அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சே பிரிட்டிஷ் காவல்துறையினரை சந்திக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உளவுத்துறையோடு தாம் தொடர்ந்தும் தொடர்ப்பிலிருந்ததாகவும் ஆனால் தன்ன்னைத் தொடர்புகொள்ளாமல் அவர்கள் பிடியாணி பிறப்பித்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார். பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள பிரித்தானிய அரசிற்கும் அமரிக்க அரசிற்கும் எதிராக மக்கள் அன்சன்சேயிற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளது.
ஊடகங்கள் பக்கச் சார்பானவையாகவும், அதிகாரம் சார்பானவையாகவும் அமைந்த காரணத்தினாலேயே தாம் அனைத்துத் தடைகளையும் மீறிச் செயற்படவேண்டிய நிலையில் இருந்தாஅகக் அன்சஞ்சே குறிப்பிட்டார். தவிர, அவரது பணத்தை முடக்குவதற்கும், விக்கிலீக்ஸ் மீது சட்டத்திற்குப் புறம்பான சைபர் தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அமரிக்க, பிரித்தானிய அரசுகள் உட்பட பல அதிகாரங் முயன்றுவருகின்றன.