இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அரசிற்கு ஆதரவாக வடமாகாண தேர்தலில் போட்டிபோடப் போகிறேன் என்று தயா மாஸ்டர் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் தன்னைப் போட்டியிடக் கேட்டதாகவும் தான் அக்கட்சியோடு இணைந்து போட்டிபோட மாட்டேன் என்ற்ம் புலிகளின் முன்னை நாள் முக்கி உறுப்பினரான தயா மாஸ்டர் தெரிவித்த்துள்ளார்.
மக்களின் அவலத்தை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் நூற்றுக்கணக்கான தமிழர்களில் தயா மாஸ்டர் என்ற முன்னை நாள் புலி உறுப்பினரும் ஒருவர்.
வடக்கில் தேர்த்தல் நடக்கும் போது வாக்குகளைச் சிதறடிப்பதற்கு பல அடையாளக் குழுக்களை இலங்கை அரசு அங்கு திட்டமிட்டு உட்செலுத்தியுள்ளது.