ஜப்பானிய பேரரசின் அதிகாரத்தின் கீழிருந்த கொரியா, இரண்டாம் உலக யுத்ததின் பின்னர், இரண்டாகப் பிழவுற்றது. வட கொரியா சோவியத் ஏகபோக ஆதிக்கத்தின் கீழும், வட கொரிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடாகவும் இரண்டாகத் துண்டாடப்பட்டது. சோவியத் அதிகாரத்தின் கீழ் செயற்பட்ட வட கொரியாவில் தென் கொரியாவிலிருந்து வேறுபட்ட அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜோசெப் ஸ்டலினின் இறுதிக் காலத்திலும் மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசக் கட்டமைப்புக்கள் அழிய ஆரம்பிதிருந்தன. புரட்சியை ஏற்றுமதி செய்வது என்ற தலையங்கத்தில் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. எது எவ்வாறாயினும் வட கொரியாவில் ஒப்பீட்டளவில் மக்கள் நேரடியாகப் பங்கேற்ற தேர்தல் முறையும், அரசமைப்பும் தோன்றியது. அமெரிக்க ஆதரவு தென்கொரிய ஆட்சி மேற்கொண்ட எல்லைத் தாக்குதல்களாலும் இரு தரப்பு மோதல்களாலும் 10000 இராணுவத்தினர் மாண்டு போயினர்.
இந்த நிலையில் 1950 ஆம் ஆண்டு, வட கொரிய மக்கள் இராணுவம் எல்லை கடந்து தென் கொரியாவிற்குள் நுளைந்தது. அதே ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க இராணுவம் வட கொரியா மீது போர் தொடுத்தது. 1953 ஆம் ஆண்டு வரை நீடித்த அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுதத்தில் அமெரிக்காவின் குண்டுத் தாக்குதல்களால் அந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அழிக்கப்பட்டனர். வட கொரிய மக்கள் இராணுவத்துடன் இணைந்து மக்கள் தற்காப்பு யுத்ததில் ஈடுபட்டனர். இன்றைய வட கொரியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும் அமெரிக்கத் தாக்குதல்களால் ஒரு மனிதனாவது உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றார்.
78 நகரங்கள் அமெரிக்கத் தாக்குதல்களால் தரை மட்டமாக்கப்பட்டன. அமெரிக்க அரச துறைச் செயலாளராகவிருந்த டீன் ரஸ்க் இன் கூற்றுப்படி, அசைகின்ற அனைத்தின் மீதும், உயர்ந்து நின்ற அனைத்தின் மீதும் குண்டுகள் போட்டோம் என்கிறார்.
ஒரு நாட்டின் மக்கள் தொகையின் முன்றில் ஒரு பகுதியைக் கொன்றொழித்துவிட்டு உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று அமெரிக்கா மார்தட்டிக்கொள்கிறது. இன்று மீண்டும் தனது போர் வெறியை உலகத்தின் மற்றைய மூலைக்கு நகர்த்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளின் இறுதி முழுவதும் வட கொரியா தொடர்பான கோரமான விம்பம் ஒன்றைக் கட்டமைப்பதற்கு மேற்கு ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சி இன்று அமெரிக்கா மனிதாபிமானப் போருக்குத் தயாராகிவிட்டதாக மக்களின் ஒரு பகுதியை நம்பவைத்துள்ளது.
மீண்டும் நிகழ்த்தப்படக்கூடிய அமெரிக்கத் தாக்குதல்களிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள வட கொரியா அணுவாயுதங்களை வைத்திருப்பது அவசிமானதே என அந்த நாட்டின் மக்களை வட கொரிய அரசு நம்ப வைத்துள்ளது. தமது சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை இழந்த ஒரு மக்கள் கூட்டம் வட கொரிய அரசை இலகுவில் நம்பிவிடுகிறது. மற்றொரு புறத்தில் வட கொரிய அரசு அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான நியாயத்தை அமெரிக்காவே ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இங்கு அடிப்படையான உண்மை.
அணுவாயுதங்களை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் வட கொரிய அரசைக் குறிவைக்கும் “மனிதாபிமானிகள்”, “தன்னார்வ நிறுவனங்கள்” எல்லாம், தொடர்ச்சியான அமெரிக்காவிம் ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் அது மக்கள் மீது ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தையும் குறித்து மூச்சுவிடுவதில்லை.
