பகத்சிங் பற்றிய ‘இன்குலாப்’ என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம் 42 வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது.
தியாகி.பகத்சிங் இந்திய நாடு வெள்ளை எகாதிபத்தியாதிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும், ஆனால் அந்த விடுதலை இந்திய கருப்பு முதலாளிகளின் கைகளில் சென்று விட கூடாது என்று விரும்பினார். அதற்காக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அணிதிரட்டினார். தாங்கள் வெளிப்படையாக செயல்படமுடியாத போது தங்கள் கருத்துகளை மக்களுக்கு பிரசாரம் செய்யும் முகமாக தான் அவர் பாரளமன்றதிற்குள் யாருக்கும் சேதம் விளைவிக்காத வகையில் குண்டுகளை வீசினார் . தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தையே பிரசார மேடையாக்கி நாட்டு மக்களுக்கு கொண்டு சென்றனர். அப்போது இந்திய மக்கள் அனைவரும் பகத்சிங்கை தங்கள் பிள்ளையாக, சகோதரனாக ,தோழனாக பார்த்தார்கள்.இந்தியாவில் அப்போது இருந்த புரட்சியாளர்கள் பகத்சிங்கை மாவீரனாக போற்றினார்கள். இதை கண்டு பொறுக்க முடியாத பிரிட்டிஷ் அரசு பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதித்தது.
பகத்சிங்கும் அவரின் தோழர்களும் எதற்காக போராடினார்களோ அதற்கு மாறாக வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்திய முதலாளிகளின் கைகளுக்கு சுதந்திரம் சென்றது. பகத்சிங்கின் தியாகத்தை அவருக்கு சீக்கிய மத சாயம் பூசி அழிக்கப்பார்த்தது இந்திய அரசு, ஆனால் இந்திய மக்கள் மத்தியில் பகத்சிங்கின் தியாகத்தை என்ன செய்தாலும் அழிக்கமுடியாது.
ஆளும் முதலாளித்துவ அரசு இன்றும் பகத் சிங்கின் கருத்துகளை அபயகரமாகவே பார்க்கிறது. அதனால் தான் பகத்சிங் பற்றிய குறும்படத்தினை சர்வதேச பட விழாவில் திரையிட மறுக்கிறது. இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னுடைய இன்னுயுரை கொடுத்த தியாகி பகத்சிங் பற்றிய குறும்படத்தை திரையிட மறுக்கின்ற ஐ.எப்.எப்.ஐ. இன் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கது.









1920-30 காலப் பகுதியில் பகவத்சிங்கின் நிலமை புரிந்து கொள்ள கூடியதே!. யாரும் இனிவரும் காலங்களில் பகவத்சிங்கின் வாழ்வை பின்பற்றக் கூடாது.
இது யாருக்கும் பிரயோசனம் இல்லாத வேலை என்பதை விட தனது மோட்டு தியாகத்திற்கு அர்பணிப்புக்கு அவமானம் ஏற்படுத்தக் கூடியது.
அது கிட்டதட்ட சயினட்டை அறிமுக படுத்தியவர் இறுதியில் வெள்ளைக் கொடியுடன் கியூவில் நின்றதற்கு ஒப்பாகும்.
;அதுபோக உயிர்களுக்கு சேதம் விளைவிக்காத கதிரை மேசைகளை உடைக்க கூடிய குண்டுகளை தான் வீசினார் என்றால் அமெரிக்க அதிகாரம் எங்கள் குண்டுகள் எதிரியை நோக்கி தான் பாயும் என்பது போல் உள்ளது.
சிந்திக்க வேண்டியவர் வாசகர் அல்ல. இந்த கட்டுரை ஆசிரியரே!.
சரியான பதில் பாராட்டுக்கள்நண்பரே