மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நாடு முழுக்க போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்களை ஒடுக்க பாஜக அரசுகள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எடுபடவில்லை. சமீபத்தில் உத்தரபிரதேசமாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்திய அமைச்சரின் மகன் மக்கள் போராட்டம் காரணமாக கைது செய்யபப்ட்டுள்ளார்.
இந்நிலையில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் கலவரத்தை உருவாக்கும் நோக்கோடு ஒரு கொலை விவசாயிகள் போராடிய இடத்தில் நடந்துள்ளது.
சிங்கு எல்லையில் நடந்து வரும் போராட்டக்களத்திற்கு அருகில் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரு இளைஞரின் உடல் தொங்கவிடப்பட்டிருந்தது. இந்த உடலை அதிகாலைதான் விவசாயிகள் பார்த்துள்ளார்கள். ஏன் இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. யார் கொன்று இப்படி போராடும் இடத்திற்கு அருகில் கொண்டு வந்து தொங்க விட்டார்கள் என்றும் தெரியவில்லை.
ஆனால் சில இந்துக்குழுக்கள் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இந்து வாலிபர் ஒருவரை கொன்று விட்டதாக சீக்கியக் குழுவான நிஹாங்கஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்த வாலிபரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் வாலிபரை அடித்து கொன்று, உடலை போலீஸ் தடுப்பில் தொங்கவிட்டதாகவும் பின்னர் மணிக்கட்டை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பத்தை போராடும் விவசாயிகள் மறுக்கிறார்கள். இந்த போராட்டத்தை சிதைக்கும் நோக்கோடு சதி செய்கிறார்கள். மதக்கலவரத்தை தூண்டும் நோக்கோடு யாரோ இந்த இளை ஞரை தூண்டி விட்டு கொலையும் செய்திருக்கிறார்கள்.