சமீப காலமாக புலம் பெயர் சூழலில் வன்முறைக் கலாச்சாரம் மீண்டும் ஒரு தளத்தில் முளைவிட ஆரம்பித்துள்ளது. அனைத்து விடுதலை இயக்கங்களும் புலிகள் உள்ளடங்கலாக, கொள்கை மற்றும் அரசியல் பிரச்சனைகளின் தீர்வாக வன்முறையையே பிரயோகித்தன என்பது நம்கண்முன் இருக்கும் வரலாறு. ஒரே அமைப்பிற்குள் இருக்கும் மாற்று கருத்துள்ளவர்களை சதி செய்து ஓரங்கட்டுவது, அல்லது துரோகிப்பட்டம் சூட்டி தீர்த்து கட்டுவது. மாற்று அமைப்பினரை கொல்வது அல்லது அந்த அமைப்பையே அழித்தொழிப்பது; சமூகத்தில் தனிநபர்களாக இருக்கும் மாற்று கருத்தாளர்களை தமது கருத்திற்கு ஒத்தூத நிர்ப்பந்திப்பது; சாத்தியமில்லாத பட்சத்தில் அந்தகருத்து சமூகத்தில் இல்லாதவாறு அவர்களை கொல்லுவது; கடந்த 35 வருடங்களாக தமிழ் சமூகம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்கின்ற ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகள் அற்ற நாகரீக வளர்ச்சி குன்றிய சமூகமாக வாழ்ந்துவிட்டோம். விடுதலைப்போர் என்கின்ற ஓர் மையமான விடயத்திற்குள் நாம் எமது அனைத்து உரிமைகளையும் தொலைத்தது மட்டுமன்றி, எங்களுக்கு நாங்களே சமூகமாக விரித்த நச்சுவலை, தவறான அரசியல் வழிமுறை என்பன விடுதலைப்போராட்டதையும் இன்று தொலைத்துவிட்டு நிற்பதென்பதே தமிழ் மக்களின் இன்றைய அவலம்.
புலம்பெயர் சூழல் என்பது இலங்கை சூழலைவிட ஒப்பீட்டளவில் ஜனநாயகத்தன்மை உடையதாக இருக்கின்ற போதும் நாம் இங்குள்ள சமூகத்திற்குள் ஒரு மூடு சமூகமாக ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரத்தை மறுப்பது என்கின்ற விடயங்களில் ஈழ போராட்ட சூழலில் கள முனையில் இருந்த சமூகம் போலவே தொடர்கிறோம். இந்தவகை ஜனநாயகமற்ற, பேச்சு சுதந்திரமற்ற நச்சு சூழலை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறோமா என்பது எம்முன்னுள்ள கேள்வி.
புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரரான தனம் மீதான தாக்குதல் என்பது முள்ளிவாய்க்காலிற்குப் பின் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது வன்முறைத் தாக்குதலாகும். தனம் கடந்த காலத்தில் கொண்டிருந்த அரசியல் நடைமுறைகள் தொடர்பான கடுமையான விமர்சனங்களிற்கப்பால், எதிர் தரப்பினருடனான பிரச்சனையை வன்முறைமூலம் தீர்க்கமுயலும் இக்கலாச்சாரம் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. கடந்த மே 18 அன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அஞ்சலி கூட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் சீலன் என்பவர் மிரட்டப்பட்டு அவ்விடத்தைவிட்டு விரட்டப்பட்டுள்ளார். முள்ளிவய்க்காலில் மக்களின் மரணத்தில் புலிகளுக்கும் பங்குண்டு என்று எழுதியதற்காக இவர் தண்டிக்கப்பட்டுள்ளார். புலிக்கொடி தொடர்பாக தனது கருத்தை தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்டமைக்காக ராஜ் என்பவர் ராம் என்னும் புலி ஆதரவாளரால் தாக்கப் பட்டுள்ளார். இத்தாக்குதல் ‘வன்னியன் பூட்ஸ்’ என்னும் வியாபார நிறுவனத்தில் வைத்து நிகழ்ந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தினர் திட்டமிட்டவகையில் இவ்விடயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர். சீலன், ராஜ் இருவர் மீதான தாக்குதல்கள் என்பன புலி ஆதரவு பிரிவினரின் வன்முறை தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படவேண்டிய அதேநேரம் இவை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் படுவதை திட்டமிட்டமுறையில் முறியடிக்கும் முயற்சிகளும் அவதானிக்கப்படவேண்டும். இவ்விரு நிகழ்வுகளையும் நாம் கண்டிப்பதுடன் இது காலம் கடந்த செயல் என்பதையும் இங்கே குறித்துக்கொள்கிறோம்.
ராஜ் மீதான தாக்குதலைக் கண்டிப்பதும் எதிர்காலத்தில் இக்கலாச்சாரம் தொடராமல் தடுப்பதற்கான பொறுப்பு புலிசார் அமைப்புகளுக்கே அதிகம் உண்டு. இதன் அடிப்படையில், நாடுகடந்த அரசு,பிரித்தானிய தமிழ் பேரவை, உலத்தமிழ் பேரவை ஆகிய அமைப்புகளுக்கு புதிய திசைகள் சார்பாக (25.06.2011) ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது.
பி.ரி.எப், ஜி.ரி.எப் மற்றும் நா. க. த.அரசு பிரதிநிதிகட்கு!
(Mr Skantha, Mr Suren Surendiran and Mr T Thayaparan)
வணக்கம்!
வன்முறைக் கலாச்சாரம்: அமைப்புகளின் கடமைராஜ் என்பவர் தீபம் தொலைக் காட்சியில் புலிக் கொடி ஏந்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் தவறு என்பது குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து புலி ஆதரவுக் காடையர்களால் (23.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
வன்முறைக் கலாச்சாரம் என்பது தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் ஆரம்பம் முதலே ஏற்படுத்திய அழிவுகளும் அது வன்னியில் மனித அவலமாக பேரினவாதத்திற்குத் துணை போனதையும் பார்த்திருக்கிறோம்.வன் முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான பன்முகத் தன்மைகொண்ட அரசியல் பொது வெளியை உருவாக்கும் நோக்கில் புலம் பெயர் அமைப்புக்கள் செயலாற்ற வேண்டும் என்பதில் நீங்கள் கருத்து முரண்பாடு கொள்ள மாட்டீர்கள் என்று நாம் நம்புகிறோம். இலங்கைப் பேரினவாதப் பாசிச அரச ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தும் அடிப்படைகளில் இந்தக் கருத்து வெளி அவசியமானதாகும். ஆரோக்கியமற்ற, கண்டிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலாச்சாரம் மீண்டும் ஐரோப்பிய சூழலில் துளிர்விடுவது சர்வதேச ஜனநாயக சக்திகளிடமிருந்து எம்மைத் தனிமைப்ப்படுத்தும் முயற்சியாகும். இதற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்த அரசியல் கருத்தை உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவதில் பி.ரி.எப், ஜி.ரி.எப், நா. க. த.அரசு போன்ற அமைப்புகளுக்கும் கடமையுண்டு என்று கருதுகிறோம்.
வன்முறைக் கலாச்சரத்தின் ஒரு குறியீடாக ராஜ் என்பவர் மீது நடைபெற்ற தாக்குதல்களை நாங்கள் கருதுகிறோம். இவ்வாறான சம்பவங்களால்,
1. இலங்கை அரச ஆதரவாளர்கள் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் உருவாகும்.
2. சர்வதேச ரீதியாக போராட்டத்தின் மொத்த நியாயத்தின் மீதான வெறுப்புணர்வு உருவாகும்.
3. தொடர்ச்சியான வன்முறைக் கலாச்சாரம் போராட்டத்தின் பன்முகத் தன்மையை அழித்துவிடும்.
இந்த வகையில் ராஜ் மீது ராம் என்பவர் நடத்திய தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதே! இதனைக் கண்டிக்காது மௌனம் சாதிப்பதென்பது புலி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு பலமான அணிகளை உருவாக்க வழிசமைத்துவிடும்.
ஆக, வன்முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான அரசியல் வெளியை உருவாக்கும் நோக்கோடு இத் தாக்குதலைக் கண்டித்து உங்கள் அமைப்புக்கள் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடுவது எமது தேசிய விடுதலை போராட்டத்தின் திசைவழியில் ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்று நம்புகின்றோம்.புதிய திசைகள்
இவ்வகை வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பாக புலிசார் அமைப்புகளின் மௌனம் என்பது, புலம்பெயர் தமிழ் சமூக சூழலை ஜனநாயகப்படுத்துவது, பன்முகப்படுத்துவது என்று அவர்கள் கூறிவரும் விடயங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.
இவ்வகை அமைப்புகளில் இயங்கிவரும் தேசியவிடுதலையையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் சக்திகள் இவர்களை நோக்கி கேள்வி எழுப்புவதும் எதிர்த்து போராடுவதும் அவசியமாகும்.
