“15 வருடங்களாக நான் ஆயுதம் தாங்கி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இலங்கை அரசபடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்கினேன். பின்னதாக நான் பொது அரசியலில் இணைந்து கொண்டேன். தஸ்ருமன் அறிக்கையில் (மகிந்த அரசும் அதன் ஆதரவாளர்களும் ஐக்கிய நாடுகள் அறிக்கையை இவ்வாறு அழைக்கிறார்கள்) கூறப்பட்டுள்ளது போல அப்படி நடந்திருந்தால், நான் ஜனநாயக வழிமுறைகளூடாக இது வரை நீதியைத் தேடிப் போயிருப்பேன்.”
“பிரபாகரனது, தமிழீழ விடுதலைப் புலிகளதும் தோல்வியடைந்த அரசியலின் விளைவாக நாடு ஆயிரமாயிரம் அப்பாவித் மக்களை இழந்துள்ளது. கடந்த முப்பது வருடமாக புலிகளுடைய ஆட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகளின் உயிரிற்குப் பிரபாகரனே பொறுப்பானவர். “
கடந்த 28ம் திகதி “மாண்புமிக்க” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ற முன்னை நாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் தளபதி ஆசியன் திரிபியூன் என்ற இலங்கை அரச ஆதரவு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது உதிர்த்த பொன் மொழிகள் இவை.
(இந்தப் “பொன்மொழிகளிலிருந்து” டக்ளஸ் தேவாவிற்கு ஒரு குறுக்கு ஆலோசனைக்கடிதம் எழுத எண்ணியதன் பலன் கீழே தரும் கடிதம். – சுமந்திரன்)
வன்னியில் மக்கள் ஆயிரமாயிரமாய் உங்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டதைப் பன் கீ மூன் குழு எழுதியதை விடுங்கள், நீங்கள் தானே அந்தத் தேசத்தின் எல்லைப் புறங்களில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தவர். உங்கள் நண்பரும் உலகின் அரச பயங்கரவாதிகளில் அருவருக்கத் தககவருமான கோதாபாய ராஜபக்ச மில்லியன்கள் செலவு செய்து வாங்கிக் குவித்த ஆயுதங்கள் எல்லாம் வானத்தை நோக்கியா சுட்டுத் தீர்த்தார்கள்?
நீங்கள் சார்ந்த ஒடுகப்படும் தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தின் வானை நோக்கி ஒலித்த ஆயியமாயிரம் அவலக் குரல்களுக்கு நீங்கள் வாழ்ந்து, கப்பலோட்டி, வணிகம் செய்து, கொலை செய்து, கொள்ளயடித்து மகிழும் ஜனநாயகத்தில் நீதி பெற்றுக் கொடுத்திருக்கலாமே?
கொலை செய்து, சாட்சியின்றி அழித்துத் துவம்சம் செய்யப்பட்டவர்கள் போக எஞ்சிய குழந்தைகள், முதியோர், நிறைமாதப் பெண்கள் என்று 3 லட்சம் அப்பாவிகளைத் திறந்த வெளி முகாம்களில் அடைத்துவைத்து அழித்த போது நீங்கள் எங்கே போனீர்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் அனீதியான வியாபாரத்திற்கு நீங்களுமா துணை போகிறீர்கள்?
எனக்கும் நாலம் வாய்க்கலிற்கும் பிற்ப்புத் தொடர்புண்டு. அதாவது “தொப்புள்கொடி உறவு”. நான் ரெஸ்ரோரன்டில் இரவிரவாக வேலைசெய்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அனுப்பிய பணத்தை உங்களைப் போன்ற துணைக்குழு பகிர்ந்துகொண்டதெல்லாம் பெரிய கதை.
நீங்கள் தளபதியாக தமிழீழம் பெற்றுத் தருவோம் என இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற நூற்றுக் கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் புலம் பெயர் நாடு ஒன்றில் நீங்கள் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு வந்து அமைதியான மூலையில் அமர்ந்து நீங்கள் ஓதியவற்றைச் செவிமடுத்திருக்கிறேன்.
