வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப் போவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியமும் கருத்தினை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வடக்கில் தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்படுவதாக கூறும் நீங்கள்,மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை,மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு தேவை கருதி பெறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களுக்கு மட்டும் பிரச்சினையிருக்கின்றது,முஸ்லிம்கள் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை அவர்கள் வெளிமாவட்ட மக்கள் என்று பார்க்கும் நிலை களையப்பட வேண்டும்.இவ்விடயம் குறித்து தங்களுடன் திறந்த மனதுடன்,வடக்கில் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் பேசுவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன்,வடக்கில் தமிழ் முஸ்லிம் உறவை பாதுகாப்பதற்கு தங்களை போன்ற மனித நேயம் கொண்ட அரசியல் தலைர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்ற எமது அன்பான வேண்டுகோளை இந்த கடிதத்தின் மூலம் தங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேட்டுள்ளார்









That is indeed very appropriate. He gets the name as he is from Maviddapuram in the Kankesanthurai Electoral District. The other guys may not be rough with him anymore on the side of the Islands.