எமது ஊடக அறிக்கையும் தவறுகளும்
ராஜ் என்பவர் தாக்கப்பட்டது தொடர்பாக நாங்கள் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அவசியமான அறிக்கையாகும். புலத்தில் அரச ஆதரவுப் போக்குகளின் ஆபத்தையும் முன்கையெடுப்பையும் எச்சரித்ததுடன், இலங்கை அரசின் நிகழ்ச்சிநிரலில் இயங்கும் சக்திகளை அம்பலப் படுத்துவதை இலக்காக கொண்டிருந்தது. ‘வன்னியன் பூட்ஸ்’ இற்கு எதிரில் நடத்தப்பட்டது ஒரு வன்முறைக்கெதிரான போராட்டம் என்ற கருத்தின் அடிப்படையில் அதில் கலந்து கொண்ட ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட வன்முறைக்கெதிரான சக்திகள் எமது அறிக்கை மூலம் பாதிக்கபட்டிருந்தால் அதற்காக எமது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட ராஜ் என்பவர் கூறியதாக குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள விடயங்கள், அவரின் வார்த்தைகளாக அவரால் உறுதிப் படுத்தப்படாமல் அவருடனான உரையாடலை அடிப்படையாக வைத்து அவர் கூறியதாக குறிப்பிட்டது தவறு என்பதை உணர்கிறோம். இதன் விளைவாக அவருக்கேற்பட்ட சிரமங்களுக்கும் வருந்துகிறோம்.
புலத்தில் காணப்படும் ஜனநாயக அம்சங்களை எமது போராட்ட வழிமுறைகளுக்கு சாதகமாக பயன்படுத்துவது போராட்டத்தின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக காணப்படுகிறது. மற்று கருத்தாளர்களை வன்முறை தாக்குதல்கள் மூலம் எதிர்கொள்வது, ஒரு அமைப்பு அல்லது ஒரு நபர் சார்ந்த அரசியலை விமர்சிப்பது, எதிர்கொள்வது என்பதற்கு பதிலாக: சதி செயல்கள், தொடர் அவதூறுகள் சேறடிப்புகள் என்கின்ற ஜனநாயகமற்ற சமூகத்தை விசமாக்குகின்ற போக்குகளுக்கெதிராக போராடவேண்டும். இப்போக்குகளிற்கெதிராக போராடும் நியாயமான சக்திகளுக்கு நமது ஆதரவையும் வழங்க வேண்டும்.
புதிய திசைகள்
///இவ்வகை வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பாக புலிசார் அமைப்புகளின் மௌனம் என்பது, புலம்பெயர் தமிழ் சமூக சூழலை ஜனநாயகப்படுத்துவது, பன்முகப்படுத்துவது என்று அவர்கள் கூறிவரும் விடயங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது////
http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372
ஊடகவியலாளர்கள் மீதான தொடரும் தாக்குதலுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்
If Thanam or Seelan or Raj were ஊடகவியலாளர்கள் in EXILE then BTF would have condemned the acts against them.???????
ஒருசிங்கள கைக்கூலி மாவீரர்களை பொதுவிடத்தில் கொச்சைப்படுத்தி வசைபாடியதால் கோபமுற்ற ஒருவரால் தாக்கப்பட்டார். இதை பிரித்தானியா நீதிமன்றும் காவல்துறை பார்த்துக்கொள்ளும். ஆனால் தமிழ் ஊடகவியலாளர் தாயகத்தில் சிறிலங்கா அரசபயங்கரவாதப்படை இயந்திரத்தால் தாக்கப்பட்டுள்ளார். இன்றுவரை எந்த சட்ட நடவடிக்கையுமில்லை! உலகத்தை ஏமாற்ற ஒரு போலி விசாரணை நடத்தப்பட்டால் கூட அது ஒருபோதும் நேர்மையின் சட்டத்தின் பாற்பட்டதாகவிருக்காது. இந்நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிட்சயம் கண்டிக்கணும் அதை BTF செய்திருக்கிறது. இதிலென்ன தவறுண்டு!
பிரித்தானியா நீதிமன்றும் காவல்துறை பார்த்துக்கொள்ளும்.////
புலம்பெயர் சூழல் என்பது இலங்கை சூழலைவிட ஒப்பீட்டளவில் ஜனநாயகத்தன்மை உடையதாக இருக்கின்ற போதும் நாம் இங்குள்ள சமூகத்திற்குள் ஒரு மூடு சமூகமாக ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரத்தை மறுப்பது என்கின்ற விடயங்களில் ஈழ போராட்ட சூழலில் கள முனையில் இருந்த சமூகம் போலவே தொடர்கிறோம். இந்தவகை ஜனநாயகமற்ற, பேச்சு சுதந்திரமற்ற நச்சு சூழலை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறோமா என்பது எம்முன்னுள்ள கேள்வி
ஜனநாயக/கருத்து சுதந்திரத்தை மறுப்பு பிரித்தானியாவில் மேற்கொள்ளப்படுமிடத்து அதைதடுக்கவும் சம்பந்தவர்களை தண்டிக்கவும் பிரித்தானியா காவல் மற்றும் சட்டத்துறை உயிர்ப்புடன் இயங்கும் சூழலில் நாம் அதிலில் தேவையற்று தலையீடு செய்வது அதிபிரசங்கித்தனமாகவே அமையும். அதைவிட சிறிலங்கா கைக்கூலிகளை பாதுகாப்பதற்கு BTF இயங்கவில்லை!
ஆயுதபோராட்டகளத்தில் ஆயுதங்களின் சத்தமே மேலோங்கியிருக்கும் ஜனநாயக/கருத்துக்களின் ஒலி குறைவாகவே இருக்கும்.இது மிகஇயல்பானது இந்நிலையில் தமிழீழ ஆயுதபோராட்டகளத்தில் ஜனநாயக/கருத்து சுதந்திரமிருக்கவில்லையென்பது. வலிந்த அவதூறு குற்றச்சாட்டே! அதுசரி தாங்கள் முழுமூச்சாய் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா கைக்கூலிகளை பாதுகாக்க முற்படும் மர்மம் என்ன! தங்களின் இயங்குதளமும் அதுவா?
புலத்தில் காணப்படும் ஜனநாயக அம்சங்களை எமது போராட்ட வழிமுறைகளுக்கு சாதகமாக பயன்படுத்துவது போராட்டத்தின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக காணப்படுகிறது. மற்று கருத்தாளர்களை வன்முறை தாக்குதல்கள் மூலம் எதிர்கொள்வது, ஒரு அமைப்பு அல்லது ஒரு நபர் சார்ந்த அரசியலை விமர்சிப்பது, எதிர்கொள்வது என்பதற்கு பதிலாக: சதி செயல்கள், தொடர் அவதூறுகள் சேறடிப்புகள் என்கின்ற ஜனநாயகமற்ற சமூகத்தை விசமாக்குகின்ற போக்குகளுக்கெதிராக போராடவேண்டும்
// மற்று கருத்தாளர்களை வன்முறை தாக்குதல்கள் மூலம் எதிர்கொள்வது, ஒரு அமைப்பு அல்லது ஒரு நபர் சார்ந்த அரசியலை விமர்சிப்பது, எதிர்கொள்வது என்பதற்கு பதிலாக: சதி செயல்கள், தொடர் அவதூறுகள் சேறடிப்புகள் என்கின்ற ஜனநாயகமற்ற சமூகத்தை விசமாக்குகின்ற போக்குகளுக்கெதிராக போராடவேண்டும்
//
ஈழத்தமிழினத்தில் கோடாரிகாம்புத்தனத்தின் கெளரவ சொல்லாடல்தான் “மாற்றுக்கருத்து” ஈபிடிபி தொடங்கி ஈபீஆர்எல்எப் புளொட்டுவரை தமது இந்திய சிங்கள நலன் பேணுகையை மாற்றுக்கருத்தனவே சொன்னார்கள். தாங்களும் அதைதான் சொல்கிறீர்கள். தனது பாசத்திற்கு நேசத்திற்குரியவரை மாவீராக பலிகொடுத்துவிட்டு இருக்கும் ஒருவரிடம் அவரது மாவீரான உறவை தூசித்தால் கோபமுறத்தான் செய்வார். உங்கள் நண்பர்களது சிறிலங்கா சேவகத்திற்காக ஒருவரின் உணர்வை சீண்டுவதற்கு பெயர் ஒருபோதும் கருத்துச்சுதந்திரமல்ல! அது காவாலித்தனம். இருந்தும் மேற்குலகில் நடைபெறும் வன்முறை கருத்துசுதந்திர மறுப்பை தடுக்கவும் தண்டிக்கவும் போதிய சட்ட வழிகள் உண்டு. எனவே தங்கள் நண்பர்கள் மேல் வன்முறை பாவிக்கப்பட்டது உண்மையெனில் தாரளாமாக பிரித்தானியா சட்டத்துறையை அணுகவும்.
சொந்த இனத்தை எதிரிக்கு காட்டிகொடுப்பவனை எந்த மொழியிலும் எந்த இனத்திலும் எக்காலத்திலும் இனத்துரோகியென்றே சொல்வர். இது யதார்த்தமே தவிர சேறடிப்பல்ல! காட்டிக்கொடுப்பவர்கள் இருக்கும் வரை தமிழில் குறிப்பிட்ட இழிசொற்களும் இருக்கத்தான் செய்யும். உண்மை தங்களிற்கு உவப்பாயில்லாதிருப்பதற்கு ஒன்றுமே செய்ய முடியாது!
ராஜ்ஜிற்காக போராட வேண்டியது பிரித்தானியா வாழ் சிறிலங்கா தேசபுத்திரர்களும் /புத்திரிகளும் சிறிலங்கா தூதரகமே தவிர ஈழத்தமிழர்களல்ல! ஓஓ அதைதானே தாங்களும் புதியதிசை குழுமமும் செய்கிறீர்கள்.
ஆம் நிர்மலன் நீங்கள் ராமிற்கு எதிராக பேசமாட்டீர்கள் ஏனென்றால் அவருக்கு உங்கள் ஈலிங் அம்மன் கோவில் உண்டியல் விடயம் நன்றாக தெரியும். ஸ்கந்தா வாய் திறக்க மாட்டார் ஏனென்றால் ராமை உசுப்பேத்தியது(முன்னர்) அவர்தான்.
அப்ப ஏன் தனத்திற்கு அடிச்சனிங்கள் பெரிய பங்கு பிரிப்போ? ராஜ் தூக்கி பிடித்து உங்கள் உள்வீட்டு பங்கு பிரிப்பு பணப்போரை நல்லா நடத்துங்கோ உங்களை பாதுகாக்க தேசியம் என்ற போலி கேடயம் இருக்கும்வரை அப்பாவி தமிழன் ஒன்றும் செய்ய மாட்டான்
ராம் என்பவரை பற்றி நேரடியாக எனக்கு எதுவும் தெரியாது. அவர் தனிமனித வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை இனியொரு இணையதளத்திலேயே பார்த்தேன். தெரிந்தவர்களிடம் இச்சம்பவம்பற்றி விசாரித்த போது கிடைத்த தகவல். சிறிலங்கா கைக்கூலி ஒருவரினால் மாவீரர்கள் தூசிக்கப்பட்டதனால் கோபமுற்ற ஒருவரே வன்முறையில் ஈடுபட்டார் என்று. இந்நிலையில் ராமை எந்த அடிப்படையில் நான் விமர்சிக்க முடியும்? இந்த வன்முறையை(?) பிரித்தானியா காவல்துறை மற்றும் நீதிமன்று பார்த்துக்கொள்ளும். மற்றப்படி நான் கோவிலுக்கு போபவனுமல்ல கோவில் நடத்துபவனுமல்ல கோவில் உண்டியலில் பணம் போடுபவனுமல்ல எடுப்பவனுமல்ல!
சனல் 4 ல் காட்டப் பட்ட காணொளியில் இராணுவச் சீருடையில் உள்ள நபர்கள் சிங்களத்தில் உரையாடுவதும் கூடவே கைதிகளை ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்வதும் காண்பிக்கப் பட்டது. இதனை முறியடிக்க அரச தரப்பு ஒரு காணொளியை வெளியிட்டது. அதில் சீருடையில் உள்ளவர்கள் கொச்சைத் தமிழில் உரையாடுகிறார்கள். இதில் எந்தக் காணொளி உண்மையானது என்று தனக்குக் குழப்பமாக இருப்பதாக ஒரு மேதாவி கட்டுரை வேறு வடித்தார்.
இப்படித் தான் நிர்மலன் என்ற குழந்தைக்கும் குழப்பமாம். ராஜ் என்பவர் வீதியில் நின்று போராளிகளை கொச்சைப் படுத்திக் கொண்டிருந்ததால் ‘பொது மக்களால்’ தாக்கப் பட்டாரா அல்லது தீபம் தொலைக் காட்சியில் கருத்துச் சொன்னதற்காக காடை ராம் இனால் தாக்கப் பட்டாரா என்று.