கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான “க்ரீன் கண்ட்” என்னும் பெயரிலான யுத்தத்தை தண்டகாரண்யா பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு ஏவி விட்டுள்ளது. இந்திய பெரு முதலாளிகளின் நலன்களுக்கான ஆக்ரமிப்புப் போரை பழங்குடி மக்கள் எதிர்த்து நிற்கிறார்கள். அந்த எதிர்ப்பியக்கத்தை மாவோயிஸ்ட் போராளிகள் முன்னெடுத்துச் செல்கின்றன. இந்நிலையில் இராணுவத் தாக்குலத்துக்கு பதிலடியாக மாவோயிஸ்டுகள் நடத்தும் தாக்குதலில் இந்திய படை வீரர்கள் பலரும் பலியாகி வருகின்றனர். இந்திய அறிவுஜீவிகள், இடதுசாரிகளின் எதிர்ப்புகளையும் மீறி மன்மோகன் ப.சிதம்பரம் ஆகியோர் தனிப்பட்ட ஆதாயம் காரணமாக இப்போரை முடித்து பழங்குடி மக்களை காடுகளில் இருந்து துரத்துவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரம் இப்போரில் இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான சூழலை ஆளும் வர்க்க ஊடகங்கள் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று இனியொரு இணையத்தள்த்திலேயே நாம் எழுதியிருந்தோம்.
இப்போது பெருமளவு இராணுவத்தினரும் விமானப்படையையும் பழங்குடி மக்கள் மீதான போரில் ஈடுபடுத்தும் முடிவை இந்திய அரசு எடுத்து விட்டது.இதுகுறித்து
உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நக்ஸல் வேட்டையில் ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ராணுவத் தலைமையகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் ராணுவத்திலுள்ள மேஜர் ஜெனரல்களை பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்னல் அல்லது பிரிகேடியர் நிலையிலுள்ள ராணுவ அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை அதிகாரிகள் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவர் என்பதை மத்திய அரசு விரைவில் தீர்மானிக்கும் என்று தெரிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் திறம்பட சண்டையிட்டு அவர்களைக் கொன்ற ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நக்ஸல் தேடுதல் வேட்டையில் தீவிரத்தைக் காட்டுவதற்காக மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நக்ஸல் வேட்டையில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், மாநில போலீஸôர், அதிரடிப் படை வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகள், போர் தந்திரங்கள், தாக்குதல் வியூகங்களை கர்னல், பிரிகேடியர் அதிகாரிகள் வழங்குவர். காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய போர் முறைகள், நக்ஸல்களை ஒடுக்க பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும் நக்ஸல்கள் ஆங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்துவைத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காகவும் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தப்படுவார்கள். புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்கும் ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள். சாலை வழியாக செல்ல முடியாத இடங்களுக்கு தேடுதல் வேட்டைக்குச் செல்லும் போலீஸôரை, அங்கு கொண்டு செல்ல வசதியாக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமானப் படை தளபதிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீஸôர் உடனடியாக அந்தப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியும். ஆப்பிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றி வரும் இந்திய விமானப் படையின் 15 ஹெலிகாப்டர்களை திரும்ப அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுக்க உள்ளது.
காஷ்மீர் விரிவுபடுத்தப்படுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்னும் பெயரிலான வேட்டையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொது மக்களே. இதைத்தான் இவர்கள் திறமை என்கிறார்கள். அப்பாவி மக்களை அல்லது காஷ்மீரிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எவர் ஒருவரையும் கொன்று குவித்த நரவேட்டை நாயகர்கள். இனி பழங்குடி மக்கள் மீது நாய்களைப் போல பாய்வார்கள். வன்னியில் வீசப்பட்ட க்ளஸ்டர் குண்டுகளும், பாஸ்பரஸ் குண்டுகளும் இனி தண்டகாரண்யாவில் வீசப்படும்.