இதயச்சந்திரனின் கட்டுரை விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தலிற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்ட நாள் முதல், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற காரசாரமான உரையாடல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியில் உருவாகி இருந்ததை மக்கள் அறிவார்கள்.
அந்த விவாதங்கள் அடங்கி, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, ஓய்வுபெற்ற நீதிபதி கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து, அரச தரப்பால் களமிறக்கப்படுவதாக, ஊடாகப்பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பொறுப்பாளர் தயா மாஸ்டர், ஐ.ம.சு.மு.வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட விவகாரம் குறித்து, தென்னிலங்கையில் விவாதம் தொடர்கின்றது.
இவைதவிர, அரசோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்று, முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகு தாவூது அவர்கள் விடாப்பிடியாக நின்றாலும், தனித்துப் போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்ததால், முஸ்லிம் காங்கிரசிற்குள் பிளவு ஏற்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது.
கிழக்கு மாகாணசபைத்தேர்தல் காலத்தில் இதுபோன்ற சலனங்கள் ஏற்பட்டாலும், தேர்தல் முடிவுகள் வந்த கையோடு, முஸ்லிம் காங்கிரசானது அரசோடு இணைந்து கிழக்கில் ஆட்சி அமைத்த அண்மைகால வரலாற்றினை நினைவிற் கொள்வது பொருத்தமானது.
ஆகவே முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை, ‘ தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அரசோடு இணைந்து கொள்வோம்’ என்பதனை மக்களுக்கு தெளிவாகக் கூறி வாக்குக் கேட்க வேண்டும்.
தேர்தல் களத்தில் மோதிக்கொள்வதற்கு, முக்கியமான இந்த மூன்று தரப்புக்களும் தயார் நிலையில் இருக்கையில், வடக்கில் பதிவு செய்யப்பட்ட 7 இலட்சத்து 14 ஆயிரத்து 480 வாக்காளப் பெருமக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை, தென்னிலங்கை அரசியல் வாதிகளும், சர்வதேச நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களும், உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மாகாணசபைத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,’ தமிழ் மக்களின் தேசிய அரசியலை வட மாகாணத்திற்குள் முடக்கிவிட சிங்கள தேசம் உறுதியாகவிருக்கிறது’ என்று குறிப்பிடும் த.தே.ம.முன்னணி, ’25 வருடங்களாக நிராகரிக்கப்பட்ட, ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட மாகாணசபை முறைமையானது தீர்வல்ல’ என்பதோடு, ‘ இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை, தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கு விட்டு விடுகிறோம்’ என்கிறது.
இதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், ‘ மாகாணசபை முறைமை என்பது, அரசியல் தீர்விற்கான முதற் புள்ளியுமல்ல, முற்றுப்புள்ளியுமல்ல, இடைக்காலத்தீர்வுமல்ல’ என்கிற அரசியல் கருத்து நிலைப்பாட்டினைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிற அறிவித்தல் வெளியாகியவுடன், அவர் ‘ இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல், சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்ததை கவனிக்கலாம்.
‘இன்னமும் தொடரும் தமிழின அடியழித்தலுக்கு எதிரான உலகத் தமிழ் மக்களின் ஆதரவினை ஓரங்கட்டும் வகையில், அவருடைய அரசியல் கருத்துக்கள் வெளிப்படுகின்றன’ என்பதான கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
‘சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல், நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை சிங்களத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டோரின், அரசியல் கருத்துநிலைக்கு முரணாக இருந்தது விக்னேஸ்வரன் அவர்களின் நேர்காணல்.
வேட்புமனு தாக்கல் செய்த பின், ஊடகவியலாளர்களுடன் உரையாடும்போது, 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்துவதற்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டார்.
ஆகவே,13 ஐ உள்ளடக்கிய, மக்களின் ஒப்புதலற்ற இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு, 26 வருடங்களின் பின்னர் அங்கீகாரம் தேடும் களமாக இத் தேர்தல் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
‘மக்களின் ஏகோபித்த ஆதரவு கிட்டினால், 13 ஐ நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும்’ என்று கூறும் விக்னேஸ்வரன் அவர்கள், அதில் சிக்கல் வந்தால் அரசுடன் சேர்ந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
மாவட்ட (சபை) உரிமை, 87 இல் மாகாணசபையாக விரிவாக்கம் பெற்றதாகவும், அது முன்னேற்றகரமானதொன்று என்று சுட்டிக்காட்டும் விக்னேஸ்வரன் அவர்கள், ‘சனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் அது மக்கள் ஆணையாக இருக்கும்’ என்பதை வலியுறுத்துவதோடு, ஆயுதக் குழுக்களின் ( விடுதலைப்புலிகள் உட்பட) கோரிக்கையை இலங்கை அரசும், சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற ஒப்பீட்டையும் மேற்கொள்கிறார்.
‘இனி உலகம் செவி சாய்க்கும்’ என்ற நம்பிக்கையை, எதனடிப்படையில் கூறுகின்றார் என்று தெரியவில்லை.
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக, இரண்டு முக்கிய பிரேரணைகளுக்கு அங்கீகாரம் வழங்கிய மந்திரிசபை தீர்மானங்கள், நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்பாக ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று விவாதிக்கப்படப்போகும் செய்தி, உலகின் செவிகளுக்கும் எட்டியிருக்கும்.
இருப்பினும், நில அபகரிப்புக் குறித்து வாய் திறக்காத இந்த சர்வதேசம், 13 இல் மாற்றங்களை மேற்கொள்ளும் அரசுடன் முரண்படுமென்று கற்பிதம் கொள்ளமுடியாது.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் இலங்கைப் பயணம், அடுத்துவரும் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர், எப்பாடுபட்டாவது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டினை நடாத்திவிட வேண்டுமென்கிற அரசின் துடிப்பு, ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, வட மாகாணசபைத் தேர்தலை இனிமேலும் நிராகரிக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை, இந்தியாவும் மேற்குலகும் இணைந்து அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடந்து, அங்கு ஒரு சிவில் நிர்வாகம் உருவானால் போதும் என்பதுதான் இந்த சர்வதேச நாடுகளின் (?) நிலைப்பாடு.
