அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார் ஒருபுறத்தில் தமிழ்த் தேசியத்திற்காகப் போராடுவதாகக் கூறும் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற குறைந்தபட்ச மாகாணக் கோரிக்கியைக் கூட கதிரைகளுக்காக விற்பனை செய்துவிட்டு பதவிக்காக இலங்கை அரசோடு சமரசம் செய்துகொண்டது. மறுபுறத்தில் அரச துணைக்க்குழுக்கள் மக்களைக் கொலை செய்யும் பாசிச அரசின் அடியாட்களாக தேர்தலில் பங்குபற்றுகின்றனர். இலங்கை அரசின் பாசிச இராணுவத்தால் ஒவ்வொரு அடி நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மண்ணில் வடமாகாணத்திற்கி அங்கீகாரம் கேட்கிறது தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு. இனியும் திருந்தமாட்டோம் என்கிறன துணைக்குழுக்கள். இவற்றைக் கருத்தில்கொண்டு தேர்தலைப் புறக்கணித்து மக்களை ஒடுக்குமுறையை எதிர்கொள்ள அறைகூவும் அரசியல் தலமை இலங்கையில் இல்லை.
Let us wish then well. The Rajapakse Family. Then the Bodu Bala Sena. It is time we have something like Shiv Sena in Mumbhai, Maharastra, India.