விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான சிங்கப்பூரின் மீளமைப்பு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பாலதேவ் நாயுடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு 2006 ஆம் ஆண்டில் நிதியுதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு உட்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு வரை போல்தேவ் நாயுடு, அமெரிக்காவில் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விடயம் அவரின் மனைவிக்கு தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலதேவ் நாயுடு, கடந்த 16 ம் திகதியும் 18 ம் திகதிக்கும் இடையிலான தினத்தில், நாடு கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.