ஆளுநரும், இராணுவ கட்டளைத்தளபதியும் மாகாணசபை நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கிறார்கள் என்று சர்வதேசத்திடம் முறையிட்டாலும், காணி மற்றும் காவல் துறை அதிகாரங்களை வழங்க அரசு மறுக்கின்றது என்று அழுது புலம்பினாலும், 13 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே நாம் செயல்படுகிறோம் என்ற விளக்கங்களை சட்டத்துறைப் பேராசான் ஜி.எல்.பீரீஸ் அவர்கள் முன்வைப்பார்.
அதேவேளை காவல், காணி அதிகாரம் குறித்து மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகள் கொண்டிருக்கும் இறுக்கமான நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ‘ நிறைவேற்று அதிகாரமுள்ள என்னிடமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இருக்கும். அவற்றை என்னிடமிருந்து எவராலும் பறித்துவிட முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் காணி, காவல் துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது’ என அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறிய விடயத்தை, 13 என்பது ஆரம்பப்புள்ளி என்போர் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
13 வது திருத்தச் சட்டத்தில் என்ன அதிகாரங்கள் உள்ளன? என்பதுபற்றி சிங்கள தேசத்தின் பௌத்த பீடாதிபதிகளும், சட்ட வல்லுனர்களும், பேரினவாத அரசியல்வாதிகளும் விளக்கமாவே கூறி வருகிறார்கள். அவர்கள் கூறுவது தவறு என்று, அரசோடு பேசி உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்போர், தமது அரசியலமைப்பு சட்ட அறிவைப் பயன்படுத்தி மக்களுக்கு விளக்க வேண்டும்.
17 இல் ஒட்டிக்கொண்டிருந்த அற்ப சொற்ப சுயாதீன ஆணைக்குழு சரத்துக்களும், 18 இல் , சனாதிபதியின் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதனை மீட்டெடுக்க வேண்டுமென்று இரணிலும், மேற்குலகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதை ஆட்சியாளர்கள் செவிமடுக்கவில்லை.
ஆகவே, இவ்வாறான சிங்களத்தின் விடாக்கண்டன் நிலையினையும், 13 வது திருத்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதையும், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர், மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ‘வென்றபின் அதுகுறித்து அரசோடு பேசுவோம்’ என்பவர்கள், முதலில், விரல் நுனியில் மை பூசி, புள்ளடி போடும் மக்களுக்கு, எதற்காக வாக்களிக்கிறோம் என்பதையாவது சொல்ல வேண்டும். இறைமையுள்ள மக்களின் அடிப்படை சனநாயக உரிமை அது.
இருப்பினும், 65 ஆண்டு காலமாக, பெரும்பான்மையான தமிழ் மக்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பரசியலின் நீட்சியாக, இத்தடவையும் அவர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள். உரிமைக்கான போராட்டம் என்பதால்தான், சலுகைகளுக்காக தமது வாக்குகளை அவர்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லை.
77 இல், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கிய மக்கள் கூட்டம், இறைமையுள்ள பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அன்று வலியுறுத்தியது.
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயகத் தேர்தல் ஊடாகவே அந்த ஆணையை மக்கள் வழங்கினார்கள். அக்கோரிக்கையை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் குறிப்பிடும் ஆயுதக்குழுக்கள் முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட , தாங்கள் உருவாக்கிய தீர்வினை (13) மக்கள் மீது திணித்து, அதற்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து பெறுவதற்காகவா இத் தேர்தல் நடைபெறவேண்டுமென்று இந்தியா விரும்புகிறது என்கிற கேள்வி எழுகிறது.
அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு அப்பால், இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பிரச்சினையின் வடிவம், மோசமானதொரு நிலை நோக்கி நகர்வதை கவனிக்காமல் விட்டுவிடமுடியாது.
இனப்பிரச்சினைத் தீர்வில், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவும் மேற்குலகமும், தமது இலங்கையுடனான உறவினை வெவ்வேறு தளங்களில் நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதை புறந்தள்ளி, இந்த விவகாரத்தில் முழுமையான பார்வையைப் பெறமுடியாது.
நாட்டின் தற்போதைய அரசியல்- பொருளாதார நிலைவரத்தைப் பார்ப்போம்.
அரசிறைப் பற்றாக்குறை ( Fiscal Deficit), இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 343.5 பில்லியன் ரூபாவை எட்டியதோடு, கடந்த வருடத்தைவிட 20.3% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000 ஆம் ஆண்டில், மொத்த உள்ளூர் உற்பத்தியின் (Gross Domestic Product) 33% மாகவிருந்த இலங்கையின் ஏற்றுமதி, 2012 இல் 17 % ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை பொருளாதார ஒன்றியம் கவலையடைவதோடு மட்டுமல்லாது, இந்த வீழ்ச்சியானது, நாட்டினை கடன் பொறிக்குள் தள்ளிவிடக்கூடிய சூழலை ஏற்படுத்துமென்று எச்சரிக்கின்றது.
ஒவ்வொரு வருடமும், ஆடை ஏற்றுமதியில் $750 மில்லியன் நட்டமேற்படுவதால், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கு மறுபடியும் விண்ணப்பிக்குமாறு, அரசிற்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்.
உல்லாசத்துறை அபிவிருத்தி அதிகாரசபையும், ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் இவ் வருடத்திற்கான 1.25 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையை ,1.11 மில்லியனாக குறைத்துள்ளது.
பாரிய நட்டத்தில் இயங்கும் மாத்தல ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தை (MRIA ) விரிவுபடுத்த, சீனாவின் எக்ஸிம் வங்கியிலிருந்து மேலதிக கடன் பெற, அமைச்சரவையின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் அமைச்சர் பிரியங்கரா ஜெயரட்ணா.
இவைதவிர, அமைச்சர் டி.யு.குணசேகர தலைமை வகிக்கும் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பொது ஸ்தாபனங்களுக்கான குழுவினால் (COPE), கடந்த 23 ஜூலை அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, 2011 இல் நட்டத்தில் இயங்கிய 18 அரச ஸ்தாபனங்கள் பற்றி விவரிக்கும்போது, இவற்றின் பாதிப்பானது வங்கிகளின் இயல்பான செயற்பாடுகளை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறது .
இதில் 14 நிறுவனங்கள், 2009 இலிருந்து தொடர்ச்சியாக நட்டத்தில் தள்ளாடுகிறது.
