யாழ். வலிகாமம் பகுதியில் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக 5,000 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டன.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.









Lawyer Sumanthiran also went to the Royal College in Colombo -07 like DIG Indiran and SSP Sri Kuganesan. Ms. Narmada Rasanayagam went to the Cecilias Convent at Batticaloa. My father was also addicted to civil litigation.
சிறிலங்கா படைத்தரப்பினரால் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கும் பிரதேச காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘இராணுவமே வெளியேறு, வலி. வடக்குக் கிழக்கு எங்கள் தாயகம், சிங்கள கூலிப்படையே அங்கு உனக்கு என்ன வேலை, வேண்டும் வேண்டும் எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா, டெலோவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சிவாஜிலிங்கம் உட்பட தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வலி வடக்குக் கிழக்கு மக்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.