வறுமை காரணமாக இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மலையக யுவதி

வறுமை காரணமாக தலவாக்கலைப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச்சேர்ந்தவர் எனத்தெரியவருகிறது.இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்öபெற்றுள்ளது.

அட்டன் சிங்கமலை இரயில் சுரங்கத்தில் இந்த யுவதியின் உடல் அட்டன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர் தனது குடும்ப வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லையென கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அட்டன் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது