வன்னி இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது இந்திய அதிகாரவர்க்கம் என்பதையும் இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் என்பதையும் அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியத் தூதுவர் வை.கே சின்கா 2009 ஆம் ஆண்டு கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையின் ‘அபிவிருத்திக்கும்’ நல்லிணக்கத்திற்கும் இந்தியா உதவிவருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற இலங்கை ஒத்துழைப்பதற்கு நன்றி தெரிவித்தார். இலங்கை அமைதி நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது எனத் தெரிவித்தார்.
உரிமையைத் தவிர இலங்கையில் ஏனைய அனைத்தும் இலங்கையில் அனுமதிக்கப்படுகிறது. களியாட்டங்கள், பாலியல் தொழில், நட்சத்திர விடுதிகள், மேட்டுக்குடிகளின் கூத்தாட்டங்கள் என்ற அனைத்தும் நாளாந்த நடைமுறையாகிவிட்டது. மக்களின் வரிப்பணத்தில் அழகான தெருக்களையும், வானுயர்ந்த கட்டடங்களையும் அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்காக அமைக்கும் இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களில் அடையாளங்களை அழித்து வருகிறது. இவை அனைத்தும் இந்திய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
லட்சம் லட்சமாக மக்களைப் பலியெடுக்க உதவிய இந்திய அரசு இன்று அதன் பலனை அறுவடை செய்ய வியாபார நிறுவனங்களை அனுப்பிவைக்கிறது. இந்தியத் தூதருக்கு இவையெல்லாம் அபிவிருத்தி. சாமானிய மனிதனுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இவை அழிவு.
AS PER HIS REVELATIONS THE EX-GOVERNOR OF BENGAL GETS THE CHANCE TO PRESENT HIS SUBMISSIONS WITH DOCUMENTARY EVIDENCES TO THE UN ENQUIRY COMMISSION AS AN HONEST PERSON AND ALSO AS AN ASSOCIATE OF EZHAVAS IN KERALA WHO WERE THE MIGRANTS TO SRI LANKA WHILE ALL OF THEM WERE SPEAKING THE SAME LANGUAGE. THOUSANDS OF YEARS AGO. THE WORD EZHAM BELONGS TO A MAJOR CASTE IN KERALA. WHO SHOULD FIGHT FOR THE MINORITIES BUTCHERED IN 2009 JUST AFTER THE ELECTIONS IN INDIA.
இன்னும் 5 வருடங்களின் பின்னர் இலங்கை,இந்திய, புலம்பெயர்தமிழர்
பல்தேசிய நிறுவனங்களே இனப்படுகொலைகளிற்கு காரமமென அறிக்கைகள்வருமா?