பாரதிய ஜனதாக் கட்சியின் டெல்லி ஐ.டி விங் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த சுக்பீர் சிங் தன் கட்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளதோடு,, பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார்.
பொதுவாகவே சமூக வலைத்தளங்களை தங்கள் தேர்தல் பிரச்சாரக் கருவியாக பயன்படுத்துவதில் பாஜக முன்னணியில் உள்ளது. பிகார். மேற்கு வங்க தேர்தல்களிலும் இதே பாணியை பின்பற்றுகிறது. தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு வாட்சப் குழுக்களை உருவாக்கி ஊதியம் பெறும் நபர்களை நியமித்து அவதூறுகளை பரப்பி வாக்காளர்களிடம் குழப்பங்களையும் மோதலையும் உருவாக்குவதே அதன் நோக்கம்.
இந்நிலையில் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அதற்கு எதிராக பாஜகவினர் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். போராடும் விவசாயிகளுக்குப் பின்னார் பாகிஸ்தான், சீனா உள்ளதாக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்த நிலையில் டிசம்பர் 7-ஆம் தேதி சுக்பீர் சிங் பாஜக தலைமைக்கு எழுதியக் கடிதத்தில் “பாஜகவின் ஐ.டி செல் தொடர்ந்து தவறான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்பி வாக்காளர்களை குழப்பி வருகிறது. எனவே நான் ஐ.டி தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என அறிவித்துள்ளார்.