தேர்தல் என்ற ஜனநாயகம் மக்களின் தெரிவைக் குறுகியதாக்கி மக்களை சிறிய எல்லைக்குள் முடக்கும் அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம். தேர்தலில் பதவிக்காக மோதிக் கொள்கின்ற கட்சிகளின் நலன்கள் அடிப்படையில் ஒன்றானதாகவே அமையும். 1977 ஆம் ஆண்டில் இலங்கையின் வட-கிழக்கில் வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று ஆங்கிலத்திலும் தமிழர் விடுதலை கூட்டணி என்று தமிழிலும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கட்சி தமது பாராளுமன்ற வாழ்வுக் காலம் முடிவதற்கு முன்பாகவே மக்களிலிருந்து அன்னியமானார்கள். தமிழீழம் என்ற சுலோகத்தோடு மக்கள் முன் வந்த இக் கட்சி மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டுப்போனார்கள்.
இலங்கை அரச ஒடுக்குமுறையாளர்களுக்கும் இக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கும் இணக்கமான உறவு பேணப்பட்டுவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை அரச பாசிசச் சட்டங்களுக்கு இணங்கி வடக்கில் பதவிக்காகப் போட்டி போடுகின்றது.
இன்று அரச படைகள் வடக்கின் பல பாகங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் இவ்வாறான தாக்குதல்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலம் அதிகரிக்கும் எனத் தெரிந்துகொண்டே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கை பாசிச அரசின் துணைக்குழுக்களான ஈ.பி.டி.பி உட்பட யாருக்கும் வாக்களிக்க மக்களைக் கோருவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்
வடக்கில் விக்னேஸ்வரனிலிருந்து மீண்டும் தொடங்கும் தேசியம் என்ற அரசியல் திருவிளையாடல் விதேசிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இடையில் மக்களுக்கு தெரிவி இல்லை என்ற நிலையில் புதிய அரசியல் தலைமை உருவாகும் அத்தனை வழிகளும் இறுக மூடப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அதற்கு எதிரானவர்களையும் அரசுகளே கையாளும் அவலநிலையும் மக்களைப் பார்வையாளர்களாக வைத்திருக்கும் கோரமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதன் பின்னணியில் நிலப்பறிப்பும் இனச் சுத்திகரிப்பும், இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களை துவம்சம் செய்யும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
பச்சையான வியாபார ஊடகங்களும், தன்னார்வ நிதி வழங்கலில் இயங்கும் உடகங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களும் இதன் பின்புலத்தில் செயற்பட்டுவருகின்றன. இன்னுமொரு மாபெரும் மாபெரும் அழிவிற்கு அத்திவாரம்ப்படுகின்றது. இலங்கை இந்திய மற்றும் மேற்கின் ஏகபோக அரசுகள் ஒரணியில் செயற்படுகின்றன.
வடக்கில் கூட்டமைப்பு வென்றாலும் சிறப்பு அதிகாரங்கள் கிடைக்காது…!!! – மிரட்டுகிறார்… சம்பந்தியும்… சமபந்தி சம்பந்தியும்… மிரட்டுகிறார்…
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும், காணி, காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஆளும்கட்சி இலகுவாக வெற்றிபெறும்.
ஆனால் வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து நிச்சயமாக எதுவும் கூறமுடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சுயநிர்ணய உரிமையை கோரியிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
இருப்பினும் அனைத்துலக அழுத்தம் காரணமாக அவர்கள் சுயாட்சியை நோக்கி தமது செயற்பாடுகளை நகர்த்த முயற்சித்தால், அது சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு முரணானதாக அமையும்.
ஏனைய மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்குவதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஏனைய மாகாண சபைகளுக்கு வழங்கப்படாத உரிமைகள் எதுவும் வடக்கிற்கும் வழங்கப்படமாட்டாது.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சிறிலங்கா அதிபரோ, நாடாளுமன்றமோ அனுமதிக்காத எதனையும் இந்த நாட்டிற்குள் நடைமுறைப்படுத்த முடியாது.
சிறிலங்கா அதிபரும் நாடாளுமன்றம் தான், வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து தீர்மானிக்க செய்ய முடியும்.
அரசியலமைப்பே நாட்டின் மிக உயர்ந்த சட்டம். அதனை யாராலும் எதிர்க்க முடியாது.
