வன்முறையை கைவிட வேண்டும்! : நேபாள மாவோயிஸ்ட் பிரசன்டா

காட்மாண்டு, மே 18: இந்திய மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசன்டா அழைப்பு விடுத்துள்ளார்.
.
நேபாளத்தில் இடதுசாரி போராளிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வாக்குச்சீட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட மாவோயிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப் படும் பிரசன்டா தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இந்திய மாவோயிஸ்ட்களுக்கு உங்களது அறிவுரை என்ன என்று கேட்டபோது, அவர்கள் வன்முறையை கைவிட்டு தேர்தல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்காவை பின்பற்றி தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து மாவோயிஸ்ட்களை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பீர்களா என்று கேட்டபோது,  தாம் அந்த நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக கூறினார்.

 

One thought on “வன்முறையை கைவிட வேண்டும்! : நேபாள மாவோயிஸ்ட் பிரசன்டா”

  1. இவரைத் தானே பிரன்சில் வாழும் ரயாகரன் என்பவர் மவோயிஸ்டுக்களின் முன்னொடுயென்று போற்றினார்?
    அப்போ ரயாகரனும் இந்திய மாவோயிஸ்டுகலுக்கு எதிரானவரா?

Comments are closed.