SLDF உறுப்பினர்கள் TBC வானொலி நிலையக் கொள்ளையில் பங்கு?!

– Tamilaffairs இணையச் செய்தி

 

ரெயினஸ் லேன் ஹரோ (Rayners Lane in Harrow -UK) என்னுமிடத்தில் அமைந்திருக்கும் புலி எதிர்ப்பு தமிழ் ஒலிபரப்புச் சேவையான TBC 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட தமிழீழ விடுத்லைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிறீ லங்கா ஜனநாயக முன்னணி (SLDF ) என்ற போலிப் புலி எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் 2005 இல்நடந்த முதலாவது கொள்ளையில் இவருடன் இணைந்து ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

மூன்று SLDF உறுப்பினர்களும் புலி உறுப்பினர் வானொலி உபகரணங்களை அகற்றுவதற்கு உதவியதாகவும் இரண்டு உறுப்பினர்கள், அவை கார் பூற்சந்தையில் மலிவு விலையில் விற்கப்படுவதற்கு முன்னதாக, அவர்களது வீடுகளில் குறித்த காலத்திற்கு மறைத்து வைப்பதற்கு உதவியதாகவும் தெரியவருகிறது.

வேலையற்ற மருத்துவர் ஒருவரும், கடந்த காலத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நெருக்கமானவரும் இன்றைய குடியகல்வு ஆலோசகர் ஒருவரும் கணணிப் பொறியியளாளர் ஒருவருமே இந்த மூவரும் எனத் தெரியவருகிறது.

தகவலாளரின் கூற்றுப்படி, கணணிப் பொறியலாளர் திருடப்பட்ட உபகரணங்களை மற்றுமொரு SLDF உறுப்பினர் இன் வீட்டிற்குக் கடத்தியதாகவும், கொள்ளைபற்றிய செய்திப் பரபரப்பு குறைந்திருந்த வேளையில் கார் பூற்சந்தையில் உபகரணங்களை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வானொலி நிலையக் கொள்ளை என்பது பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் சான்றுகள் பற்றாக்குறை காரணமாக மேற்கொண்டு செல்லவில்லை.

பின்னைய தகவல்கள் TBC இன் கரங்களைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை போலிஸ் தரப்பு விசாரணைகளில் முன்னேற்றம் காணவும் இடமுண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணைகள் மேற்கொண்டு நடைபெறும் பட்சத்தில் சட்டவிரோத உடந்தைக்கும், களவாடப்பட்ட பொருட் களைக் கையாண்டமைக்கான தண்டனையை குறித்த SLDF உறுப்பினர்கள் தண்டனை பெறலாம்.

2006 ஆம் ஆண்டு TBC மறுபடி உடைத்துக் களவாடப்பட்டபோது விலையுயர்ந்த வானொலி உபகரணங்கள் திருடர்களால் கொள்ளையிடப்பட்டிருந்தது. முன்னைய அதேநபரே இந்தக் கொள்ளையையும் நடத்தியதாக அந்நேரத்தைய ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்த போதிலும் SLDF உறுப்பினர்களும் இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்டிருந்தார்களா என்பது தெளிவில்லை.

வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்ட இந்தத் திருட்டைத் திட்டமிடுவதற்காக திருடனும் உடந்தையாக இருந்த இந்த மூவரும் மது அருந்தும் கேளிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.

TBC இற்கு முன்னால் நடைபெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் நடராஜா சேதுரூபன் அல்லது ஊத்தை சேது என்பவரும் அனுஷிரிஸ்குமார் தாமோதர்ம்பிள்ளை அல்லது ரவுடி ராஜன் என்பவரும் ஹரோ நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையைப் பெற்றுள்ளனர்.

 

பொலீஸ் விசாரணைக்கான சாத்தியப்பாடுகளைக் கருத்தில் கொண்டு SLDF உறுப்பினர்களின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்படவில்லை.

இலங்கையில் அல்லல்படும் சிறுபான்மைத் தமிழர்களின் ஜனநாயகத்திற்காகவும் நீதிக்காகவும் பிரச்சாரம் மேற்கொள்ளவே SLDF உருவாக்கப்பட்டது.

புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக தீவிர விமர்சனங்களை முன்வைத்த SLDF இன் உயர்மட்ட உறுப்பினர்கள் நன்கு அறியப்பட்ட முன்நாள் புலி உறுப்பினர்களாவர்.

புலிகளின் பயங்கர வாதச் செயற்பாட்டிற்கெதிராக பிரச்சாரம் மேற்கொண்டமையால் மிகப்பிரபலமடைந்தவர்கள் தான் இந்த SLDF.

 

புலிகளுக்கெதிரகப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வானொலி நிலையத்திற்கெதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் SLDF இன் முக்கிய உறுப்பினர்கள் ஏன் ஈடுபட்டார்கள் என்பது இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

 நன்றி : http://www.tamilaffairs.com/news