மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 300 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவிலான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லி முழுமையாக முடங்கியது.
பஞ்சாப், ஹரியனா, சட்டீஸ்கர்,உத்தரகாண்ட் உட்பட பல மாநிலங்களில் திவீரமான போராட்டங்கள் நடந்தது. பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் காசியாபாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதே போன்று டெல்லி குருகிராம் எல்லை முழுமையாக முடங்கியது. பல்லாயிரம் வாகனங்கள் நகர முடியாமல் முடங்கிக் கிடப்பதால் ஒட்டு மொத்த டெல்லியின் இயல்பு வாழ்க்கையும் முடன்க்கிப் போனது.
கேரளம் தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.
இந்த போராட்டத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக நீங்கலாக திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி
#IStandWithFarmers என்ற ஹேஷ் டேக்கில் ட்விட் செய்துள்ளார்.