
வியட்னாமிய மக்களின் வீரம் செறிந்த ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டத்தின் முன்னால் 1975 ஆம் ஆண்டு அமெரிக்க அணுவாயுதங்களும் விமானங்களும் தோல்வியடைந்து அமெரிக்காவிற்கே திரும்பிச் சென்றன. வியட்னாம் யுத்த முடிந்து 30 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவின் அடிமை நாடாக வியட்னாம் மாற்றமடைந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் மரணத்தை அளிக்காத ஆயுதங்களின் விற்பனைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. தற்போது பாரக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஆசிய நாடுகளைக் குறிவைத்து அமெரிக்க அரசு ஏகாதிபத்தியம் இயங்கி வருகிறது. சீனாவின் கொல்லைப் புறத்திலிருக்கும் வியட்னாமை இராணுவ மயமாக்கும் திட்டத்தின் முதல் பகுதியாக அமெரிக்கா எல்லா ஆயுதங்களையும் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
இன்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சாரக இருக்கும் ஜோன் கெரி முன்னை நாள் இராணுவத் தளபதி. வியட்னாமில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தில் முக்கிய பதவி வகித்தவர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை வியட்நாமின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான பாம் பின் மின் வாஷிங்டனில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் விளைவாக 40 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஆயுத ஏற்றுமதித் தடைகளின் ஒரு பகுதியை நீக்குவதாக ஜோன் கெரி அறிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு ஆயுதங்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார் என்று அவரது அலுவலகத் தகவல் தொடர்பாளரான ஜென் சகி தெரிவித்துள்ளார்.