இராணுவ தேவைகளின் பின்னர் கலைக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு மற்றும் அதன் எல்லை பிரதேசங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் பிரிவுகளை நிரந்தரமான முகாம்களாகவும் பிரிவுகளாகவும் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக 2010 மார்ச் 1ம் திகதி 1643-4 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைத் தலைமையகம், படைப் பிரிவு, படையணி, ரெஜிமென்ட், உதவிப் படைப் பிரிவு உள்ளிட்ட இராணுவப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்த காலத்தில் தற்காலிகமாக
ஏற்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியும், இராணுவத்தின் நிரந்தரப் பிரிவாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பன பாதுகாப்புப் படைத் தலைமையகமாவும், வெலிஓயா, ஹம்பாந்தோட்டை, யால ஆகிய போன்றவை பிரதேச தலைமையகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஏனைய செயற்பாட்டு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர யுத்தத்தின்போது ஆரம்பிக்கப்பட்ட ஐந்து படைப் பிரிவுகள், 28 படையணிகள், ரெஜிமென்ட் மற்றும் 49 படையணிகள், 12 உதவிப் படைப் பிரிவுகள் என்பன நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக மாற்றப்படும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. இதுமட்டுமல்ல மன்னாரில இருக்கிற கடட்படைக்காரர் தங்கடை குடும்பத்தோட இருக்க ஆயிரம் வீடு கட்ட போகினம்.
பூனகிரி, முல்லைதிஈவு, கிளிநொச்சி மாவட்டதிலையும் இதுதான் நிலைமை. அதோட அவையின்ரை குடும்பங்களை குடியமத்திறது, பிறகு அவைக்கு வேண்டிய பள்ளிக்கூடங்கள், கும்பிட விகாரை எண்டு வரும். ஏற்க்கனவே மணலாறு வெளிஒயாவாகிவிட்டது. இப்படியே தமிழர் வெளிய இருக்க வேண்டியதுதான். இந்த இலக்கசநிநில நிக்கிற யாராவது இதை பற்றி கதைக்கினமோ? யாழ்பாணத்தில ஒருத்தர் இணக்க அரசியல் எண்டு, இப்ப வன்னியில இருக்கிறவர் தான் இந்த மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தை பாக்க வேண்டும்அவர் என்னெண்டால் புரிந்துணர்வு அரசியல் செய்யப் போறாராம். பழைய காந்தியம் எல்லை கிராமங்களை காப்பாத்தி குடியேற்றங்களை செய்ததது. இவை அதை சொல்லி பிழைப்பு, இப்ப சிங்களவனை குடியேற்ற அரசுக்கு புரிந்துணர்வு\. அரசியல் கதைசதுக்காக அந்த மணியன்னையை போட்டவை தானே. நல்ல காலம் டாக்டர் ராஜசுந்தரமும் இருந்தால் அவரையும் போட்டிருப்பினம். இவைக்கும் புளிக்கும் என்ன வித்தியாசம்? புலியும் அரசியல் கதைக்கிரவய தானே போட்டது.
கிழக்கில சொல்லவே வேண்டாம். “வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார், உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால், தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் நாம் மீண்டும் தவறிழைத்துவிடக் கூடாது.” எண்டு மற்ற பிழைப்பு தேடுறவர். அவருக்கு இந்த ஜனாதிபதியை விட்டா வேறை என்ன வழி. தனிய நின்டாறேண்டா இவர் மற்றவைக்கு செய்த மாதிரி என்ன ஒரு கார் விபத்து எண்டு செய்தி வரும். இவ்வளவும் கதைக்கிறவர் தமிழ் பிரதிநிதித்துவம் சொல்றவர் அந்த தமிழருக்கு முன்னால போய் தனக்கு வாக்கு கேட்டு வரட்டும், இந்த வக்கில ஒரு பேட்டி அதை பிரச்சாரம் செய்ய தளங்கள்.
பாருங்கோ வடக்கு கிழக்கில அபிவிருத்தி எண்ட பெயரிலையும், வீதிகள் புனரமைப்பு, வீடுகள் கட்டுறது எண்ட பெயரிலியும் என்ன நடக்க போகிதேண்டு. இதக்கு வெளிநாட்டில இருக்கிற தமிழன் தன்னும் ஒண்டு சேந்து ஏதாகிலும் செய்ய வேண்டும்.