24.12.2008.
வவுனியா நகரில் அண்மைக் காலமாக அதுகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்கள்,
கப்பம் கேட்டுப் பெறுதல் போன்ற பயங்கரச் செயல்கள் தொடர்பான சமூக விரோதச் சக்திகளை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பை புளொட் வேண்டி நிற்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தம்மை ஜனநாயகவாதிகளாகவும் அரசியல் சக்திகளாகவும் கூறி வேசமிட்டு வலம் வரும் சில குழுக்களும் தனிநபர் சமூகவிரோதிகளும் இப்பகுதி மக்களின் அமைதியான வாழ்வினைக் குழப்பி அவர்களை பீதியில் ஆழ்த்தி இன்றைய யுத்த சூழலை தங்களின் சொகுசு வாழ்வுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும், தாம் யாரென முகங்காட்டாது தொலைபேசி மூலம் மிரட்டியும் ஆட்களைக் கடத்தியும் பணம் வசூலிக்கும் இச்சமூக விரோதக் குழுக்களின் நடவடிக்கைகளை தாம் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
எனவே, இந்த சமூக விரோதச் சக்திகளை இனங்கண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொலைபேசி மிரட்டல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உங்களில் யாரேனும் பாதிப்புக்குள்ளானால் அண்மையிலுள்ள தமது காரியாலயங்களிற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரியப்படுத்துமாறு புளொட்
கூறியுள்ளது.