சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிப்பவர்கள், 13ஐயும், 13க்கு மேலதிகமாகவும் வடமாகாணசபைக்கு அதிகாரம் வழங்குவோம் என ஐநா செயலாளர் நாயகத்துக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு, இன்று அதை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கத்தை நோக்கியும் கேள்வி எழுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் தீர்மானங்கள் தொடர்பில் தென்னிலங்கை கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில், கருத்து கேட்டபோது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
வடமாகாணசபை வரம்பு மீறி விட்டது என ஐக்கிய தேசிய கட்சி சொல்கிறது. வடமாகாணசபையை கலைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சொல்கிறது.
வடமாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிவிட்டது எனவும், 13ம் திருத்தத்தில் சர்வதேச விசாரணை கோர அதிகாரம் இல்லை எனவும் ஐதேக எம்பியும், பிரபல சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ச கண்டிபிடித்து சொல்லியுள்ளார்.
இந்த சட்ட கருத்து நீதிமன்ற விவாதத்திற்கு உரியது. வடமாகாணசபையை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு சிலர் திட்டமிடுவது எனக்கு தெரியும். அதற்குதான் இந்த கருத்து அடித்தளம் இடுகிறது.
13ம் திருத்தத்தில் இருக்கின்ற பெரும்பாலான அதிகாரங்கள் இன்னமும் வடமாகாணசபைக்கு வழங்கப்படவில்லை என்பது பிரபல சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவுக்கு தெரியாதது அல்ல. போலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படாதது ஒருபுறம் இருக்க, தெற்கின் முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் கூட இன்னமும் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு வழங்கபடவில்லை. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், சட்ட அறிஞருமான விக்கினேஸ்வரனிடம் கேட்டால், வழங்கப்படாத அதிகாரங்கள் பற்றிய பட்டியலை தெளிவாக தருவார். இது இந்த அரசு செய்துவரும் அப்பட்டமான அரசியல் சாசன மீறல்.
ஆகவே அரசியல் சாசன மீறல் என்று வடமாகாணசபைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அதே அரசியல் சாசன மீறல் என்று சொல்லி வடமாகாணசபை, மத்திய அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அதனால்தான் விக்கினேஸ்வரனை விமர்சிக்கும் சட்டத்தரணிகள் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சொல்கிறேன்.
வடமாகாணசபையை கலைக்க வேண்டுமென்று சொல்லும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில பற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை. மாகாணசபைகளே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு மாகாணசபையில் அமைச்சு பதவிகளையும் வகித்துகொண்டு, இன்று அதே மாகாணசபைக்கு போட்டியிடுவதற்காக நூறு, நூறு ரூபாய்கள் பணம் சேகரிக்கும் நபர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இவர்களை எதிர்வரும் தேர்தலுக்கு பிறகு மேல்மாகாணசபைக்கு சென்று நேரடியாக கவனித்து கொள்கின்றேன்.
இந்த ஜோக்கைக் கேளுங்கள்… “புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.”
ஆனால் இவரது… இவர் சார்ந்த கட்சியின்… புலன் பெயர் உறுப்பினர்களோ… புலிகளின் நிர்வாகம் இல்லாத தற்போதைய நிலையிலும்… அங்கு சென்று எப்படி வாழ்வது என்று தொடர்ந்து இங்கேயே… தமது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர்…
“புலம்பெயர் தமிழர்கள் இங்கு திரும்பி வரவேண்டும்… முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்…” என்று பாரம்பரிய அமைச்சரும் பல தடவைகள்… மேடைகளில் பேசியுள்ளார்… அறிக்கைகள் விட்டிருக்கிறார்…
முன்னுதாரணமாக… தனது கட்சிக்காரரை குடும்பத்துடன் திரும்பக் கூப்பிடட்டும்… வாழ்ந்து காட்டட்டும்…
உயிருக்கு உத்தரவாதம் தரட்டும்… நாம் தயார்… நான் தயார்…
82 இலிருந்து… புலிகளின் போராட்டத்தை பார்த்துக் கொண்டு இருப்பவன்… அனுபவப்பட்டவன்… பாதிக்கப்பட்டவன்…
நான் தயார்…
முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சி மக்களின் தேவைகள் அறிந்து… மக்களுடன் மக்களாக இருந்து… தன் வரம்பிற்கு உடைபட்ட… தன்னாலான.. பாலர் தொடக்கம்… முதியவர்கள் வரையிலானொருக்கு செய்யும் சேவைகளை.. மதிக்கிறேன்… மெச்சுகிறேன்…
ஆனால் “புலம்பெயர் தமிழர்கள் இங்கு திரும்பி வரவேண்டும்… முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்…” என்று மட்டும் அறிக்கைகள் விடாதீர்கள்…
முதலில் உங்கள் வால் பிடிக்கும் சர்வதேச உறுப்பினர்கள் முன்னுராதமாக தாயகம் திரும்பி வாழ்ந்து காட்டட்டும்…
http://www.epdpnews.com/news.php?id=22833&ln=tamil
இதைவிட அடுத்த ஜோக்… முன்னால் தீவகப் பொறுப்பாளரும்… யாழ் மாவட்டப் பொறுப்பாளரும்… மாகான சபையின் எதிர்க் கட்சித் தலைவருமானவர் ஜிங்கு… ஜிங்கு… கள்ளக் காதல்… சக உறுப்பினர் கொலைக் குற்றத்தில் சிறையில் வாட… “மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அதிகாரத்தை அவர்களிடம் வழங்கிவிட்டு இன்று எதுவுமே செய்ய முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றார்கள். அதாவது தவமிருந்த பக்தர்களுக்கு கேட்டவரத்தை வழங்கிவிட்டு பின்னர் அதனை எண்ணித் தவித்த சிவபெருமானின் நிலையில் இன்று வடக்கு மக்கள் உள்ளனர் என ஈ.பி.டி.பி வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.”
இவர்களுக்கு வாக்களித்த மக்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்களோ…?
அறிக்கைகளுக்கு மட்டும்… பஞ்சமில்லை… ஹ்ம்ம்….
http://www.epdpnews.com/news.php?id=22832&ln=tamil
அடுத்த அறிக்கை… “மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியபலம் எம்மிடம் மட்டுமே உள்ளதென்பதை மக்கள் நன்கு உனரந்துள்ளார்கள்” “மக்களால் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட மாகாணசபை இயங்குவதற்கு ஆரம்பித்து நான்கு மாதங்களை எட்டுகின்ற நிலையிலும், மக்களின் எதிர்பார்ப்புக்களை கருத்தில் எடுக்கவோ, அவற்றை நிவர்த்தி செய்யவோ முன்வராதிருக்கின்றது. மாறாக மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் நடவடிக்கையிலேயே அச்சபை ஈடுபட்டு வருகின்றது”
But, still Kamal in jail…
http://www.epdpnews.com/news.php?id=22831&ln=tamil