இலங்கையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமருக்கு புலிகளின் அச்சுறுத்தல் காராணமாகப் பாதுகாப்பு வழங்க இந்திய அரசபடைகள் இலங்கையில் பிரசன்னமாகவிருக்கும் நிலையில் புலிகள் சார்க் மாநாட்டை ஒட்டி ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதானது இந்தியப்படைகளின் வருகையை நியாயப்படுத்த முடியாத சங்கடமான நிலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியிருக்கும் புலிகளின் இந்த முடிபானது, இந்திய ராணுவ வருகையை விரும்பாத இலங்கை அரச சார்பானதாயிருக்கும் அதேவேளை இந்தியாவின் ராஜ தந்திர வட்டாரத்திலும் குழப்பனிலையை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக யுத்த நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று (யூலை21) செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை. சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது. சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது.
ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது. செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது. உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.
தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது. இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும். மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குப் பதிலடி” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்காது தயவு செய்து அந்தத் தலைப்பை எடுத்து விடவும். “சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பதிலடி” என்ற தலைப்புப் பொருத்தமானது.
இந்திய இராணுவம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்திற்காக பாதுகாப்புக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் போர்வையில் இலங்கை அரசாங்கம் தவறிலைத்துவிடுமோ எனற ஐயப்பாட்டில்தான் இந்திய இராணுவம் இலங்கை சென்றுள்ளது.
ஏற்கனவே முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் இராஜீவ்காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்வம் வரலாற்றில் மறரக்கமுடியாத ஒன்று.
தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகளுக்குக் கட்டாய ஓய்வு தேவை. கடந்த ஒருவார காலத்திற்கிடையேயான சம்பவங்களை ஆழநோக்கினால் இந்த ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்திற்கான காரணங்கள் விளங்கும்.
ஆகவே கோர்த்துவிடுவதைத் தவிர்த்து உண்மையான கொடுமைக்காரர்களை உலகுக்கு எடுத்துச் சொல்லவும்.
நன்றி!
தமிழன்
விடுதலையை வென்றெடுக்க முடியாத விடுதலைப் புலிகள்,
தொடர்ந்தும் தோல்விகளை சந்திப்பதால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
என்றைக்குமே புலிகள் இதய சுத்தியுடன் நடந்து கொள்ளப் போவதில்லை.
அடடா இதுதான் புலிகளின் ராஜதந்திரம் என்று பொங்கு தமிழில் கொடி பிடித்த தமிழ் உணர்வாளர் சொல்லுகினம்.
இப்படியான ராஜதந்திரங்களினால் தான் இன்று மிகவும் வெற்றிகரமாக உலகின் பல நாடுகளால் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதிகள் அரசியல் பணிமனை வைத்து சுற்றறிக்கை விட்டால், வன்னியின் ஊதுகுழல்களும் அது சார்ந்த ஊடகங்களும், அதற்குத் தலைப்பு கொடுத்து, ஆய்வறிக்கைகள்
வெளியிடலாமேயொழிய இவர்கள் புளுகுவதுபோல் இலங்கையிலோ இந்தியவிலோ ஒரு அரசியல் அலைகளையும் கிளப்பப் போவதில்லை.
“மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது”
மாநாடு யாழ்ப்பாணம்,திரிகோணமலை,மட்டக்களப்பு இவைகளில் எந்த இடத்தில் நடந்தாலும் ஒத்துழைப்பு வழங்க முடியாத நிலையில் உள்ள நீங்கள் எப்படித் தலைவா கொழும்பில் நடக்கும் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்கள். போங்க தலைவா நீங்க விடுகிற பகிடிக்கு அளவே இல்லை.