குறிப்பாக, இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மிகின் லங்கா என்பன அழிந்து போகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை சமர்ப்பித்த நாடாளுமன்ற குழுவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விநாயகமூர்த்தி, சீனித்தம்பி. யோகேஸ்வரன், ஈ. சரவணபவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் அரசிறைப் பற்றாக்குறை அதிகரித்துச் செல்வதால், மேற்குறிப்பிடப்பட்ட 3 அரச ஸ்தாபனங்களோடு, நட்டத்தில் இயங்கும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை, லங்கா சலுசல, தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா செரமிக்ஸ் கூட்டுத்தாபனம், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா றப்பர் ஏற்றுமதி கூட்டுத்தாபனம், மற்றும் சிறிலங்கா எயர் லைன்ஸ் லிமிட்டெட் என்பவற்றை, தனியார் துறையினருக்கோ அல்லது பன்னாட்டுக் கம்பனிகளுக்கோ தாரை வார்க்கும் வாய்ப்புமுண்டு.
வட மாகாணத்தில் தேர்தலை நடாத்த அழுத்தம் கொடுக்கும், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளில் இயங்கும் பன்னாட்டுக் கம்பனிகள் இந்த நிறுவனங்களைக் கையகப்படுத்தும் போட்டியில் இறங்கலாம்.
பொருளாதார உறவினைப் பலப்படுத்துவதன் ஊடாக, இராஜதந்திர மேலாண்மையை மெருகூட்டும் சீனாவின் உபாயத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆளுமையை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பிரயோகிக்கும்.
அதேவேளை இலங்கை அரசானது,வெளிநாடுகளை கவரும்வகையில் புதியதொரு நகர்வினை இந்த வாரம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (FDI)அளவினை $2000 மில்லியனாக உயர்த்த வேண்டுமென்கிற, முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன திட்டம், கடந்த ஆறு மாதங்களில் $430 மில்லியனை மட்டுமே எட்டியுள்ளது. ஆகவே வேறுவழியின்றி, சுதந்திர துறைமுகமாக (Free Port) ஹம்பாந்தோட்டை, கொழும்பு, திருகோணமலை ஆகியவற்றை அரசு பிரகடனம் செய்துள்ளது. இதன் மூலமாவது, அங்கு தொழில் நிறுவனங்களை நிறுவ, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருமாவென்று அரசு ஏங்குகிறது.
இச் சந்தர்ப்பத்தை, இந்தியாவும், மேற்குலக நாடுகளும், கிழக்கு ஆசியாவிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளும் நிற்சயமாகப் பயன்படுத்தும்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் 2009 இற்குப் பின்னர் ஆரம்பமாகிவிட்டன.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, ஜப்பானின் உள்நாட்டு அமைச்சர் யோஷிடகா ஷிண்டோ இலங்கை வந்து சென்றுள்ளார். அண்மைக்காலமாக சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு குறித்து, எதுவித பிரச்சினையும் ஜப்பானிற்கு இல்லை என்கிற செய்தியையும் அவர் கூறியுள்ளார்.
11-13 செப்டெம்பர் வரை, சீனாவிலுள்ள டாலியான் பிரதேசத்தில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில், 90 நாடுகளிலிருந்து வருகைதரும் 1500 பேருடன் இலங்கையின் வர்த்தகக் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கை அரசியலின் மறுபக்கத்தில் நிகழும் இந்த மாற்றங்களையும், அதற்குள் மறைந்திருக்கும் சர்வதேச நுண்ணரசியலின் பரிமாணங்களையும் இணைத்து மதிப்பீடு செய்தால், வெறுமனே மாகாண சபைக்குள் முடங்கிவிடாமல், இறைமைகொண்ட தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய, நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய செயற்பாடுகளை, தமிழ் தேசியத்தின் அரசியல் தலைமைகள் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவை உணர்த்தும் என்று நம்பலாம்.
வழமை போல் மிக சிறந்த ஆழமான பார்வை. ஆனால் பட்டப் படிப்பும் சட்டப் படிப்பும் படித்துப் பொய் பேசி வயிறு வளர்க்கும் கூட்டமைப்புக் கும்பலுக்கு இவை தெரியாமலா போகும்.?
இவர்களை மக்கள் முழுமையாக து}க்கி எறிந்தால் மட்டுமே தமிழினம் அழிவிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால் ஏமாற்று அரசியணே தொடரும் கொடுமைதான் நிகழப் போகிறதா?
மக்கள் தீர்ப்பு தெரிய வரட்டும்.
சர்வதேச சமூகததை அடியோடு நிராகரிக்கும் கட்டுரை
இது
அப்படியானால் சர்வதேச விசாரணை கோரிக்கை எதற்கு ?
சர்வதேசத்தை நாம் நிராகரித்தால்
சர்வதேச விசாரணை மூலம் இனப்படுகொலையை நிரூபித்து
தமிழீழக் கோரிக்கையை வெல்வோம் என்பது வெறும் பொய்யா?
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு மட்டுமல்ல உலக மக்களின் உரிமைகள் அனைத்துக்கும் நீங்கள் மண்டியிடும் சர்வதேசம் எதிரானது. எதிரிகளையே கூடிவந்து காட்டிக்கொடுக்காதீர்கள். எதிரிகளுக்கு முகமூடிபோட்டு மக்களின் நண்பர்களாக்கதீர்கள். அழிப்பதற்கு அவர்களை அழைத்து வராதீர்கள். உலகம் முழுவதும் மக்கள் போராடுகிறர்கள். பலர் வெற்றி பெறுகிறார்கள். நீங்களோ கோழைகள். அதனால் காட்டிகொடுப்பதைத் தவிர வேறு அரசியல் உங்களுக்குத் தெரியாது.
குறிப்பு : எனது 72 மணி நேரக் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
அமெரிக்காவும் மேற்குலகும் உலகில் தமது நலன்களை விரிவாக்க முயல்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ,
இராணுவ தொழில் நுட்பம் வளர்ந்த காலம் இது , ஆளில்லா விமானம் , ஆகாயத்தில் இருந்தே , பூச்சியின் நகர்வையும் பார்க்க கூடிய வசதிகள் , தகவல் பரிமாறல் உலகை ஆட்டும் காலம் இது .
