Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லைக்கா, லெபாரா, சங்கதி, ஈழமுரசு

இனியொரு... by இனியொரு...
04/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
61
Home இன்றைய செய்திகள்

eelamurasuலைக்கா, லெபாரா ஆகிய இரண்டும் புலம் பெயர் நாடுகளில் பல்தேசிய போட்டி நிறுவவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்களதும் வர்த்தகத்தின் மையம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை நோக்கியதாகவே இதுவரை காணப்படுகின்றது. புலிகளின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமாக கூறிக்கொள்ளும் சங்கதி24 இல் லைக்கா குழுமம் தயாரிக்கும் கத்தி படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், கத்தி திரைப்படத்தில் நடிப்பதால் விஜயும் துரோகி என்றும் செய்திக் குறிப்பொன்று எழுதப்படிருந்தது.

இலாபவெறியை நோக்கமாகக் கொண்டியங்கும் லைக்கா நிறுவனத்தின் ராஜபக்ச குடும்பத்துடனான உறவு இனியொரு உட்படப் பல ஊடகங்களால் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதனல் கத்தி திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்பது நியாயமான கோரிக்கைதான். இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களில் இலாப வெறி என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படித்துவதும் ஊடகங்களின் கடைமை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.

ஆனல் அதற்கான நோக்கம் சமூகம் சார்ந்ததாக அமைந்திருக்கவேண்டுமே தவிர பணம் சுருட்டும் குறுகிய நோக்கங்களுக்கு உட்படதாக அமையக்கூடாது. லைக்காவைத் திட்டும் சங்கதி இணையத்தின் செய்தியின் கீழே அதன் போட்டி நிறுவனமான லெபாராவின் விளம்பரம் தொங்கிக்கொண்ட்ருக்கிறது. தவிர, சங்கதியின் ‘சகோதர’ அச்சு ஊடகமான ஈழமுரசில் லெபாராவின் ஒரு பக்க விளம்பரம் துருத்திக்கொண்டு தெரிகிறது.

20 யூரோக்களுக்கு லெபாரா தொலைபேசி நிமிடங்களை வாங்கினால் 1 யூரோவை அகதிகளுக்குக் கொடுக்கிறோம் என்று மக்களின் அவலத்தில் உணர்ச்சி வியாபாரம் நடத்தும் அருவருப்பு லெபாராவின் வியாபாரத்தில் காணலாம்.

லைக்காவை அகற்றுவதற்கு லெபாராவிடம் விளபரம் தேடும் மூன்றாம் தர வியாபார உக்திக்கு தேசியம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தேசியத்திற்கு எதிரான அன்னிய மூலதனத்தின் முகவர்களே இப் பல்தேசிய நிறுவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்கள் போன்ற நூற்றுக்கணக்கான பல்தேசிய நிறுவனங்களுக்கும் அதன் தரகர்களுக்கும் தமது இலாப வெறியே பிரதானமானது.

இவர்களைப் பொறுத்தவரைக்கும் ஏனைய பல்தேசிய வியாபாரிகளும் அவற்றின் தரகர்களுமே நண்பர்கள். மக்கள் வெறுமனே வியாபாரப் பண்டங்கள் தான். இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையிலும் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் புலி அழிப்பு என்றும் மக்களின் நிலங்களைப் பறித்தெடுக்கும் பெரு நிறுவனங்களில் பிரதானமானது செல்வநாதன் குடும்பத்தினரால் நடத்தப்படும் கார்சன் நிறுவனம். கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ்ப் பல்தேசிய வியாபாரிகளும் தரகர்களும் இனப்படுகொலையைப் பற்றித் துயர்கொண்டதில்லை.

இனப்படுகொலையும் இன உணர்வும் அவர்களுக்குப் பணம் திரட்ட உதவுமானால் அவர்கள் இனவாதிகள் ஆகிக்கொள்வார்கள். ஆனல் எப்போதும் பல்தேசிய நிறுவனங்களையும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் மக்கள் சார்ந்த அரசியலுக்கு எதிரானவர்கள்.

