தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடைபெறுகின்றது.
இங்கிலாந்து கிங்ஸ்டன் என்ற இடத்தைத் தலமையகமாகக் கொண்டியங்கும் திரு.வரதகுமாரின் முகாமையின் கீழ் இயங்கும் தன்னார்வ நிறுவனமான-NGO- தமிழர் தகவல் மையத்தின் ஏற்பாட்டின் பேரிலேயே இம்மாநாடு நடைபெறுய்கிறது.
இனங்களிடையே ஒற்றுமை ,எதிர்கால அரசியல் தீர்வு யோசனைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கறித்து கருத்துக்கள் இந்த சந்திப்பிலும் ஒன்று கூடலிலும் கலந்துரையாடப்படும் எனத் தெரியவருகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு ) ,மாவை சேனாதிராஜா (இலங்கை தமிழரசுக் கட்சி) , சுரேஷ் பிரேமச்சந்திரன் ( ஈ.பி.ஆர்.எல்.எப்.) , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ) , ஹென்றி மகேந்திரன் (டெலோ) ஆகியோரும்,ஏனைய தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “புளொட்” தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் கே.ஸ்ரீதரன் (சுகு) ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ,தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குவார்கள என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தற்போது சுவிற்சலாந்தில் தங்கியிருக்கும் அதமிழ் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி ரீதியாகவும் ,கூட்டாகவும் அந் நாட்டிலுள்ள புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அமைப்புகளுடன் பல் வேறு சந்திப்புகளிலும் ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்ள விருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரும் பணச் செலவில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இம்மாநாட்டின் பின்னணியில் அமரிக்காவிலிருந்து இயங்கும் நிதிக்கொடுப்பனவு அமைப்பும் செயற்படுவதாக அறிய வருகிறது. இலங்கை அரசிற்கு எதிராகவும் அமரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்களில் TIC ஒன்று .
தமிழர் தகவல் மையத்தின் ஏற்பாட்டில் நிகழும் மேற்படி சந்திப்பு குறித்து அரச கைக்கூலிகளாக லண்டனில் இயங்கும் தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் **************அண்டப் புழுகள் பலதை எழுதியுள்ளார்கள். தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இடையே ஓர் ஆரோக்கியமான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக நிகழும் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ள நிதி ஆதாரம் என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறும் இவர்கள் `ஏட்டா பழம் புளிக்கும்` என்பதுபோல் மனம் குமுறி வெந்து புண்ணாகிறார்கள்.
வரதர் இந்திய சார்பானவர் என்று அறிந்திருக்கிறேன்.ஆனால் அதற்காக அவர் அமெரிக்க எதிர்ப்பாளர் என்று கூறிவிடமுடியாது.
/இலங்கை அரசிற்கு எதிராகவும் அமரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்களில் வுஐஊ ஒன்று / அமெரிக்காவுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை சுட்டிக்காட்டமுடியுமா?
ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்திற்கு ஏற்ப புரொஜக்ட் போட்டு பணம் எடுப்பதில் வரதர் கெட்டிக்காரர்.இதை அவர் 1983ம் ஆண்டு முதல் செய்து வருவதை அவதானிக்கமுடியும்.இப்பொழுதும் கூட அதையே செய்துள்ளார்.மேலும் இதன் மூலம் தன் இருப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.மற்றும்படி இந்த கூட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் விளையப்போவதில்லை.
varathakumar should pay back the money owes of mullaiamuthan and respct his contribution.varathakumar main intention is money and money.all he does and do for money.he only stand for money and money.the selfish guy.what you can expect from him than.
ஈனவும் விடமாட்டார்கள்.நக்கவும் விடமாட்டார்கள். உங்கள் விமரிசனங்களை சிறிது காலத்துக்கு நிறுத்தி வையுங்கள் உடன் பிறப்புக்களே.
புதிதாக எதை ஈனப் பார்க்கிறார்கள்? புதிதாக எதை நக்கப் பார்க்கிறார்கள்?
உடன் பிறப்புக்கள் அறியும்படி விளக்குவீர்களா?
புலிகள் எல்லா விமர்சனங்களையுமே நிறுத்தி வைத்ததால் இதுவரை தமிழர் அனுபவித்தது போதாதா?
இலங்கை மீதான மேலாதிக்கத்துக்கான போட்டி யாருக்கிடையிலானது?
இதிலே புலம்பெயர்ந்தோரிடையே அமெரிக்க ஆதரவாளர்கள் இந்திய ஆதரவாளர்களை விட வலுவாகி விடக் கூடாது என்பதில் இந்திய முகவர்களின் கவனம் உள்ளது.
இந்தக் காய் நகர்த்தல்கள் பற்றிச் சில மாதங்கள் முன்பிருந்தே இலங்கையில் அறிவோம்.
பதவி ஆசையை விட இந்தக் கூட்டத்துக்குப் பொதுவாக என்ன உள்ளது?
அமெரிக்காவும் இந்தியாவும் சிங்களப் பேரினவாதிகள் நடுவிலும் தமிழ்த் தேசியவாதிகள் நடுவிலும் தமக்கு ஆள் திரட்டுகின்றனர்.
எல்லாருமாக ஏமாறப் போகிறோமா?