சங்குவேலியிலும், கட்டுவனிலும், சாவகச்சேரியிலும் துப்பாக்கி நபர்கள் புடை சூழ இயக்கத் தோழனாக மூன்று முறை சந்தித்திருக்கிறேன். இது நான்காவது தடவை. மாண்பு மிகுந்தவரே, அப்போது தமிழ் மக்கள் அழிக்கப்படுவது உண்மை என்றும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் அரசாங்கத்திடமிருந்து அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தருவதாகக் கூறினீர்கள்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுத் தான் இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டதே, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், பட்டினிச் சாவு, நாளாந்தக் கைதுகள், கொலைகள் என்று அத்தனையும் நடக்கும் போது காந்தித் தாத்தா பொம்மை போல “தீயதைக் கேளாதே” என்று கண்களைப் பொத்திக் கொள்கிறீர்களோ?
நான் ஒரு புலம் பெயர் நாட்டில் தான் வாழ்கிறேன். புலியாக மாறிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்! அதுதானே உங்கள் பிரசாரத் தந்திரோபாயம்!! நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் வன்னியில் நடந்தது என்ன என்று அப்பாவி மக்கள் சொன்னதும், யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன என்று அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வதும் உங்கள் காதுகளில் விழவில்லையோ. அதுவும் கொல்லப்படலாம் எனத் தெரிந்தும் அவர்கள் துணிந்து சாட்ட்சியமளிக்கும் தியாகத்தை, வீரத்தை, துணிவைக் கண்டு நீங்கள் வெட்கப்பட்டதில்லையா?
தோள்களில் துணிப்பையை மாட்டிக்கொண்டு கொழும்புத் தெருக்களில் அலையும் பிரகீத் போன்ற எத்தனை ஊடகவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சிங்களத்தில் தேசிய கீதமும் தமிழில் தேவாரமும் படித்தால் உரிமை பெற்றுவிட்டதாக அருத்தப்படுத்தினீர்களோ?
சரி தமிழ்ப் பேசும் மக்களில் ஒரு பெரிய பகுதி புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மீது தீராத வெறுப்படைந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைக்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள் நடுத்தெருவில் கொலைசெய்யப்பட்டு வீசியெறியப்படும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.?
நீங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர் என்று பெருமிதமாகச் சொல்கிறீர்கள். நீங்கள் ஆயுதம் ஏந்திய போது இருந்த அடக்கு முறைகள் இன்றிருப்பதைவிடக் குறைவாகத் தான் இருந்தன. இன்றோ நேரடியான குடியேற்றங்கள்,இராணுவ அழிப்பு, சிங்கள மயமாக்கல், கொலை, குடும்ப சர்வாதிகாரம், ஜனநாயகமறுப்பு என்பன எல்லாம் மனித குலம் அவமானப்படும் வகையில் மக்களை உயிருடன் தின்ன்றுகொண்டிருக்கிறதே? ஆக, இன்னொரு முறை நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என எண்னவில்லையா?
சில மாதங்களின் முன்னால் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் சென்று வந்த போதுதான் தெரிந்துகொண்டேன்! அரச பாசிசம் என்பதன் உள்ளர்த்தத்தை கண்முன்னால் புரிந்துகொண்டேன்!! உங்களது காவல்படைகளின் அட்டூழியம், அநாகரீகம் எல்லாம் தெளிவாகத்தெரிந்தது!!!
முன்னை நாள் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனோவியல் மற்றும் உடலியல் சித்திரவதைகள், முகாம்களில் மக்கள் படும் வேதனை எல்லாம் நீங்கள் அரச பாசிசத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதைற்கு வாழும் ஆதாரங்கள்..
உங்களது நேர்காணலில் பன் கீ மூன், அன்பான மகிந்தவிற்கும், திறமையான இராணுவத்திற்கும் எதிரான அறிக்கை விட்டுப் பணத்தை விரயமாக்கியுள்ளதாக அங்கலாய்க்கிறீர்கள். உங்கள் மகிந்த குடும்ப வியாபாரிகளின் வருமான வரி எச்சங்களே நீங்கள் சில முகாம்களில் உள்ளவர்களுக்கு வாழ்வளிக்கப் போதுமானது.
மக்கள் பாவம். உயிர் மீது அக்கறையற்றவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் வேறு. அமைச்சர் வேடமெல்லாம் போட்டு ஒரு அந்தஸ்த்தை வைத்திருக்கிறீர்கள். பருத்தித் துறை முனையிலிருந்து கதிர்காமம் ஈறாக எத்தனை பேர் உங்களுக்கு இருக்கிறார்கள். உங்களால் எல்லாத்தையும் கைவிட்டு மக்களைப் போல் மகிந்தவிற்கு எதிர்ப்புக்க்காட்ட முடியுமா? இல்லையே! உங்களது “முன்னைநாள்” என்ற வகையில் எனக்கு ஒரு குறுக்கு யோசனை தோன்றுகிறது.