தமிழ் இனவாதிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் என்று கூறிக்கொண்டு தமிழ்ப் பல்தேசிய வியாபாரிகளோடு பிழைப்பு நடத்த வசதியை ஏற்படுத்திக்கொள்வார்கள். இதுவே சங்கதியும் ஈழ முரசும் லெபாராவின் விளம்பரப் பணத்திற்காக லைக்காவைத் திட்டும் இரகசியம்.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றும் வியாபாரிகளிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது : ஜெயலலிதாவிற்கு நீதிபதி கண்டனம்

Comments 61

  1. kumar2 says:
    12 years ago

    தமிழ் முகவர் முதலாளித்துவம் : this force killed the tamils arm wing….

    will kill anything to make any deal with anyone… it will kill தமிழ் தேசிய முதலாளித்துவம் as well.

    LYCA is the first and big and . there are so many things going on…. PAAVAM …தமிழ் தேசியம்……………………………………………………………………………………………………………………………

    தமிழ் தேசிய முதலாளித்துவம் will support/fight against thisதமிழ் முகவர் முதலாளித்துவம் / and

    தமிழ் தேசிய முதலாளித்துவம் is to தமிழ் தேசியம்

  2. sara says:
    12 years ago

    ஈழமுரசு பலநாடுகளிலிருந்து வெளிவருகிறது செய்திகள் போடும்போது எந்தநாட்டு ஈழமுரசு என்று பிரசுரித்தால் நல்லம். குறிப்பாக பாரிஸ்இஅவுஸ்ரேலியாவிலிருந்து வெளிவருபவை எனவே கவனத்தில் எடுக்கவும்.

  3. Mannan says:
    12 years ago

    தமிழ்தேசிய வியாபார ஊடகங்கள் சொல்லிவந்த துரோகிகளில்
    கருணா,பிள்ளையான்,டக்ளஸ் மூவரும் அடங்குவர். 

    இதன் பின்னர் போர் முடிந்த பின் இராஜ்பக்சவும் இலங்கை அரசும் இராணுவமும் தமிழர்களை அழித்தார்கள் என்றார்கள்.

    அதுமட்டுமல்ல சர்வதேசநாடுகளின் (முதலாளித்துவ) துணையுடனேயே போரட்டத்தினையும் புலிகளையும் அழித்தார்கள் என்றார்கள்.

    உலகெங்கும் பரந்து வாழும் இலங்கைத்தமிழர்களின்  பூரண
    ஒத்துழைப்புடன் ந்டத்தப்பட்ட புலிகளின் போராட்டத்தை
    கருணா,பிள்ளையான்,டக்ளஸ்  மூவரால் அழிக்க முடிந்ததென்றாலும் தமிழர்கள்  யாவருக்கும்  வெட்கம்.

    இறுதி நேரப்போரின் போது தமிழர்களின்  இரத்தமும்,சதையும்
    உயிர்கழும் வன்னிமண்ணில் மண்ணோடு மண்ணாகும் போது
    புலம்பெய்ர் தமிழர்ளால்   புலம்பெயர் தமிழர்களிற்காக
    உருவாக்கப்பட்டு, சர்வதேச நிறுவனங்களாகவும், சர்வதேச
    தொழிலதிபர்களாகவும் அரசுகழுடன் தொடர்புடையவ்ர்களாகவும்
    உலாவி வரும்  இலங்கைத்தமிழர்  என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

    இலங்கை இந்திய உணவுப்பொருட்கள், தமிழ்திரைப்படங்கள்,
    தொலைபேசிஅட்டைகள்  இந்த மூன்றுமே போராட்ட காலத்தில்
    கடந்த 30 வருடங்களிற்கு  மேலாக  புலம்பெயர் முதலாளித்துவத்தின்  மூலவேர்கள்.

