சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர். அதனால் அந்த இணைப்பு சட்டவிரோதமானதாக இருந்தது.
இணைப்பை அவர்கள் உண்மையில் விரும்பி இருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி அதனைச் செய்திருக்க முடியும். எந்த ஒரு ஜனாதிபதியும் அப்படிச் செய்யாமல் விட்டதுதான் நீதிமன்றத்தின் முன் இந்த விவகாரம் வந்தபோது பிரச்சினைக்குரியதாக அது மாறியது.
அதனால்தான் சட்டப்படி அதனைப் பிரிக்க வேண்டியிருந்தது. இது அரசியல்வாதிகள் விட்ட தவறு. அவர்கள் இப்போது நினைத்தாலும் சட்டத்தை இயற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியும்.இவ்வாறு முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.