எங்காவது அன்னிய தேசத்திற்கு ஏலக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு வாருங்கள். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மகிந்த குடும்பத்தை அம்பலப்படுத்துங்கள். பேரினவாதிகளின் கொடுமைகளைக் கூறுங்கள். அப்பட்டிச் செய்தால் உங்கள் மாண்புமிகுவிற்குப் பதிலாகப் பொறுக்கி என்பதைப் போடலாம் என்று எண்ணுகிற மௌனமாய் அழும் மக்கள் “தியாகி” என்று போட்டுக்கொள்வார்கள். நீங்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினீர்களோ அதற்காக, பிரபாகரன் வழியில் இல்லாமல் நிதானமாக ஆயுதம் ஏந்தக் காத்திருகும் எதிர்காலச் சந்ததி உங்களை நண்பனாக, தோழனாகப் போற்றும்.
மகாவம்சம் போல அல்லாமல், ராமாயணம் போல அல்லாமல், இலங்கைப் பாடப் புத்தகங்கள் சொல்லும் வரலாறு போல அல்லாமல் உண்மையான வரலாறு உங்களைப் பற்றி எழுதும். செய்வீர்களா?
இவரெல்லாம் திருவள்ளுவர் கூறுவதுபோல் தன்னை விற்றுவாழும் கயவர்.கருணாமீதும் இவர் மீதும் தமிழ்ப்பெண்களை சிங்களருக்கு கூட்டிக்கொடுத்தகுற்றங்கள் உண்டு.இராசபக்சேவை கேட்காமல் தன் மனைவியிடம்கூடபேசமாட்டார்.இவரெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை.தமிழர்கள் வீரத்தில் அவர்களுக்குக் நிகர்அவர்கள்தான்.இனத்துரோகத்தாலும் உட்பகையாலும்தான் வீழ்ந்தார்கள்.
சிங்களனின் அடிவருடி இவனால இப்படித்தான் பேச முடியும். இல்லாவிடின் இவனது சொகுசு வாழ்வு அடிபட்டுப் போகும். செஞ் இவனது பேச்சுக்கெல்லாம் மதிப்புக் கொடுத்து வெளியிடுவதே தவறு. இனவெறியன் மஹிந்த மாத்திரமல்ல இவனும் தமிழின அழிப்பிற்கு துணைபோனவன். அசிங்க மிருகம்.
யாழ் உங்கள் கருத்தை ஏற்கமுடியாது.இவரை மிருகங்களுடன் ஒப்பிட்டு விலங்குகளை இழிவுபடுத்தவேண்டாம்.
யாழ் அப்பு இவர்கள் தமது தலைவரின் மீதுள்ள மயக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை. (பிரபாகரனை இவ்வாறு சொல்ல துணிவீர்களா?பிரபாகனை விட ஒரு துரோகியுண்டா) ஒருவரின் அரசியலை இந்த வார்த்தைகளால் விமர்சிப்பது அநாகரீகம். வார்த்தைகளின் புலியின் கலாச்சாரநெடி தூக்கல். இனியொரு இதையெல்லாம் எப்படி அநுமதிக்கின்றது? ?
டக்ள்ஸ்,மகிந்தா,சோனியா என்றே கூறியே போரை நடத்திய துரோகிகள் உல்லாச வாழ்வோடு உலகெங்கும் ஊர்வலம் வருகின்றார்கள். இன்னமும்
எவ்வாறு அழிவு கொடுத்து தமிழரின் பிணங்களில் பிழைப்பு நடத்தலாம் என
சந்த்ர்ப்பம் பார்த்து வாழ்கின்றார்கள். அவ்ர்களை கண்டு பிடிக்கும் திறமை ஈழ்த்தமிழரெல்லோரிற்குமிருந்தால் இந்தநிலைமை வந்திருக்குமா?
கள்வனோடு சேர்ந்து களவெடுக்கவே தமிழினம் வாழ்கின்றதா?-துரை
அப்பு யாழ் டக்கிளசு பற்றி உங்கள் கூற்று சரி தான் . உங்கள் தலைவன் பிரபாகரன் மக்களை மண்மூட்டையாகப் பாவித்து அழித்துள்ளார். இதப்பற்றி உங்கள் கருத்து என்ன?
