யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னை நாள் மாணவனும், விஜிதரன் என்ற மாணவன் கடத்தப்பட்ட வேளையில் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களை பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு தலைமை தாங்கியவருமான விமலேஸ்வரனின் நினைவஞ்சலி நூல் ஒன்றை அவரது சகோதரி விமலேஸ்வரி வெளியிட உத்தேசித்துள்ளார். இந்த நூலை வெளிக்கொண்டு வருவதற்கான ஆக்கங்களும் ஆவணங்களும் அவரது நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. விமலேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது மதிப்பையும் தோழமையையும் பெற்றிருந்த தலைவராகத் திகழ்ந்தவர். புளட் இயக்கத்தின் மாணவர் அமைப்பில் ஆரம்பத்தில் இணைந்திருந்த இவர், பின்னதாக பாசறை என்ற மார்க்சியக் குழுவுடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களில் தனது சமூக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த விமலேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் 1988ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். விமலேஸ்வரன் குறித்த கட்டுரைகளையும் அஞ்சலிக் குறிப்புகளையும் inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து நண்பர்களும் நட்புடன் வேண்டப்படுகின்றனர்.