அதனையும் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக மேற்குலகின் கட்டுப்பாட்டில் உள்ளது .
நாம் இன்று உரையாடும் இன்ரர் நெற் உட்பட , எமது உரையாடல்கள் அத்தனையும் வேவு பார்க்க கூடியவை .
இந்நிலையில் ,
உயிர் வாழுவதற்கே அவஸ்தைப்படும் எமதினம் உலகை புரட்டப் பார்ப்பது
விட்டில் பூச்சி தன் இறக்கைகளால் காட்டுத் தீயை அணைக்க கற்பிதம் பண்ணுவதற்கு சமனான முழு மூடத் தனம் இந்த கட்டுரையில் புரையோடிப் போய் கிடக்கின்றது .
உலகில் அழிக்கப்படாத எல்லாப் போராட்டங்களும் இதுவரைக்கும் நடந்துகொண்டுதான் இருகின்றன. நீங்கள் உங்கள் எஜமானர்களுக்காகப் பயந்து ஒதுங்கும் ஆளில்லா விமானத்திற்குப் பயப்படாமல் தான் இன்று இந்தியாவில் பள்ளிக்குப் போகாத பழங்குடி மக்களின் போராட்டம் பாரம்பரிய ஆயுதங்களோடு வெற்றியை நோக்கிச் செல்கிறது. இப்படியே மக்களைப் பயமுறுத்திப் பயமுறுத்தியே இன்று முள்ளிவாய்க்காலில் உங்கள் எஜனமாரர்களை நம்பி அவர்களுக்குக் காட்டிக்கொடுத்து லட்சம் லடசமாக அழிப்பதற்கு துணை போயிருக்கிறீர்கள். இன்னும் துணை போவோம் என்று சொல்கிறீர்கள். அதே கையோடு மக்களிடம் வருகிறீர்கள். நீங்கள் அரசியல் சூனியமா அல்லது திட்டமிட்டுக் காட்டிக்கொடுக்கிறீர்களா என்பது தெரியாது, ஆனால் நீங்கள் இன்னும் அழிவுகளுக்கு ஆயத்தம் செய்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது.
குறிப்பு: நீங்கள் இன்னும் எனது முன்னைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. தப்பிக்கப் பார்க்கவேண்டாம். எனக்கு பதில் தேவை!!!
இராணுவ தொழில் நுட்பம் வளர்ந்த காலம் இது ,
ஆளில்லா விமானம் ,
ஆகாயத்தில் இருந்தே ,
பூச்சியின் நகர்வையும் பார்க்க கூடிய வசதிகள் ,
தகவல் பரிமாறல் உலகை ஆட்டும் காலம் இது .
அதனையும் சர்வதேச சமூகத்தின்
குறிப்பாக மேற்குலகின் கட்டுப்பாட்டில் உள்ளது .
நாம் இன்று உரையாடும் இன்ரர் நெற் உட்பட ,
எமது உரையாடல்கள் அத்தனையும் வேவு பார்க்க கூடியவை . – மௌலீசன்
ஆக …அவர்களை ஆதரிக்க வேண்டும்
இதை விட்டால் நமக்கும் வேறு வழியில்லை…
அப்படிதானே மௌலீசன் அவர்களே?
இப்படித்தானே தமிழர்களை காலங்காலமாக சிந்திக்க விடாமல் கடிவாளம் போட்டு முள்ளிவாய்காலில் கொண்டு போய் நிறுத்தினீர்கள்
///ஆளில்லா விமானத்திற்குப் பயப்படாமல் தான் இன்று இந்தியாவில் பள்ளிக்குப் போகாத பழங்குடி மக்களின் போராட்டம் பாரம்பரிய ஆயுதங்களோடு வெற்றியை நோக்கிச் செல்கிறது. இப்படியே மக்களைப் பயமுறுத்திப் பயமுறுத்தியே இன்று முள்ளிவாய்க்காலில் உங்கள் எஜனமாரர்களை நம்பி அவர்களுக்குக் காட்டிக்கொடுத்து லட்சம் லடசமாக அழிப்பதற்கு துணை போயிருக்கிறீர்கள். – ///
அருமையான பதில் ” யாரோ ” அவர்களே.
தமிழீழ்த்தை நிராகரிக்கும் நீர் சும்மா கனைக்காமல் இரும்
இப்படித்தானே தமிழர்களை காலங்காலமாக சிந்திக்க விடாமல் கடிவாளம் போட்டு முள்ளிவாய்காலில் கொண்டு போய் நிறுத்தினீர்கள்.
மௌலீசன் அவர்களே !
தமிழீழம் என்பது சாத்தியமில்லாத ஓலம் !!
வடிவேல் பாணியில் சொன்னால் ” வரும் ஆனா வாராது ”
இப்படியே முழிச்சுக் கொண்டு கனவு காணும்.
சிந்திக்கறவரு சொல்லுறாரு கேளுங்கோ.
இந்தக் கட்டுரையாளர் சர்வதேசத்தை நிராகரிக்கின்றார் ,
அப்படி என்றால் சர்வதேச தலையீட்டில் பொது வாக்கெடுப்பு , விசாரணை என்று கோரும் இந்திய மாணவர்கள், புலம் பெயர் மக்கள் , அத்தனை பேரும் ,
சர்வதேசத் தலையீடு கோரிய தமிழ் மக்கள் அததனை பேரும் முட்டாள்கள் என்று சொல்கின்றாரா?
விடுதலைப் புலிகள் கூட சர்வதேச மத்தியஸ்தத்தை ஏற்றவர்கள் தான் . அவர்களையும் இவர் முட்டாள்கள் என்கின்றாரா ?
யாரோ என்று எழுதுவது இந்தக் கட்டுரையாளர் தானா அப்படியானால் யாரோ பதில் தரலாம் . இல்லையென்றால் கட்டுரையாளர் பதில் தரட்ட்டும் யாரோ கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் பிளீஸ்
மௌலீ,
உங்களுக்குக் கருத்து முக்கியமா அன்றி யார் அதனைச் சொலிகிறார்கள் என்பது முக்கியமா. ஒருவர் கருத்துச் சொல்கிறார் என்பதற்காக அந்தக் கருத்தையே நிராகரிப்பது என்பதும் அரசியல் சூனியம். மக்கள் மீது நம்பிக்கையற்று கொலையாளிகளையே மீண்டும் மீண்டும் அழைத்துவரக் கோரும் உங்கள் சூனியத்திலிருந்தே இவ்வகையான சிந்தனைகள் உருவாகின்றது. இதுவும் எமது சாபக்கேடோ?