Vision: What you want the organization to be; your dream. Strategy: What you are going to do to achieve your vision. Tactics: How you will achieve your strategy and when.
Your vision is your dream of what you want the organization to be. Your strategy is the large-scale plan you will follow to make the dream happen. Your tactics are the specific actions you will take to follow the plan. Start with the vision and work down to the tactics as you plan for your organization
most of the leaders of tamil groups , organisations, or even political parties. don’t have the ability to understand how to stay in their STRATEGY. They all have fallen into or confused with their TACTICS as their STRATEGY.
They all have lost their VISION.Therefore They are all not our leaders.It is applicable to anyone you can think of( AMIR, UMA,SRI, NABA,VP,RUTHRA,Fr emmanuel, or any one in diaspora and DOUGLUS, KARUNA,KP, TNA or anyone)
don’t attack VP to defend Douglus, or attack Douglus to defend VP.all are not our leaders. Not all the ANTI LTTERS are pro Tamils or not all the Pro LTTERS are Pro tamils, but most of them are thinking about tamils. likewise Anti and pro Douglus,INDIA, SRI Lanka.
DON’T MIX-UP THE STRATEGY TO TACTICS
புலிகளின் பணத்தில் வாழ்க்கைப்பட்டு,வளர்க்கப்பட்ட பிராணிகள் (கருணா,கனகரத்தினம்,டக்ளஸ்) மட்டும்,
ஆளும்கட்சியுடன் சேர்ந்து கொண்டு சொல்லுகிற வார்த்தைகள் ஒரேவிதமானதுதான்.
“வன்னிப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை”
டக்ளசுக்கு வக்காலத்து வாங்குகிறீரே புலிகள் ஒழிக்கப்பட்டபின் ஆயுதம் தரித்து போராடி ஈழம் பெற்றுத்தருவாதாகச் சொன்னாரே உங்கள் தலைவர் டக்களசு.கட்டுரையிலும் மற்றும் யாழும் நானும் வைத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லவேண்டியதுதானே.தன்னை தன்குடும்பத்தை பற்றி எந்த சுயநலமும் இன்றி சிங்கள பேரினவாதத்துக்கும் இந்திய மேலாதிக்கத்தனத்துக்கும் விலைபோகாமல் போராடினாரே அவர் மீது மயக்கம் இருந்தால் என்ன தவறு?மண் மூட்டையாக பாவித்துஅழித்த ஆதாரத்தைக்காட்டுங்கள்?ஐநா புலிகள் மீதும் ஓரிரு குற்றம் சுமத்துகிறது?பன்னாட்டு விசாரணைக்குழுவைக்கொண்டு விசாரித்து மக்கள் புலிகள் தவறிழைத்தார்கள் என்றால் தண்டியுங்கள்?நாம் தவறிழைக்கவில்லை பன்னாட்டு விசாரனைக்குழுவை அனுமதிக்கலாம் என்று இராசபக்சேவிடம் சொல்லும் துணிவு டக்ளசுக்கு உண்டா?மக்களை மானத்தையும் பணமாக்கும் டக்களசையும் மானமே உயிராக வாழும் தலைவனையும் ஒப்பிடும் இவர்களின் கருத்துக்களை இனியொரு அனுமதித்ததற்கு நன்றி.இன்னும் பல டக்ளசுக்கள் இருப்பதைக் காட்டியதற்காகத்தான் நன்றி.எழுதிவைத்துக் கொள்ளுங்கள் புலிகளின் வழியில் ஈழம் மலரும் .உங்களைப்போன்றவர்கள் விதண்டாவாதம் செய்துகொண்டேதான் இருக்கப்போகிறீர்கள்.இப்படிப் பேசித்தான் கருணாவை பிரித்தார்கள்.
சென்னையில் உள்ள உயர்னீதி மன்றத்தில் இவர்மீது கொலை வழ்க்கு நிலுவையில் உள்ளது!! தூக்கு தண்டனை நிச்சயம் !!
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள், டக்களசை தலைவனாக கொள்பவனும் நக்குண்ணியே.
//சிங்கள பேரினவாதத்துக்கும் இந்திய மேலாதிக்கத்தனத்துக்கும் விலைபோகாமல் போராடினாரே //
சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராட இந்தியாவின் துணை தேவைப்பட்டது.
