்பேரிலோ அல்லது அவர்களாக விரும்பியோ செய்யவில்லை. இடஒதுக்கீட்டில் தங்கள் ஜாதிக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களைப் பெறுவதற்கான போட்டியில் தங்கள் ஜாதியில் இருக்கும் வசதியானவர்களுடன் போட்டியிட முடியாமலும், இதைவிட மேலான வேறு வேலைவாய்ப்பு இல்லாத நிலையிலும்தான் அவர்கள் அதைச் செய்கின்றனர். இந்தியாவில் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறுகிறது என்பது உண்மையானால் இந்த ஜாதியில் உள்ளவர்கள் 100 சதவிதம் முதலாளிகள், இந்த ஜாதியில் உள்ளவர்கள் 100 சதவிதம் தொழிலாளிகள் என்றுகாட்ட முடிய வேண்டும். இந்தியாவில் ஜாதியின் இன்றைய நிலைபற்றிய ஆய்விற்கு படிக்க: i)ஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு:உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10297:2010-08-08-05-05-31&catid=1162:10&Itemid=428ii)இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8014:2010-05-04-08-53-39&catid=1063:08&Itemid=330iii)தேர்தலை ஒட்டி ஜாதியத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் வடஇந்தியா http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8000:2010-05-04-07-03-26&catid=1061:09&Itemid=328ராமியா அவர்களே, இவற்றைப் படித்தபின் இதனடிப்படையில் விவாதிப்போம் நன்றித.சிவகுமார்tha.sivakumar.in@gmail.com
சிவக்குமார் அவர்களே! கல்வியின் சீரழிவிற்கு முதலாளி வர்க்கம் தான் காரணம் என்றால் உலகம் முழுவதுமே கல்வி சீரழிந்து இருக்க வேண்டுமல்லவா? இந்தியாவில் அது சீரழிந்து போனதற்கு பார்ப்பன ஆதிக்கம் தான் காரணம் என்றும்; ஆசையினாலும் அச்சத்தினாலும் அவர்களுடைய பிடியில் சிக்கியுள்ள உதவாக்கரைச் சூத்திரர்கள் அதற்குத் துணை பேயிருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதாகவே தெரியவில்லையே? நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?
நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். இந்தியாவின் பிரத்யேகப் பிரச்சினையான திறமை குறைவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்ல முடிவதைப் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளும் உயர்நிலைகளுக்குச் செல்ல முடியாத படியான விசைகள் இருப்பதைப் பற்றியும் ஒரு வார்த்தையைக் கூட பார்க்க முடியவில்லையே?
“மேலும் இந்தியாவில் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறுகிறது என்றும் பழைய வர்ணாசிரம அமைப்பு மீண்டும் வரமுடியும் என்றும் யதார்த்தத்திற்குப் புறம்பாகவும் இயக்கவியல் உண்மைகளுக்கு முரணாகவும் கூறுகிறீர்கள். ஆனால் இன்று இந்தியாவில் ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறவில்லை” என்று கூறுகிறீர்கள்.
ஜாதி அடிப்படையில் சுரண்டல் நடைபெறவில்லை என்றால் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானர்களையும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப வைக்கும் விசை எது?
வர்ணாசிரம அமைப்பு மீண்டும் வர வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதைத் தான் குறிப்பிட்டு இருக்கிறேன். சூத்திரர்கள் விழிப்பின்றி இருந்தால் அவ்வமைப்பைக் கொண்டு வருவதற்கு ஆதிக்க சக்திகள் கொஞ்சமும் கூச்சப்படாது என்றும் தான் கூறுகிறேன். இது யதார்த்தத்திற்கும் இயக்கவியலுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல. “வலிமையானவர்கள் வெற்றி பெறுவார்கள்” இது தான் யதார்த்தம்;. சோஷலிச அமைப்பு எற்பட்ட பின் அச்சமூகத்தில் மீண்டும் முதலாளித்துவம் வர முடியாது என்று கூறிக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் ரஷ்யாவும் சீனாவும் இன்னும் பல பழைய சோஷலிச நாடுகளும் இன்று முதலாளித்துவப் பாதையில் நடைபோடுகின்றன. சோஷலிசம் என்பது முதலாளித்துவத்தை விட வலிமையானது என்ற அனுமானத்தில் அப்படிக் கூறிக் கொண்டு இருந்தோம். ஆனால் முதலாளித்துவத்தின் ஓய்வில்லா வெறியும் உழைக்கும் மக்களின் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் நாம் அனுமானித்தது தவறு என்று காட்டியுள்ளது. இது நமது இந்திய சமூகத்தில் ஏற்பபட்டு விடக் கூடாது என்று உழைக்கும்|ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவது இயக்கவியலின் பாற்பட்டதே அன்றி அதற்கு முரணானது அல்ல.