புலிகள் அழிந்தாதால் தான் நாமெல்லாம் அரசியல் பேசக்கூடியதாக இருக்கிறது என்றும் வன்னிப் படுகொலைகளை புலிகளின் அழிவோடு இணைத்து நியாயப்படுத்திய விக்னேஸ்வரனை ‘குணநிதி’ என்றும் கடவுள் என்றும் நியாயப்படுத்தும் உங்களுக்கே கருத்துரையிருக்கும் போது இதயச்சந்திரன் ஆயிரம் கட்டுரை எழுதலாம்.
ராஜபக்ச குடும்பம் ஆணையிட்டு வன்னியில் மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சாட்சியில்லாமல் கொல்லப்பட்டார்கள். அப்படிப்பட்ட மனிதப் பிணம் தின்னிகளோடு பேசியே நாங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று கூறிய விக்னேஸ்வரனை தியாகி ரேஞ்சுக்கு உயர்த்துகிறீர்கள் என்றால் இதயச்சந்திரன் பத்தாயிரம் கட்டுரைகள் எழுதலாம்.
Mr Yaroo, இராணுவ தொழில் நுட்பம் வளர்ந்த காலம் இது ,
ஆளில்லா விமானம் ,
ஆகாயத்தில் இருந்தே ,
பூச்சியின் நகர்வையும் பார்க்க கூடிய வசதிகள் ,
தகவல் பரிமாறல் உலகை ஆட்டும் காலம் இது .
அதனையும் சர்வதேச சமூகத்தின்
குறிப்பாக மேற்குலகின் கட்டுப்பாட்டில் உள்ளது .
நாம் இன்று உரையாடும் இன்ரர் நெற் உட்பட ,
எமது உரையாடல்கள் அத்தனையும் வேவு பார்க்க கூடியவை .
என நான் சொன்னதை நீங்கள் புரியவில்லை ,
இதனையையும் மீறி ஒரு போராட்ட அமைப்பை உருவாக்கும் வலுவும் திறனும் ஆதரவும் எமக்கு இல்லை என்பதைத்தான் குறிப்பிட்டேன் .
“வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்.—-பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 48. வலியறிதல்”
இதன் பொருள்
வினை வலியும்= தான் செய்யக் கருதிய வினைவலியையும்; தன் வலியும்= அதனைச்செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும்= அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணை வலியையும்= இருவர்க்கும் தூணையாவார் வலியையும்; தூக்கிச் செயல்= சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க.
மௌலீ,
உங்களுக்குக் கருத்து முக்கியமா அன்றி யார் அதனைச் சொலிகிறார்கள் என்பது முக்கியமா. ஒருவர் கருத்துச் சொல்கிறார் என்பதற்காக அந்தக் கருத்தையே நிராகரிப்பது என்பதும் அரசியல் சூனியம். மக்கள் மீது நம்பிக்கையற்று கொலையாளிகளையே மீண்டும் மீண்டும் அழைத்துவரக் கோரும் உங்கள் சூனியத்திலிருந்தே இவ்வகையான சிந்தனைகள் உருவாகின்றது. இதுவும் எமது சாபக்கேடோ?
புலிகள் அழிந்தாதால் தான் நாமெல்லாம் அரசியல் பேசக்கூடியதாக இருக்கிறது என்றும் வன்னிப் படுகொலைகளை புலிகளின் அழிவோடு இணைத்து நியாயப்படுத்திய விக்னேஸ்வரனை ‘குணநிதி’ என்றும் கடவுள் என்றும் நியாயப்படுத்தும் உங்களுக்கே கருத்துரையிருக்கும் போது இதயச்சந்திரன் ஆயிரம் கட்டுரை எழுதலாம்.
ராஜபக்ச குடும்பம் ஆணையிட்டு வன்னியில் மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சாட்சியில்லாமல் கொல்லப்பட்டார்கள். அப்படிப்பட்ட மனிதப் பிணம் தின்னிகளோடு பேசியே நாங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று கூறிய விக்னேஸ்வரனை தியாகி ரேஞ்சுக்கு உயர்த்துகிறீர்கள் என்றால் இதயச்சந்திரன் பத்தாயிரம் கட்டுரைகள் எழுதலாம்.
நீங்கள் திரும்பத் திரும்ப ஒன்றையே வாய்பாடு போல உச்சரிக்கின்றீர்கள். விளங்கிக் கொள்வதாக இல்லை. சரி இன்னொரு தடவை கூறுகிறேன். நீங்கள் சொன்ன எல்லா தொழில் நுட்பங்களுக்குள்ளும் நுளைந்து மக்கள் போராடுகின்றார்கள். அதுவும் ஆயுதம் தாங்கி. இந்தத் தொழில் நுட்பங்களை வைத்திருக்கும் கொலை காரர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை. போராட்டங்கள் வெற்றிகரமாகத் தான் நடக்கிறது. அப்படியானால் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
/////// ஆயுதம் தாங்கி. இந்தத் தொழில் நுட்பங்களை வைத்திருக்கும் கொலை காரர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை. போராட்டங்கள் வெற்றிகரமாகத் தான் நடக்கிறது. /////
உங்கள் விடுதலைப் பட்டியலில் கடைசியாக விடுதலை அடைந்த நாடு எது ?
நேபாளம், போராட்டம் முள்ளிவாய்க்கால் போல போராட்டம் அழிக்கப்படாமல் வெற்றிகரமாகத் தொடரும் இடங்கள், மத்திட இந்தியாவும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும், கஷ்மிர், வெற்றியடையும் நிலையிலுள்ள போராட்டம் குர்தீஸ்தானுக்கான போராட்டம். நீங்கள் கேள்விகேட்டு அறிவை வளர்த்துக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி ஆனால் எனது 72 மணி நேரக் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை.
osted on 08/07/2013 at 12:33
இந்தக் கட்டுரையாளர் சர்வதேசத்தை நிராகரிக்கின்றார் ,
அப்படி என்றால் சர்வதேச தலையீட்டில் பொது வாக்கெடுப்பு , விசாரணை என்று கோரும் இந்திய மாணவர்கள், புலம் பெயர் மக்கள் , அத்தனை பேரும் ,
சர்வதேசத் தலையீடு கோரிய தமிழ் மக்கள் அததனை பேரும் முட்டாள்கள் என்று சொல்கின்றாரா?