இந்திய இராணுவத்திற்கு எதிராக் போராட பிரேமதாசவின் துணை தேவைப்பட்டது.இதற்கு பெயர் சந்தர்ப்பவாதமா? அல்லது துரோகிகளின் செயலா?அல்ல்து இராச் தந்திரமா? இந்த தந்திர புத்தியினால்தான் இந்திய இலங்கைகூட்டுத் தாயாரிப்பில் இறுதி சடங்கினைச் செய்து முடித்தார்கள்.-துரை
தாயும் பிள்ளையாகினும் வாய்யும் வயிறும் வேறானவை. இதுபோல்தான் நீ ஈழத் தமிழன்யானினும் புலம்பெயர் தமிழன்யானினும் வேறுபாடுயானவையே!. உனது வாழ்வு தற்காலத்திற்கு செளகரியமாற்று கஷ்ரபட்டு பனிகுளிரை தாங்கி வேலைக்கு போகிறாய். ஊதியம் வருகிறது. அரை குறையாகவாகுதல் உனது வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒருபேதம். பலஇனங்களுடனும் ஒத்துவாழ பழகிய நீ சிங்களத்துடன் முட்டி மோதி ஜெயிக்க வேண்டும் என கனவுகாண்கிறாய். பல காலம் கனவில் வந்துபோன பாரிஜாதப்பூ யாழ்பாணத்து குட்டிமுதாலித்துவ அறிவுக்கு வளர்த்துவிட்டு பிரிவினைவாதப்போக்கு- தமிழீழம் கைகூடாத போது கனவுகண்ட ஆககயத்தாமரை கையில் கிட்டாதபோது எதை எழுதுவது எப்படி கருத்துச் சொல்வது என்பதைப்பற்றி அங்கலாய்கிறாய். உன்னைப்போல் டக்கிளஸ்தேவானந்தாவும் கனவுகண்டிருந்தால் இன்று இலங்கையில் எமது அடிவேர்களை மேற்குலகத்திற்கு காவு கொடுத்துதிருக்க வேண்டும். வல்லரசுகளின் காலின்கீழ்நின்று அம்மணமாகி கைகட்டி வாய்பொத்தி சகலஉணர்வுகளையும் விற்றுகாலியாகிவிட்டு நிர்வாணமாகி நிற்பது வர்க்கஉணர்வே தேசபக்தியோ அல்ல. தனது நாட்டில்லுள்ள சகோதரஇனத்துடன் கொஞ்சுவதும் கைகுலுக்குவதும் உனது இனத்தின் பெயரில் தான் நடக்கிறது.
முடிந்தால் உனதுவேர்களை பலிக்கடா ஆக்கவோ பள்ளிக்கூடம் போகவோதடுக்கவோ டக்கிஸ் தேவானந்தா நீங்கள் போட்ட “கெடுகுடி” திட்டங்கள் எதுவும் தீட்டுவில்லை.
ஆயிரம் தவறுகள் இருந்தாலும் அவரும்-அவருடைய தோழர்களின் எண்ணங்களும் புலியடியார்களுக்கு இருந்த உள்ள பானையை போட்டுடைக்கிற குணம் இருந்ததில்லை.
முடிந்தால் அவரின் தோழர்களைப் போல் வாழப்பழகுங்கள். மக்களையும் மனிதஉயிரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏவல்பேய்மாதிரி கூரையை பிய்தெறிவது மாதிரி கட்டுரை-பின்னோட்டங்களை விடாதீர்கள். என்றும் உனது நியாங்களும் உன்னில் உதிக்கின்ற நல்லெண்ணங்களே பலமான ஆயுங்கள் உன்கருத்தை வெல்வதற்கு. மேற்குலகம் அறிமுகமாக்கிய ஏ.கே.47 னும் கிளமோர் குண்டுகளும் அல்ல. முடிந்தால் உனது சொந்த ஆயுதத்திடம் போரட அழைப்பு விடு. இங்கு கூண்டுக்குள் நின்று கோழிச்சண்டை பிடிக்காதே!. இனி உனக்கு கதைப்பதற்கு வாயும் எழுதவதற்கு விரல்களும் வேண்டுமா?.