சார்க் மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைப்போம் என்பது அர்த்தமற்றது. மாநாட்டுக்கு புலிகளின் ஒத்துழைப்பு தேவையே இல்லை. சார்க் மாநாடு தமிழர் பிரச்சினையை விவாதிக்கப் போவதில்லை. ஏனெனில், அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. சார்க் நாடுகள் தமக்குள்ளேயேகூட இன்னும் ஒத்திசைவை முழுமையாக ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில், – “ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு” – என்பது வெற்று மிகைப்படுத்தலன்றி வேறேதுமல்ல. உலகளாவிய அரசியலில் நாளுக்கு நாள் தனிமைப்பட்டுக் கொண்டிருக்கும் புலிகள், தம் பால் கவனத்தை ஈர்க்கும் முயற்சிதான் இது. மற்றொரு பக்கம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தை இழந்து கொண்டிருக்கும் புலிகள், சற்றே சுதாரித்துக் கொள்ள கால அவகாசம் பெறுவதற்காக இதுபோன்ற சண்டை நிறுத்தங்களை இதற்கு முன்னர் பலமுறை அறிவித்திருக்கிறார்கள் என்பது வரலாறு. புலிகளின் இந்த அறிவிப்பு ஆரம்பப் பரபரப்புக்கு மேல் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதே என் கணிப்பு.
தமிழீழம் அங்கிகரிக்கப்படும் காலம் வரும் அப்போது புலிகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழீழ இராணுவத்திடம் தமிழீழ மக்களின் பாதுகாப்பை ஒப்படைப்பார்கள் அதுவரை சிறீ லங்கா இராணுவம் செய்யும் இனப்படுகொலையை உலகுக்கு தெரியப்படுத்தினால் போதும் அதுதான் தமிழனுக்கு அழகு
தமிழீழம் என்பது பிணம்தின்னி பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை கிடையாது தமிழீழம்கிடைத்தால் யாரை கொல்வது யாரை தின்பது கெளரவாமாக
வாழ்ந்த தமிழா;களை ஒரு கொலைகாறச்சமுகாகமாற்றிய பிரபாகரனை இனியும் இறைவன் மன்னிக்க மாட்டான் தமிழனின் இடியமீன் கள்வா;களின்
தலைவன் பிரபாகரன் தமிழா;களின் அல்ல
சார்க் மாகாநாடு வன்னியில் அல்ல கொழும்பில் என்பது அதுகூடத்தொpயாத
முட்டாள் பிரபாகரன் முதலில் தமிழா;களை கொல்வதை நிறுத்தினால்போதும்
முதலையின் போர்நிறத்தம் யாருக்கு தேலவ
சார்க் மாகாநாடு வன்னியில் அல்ல கொழும்பில் என்பது அதுகூடத்தொpயாத
முட்டாள் பிரபாகரன் முதலில் தமிழா;களை கொல்வதை நிறுத்தினால்போதும்
முதலையின் போர்நிறத்தம் யாருக்கு தேவை
Pirabhakaran is Leater of world tamil people.Pirabhakaran is a Gentleman.Karunanithi is a fool.
mind ur business.தலைவன் பிரபாகரன் இனியும் மன்னிக்க மாட்டான்.
INDIA IS A FOOL COUNTRY.
be careful india.
“vanavan on July 30, 2008 6:46 am
“vanavan on July 30, 2008 6:46 am
Pirabhakaran is Leater of world tamil people.Pirabhakaran is a Gentleman.Karunanithi is a fool.
mind ur business.தலைவன் பிரபாகரன் இனியும் மன்னிக்க மாட்டான்.
INDIA IS A FOOL COUNTRY.
vanavan on July 30, 2008 6:47 am
be careful india.”
தொடர்ந்தும் வன்னி, முல்லைத்தீவு பிரதேசங்களை புலிகள் இழந்து கொண்டிருப்பதால், அங்கிருந்து தப்பிய புலிகள் “இனியொரு”வுக்குள் தஞ்சம் அடைந்து விட்டனர்.
ஆனாலும் “இனியொரு” தொடர்ந்தும் நடுநிலமையோடு செயற்படும் என எதிபர்க்கிறேன்.