அவ்வாறான உளவியலே வட கொரியாவில் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான மக்கள் ஆதரவை வட கொரிய அரசு பெற்றுக்கொள்வதற்கான காரணம் என்பதையும் அவர்கள் பேசுவதில்லை.
மக்களிடமிருந்து தரவுகள் முழுமையாக மறைக்கப்பட்டு, மேற்கு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் சார்ந்த கருத்தியலையே செய்திகளாகத் தரும் ஊடங்கள் அவலத்தில் வாழும் வட கொரிய மக்களை மீட்பதற்கே யுத்தம் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள்ன.
அங்கு தரமான கல்வி வழங்கப்படுவதில்லை என்றும்,
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் குழந்தைகள் மரணிக்கின்றனர் என்றும் மருத்துவ வசதிகள் அருகிப் போய் நோயின் கொடுமையால் மக்கள் அவலத்துள் வாழ்வதாகவும் ஊடகங்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. சில வரிகளில் எழுதப்படும் செய்திகளும் பிரேக்கிங் நீயூஸ் வகையறாக்களும் உருவமைக்கும் விம்பம் மற்றொரு போருக்கு உலகத் தயார்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு பச்சைக்கொடி காட்டுகின்றன.
வட கொரியா மருத்துவ அமைப்பு அங்குள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்குப் போதுமானது இல்லை என்று வெளியிட்ட அறிக்கையை ஊடகங்கள் ‘துயரத்துடன்’ வெளியிட்டன.
மரணித்துப்போனவர்களின் காணொளிகளுடன் வடக் கொரியாவின் மக்கள் அனுபவிக்கும் துன்பம் தொடர்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டன. மருத்துவர்களின் பற்றாக்குறையால் மக்கள் வாழ்விழந்து போய்விட்டதாகப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட்ன.
கடந்த ஏப்பிரல் மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் மார்கிரெட் சென் வடகொரியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகள் பொறாமைப்படக்கூடிய அளவிற்கு வட கொரியாவில் இலவச மருத்துவம் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதாக ஒப்புக்கொண்ட்டார். தவிர, அங்கு மருத்துவர்களின் பற்றாக்குறை அறவே இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்.
தனியார் மயப்படுத்தப்பட்ட மருத்துவ வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஆயிர்க்கணாகனவர்கள் அவலத்துள் வாழும் அமெரிக்காவின் ஒருக்குமுறைக் கருத்தியலின் நம்பிக்கையான காவிகளான மேற்கு ஊடகங்களின் மார்கிரெட் சென்னின் கூற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
உலகத் தரத்தில் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படுவதாக அமெரிக்க சார்பு யுனெஸ்கோ ஒப்புக்கொண்டுள்ளது.
564,708 வீடற்றவர்களாத் தெரு மூலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் வாழ் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அமெரிக்கா, அனைத்து மக்களும் அனைத்து வசதிகளிம் கொண்டவர்களாக வாழும் வட கொரியாவைக் காப்பாற்றி மக்களை விடுவிக்கப்போவதாகக் கூறுவது கேலிக்குரியது.
வட கொரியா அமெரிக்கப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றும் அந்த நாட்டிற்கு எதிரான யுத்த நடவடிக்கை ஊடாக அது எதிர்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியதும், அமெரிக்காவின் இராணூவத் தளங்களில் ஒன்றான குவாம் தீவின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என வட கொரியா அறிவித்துள்ளது.
உலகின் மிக ஆபத்தான இராணுவ விளையாட்டு ஒன்றை , சீனா மற்றும் ரசியா சூழப் பாதுகாப்பு வலையத்துள் அமைந்துள்ள வடகொரியா மீது அமெரிக்க ஜனாதிபதி ஆரம்பிக்க முனைகிறார். 1950 ஆம் ஆண்டு வட கொரிய யுத்தத்தில் யுத்த அனுபவம்மிக்க மக் ஆர்தர் தலைமையில் தோற்றுப்போன அமெரிக்கா, மீண்டும் உலகை யுத்ததிற்குத் தயார்செய்கிறது என்பது மட்டும் வெளிப்படையானது.
1945. Kim Il Sung forms the Korean Workers Party. United Nations is Organised in San Francisco with 50 members. Pan Mun Jam. One Korea soon. One China soon.