இலங்கையரசு பாஸிச அரசாகயிருந்தால் நீ எப்படி கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் சென்று ஆடுயடித்து தின்றுவிட்டு திரும்பவும் ரொறன்ரோ போகமுடியும்?. எமது தமிழினம்தான் லட்சக்கணக்கில் கொழும்பில் தொழில் செய்வதும் வாழ்வதும்தான் எப்படி? . இனியாவது பருத்திக்கொட்டை புண்ணாக்கு கட்டுரை வரையாமல் ஆக்கபூர்வமான கட்டுரை இனியொரு வெளியிட முயற்சிக்கவும். இருந்தும் கெடுத்தான்.செத்தும் கெடுத்தான் உடையான் என்கிறநிலையில் அல்லவா உங்கள் நிலை. இப்படியே போனால் உங்களுக்கு உள்ள சுதியில் எல்லா தமிழரையும் பைத்தியகாரர்கள் ஆகிவிடுவீர்கள் போல் இருக்கிறது. இருபத்தியாறு வருடங்கள் புலம்பெயர்தமிழரின் உதவிகளும் பிரச்சாரங்களும் ஈழத்தழிழருக்கு மரணவலை விரித்துவிட்டது போதாதா? இனியும் என்ன….? வலை வேண்டிக்கிடக்கிறது?. இனி ஈழத்தமிழர்கள் ஆயுதம் ஏந்திபோராடுவதாக இருந்தால் அது புலம்பெயர் பருத்திக்கொட்டை புண்ணாக்குகளுக்காக இருக்குமே தவிர சிங்களமக்களுக்கோ சிங்களயரசுக்கோ எதிராக அல்ல.
புலி வெறிபிடித்தவா்களும் அதன் எதிர்ப்பு வெறிபிடித்தவா்களான சந்திரன் ராசா போன்றவா்களும் ஒரேவிதமான ஆபத்தான பைத்தியங்களே.
நாய்களைவிட கேவலமாக 60 வருடங்களாக நடத்திக்கொண்டிருக்கும் பேரினவாத கூட்டத்துடன்{{சந்திரன் ராசா புலம்பும்}} பாட்டாழிகளின் மே தினத்தையே தமது பேரினவாதத்திற்கு ஆதரவாக பயன்படுத்திய கூட்டத்துடன் கைகோர்க்க வேண்டுமாம்,நாம் கைகோர்க்கவே விரும்புகிறோம் ஆனால் பதிலாக கிடைப்பதென்னவென்று உமக்குத்தெரியாதா??
டக்ளஸ் தேவானந்தா புலிகள் உள்ளவரை புலம்பிய வார்த்தை என்னவென்றால்//புலிகள் எனக்கு விதித்திருக்கும் மரண தண்டனையை அகற்றுவதாக ஒரு வார்த்தை சொன்னால் நான் உடனடியாக அரசாங்கத்தைவிட்டு வெளிவந்துவிடுவேன்// ஆனால் இப்போது புலிகளும் இல்லை அவா் ஏன் வெளியில் வரமுடியாது, அவா் யாரோடு இருப்பதென்பது அவருடய உரிமை அதற்காக செஞ்சோற்றுக்கடன் தீா்ப்பதற்கு இனத்தை விற்க முற்படக்கூடாது.
ஏ.கே 47 துப்பாக்கிகளை ஐயோ பசிக்கிறது என்று குரல் கேட்ட இடமெல்லாம் அள்ளி வழங்கியவா்கள் சோவியத்தின் கம்யூனிஸ்கள் என்பதை இந்த சந்திரனால் அறியமுடியாமல் போனது அபூா்வமே. அது ஒரு ரஸ்ய ஆயுதம் மேற்குலகத்தினுடயதல்ல.
சந்திரன் ராசாவுக்கு யதார்த்தம் புரியாவிட்டாலும் படித்த புத்தகத்தின் வழி நிற்பதுபோல் தோன்றியது ஆனால் அதுவும் பம்மாத்து என்பது மேலேயுள்ள பிற்குறிப்பின்மூலம் புரிகிறது. மேற்குலகை யாரும் கட்டி அணைக்கவில்லை போராட்டம் தொடங்கும் போது அதுவும் ஒரு காரணம் என்பது யாவருக்கும் தெரியும், ஆனால் இன்று அவா்களால் சில காரியங்கள் நடக்கவேண்டியுள்ளது ஆதலால் அரவணைக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் சோவியத்தினதோ, சீனாவினதோ ஏன் எம்மை ஆண்ட பிரித்தானியாவினதோ மிஸனுகள் செய்த உதவியால் நாங்கள் வளம் பெறவில்லை அமேரிக்க மிஸன் செய்த உதவிகள் ஏராளம் கொள்கையளவில் உடன்பாடு இல்லாவிடினும் அவா்கள் நன்மைதான் செய்துள்ளார்கள்.