வடக்கில், இராணுவத் தலையீடு அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் கடந்த ஆறு மாதங்களில் இராணுவத்தினர் 95 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.puthinappalakai.com/view.php?20130919109081
தேர்தலில், தமிழ் மக்கள் நிலைப்பாடு குறித்து…
எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகாரத்தின் கீழ் அதிகாரப் பலம், பண பலம், ஜனநாயக விரோத வழிமுறைகளைக் கொண்டே இத்தேர்தலை அரசாங்கம் நடத்துகின்றது. அதேவேளை அபிவிருத்தி, சலுகைகள், பண நன்கொடைகள் என்பவற்றை தாராளமாக வழங்கி ஆளும் தரப்பு வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுக்கொள்ள முன்னின்று வருகின்றனர். இத்தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெறுவதன் ஊடாக மக்கள் தமக்கு ஆணையும் அங்கீகாரமும் வழங்கியுள்ளதாகக் காட்டி இப்போது மக்கள் மீது சுமத்தி வரும் கடுமையான பொருளாதார சுமைகளையும் தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கே முன்னிற்கிறது.
அதேவேளை எதிர்தரப்பு கட்சிகள் உழைக்கும் மக்களும் தேசிய இனங்களும் எதிர்நோக்கும் இன வர்க்க ஒடுக்குமறைகளுக்கு எதிரான எவ்வித கொள்கை வேலைத்திட்டங்களும் இன்றி இத் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. வெறுமனே மாகாண சபைகளில் பதவிகள் பெறுவது அல்லது ஆளும் தரப்பாக்கி கொள்வது எனும் குறுகிய இலக்குகளுடனேயே தேர்தல்களில் பங்குகொள்ளுகின்றனர். மேலும் பேரினவாத ஓடுக்குமறைக்கு எதிரான பட்டறிவுடனான சமகால யதார்த்தத்திற்கு பொருந்தக் கூடிய புதிய கொள்கை வேளைத்திட்டங்கள் எதுவுமின்றி தொடர்ந்தும் பழைமைவாத ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டுடனேயே தமிழ்த் தரப்புக் கட்சிகள் இணைந்து நின்று போட்டியிடுகின்றன. இது தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தி சரியான வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரட்டுவதை திசைதிருப்பி வெறும் வாக்குப் போடுபவர்களாக மட்டும் வைத்திருக்கும் பழைய நிலையை புதுப்பித்துக்கொள்வதாகவே உள்ளது. இத்தகைய சூழலில் மேற்படி தேர்தல்களில் பங்கு கொள்வது அர்த்தமற்றதும் பயன் தரக்கூடியதும் அல்ல என்பதால் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி தேர்தல்களில் பங்கு கொள்ளவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டது.
இப்போது தேர்தல் பிரசாரங்கள் வேகமடைந்துள்ள சூழலில் எமது கட்சிக்கு கடந்த கால தேர்தல்களில் ஆதரவு தெரிவித்து பிரசாரப் பணிகளில் ஈடுபட்டவர்களும் வாக்களித்த மக்களும் வாக்களிப்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொள்வது எனக் கட்சியிடம் கேட்டு நிற்கின்றனர். எனவே வாக்களிக்க விரும்புவோர் எக்காரணம் கொண்டும் பேரினவாத ஒடுக்குமுறையினை முன்னெடுத்து வரும் அரசாங்க தரப்பிற்கும் ஏனைய பெரும் முதலாளிய பேரின வாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்களுக்கும் வாக்களிக்கக் கூடாது.
எனவே பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி நிலைப்பாட்டிற்கும் உழைக்கும் மக்கள் சார்பாகவும் இருக்கக்கூடியவர்களை அடையாளம் காணுமிடத்து அத்தகையோருக்கு வாக்களிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.
மத்திய குழு
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி
ஊடகங்களுக்கான அறிக்கை
05.09.2013
http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/231-2013/2090-2013-09-06-06-59-45
பிழைக்கத் தெரிந்தவர்கள்… இரெண்டும் கெட்டான் நிலையில்… இவர்கள் தான் மதில் மேல் பூனைகளா…??? பிழைக்கத் தெரிந்தவர்கள்… – அலெக்ஸ்
அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (?) ஒபாமாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்காதான் இப்போது தமிழர்களை காப்பாற்றவும் வேண்டுமாம்.
Tamil NationalAlliance Sweeps Northern Provincial Poll With a Five-Sixth Majority! Out of 38 Seats,TNA -30; UPFA-07; SLMC-01
– By D.B.S.Jeyaraj
The Tamil NationalAlliance (TNA)has triumphed magnificiently atthe historic first election tothe Northern Province of Sri Lanka!
The TNA has demonstrated once again that it isthe premier political configuration ofthe Sri Lankan Tamils by winning a five-sixth majority .
THIRTY
The TNA contesting underthe house symbol ofthe Ilankai Thamil Arasu Katchi(ITAK)has got thirty ofthe thirty-eight seats allocated tothe Northern Provincial council. Twenty-eight ofthese are elected while two are bonus seats.The rulingUnited PeoplesFreedom Alliance(UPFA) contesting onthe betel symbol got seven seats.The remaining one seat went tothe Sri Lanka Muslim Congress(SLMC)contesting under its tree symbol.
