வலிகாமம் வடக்கில் இன்று அரசுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரததில் உட்புகுந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கு பொதுமக்களோடு மோதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறுகோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் தம்மை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படிப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஆதரவினை வழங்கியுள்ளதுடன் அப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.









In North and East we all must be patient and be prudent. We must know how to work the system through elected members of the parliament and the members of the provincial council. Let us wait peacefully for the elections of the Northern Provincial Council that is scheduled for 2013. .