தொல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும், அனுராதபுரம், பொலன்நறுவை, சீகிரிய ஆகிய பிரதேசங்களில் அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டாவது, வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யாது போனால், வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த அடையாளம் அழிந்து போவதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆய்வு செய்யப்படாத ஆயிரக்கணக்கான புராதன அடையாளங்கள் வடக்கு, கிழக்கில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்.கில் மனிதர்களும் வாழ்கிறார்கள்
பௌத்தம் சிங்களவருக்கு மட்டுமே உரித்தான மதமாக இலங்கையில் இன்று பேணப்படுகிறது. நாயன்மார்கள் தோன்றிய காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தமதம்.