விடுதலைப் புலிகள் கூட சர்வதேச மத்தியஸ்தத்தை ஏற்றவர்கள் தான் . அவர்களையும் இவர் முட்டாள்கள் என்கின்றாரா ?
யாரோ என்று எழுதுவது இந்தக் கட்டுரையாளர் தானா அப்படியானால் யாரோ பதில் தரலாம் . இல்லையென்றால் கட்டுரையாளர் பதில் தரட்ட்டும் யாரோ கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் பிளீஸ்
ஒரு கருத்தை முன்வைப்பதால் மாற்றுக்கருத்தாளர்களை முட்டாள் என்று கூறுவதாக நீங்கள் எண்ணுவதே முட்டாள் தனம், அரசியல் சூனியம், கடைந்தெடுத்த முட்டாள் தனம்.
எனது 72 மணித்தியால கேள்விக்குப்நீங்கள் பதில் தராமல் நழுவுவது எஸ்கேபிசம்
மக்கள் தெளிவாக வேண்டும் காலத்தின் தேவை 13வது திருத்தம் என்பதுடன் நின்றுவிட முடியாது வடமாகாணத்தேர்தல் என்பதுடன் மடடும் எமது நம்பிக்கைகள் நிறைவெற்றப்போவது இல்லை ; அலகின் அடிப்படையில் தமிழினத்தின் அரசியல் உரிமை முழுமையான முறையில் தீர்கப்பட வேண்டும். அதனை தவிர்த்து எந்த இனத்தின் சுதந்திரத்தையம் பேரின வாத அடக்குமுறைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் மக்களினது அழிவும் நாட்டினது நலன்களும் பாதிக்கமே தவிர எந்த நன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை.. சிலருக்கான சநதற்பங்கள் சுதந்திரமானதல்ல என்பதனை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டுமானால் இருக்கும் சந்தற்பங்களை தொலைக்காமல் பாதுகாத்துக் கொணடு போராட வேண்டியதன் தேவையை நாம் அலட்சியப்படுத்த முடியாது . அதனடிப்படையில் நாம் எமது தேர்தலை முழுமனதுடன் செயலாற்றி கூட்டமைப்பிற்கான சந்தற்பத்தை வலுப்படுத்தி அரசியல் தளத்தில் கொணடு செல்லப்பட வேண்டிய அடையாளம் கூட்டமைப்பே ஒளிய அதில் உள்ளவர்களது கருத்துக்களுடன் ஒனறு பட வேண்டியதல்ல.
காரணம் அதில் உள்ளவர்கள் அத்தனை பேரும் மக்களால் தெரிவாக்கப்பட்டவர்களே ஒளிய மக்களுக்கு திருப்தியான கடமை செய்தவர்களாக கருத முடியாது. அவர்கள் தம்மை வளர்தாம் நாம் எமது விடுதலைககு அவர்களை வளரகப்பட வேண்டியது ஈழத்தமிழினத்தின் கடமை ஆகும்.
அதனைப்போல் அடுத்து வர இருககும நா.க.த.;அரசாங்கத்தின் தேர்தல் புலம் பெயர் சமூகத்தில் முதன்மை பெற வேணடும் என்பது எமது தாழ்மையான கருத்தாக ஒவ்வொரு ஊடகங்களையும் ஒவ்வொரு தமிழர்களிடமும் ஒவ்வொரு அமைப்புக்களிடமும் முன்வைக்கும் கருத்தாகும்
இந்தக் கட்டுரையாளர் சர்வதேசத்தை நிராகரிக்கின்றார் ,
அப்படி என்றால் சர்வதேச தலையீட்டில் பொது வாக்கெடுப்பு , விசாரணை என்று கோரும் இந்திய மாணவர்கள், புலம் பெயர் மக்கள் , அத்தனை பேரும் ,
சர்வதேசத் தலையீடு கோரிய தமிழ் மக்கள் அததனை பேரும் முட்டாள்கள் என்று சொல்கின்றாரா?
விடுதலைப் புலிகள் கூட சர்வதேச மத்தியஸ்தத்தை ஏற்றவர்கள் தான் . அவர்களையும் இவர் முட்டாள்கள் என்கின்றாரா ?
யாரோ என்று எழுதுவது இந்தக் கட்டுரையாளர் தானா அப்படியானால் யாரோ பதில் தரலாம் . இல்லையென்றால் கட்டுரையாளர் பதில் தரட்ட்டும் யாரோ கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் பிளீஸ்
‘சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல், நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை சிங்களத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டோரின், அரசியல் கருத்துநிலைக்கு முரணாக இருந்தது விக்னேஸ்வரன் அவர்களின் நேர்காணல்………
‘தமிழக மாணவர் போராட்டம் இந்தியச் சதி’ என்று ஒருவர் முன்பு சொன்னது நினைவிற்கு வருகிறது. குணநிதி என்ன குத்துக்கரணம் அடிப்பார் என்று இனித் தெரியும்.
இன்று ஒருவரைச் சந்தித்தேன் சரியான வெயிலப்பா என்றேன். அவரோ மகாராணி வீட்டில் குழந்தை பிறந்திருக்கு என்றார் .
அப்பொழுது தான் எனக்கு புரிஞ்சுது அவருக்கு திடீரென செவிப் புலன் போயிட்டுது என்று .
அது போல இந்தக் கட்டுரையாளர் சர்வதேச தலையீடை முட்டாள்கள் என நினைக்கின்றாரா ? என்று கேட்க வந்த பதில் மாணவர் போராட்டம் இந்தியச்சதி என்று ஒருவர் சொன்னார் என்று. ஒரே வியாதியோ அல்லது வேறு காரணமோ தெரியவில்லை .
