வடகிழக்கிலே எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும்உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியகூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து, கூட்டமைப்பின் வேட்பாளர்களை பெருவெற்றி பெறச்செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் முன்னணியின் தலைமைக்குழு நேற்றிரவு கூடி எடுத்துள்ளமுடிவை அறிவித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 23ம் திகதி வடகிழக்கிலேநடைபெறவுள்ள தேர்தல்களிலே தமிழ் மக்கள் வழங்கிடப்போகும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்ததாகும். இதற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, அப்பாவி தமிழ் மக்களின் பாரியஉயிர் இழப்பு தொடர்பான போர் குற்றச்சாட்டுகளை சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும்,சுதந்திர ஊடகங்களும் ஆதாரப்பூர்வமாக முன்வைத்திருப்பதன் காரணமாக உலகின் கவனம் கணிசமானஅளவில் இலங்கையின்பால் இன்று திரும்பியிருக்கின்றது.
இரண்டாவது, புலிகளின் ஆயுதப்போராட்டத்தின்தோல்வியை தமிழ் மக்களின் அறுபதாண்டுகால தேசிய போராட்டத்தின் தோல்வியாகவே மாற்றிமுழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம்திட்டமிட்டு இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு அடிப்படை காரணங்களையும் மனதி;ல்கொண்டு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாகஆதாரப்பூர்வமாக பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வடகிழக்கில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய அனைத்து உடன்பிறப்புக்களையும் நோக்கி ஜனநாயக மக்கள் முன்னணியின்தலைமைக்குழு விடுக்கின்றது.
ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும்,அபிவிருத்தி என்ற மாயமானை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உதாரணங்கள் எமதுவரலாற்றிலே இருக்கின்றன. இதையேதான் இன்றைய அரசாங்கமும் அழுத்தந்திருத்தமாகசெய்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் வாழ்வு வளமாக வேண்டுமென்றால், கொடும்யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் மறைய வேண்டுமென்றால், தமிழ் மக்களின் பாரம்பரியகிராமங்களின் கட்டமைப்புகள் வளர்ச்சி காணவேண்டுமென்றால், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கரங்களில் அபிவிருத்திக்கான அதிகாரங்களை இந்தஅரசாங்கம் ஒப்படைக்க வேண்டும். அதைவிடுத்து கொழும்பில் இருந்தப்படி தமிழ் மக்களின்அரசியல், சமூக, பொருளாதார, கலாசார வாழ்வின் அனைத்து அம்சங்களையும்தீர்மானிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அதற்காக தங்களது தமிழ்முகவர்களையும் அனுப்பி வைத்திருக்கின்றது. இதுவே இந்த தேர்தல்களில் போட்டியிடும்பெரும்பான்மை கட்சிகளின் நோக்கமாகும். இத்தகைய பேரினவாத சிந்தனைக்கு தமிழ் மக்கள்உரிய பதிலை 23ம் திகதி வழங்க வேண்டும்.
He need not say that…