ஊதிய நாள் கடன் என்று அழைக்கப்படும் கந்துவட்டிக் கடன் பிரித்தானியாவில் பிரபலமான கடன் முறையாகும். 100 பவுண்ஸ் பணத்திற்கு 15 பவுண்ட்ஸ் வரைக்கும் மாத வட்டியாக அறவிடப்படும் இந்த கடன் முறைமையால் கூலி உழைப்பாளர்கள் சுரண்டப்பட்டுவந்தனர். உழைப்பவர்கள் தமது ஊதிய நாளிற்கு முனப்தாக ஊதியத்தைப் பணயமாக வைத்துக் கடனைப் பெற்றுக்கொள்கின்றனர். அண்மைய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் 50 பிரித்தானியர்களில் ஒருவர் இந்தக் கடன் முறையை வீட்டுவாடகைப் பணத்தைச் செலுத்துவதற்கும், வீடுக் கடன் தொகையைச் செலுத்துவதற்கும் பய்ன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன். housing charity Shelter என்ற தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகின. வரலாற்றில் இதுவரை இவ்வாறான நிகழ்வுகள் நடந்ததில்லை என அந்த நிறுவனம் கூறுகிறது. உலகம் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மக்களின் நாளாந்த அவலங்களிலிருந்து இந்த நிறுவனங்கள் பணத்தைச் சுருட்டிக்கொள்கின்றன. சரிந்துவிழும் பிரித்தானியப் பொருளாதாரக் கப்பலிலிருந்து மீள்வதற்குப் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.