வன்முறையை மறுதலிப்போம் வாழ்வை மதிப்போம் என்ற நாடுதழுவிய பிரசார இயக்கம்!

19.08.2008.

வன்முறையை மறுதலிப்போம் வாழ்வை மதிப்போம் என்ற நாடுதழுவிய பிரசார இயக்கம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் நடைபெற்றது. என்றும் பெருகிவரும் எண்ணிக்கையிலான மக்கள் இயக்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வ மதக்குழுக்கள், வர்த்தக சமூகம் மற்றும் அக்கறைகொண்ட அர்வலர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்படும் இம்முன்னெடுப்பு அகிம்சைத் தத்துவத்தின் மீதான விழிப்புணர்வை மேம்படுத்தி வன்முறையினால் பாதிப்புற்றோருக்கு நான்கு மார்க்கங்களுடாக நிவாரணம் வழங்க உத்தேசித்துள்ளது: அவை விழிப்புணர்வு , கல்வி , சட்ட உதவி மற்றும் பாதுகாப்பு ஆகும் .

சிலியன்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கல், ஊடகத்துறையினர், வறியவர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கும் சூழலுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட, நேரடி மற்றும் வீட்டு வன்முறைகளுடாக புரியப்படும் வன்முறைச் சம்பவங்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது , மக்கள் இவ்வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக துணிவுடனும் ஒன்றுபட்டும் எழுந்து நிற்கவேண்டியதொரு அவசரத்தேவை இருப்பதை நாம் உணர்கின்றோம் .

எண்ணம் , சிந்தனை, செயல் ஆகியவற்றின் மூலம் அகிம்சா தர்மங்களைப் பற்றியொழுகுவதற்கான நேர்மையானதொரு முயற்சியானது, எமது சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் அமைதி நிலவும் ஒரு நாட்டை ஏற்படுத்துவதற்குமான வல்லமை கொண்டுள்ளது என்று இவ்வுத்தேச மூன்றாண்டு பிரசார இயக்க உறுதியாக நம்புகிறது. இதுவே இப்பிரசார இயக்கம் பரப்ப விரும்பும் ஒரே எளிமையான செய்தியாகும் .

ஓகஸ்ட் 21 ஆம் திகதி எமது சங்கத்தின் பிரதான உறுப்பினர்களின் ஒரு கூட்டத்தில் இப்பிரசார இயக்கத்தை முறைப்படி ஆரம்பித்து 2008 செப்டெம்பர் 21 ஆம் திகதி நாடு முழுதும் நடத்தப்படவுள்ள மாபெரும் விழிப்பு இயக்கமொன்றை இது சர்வதேச சமாதான தினத்தில் இடம்பெறும் . வீட்டுக்கு வீடு விஜயங்கள், சர்வமத வைபவங்கள், பாடசாலைகளில் அகிம்சையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள், உற்சாகமூட்டும் விவரணங்களை வெளியிடுதல் முதலிய பல செயற்பாடுகள் 2008 செப்டெம்பர் 21 ஆம் திகதி நிகழ்வைக் கட்டியெழுப்புவதற்கெனத் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளூரில் திட்டமிடப்பட்டவாறு, வன்முறைகளினால் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவும் வன்முறையை அகிம்சை வழிநின்று வெற்றிகொண்ட பெருமக்கள் அனைவரையும் மதித்துப் போற்றுமுகமாகவும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஒளிவிளக்கேற்றி ஒரு நிமிட மெளனம் அனுஷ்டிக்குமாறு உலகெங்குமுள்ள இலங்கையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தில் ஆரம்பித்து இந்த நாட்டின் ஒவ்வொரு பிரசையும் பிறர் துன்பத்தை தன் துன்பம்போல் உணர்தல், பக்கச்சார்பின்மை, வீடு , அலுவலகம் அல்லது சமூக உறவுகள் என்று எங்கும் எல்லாரிடத்தும் அன்பாகவிருத்தல் ஆகிய நிலைகளிலிருந்து செயற்படுவதற்கு உறுதிமொழியெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்க இப்பிசார இயக்கம் விரும்புகிறது.