இராமய மேம்போக்கே சொன்னதேயே திரும்ப சொல்லும் கிளிபிள்ளையாக இருக்கிறார் உண்மையான மக்கள் பிரச்னை என்ன என்ற சிறிய அறிவும் இல்லாமல் அப்பட்டமாக வெறி பிடித்து அலைகிறார். தலித் முதலாளி தான் தலித்து எதிரி , பார்ப்பன முதலாளி தான் பார்பன தொழிலாளிக்கு எதிரி என்பது கூட புரியவில்லையே இவருக்கு
திருவாளர் முட்டாள் அவர்களே! ஜாதி வித்தியாசம் இல்லாமல் முதலாளிகள் அனைவரும் தொழிலளர்களுக்கு எதிரிகளே. இதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இந்தியாவில் அறிவுத் திறன் அதிகமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களால் உயர்நிலைகளுக்குச் செல்ல முடிவதில்லை. அறிவுத் திறன் குறைவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. இந்தியாவின் இந்தப் பிரத்யேகத் தன்மை இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுவது பாத்திரத்திலுள்ள பெரிய ஓட்டையை அடைக்காமல் அதில் நீரை நிரப்ப முயல்வது போன்றது என்பதைப்புரிந்து கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கும் பொழுது அதைத் தான் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இது கிளிப் பிள்ளையைப் போல் அல்ல: பரிந்து கொள்ளாத மாணவனைப் புரிய வைக்க முயலும் ஆசிரியரைப் போலத் தான் ஆகும். புரிந்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்துள்ள இப்பெழுது இருக்கின்ற சமூக அமைப்பில் சுகம் காண்பவர்கள் இத்துடன் விட்டு விடலாம். அறியாமை இருளில் தள்ளப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதைச் சொல்லியாக வேண்டியுள்ளது.
பழய சோறூம் மிளகாயும் சாப்பிடும் பறயரால் பாலும் பாதாமும் சாப்பிடும் அய்யர் வீட்டுப் பிள்ளகளோடு, சரி சமமாய் நிற்கவே வாய்ப்பில்லாத இந்தியாவில் ஏழைப் பிள்ளகளூக்கான ஊட்டச்சத்து குறவு.பரதேசிகளயும்,பிச்சக்காரரையும் கொண்ட இந்தியாவில் எல்லோரும் சமம் என்பது அமெரிக்காவை பேய்க்காட்டி பிச்சை எடுக்கவே, இந்த அணூவாயுத விளயாட்டு கூட சும்மா குழந்தைப்பய விளயாட்டே.இந்தியா அதிகமாய் படம் காட்டுகிறது.இன்னும் இந்தியா எல்லோருக்கும் சமம், எல்லோரும் ஓரினம் நிலைக்கு வரவே இல்லை, ஏமாற்றூ, சுத்து மாத்தில் இந்தியர் பாகிஸ்தானுக்கு போட்டியாகவே வேண்டுமானால் இருக்கலாம்.
நன்றி துரை இளமுருகு அவர்களே! பிறப்பின் மூலம் தான் அனைத்தும் முடிவாக வேண்டும் என்பது பார்ப்பனர்களின் நோக்கம் என்பதைத் தான் குறிப்பிட்டு இருக்கிறேன். பார்ப்பனியத்தை எதிர்த்த பார்ப்பனர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அப்படி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காந்தியாரே கூட வெகு நேர யோசனைக்குப் பின் இந்த உலகத்திலிருந்து கோபால கிருஷ்ண கோகலே ஒருவரைத் தான் நல்ல பார்ப்பனராகச் சொல்ல முடிந்தது. அவரும் (கோபால கிருஷ்ண கோகலேயும்) வர்ணாசிரம தர்மத்தின் ஆணிவேரை அறுத்து எறிய வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை.
பார்ப்பனியத்திற்குப் பார்ப்பனர்களை விட அதிக சேவை செய்தவர்கள் பற்றித் தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
ஒருவரின் நடைமுறையே அவருடைய அடையாளமாக இருக்க வேண்டும்: பிறப்பு ஒரு கருவியாக இருக்கும் இன்றைய நிலைமை மாற வேண்டும் என்பது சரி தான்.
அப்ப மார்க்ஸ் சொன்னது எல்லாம் தப்பு பெரியார் சொன்னது சரி என்று சொல்ல வருகிறீர்கள் தானே.
விளங்கவில்லை மதன் அவர்களே! மார்க்ஸ் சொன்னது எல்லாம் தப்பு என்று யார் சொன்னது?