JAFFNA
The TNA contesting underthe ITAK symbol of house gained213,907 (84.37%)ofthe votes polled in Jaffna district and won 14 ofthe 16 seats allocated to Jaffna administrative district.It won 37,079(81.57%)in Kilinochchi administrative district and got 3 ofthe 4 seatsthere. Thusthe TNA contesting as ITAK got 16 ofthe elected 20 seats entitled tothe Jaffna Electoral district comprising Jaffna and Kilinochchi districts. This entitledthe TNA tothe bonus seat for that electoral district.
WANNI
The TNA polled 28,266(78.56%) of votes in Mullaitheevu district which entitled it to 4 of 5 seats allocated to that district. In Vavuniyathe TNA polled 41,225 votes(66.1%) thus getting 4 ofthe 6 seats entitled bythe district. Mannar sawthe TNA fielding candidates underthe house symbol getting 33,118 votes(62.22%). This enabled it to get 3 ofthe 5 seats allocated tothe Mannar district.
Togetherthe Mannar, Mullaitheevu and Vavuniya districts comprisethe Wanni electoral district.The TNA has got 11 ofthe 16 seats allocated tothe Wanni electoral district. This has enabledthe TNA to receivethe extra bonus seat forthe Wanni district.
BONUS
Thusthe Tamil NationalAlliance contesting underthe house symbol ofthe Ilankai Thamil Arasu Katchi has polled 353,595 valid votes altogether inthe Northern Provincial poll and obtained 30 including 2 bonus seats ofthe 38 seats inthe Council. District wisethe TNA break down is Jaffna-14;Kilinochchi-03;Mullaitheevu -03;Vavuniya-04.
UPFA
The ruling UPFA has polled 82,838 valid votes inthe Northern Provincial poll and got 7 seats. In Jaffna it polled 35,995 (14.2%)and got 2 seats. In Kilinochchithe UPFA polled 7,897(17.37%) and got one seat.The UPFA polled 16,233(26.67%)and got 2 seats. Mullaitheevu sawthe UPFA getting one seat with 7.209 (20.04%)votes. In Mannar districtthe UPFA polled 15,104 (28.38%)and got one seat.
SLMC
The Sri Lanka Muslim Congress(SLMC) though a constituent ofthe UPFA government contested separately inthe Wanni electoral district ofthe Northern province.The SLMC got 199 votes in Mullaitheevu and 1991 votes in Vavuniya.However in Mannarthe Muslim Congress polled 4,571 votes(8.59%)and gained its solitary seat inthe Northern provincial council.
UNP
The chief oppositionUnited National Party suffered a humiliating defeat inthe Northern poll. Although it contested all five districts inthe North it failed miserably.The UNP votes district –wise break-down was 197-Mullaitheevu;54-Kilinochchi;1769-Vavuniya;187-Mannar and 855-Jaffna.
KAYTS
The impressive feature ofthe Tamil NationalAlliance victory is that it romped homethe winner in all 14 electoral divisions ofthe Northern Province.The most remarkable achievement ofthe TNA in Jaffna was that it obtainedthe majority of votes inthe Kayts electoral division long regarded asthe stronghold ofthe Eelam Peoples Democratic Party(EPDP)the chief constituent ofthe UPFA in Jaffna district. In Kaytsthe TNA got 8917 which was more than doublethe UPFA(EPDP)tally of 4164 votes.
VICTORY
The victory recorded bythe Tamil Nationalalliance was not unexpected.It was apparent even beforethe polls were announced thatthe TNA would win hands down.The only unknown factors werethe amount of votes to be polled andthe preference votes garnered by candidates.
Onthe way to cast his vote in Jaffna~ pic: by Dushiyanthini Kanagasabapathipillai-via: twitter/DushiYanthini
RESILIENCE
The TNA during its election campaign sought a two-thirds majority fromthe electorate.The people ofthe North have demonstratedtheir resilience and tenacity by providing an avalanche of votes that has entitledthe TNA to a five-sixth majority inthe historic first ever Northern Provincial council.
COOPERATIVE
The Northern people have spoken resoundingly.The onus now is onthe TNA to shed its provocative campaign rhetoric and get down to work seriously.The long suffering Tamil people have faced tremendous odds and courageously voted forthe TNA.The TNA should be mindful of its responsibility and work forthe betterment and welfare ofthe people.For thisthe TNA must discardthe politics of confrontation and adoptthe cooperative approach.The newly elected Northern Provincial councilmust work in partnership with whichever Government in power forthe benefit ofthe province and its people
PROGRESSIVE
Likewise President Mahinda Rajapaksa and his cabinet must take cognizance ofthe fact thatthe Northerner does not vote for development alone but also for a variety of other reasons. Chief amongthem isthe hitherto unresolved Tamil National question.The UPFA govt instead of placing obstacles must establish rapport withthe TNA dominated Northern provincial council and work together for a progressive future forthe North in particular and Sri Lanka in general.
DBS Jeyaraj can be reached at ~ dbsjeyaraj@yahoo.com