    இலங்கைத்தமிழர்-புலம்பெயர்தமிழர்-தமிழ்முதலாளிததுவம்
    இந்த மூன்றும் தொப்புள்கொடி உறவுபோன்றவை.
    இவற்ரில் ஒன்றை ஒன்று பிரித்துப்பார்பதும், வேறுபடுத்துவதும்
    இலங்கைத்தமிழினம்  தன்னைத்தானே அழிப்பதற்கு ஒப்பானது.-மன்னன்

  4. lala says:
    12 years ago

    மேற்குறிப்பிட்ட  கட்டுரையில்  புலம்பெயர் தமிழ்  முதலாளித்துவத்தை முழு மூச்சாக  எதிர்த்து  வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை  முற்றாக  ஏற்றுக்கொள்ள  முடியாது .

    தமிழ்  தேசியத்தின் தமிழ் தேசியத்திற்கு  ஆதாராமாகவும் , பக்கபலமாகவும் த்ம்ழ் தேசியமே  எதிர்காலத்தில் இருக்குமென  நன் குணர்ந்து அதனை  சிதைக்கும் வகையிலும் , தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கும் அதன் பெயரைம்கெடுக்கும் வகையிலும் நன் கு  திட்டமிட்டு இந்த  கட்டுரை  வரையப்பட்டிருக்கிறது.

    இந்த  கட்டுரை  மட்டுமல்ல  இனி ஒருவில்  மேற்படிநி றுவனங்களை  குறி  வைத்து  உள்நோக்கோடு  பல கட்டுரைகள்  வெளி வந்திருக்கின்றன .

    புலம்பெயர் தமிழர்க் ளிடையே    இலங்கையில்  தயராகும் பல  பொரு ட் கள்  இலங்கை  அரசநிறுவங்களாலும் , சிங்கள முதலாளிகளாலும்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .

    அது பற்றி   இனி ஒரு  ஏன்  வாயைத்திறப்பதில்லை ?

    அத்தைகைய பொரு  ட் களை   புலம்பெயர்  தமிழ்கர்கள்  பகிஷ்கரிக்க  வேண்டுமென   பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டபோது  இனி ஒரு கள்ள மவுனம்  சாதித்ததேன் ?

    தமிழர்நிறுவனங்கள்  ,  தமிழ் முதலாளித்துவத்தை  மட்டும்  குறி  வைப்பதேன் ?

    • Mannan says:
      12 years ago

      முதலாளித்துவம் என்னும் போது அங்கு நிற இன,மொழி,சாதி,
      வேறுபாடு கிடையாது. இதற்கு இந்தக்கட்டுரையே  சான்றுகூறுகின்றது. 

      தமிழர்களிற்கு தங்களை தாங்கள் ஆழும் உருமை கிடைக்காவிடினும், தமிழர்களின் அழிவினால் லாபம் பெற்ரோரையும், பெறவிரும்புவோரையும்  அடையாளம் காண்பது முதற்கடமையல்லவா.

      வசிக்கும் வீட்டினுள்ளே இருக்கும் திருடனை அறியாது
      ஊர்முழுவதும் திருடனைத்தேடுவதும் பொலிஸில் முறையிடுவதும்   முட்டாள்தன்மான செயலாகும்.

      சிங்களவர்களை பகைவராக்கி
      தமிழ் அரசியல்வாதிகள் லாபம் காணலாமேதவிர  தமிழ்
      மக்களல்ல. வடக்கின் விளைபொருட்களை  தெற்கிலும்  விற்கவேண்டுமே
      தவிர  இனவாதம் பேசி மக்கள் வறுமையில் வாடுவது
      முட்டாள்தனம்.