// முடிந்தால் அவரின் தோழர்களைப் போல் வாழப்பழகுங்கள். மக்களையும் மனிதஉயிரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் //
chandran.raja; தங்களின் பின்னூட்டங்களை பார்க்கின்ற போது இந்த மர மண்டைக்குள்ளும் கொஞ்சம் சரக்கு இருக்கு என்று நினைத்தேன். மேற்படி கதைவசனத்தைப்பார்த்ததும் அதுவும் இல்லாமல் போய்விட்டது. சாரி சார் தங்களின் மண்டையில் பழுது சரியான வவைத்தியரை நாடவும்.
இருபத்தியாறு வருடங்கள் கொலைகளில் சூட்டேறிக்கொண்ட உங்களுக்கு இன்று கொலைகள் கப்பங்கள் இல்லாதது உங்களுக்கு குளிர்பிடித்து உதறல் எடுக்கிறது எங்களால் புரிந்துகொள்ளக் கூடியதே! நீங்கள் மற்றவன் சரக்கை நம்பியிருக்காதீர்கள். உங்களுக்கு சொந்த சரக்கிருந்தால் எடுத்துவிடுங்கள். அதுதான் இல்லையே!.இல்லையென்பது மட்டுமில்லை இனிமேல் இருக்கப்போவதும் இல்லை. அதில் நற்சான்றிதல்களும் கொடுக்க போகிறீர்களா? யாருக்கு?.
அனைவரும் ஒன்றுபட்டு போராடியிருந்தால் வெற்றி கிட்டியிருக்கும்.காட்டிக்கொடுத்தோர்க்கு பரிந்து நிற்கின்றீரே?உம்மையெல்லாம் பின்னூட்டம் எழுத இனியொரு இன்னும் நன்றாக அனுமதிக்கட்டும்.
சிங்கள மக்களே மகிந்த ராஜபக்சவை பாசிஸ்ட் என்று சொல்ல சந்திரன் ராசாவுக்கு மட்டும் அது தெரியவில்லை. என்ன கேவலமையா இது?
அனைவரும் ஒன்றுபட்டு போராடியிருந்தால் வெற்றி கிட்டியிருக்கும்.காட்டிக்கொடுத்தோர்க்கு பரிந்து நிற்கின்றீரே”
ஒன்றுபட்டு போராடுவதா? ரெலோவுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் என்ன நடந்தது? புலிகளோடு இருந்த காட்டிக் கொடுப்பாளர்களை உங்களுக்கு தெரியவில்லையா?கேபி நெடியவன் காஸ்ரோ உருத்திரகுமாரன் மற்றும் புலியை அண்டி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியவர்கள், கடை போட்டவர்கள், வீடுகள் வாங்கியவர்கள் ,பெற்றோல் ஸ்ரேசன் போட்டவர்கள் இவர்களை என்னவென்று சொல்லுவீர்கள்? டக்ளசின் அரசியல் மோசடி என சொல்பவுர்கள் மக்களின் முதுகில் குத்திய புலிகளையும் விமர்சியுங்கள்.
இலங்கையரசு பாஸிச அரசாகயிருந்தால் நீ எப்படி கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் சென்று ஆடுயடித்து தின்றுவிட்டு திரும்பவும் ரொறன்ரோ போகமுடியும்?.”
அது வேறொன்றும் இல்லை. அவர் கையில் இருக்குமே அந்த கனடா பாஸ்போட் அது தான் அது தரும் பாதுகாப்பு தான் காரணம். கனடிய பிரஜை என்ற பயம் தான் நாங்கள் போய்வரக் காரணம்.
சந்திரன் ராசா; தூங்குபவனை எழுப்பிவிடலாம்.தூங்குபவனைப்போல் நடிப்பவனை ஒருக்காலும் எழுப்ப முடியாது.நீங்கள் டக்ளசுக்கு சப்பைகட்டு கட்டுவதையும் மிரட்டல்(ஹி…..ஹி……)தொனியில் எழுதுவதையும் தொடருங்கள்.