வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்கள் மூன்று அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டது.
இதன் போது, கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த கைதிகள் தென் பகுதி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட கைதியே உயிரிழந்துள்ளார்.
அரசபடைகளின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியே அவர் உயிரிழந்த்துள்ளார் எனத் தெரியவருகிறது.
இந்தியாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் அகதிகளும் இலங்கையின் அரசியல் கைதிகளும் அண்மைக்காலமாக இரு அரசுகளாலும் ஒரே வகையான அடக்குமுறைக்கு ஆளாவதன் பின்புலம் என்னவாக இருக்கும்?
தங்களின் சட்டங்கள் இட்ட இறுக்கமான சிறை இருப்பை மீறி எந்தவிதமான போராட்டத்தாலும் விடுதலை சாத்தியமில்லை என்ற பதிலை பலாத்காரத்தால் சொல்கின்றனவா?
இவர்களின் விடுதலைக்கான புறசத்திகளின் போராட்ட முனைப்புகளை அறிந்துகொள்ளவும் அவைகளின் பலம், பலவீனங்களை பயன்படுத்தி இல்லாதொழிக்கவும் முனைகின்றனவா?
இது வெளியில் இருபவர்களுக்கான மிரட்டல் செய்தி
இனியும் இலங்கை தமிழர்கள் போராட்டம்,புரச்சி என்று பேசினால் உள்ளே போட்டு மிதிச்சே கொள்ளுவம் என்ற உளவியல் செய்தி
சின்னசசியின் தொனியைப் பார்த்தால் சிங்களநாய்களுக்கு வக்கலாத்து வாங்குபவனைப்போல் தெரிகிறது. தூ..தூ..
சிறகை விரி பின் சிரி.
பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது என்றார்கள்.
அரசியலால் கோடி கோடியாக அள்ளி எடுத்தவர்கள்.
அனுபவம் தந்த பாடங்களை மறந்ததேன் சிறையிலுள்ள அப்பாவிகள், 32 நாடுகள் ஈழத்தமிழரை பயங்கவாதிகளாக தடைசெய்துள்ளபோது அனுதாபமும் தெரிவிக்க வழியில்லை. தடையை நீக்க தமிழனிடம் எந்தொரு தலைவனுமில்லை. ஆனால் உலகமெல்லாம் தமிழனுக்கு தலைமைகள் உண்டு தலைமுடிபோல் எண்ணுவது கடினம்.
There is an immediate need for something beyond the current Prevention of Terrorism Act to handle this at the National Level. This is not a struggle but the frustations and burst of anger from the citizens of this country. This calls for a Third Party Mediation as once prescribed by the late Dr. Ambalavanar Sivarajah (1944), Professor of Political Science, Peradeniya Campus.