Reply
சி.சந்திரமெளலிசன்
Posted on 08/11/2013 at 23:58
சிறிலங்கா அரசு அதிகாரங்களைத் தர மறுத்தால்…? – அடுத்தகட்டம் குறித்து விபரிக்கிறார் விக்னேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 06:29 GMT ]
மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தரமாட்டேன் என்று கூறுவதற்கு, சிறிலங்கா அதிபருக்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது என்று வடக்கு மாகாணசபைக்கான தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்றும் இந்த அதிகாரங்களைத் தன்னிடமிருந்து பறித்து விட முடியாது என்றும் வடக்கு மாகாணசபை முதல்வராக விக்னேஸ்வரன் தெரிவானால், 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக அவருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
இதுகுறித்து முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,
“காணி, காவல்துறை அதிகாரங்களை தரமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறுவதற்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது.
ஏனென்றால் இப்போதுள்ள மாகாணசபைச் சட்டத்தில் காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த அதிகாரங்கள் இருக்கும் உரித்துக்களே தவிர, அவர் தரப்போகும் அதிகாரமல்ல.
அவர் என்ன காரணத்துக்காக அவ்வாறு கூறினார் என்று சொல்ல முடியாது.
ஒருவேளை சிங்கள மக்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.
தற்போதைய சட்டத்தின் படி அந்த அதிகாரங்கள் எங்களுக்குரியது.
சிறிலங்கா அதிபர் எங்களைப் பேச்சுக்கு அழைத்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்வடைகிறோம். வரவேற்கிறோம்.
பேச்சுக்கு எங்களை அழைத்திருக்கும் சிறிலங்கா அதிபரின் மனோநிலையை பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்வது சிரமமாகவுள்ளது.
விடுதலைப் புலிகள் இருக்கும்போது 13பிளஸ் பிளஸ் என்று கூறினார். பின்னர் 13 என்று கூறினார். தற்போது 13 ஐ முற்றாக அகற்றிவிட வேண்டும் அதன் ஏற்பாடுகளை இல்லாது ஒழிக்க முயன்று வருகிறார்.
ஆகவே, நாங்கள் பேச்சுக்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் எவ்வாறு அந்த பேச்சு அமையப்போகிறது, எதற்காக அழைக்கவிருக்கிறார் என்பது எங்களுக்கு புரியாத புதிராவேயுள்ளது.
ஏனென்றால், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் பேசியதில் எந்தப் பயனும் கிடைக்கவில்லையென்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
தான் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என சிறிலங்கா அதிபர் கூறுவதைக் கொண்டு நாங்கள் எந்த தீர்மானத்தையும் கணித்து விட முடியாது.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் சார்பில் அவரது கட்சி 18 தடவைகளுக்கு மேல் பேசியுள்ளது. எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
ஆகவே சிறிலங்கா அதிபர் என்னுடன் என்ன பேசுவார் எதைக்கூறப் போகிறார் என்பது பற்றி என்னால் ஆருடம் கூற முடியாது.
தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபைத் தேர்தலை ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது.
அது தீர்வை நோக்கி செல்லும் ஒரு வழியே தவிர, எந்தளவுக்கு இந்த வழியில் பயணம் செய்யலாம் என்பது எமது உடனடித் தேவைகளிலேயே தங்கியுள்ளது.
எமது தீர்வைப் பெறுவது வடக்கு, கிழக்கு மக்கள் புலம்பெயர் சமூகம் இந்தியா, அனைத்துலக சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் என்பது வடக்கு மக்களின் ஏகோபித்த எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமையும்.
வடக்கு மாகாணசபையிலுள்ள 36 ஆசனங்களில் 32 ஆசனங்களை நாம் பெறுவோமாயின், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக எங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள், எங்கள் எண்ணத்தை வரவேற்கின்றார்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.
மக்களின் பேராதரவு கிடைக்குமானால், சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் அந்தஸ்து எமக்கு கிடைக்கிறது என்று கொள்ளலாம்.
அந்த அந்தஸ்தை பெற்றால்தான் எதிர்காலத்தில் நாம் அரசுடன் பேசிக் கொள்ள முடியும். அனைத்துலகத்துக்கு எடுத்துக் கூற முடியும்.
எனவே மாகாணசபைத் தேர்தல் என்பது ஓர் தீர்வாக அமையாது, தீர்வை நோக்கி நகர அடிகோலியாக அமைய முடியுமென நம்புகின்றோம்.
மாகாணசபை முறை வடக்கில் கொண்டு வரப்படுகின்ற போது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா, முடியுமானால் எந்தளவுக்கு முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேவேளை, காணி, காவல்துறை அதிகாரங்கள் ஏற்கனவே சட்டத்தில் இருக்கின்ற விடயம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
ஏனென்றால், அரசின் எண்ணம் எது என்பதை அதனுடன் பேசிய பின்பே தெரிந்து கொள்ள முடியும்.
அதிகாரங்களைத் தரமாட்டோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுவதால் அனைத்துலக அளவில் பேரம் பேசும் நிலை உருவாகுமா என்பது அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும்.
மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை எவரும் எதுவும் சொல்ல முடியாது.
காணி, காவல்துறை அதிகாரங்களை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தாலும் அது இன்னும் செய்யப்படவில்லை.
எங்களுக்கென்று ஒரு மாகாணசபை இல்லாததால், மேற்படி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று நாம் கோரிக்கை விட முடியாதுள்ளது.
எங்களுக்கென்று ஒரு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்வோமாயின் அதிகாரங்களை தர முடியாது என அரசாங்கம் சொல்ல முடியாது.
நாங்கள் கேட்பதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுப்பார்களானால் நாங்கள் அனைத்துலக அளவில் நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டி வரும்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அரசாங்கம் செயற்பட்டால், பேரம் பேசுவதற்கு நாங்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
இவையெல்லாம் அரசாங்கத்தின் கையில் தான் தங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருக்கும்போது அவர்கள் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தார்களா, இல்லையா என்ற சந்தேகமும் மயக்கமும் அனைத்துலகத்துக்கும், உலக நாடுகளுக்கும் காணப்பட்டது.
அவர்கள் ஆயுததாரிகளாக இருப்பதால் தான், தமிழ்மக்களின் தலைமைத்துவத்தை எடுத்துள்ளனர், ஆயுதம் இல்லையாயின், அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது, எதையும் செய்ய முடியாது என்ற மயக்க நிலையில் அனைத்துலகம் இருந்தது.
ஆனால், இன்று மக்களுடைய ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் அது ஜனநாயக முறையாகி விடும்.
