விடுதலைப்புலிகளின் சுகந்தன் முகாம் படையினர் வசம்

முல்லைத்தீவு கிரிபன்வேவெ காட்டுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் சுகந்தன் முகாமை பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59ஆம் படை பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் சில நாட்களாக பாரிய சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முன்னாகம் படைமுகாமை படையினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.