வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரச சார்பில் ராஜித செனிவரத்ன கண்டனம் தெரிவித்தமை தெரிந்ததே. அதே வேளை இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால டீ சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார். பேரினவாத நச்சூட்டி, இரும்புத்திரைக்குள் மூடிவைக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடனேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
ராஜித சேனாரட்ன போன்ற பேரினவாதிகள் சிங்கள மக்களிடமிருந்து தமிழ் மக்களின் அவலங்களை மறைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு இன்றைய அவரது எதிர்ப்புக்குரலே சாட்சி. சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தை முன்வைத்தே வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொள்கின்றனர். ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கடைந்தெடுத்த இனவாதிகள் கூடத் தம்மை இடதுசாரிகள் என்றும் மார்க்சிஸ்டுக்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் சீ.வீ.விக்னேஸ்வரன் நிறைவேற்றிய தீர்மானம் சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது அவசியம். சிங்களப் பேரினவாதிகளிடமிருந்தும், தமிழ் இனவாதிகளிடமிருந்தும் திட்டமிட்டு நடத்தப்படும் அழிவுகளிலிருந்து மனித குலத்தின் ஒரு பகுதியை மீட்படதற்கான ஆரம்பப் புள்ளியாக இது அமையலாம்.
இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என மக்களின் பணத்தை ஏப்பம்விட்ட புலம்பெயர் அமைப்பு ஒன்று புலம்பெயர் நாடுகளில் பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளது.
விக்னேஸ்வரனின் அறிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான மக்கள் உழைப்பின் ஒரு பகுதியாவது பயன்படுமானால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கு வலுவான அடித்தளத்தையிட்டவர்களாவோம்.
இனவழிப்பு என்பது ஏதோ நடந்து முடிந்தத்ன்ற தொனியிலேயே ரஜித சேனாரட்ன தெரியாததொன்றைப் பற்றி புலம்ம்புகிறான்.
சி.வீ.கே சிவஞானத்தின் பதில் – இது சர்வதேசத்திடமான கோரிக்கை என அமைவது திருப்பித் ஹ்டிருப்பிச் சொல்லப்பட வேண்டும்.
மேலும் கீழுள்ள காணொளியில் மனோ கணேசன் சிங்களத்தில் மீண்டும் சரளமாக குரல் கொடுப்பதை நோக்கவும். மனோ கணேசன் அண்மையில் தான் சம்பந்தனுக்கு மலையக மற்றும் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் எண்ணிக்கையளவிலேயே ஈழத்தீவின் பூர்வீகத் தமிழ் மக்களுக்கு நிகராக இருப்பதை உணர்த்துமாறு பேசியவர். அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி மதிக்கப்படல் வேண்டும். மனோ கணேசன் போன்றோர் சிங்கள மக்களுக்கிடையே வடக்கிலும் கிழக்கிலும் புலம்பெயர்த்தப்பட்டும் மொழிப்பிரயோகத்தில் அல்லலுறும் தமிழரின் பாரிய பிரச்சனை ஒன்றை தீர்ப்பதற்கு உதவக் கோரலாமே?
https://www.youtube.com/watch?v=5WjUpjHeMUo
மேலும் நேற்று வடமாகாண ஆளுனனாக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.எம்.ஜீ.எஸ் பலிஹகாரா முதலமைச்சருக்கு தன்னிடம் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை காரணங் காட்டி விளக்கமளிக்குமாறு ஆணையிட்டது வெளியானது. ஆனால் இன்று விக்கினேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் சர்ச்சைக்குரிய தீர்மானம் பற்றி அல்லாமல் ஏதோ இந்திய மீனவர்ப் பிரச்சனை பற்றி மட்டுமே கதைத்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
எச்.எம்.ஜீ.எஸ் பலிஹகாரா நடாத்துவது போல் அமைந்துள்ள இந்த இணைய தளத்தில் எந்த மூலையில் இந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேசத்தை நோக்கிய கோரிக்கை வெளிவரப்போகிறதோ – என்று குழப்பம் இருக்கவே இருக்கும்.
http://www.np.gov.lk/