இலங்கையில் சிறுபான்மை தேசிய இனனங்களின் தேசிய எல்லைகளைச் அழிக்க முற்படுகின்ற ஒவ்வொரு தடவைகளும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. தமிழ்ப் பேசும் மக்களின் 30 வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். மகிந்த ராஜபக்ச அரசு தொடர்ச்சியாக நடத்தும் இனச்சுத்திகரிப்பும் வட – கிழக்கை அழிகின்றது. அமரிக்கா சென்று திரும்பிய தமிழர் “தாயகத்தின்” ஆரம்ப மனிதனான சம்பந்தன் இப்போது 180 பாகையில் திரும்பி அப்படி நாங்கள் கூறியதில்லை என்கிறார்.
தொடர்புடைய பதிவுகள்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்









தமிழனுக்கு தமிழனாலே அழிவு என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேறொன்றுமில்லை. இங்கே தலைவன் அழிவை தீபாவளியாக கொண்டாடி கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் ஒன்றுமே இல்லை.
தமிழ் தேசியம்” புதிய நாடகம் “தொடங்கி விட்டது.இதுவரை பேசிய மண் ,தேசம் ,மண்ணாய் போய் விட்டது.
“வட,கிழக்கு நமக்கு சொந்தம் என்று கூறவில்லை” அருமையிலும் அருமை.அப்போ அமெரிக்காவுக்கா சொந்தம் ?
சம்பந்தனுக்கு அமெரிக்கஅம்மையார் நல்ல” ஞானப்பால் ” தான் ஊட்டியிருக்கிறார்.இனிமேல் தான் புலி ஆய்வாளர்கள் மயிர் பிளக்கும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.தங்களை அழித்தவர்களிடமே[அமெரிக்காவிடம் ] நியாயம் வழங்குங்கள் என்பது உலகில் எங்கும் காண முடியாத பக்தி.சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர்கள் அல்லவா .
தான் என்ன சொன்னாலும் திருமலை மக்கள் அடுத்த தடவையும் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை.
அதுசரி யோகன், புலி ஆய்வாளர்கள் மயிரைப் பிளப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?..
இனிவரும்[?] ரணிலின் மந்திரிசபையில் ,அத்தானுக்கு ஒரு மந்திரி பதவி நிற்சயம்.