எனவே, நாங்கள் ஜனநாயக முறையின்படி பேச முற்படுகின்ற போது, எமது உரிமைகளை கேட்க முற்படுகிற போது, அனைத்துலக நாடுகள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் மக்களுடைய ஆதரவு எங்களுக்கு உள்ளது. அது எப்பொழுதும் எம் பக்கமேயுள்ளது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இந்த செல்வாக்கை குறைக்கவே அரசாங்கமும் இராணுவமும் தலையீடு செய்து வருகின்றன.
இராணுவத்தின் இந்த தலையீடு குறித்து அண்மையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
இராணுவம் வடக்கில் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பது பற்றி யாருக்கும் மயக்க நிலை இருக்காது. அது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனவே இராணுவமோ பிறரோ எவ்வாறு நடந்து கொண்டாலும் நடைபெறப் போகின்ற வடமாகாணசபைத் தேர்தலில் பயமின்றி மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.
அதை மக்கள் செய்வார்கள் என்றும் நாம் நினைக்கின்றோம்.
இந்த தேர்தலுக்கு ஒத்தாசையாக வெளிநாட்டு பார்வையாளர்களும் கண்காணிப்பாளர்களும் உறுதுணையாக நிற்பார்கள் என நம்புகின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி – வீரகேசரி வாரவெளியீடு
உலகத்தின் ஒவ்வொரு நாடும் தத்தமது பொருளாதார இலாபங்களையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டவை. இதற்கு அவைகள் வியாபாரம், அரசியல், இராணுவம், இராஜதந்திரம், மனித உரிமைகள், கலை, கலாசாரம், விளையாட்டு, விண்வெளியாராட்சி, ஐக்கிய நாடுகள், மற்றும் பலவற்றைத் தமது செல்வாக்கினைப் பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தகின்றன. எந்த வொருநாடும் மற்றொரு நாட்டு மக்களின்மீது வைத்துள்ள அன்பு, காதல், இரக்கம் என்பவைகளுக்காகச் செயற்படுவதில்லை. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள், இஸ்லாமியர்களது பிரச்சினைகள், ஏனையவைகள் எல்லாம் சர்வதேசத்திற்கு அவற்றின் நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் விடயங்களாகவே இருக்கும். உலகில் இன அழிப்புக்கள், கொலைகள், பேரழிவுகள் என்பவை இந்தப் பலம்வாய்ந்த நாடுகளால் பல நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் விடயங்கள்தான். இன்றும் உண்மை நிலை அதுதான்! இந்தநிலையில், சர்வதேசமானது தமிழரின் பிரச்சினைக்குத் தமிழர்கள் விரும்புவதுபோல், தமிழரின் நலன்களை மாத்திரம் கருத்தில்கொண்டு முழுமையான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும், பெற்றுக் கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். சர்வதேசமானது அதனது நலன்களைக் கருத்தில்கொண்டு, விடுதலைப் புலிகளை அழிப்பதூடாகத் தமிழர்கள் தனிநாட்டினை உருவாக்குவதை தடுத்துள்ளது. மற்றைய புறத்தில், அது விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் தடைசெய்து வருவதூடாக, தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கையும் தொடர்ந்து விட்டே வருகிறது. தமிழீழம் அமைக்கும் கொள்கையுடன் செயற்படுபவர்களை மேற்கு நாடுகள் அனுமதித்தேயுள்ளன என வாதிடுவது புத்திக்கொவ்வாதது. அவை சில தமிழ் அமைப்புக்களை ஓரளவுக்குச் செயற்பட விடுவதூடாகத் தமது குறிக்கோளை முழுமையாக அடையப்பெறவே காத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதிலிருந்து உலகின் எந்தவொரு தனி நாடும், சமூக அமைப்புக்களும் தப்பித்துக்கொள்வது மிகமிகக் கடினம். இதுதான் உண்மை. இதை ஏற்பது அடிமைத்தனம் எனவும், காலில் வீழ்வது எனவும் வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது. இந்தநிலயில், இப்படியான சூழ்நிலைகளில், சர்வதேசம் ஓரளவுக்கு ஏற்கும் விதத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை இன்றைய நிலையில் பெறுவதிலும், தமக்கு முன்னேற்றமான, பாதுகாப்பாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், அதற்குத் தமிழர்களும், அவர்களின் அரசியற் கட்சிகளும் எப்படிச் செயற்படுவது புத்திசாதுரியமானது என்பதும்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய கேள்வி. இங்குதான் வட மாகாண சபைத் தேர்தலானது எப்படித் தமிழர்களால் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட முடியும், அது அவர்களது குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரத்திற்குப் பயன்படுத்தப்படமுடியும், அது எவ்வளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தமுடியும் என்பவைகளை ஆராய்தே தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் தலைவர்களும் செயற்படவேண்டியுள்ளது. இந்தநிலையில், நிராகரிப்புக்களைச் செய்பவர்கள் சாத்தியமான சிறந்த, நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் முன்வைக்கவும்வேண்டும், அவை பற்றி வாதிக்கவும் வேண்டும். இதை தமிழ்ப் புத்திசீவிகள் எவ்வளவுக்குச் செய்துள்ளனர்? இந்தக் கட்டுரையை எழுதியவர் எவ்வளவுககுச் செய்துள்ளார்? இந்தக் கட்டுரை தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளவர்கள் இதை எவ்வளவுக்குச் செய்துள்ளனர்? இதைவிட முக்கியமானது, ஈற்றில் தமிழ் மக்கள்தான் இறுதி முடிவை எடுத்து, வாக்களிப்பதூடாகவும், வாக்களிக்காது விடுவதூடாகவும் எடுக்கவுள்ளனர். இந்தநிலையில், தமிழர்கள் எதிர்நோக்கும் உள்ளுர்ப் பிரச்சினைகளையும், சர்வதேசமூடாக எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அப்படியான சூழ்நிலையில் தமிழர்கள் செய்யக் கூடியவைகளையும் வாக்களிக்கவுள்ள தமிழ் மக்களுக்கே முதலில் விளக்கி, வாதாடவேண்டியுள்ளது. இது எவ்வளவு தூரத்திற்குச் செய்யப்பட்டுள்ளது? ஒட்டுமொத்தத்தில், இங்கு எழுதப்படுபவைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் தம்முள் ஒருவித வாதங்களைச் செய்து இன்புறுவதாகவே உள்ளது!