      அதிகார வர்க்கம் முதலாளிவர்க்கத்தைக் காப்பதும், முதாளிவர்க்கம் அதிகாரவ்ர்க்கத்தைக் காப்பதும் அவரவர் சுயநலம் கருதியேயன்றி மக்களிற்காகவல்ல. இங்குள்ள கேள்வியானது இலங்கைத்தமிழர்களை யார் எவ்வாறு பயன்படுத்தி ஏமாற்ரி வாழ்கின்றார்களென்பதேயாகும்.

      இதற்கான் விடையைக் காணாது இனியொருவை குற்ரம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்கமுடியாது.-மன்னன்

      • lala says:
        12 years ago

        ##வசிக்கும் வீட்டினுள்ளே இருக்கும் திருடனை அறியாது
        ஊர்முழுவதும் திருடனைத்தேடுவதும் பொலிஸில் முறையிடுவதும்   முட்டாள்தன்மான செயலாகும்##

        இனி ஒரு குறி வைத்து  தாக்கி வரும் மேற்படிநிறுவனங்கள்  உலகளாவிய வகையில்  பல்வேறுநாட்டு  மக்களிடமும்  வியாபாரம்  செய்து வருகிறது . 

        அதனது  வியாபார  வீச்செல்லை  புலம்பெயர்  தமிழ்  மக்கக்ளுக்குள்  சுருங்கி  காணப்படவில்லை..
        இலங்கையில் உள்ள  அல்லலுறும்  தமிழ் மக்களுக்கு  எந்த  வகையிலாவது  யாராவது  உதவி  செய்தால்,நாம்  செய்யாது  விட்டாலும்  பரவாயில்லை , அதனை கெடுக்காகவாவது   இருக்க வேண்டும்..

        இவ்வாறு  திட்டுபவர்கள்  தாம்  செய்கிறார்களா  என்றால்  அதுவுமில்லை .
        செய்பவர்களையும்  முதலாளித்துவம் ,நிறம் , இனம் மதம் என்று ஏதேதோ கூறி தமது  வர்க்க  அரசியல்  சப்பை  கட்டு   கட்டுகிறார்கள் .

        ##முதலாளித்துவம் என்னும் போது அங்கு நிற இன,மொழி,சாதி,
        வேறுபாடு கிடையாது. இதற்கு இந்தக்கட்டுரையே  சான்றுகூறுகின்றது. ##

        அதைத்தான் நானும் கூறுகிறேன் . முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துகிறீர்கள்  சரி , அதில்  ஏன் இன , மொழி ,மத  பேதம் பார்க்கிறீர்கள் ? என்றுதான்  கேட்டிருந்தேன் .
        அதற்கு  பதிலில்லை ..

        • mannan says:
          12 years ago

          உலகினில்  பயஙரவாதமென்பது  பணத்துடன் சம்பந்தப்பட்ட
          விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழரின்
          உருமைக்கான போராட்டத்தையும்  சர்வதேசம் பயங்கரவாதமாக்
          பிரகடனப்படுத்தியது,  கையில் ஆயுதமேந்தி  உயிர்நீத்த
          மாவீரர்களால்ல.   புலம்பெயர்  நாடுகளில்  இலங்கைத்தமிழரின்
          பெயரால்  பணத்துடன்   சம்பந்தப்பட்டவர்களாலேயே..

          உலகில் முதலாளித்துவமே காக்கப்படுகின்றது. ஏழைகள்
          புறக்கணிக்கப்படுகின்றார்கள். 

  5. Sajai Thiruparan says:
    12 years ago

    புலிகளில்  இணைந்து  போராடிய போராளிகளில்  பெரும்பாலனவர்கள்  நேர்மையானவர்கள்.   அவர்கள்   புலம்பெயர்  சருகுப் புலிகளை  ஏற்றுக்கொள்வதில்லை.   அவர்கள்  புலிகள்  விட்ட  தவறுகளை  ஒப்புக்கொண்டு   இனியும்   போராட்டம்    -நடத்த வேணும்  என்று  நினைக்கிறார்கள்,  இனியொரு  பொன்ரவர்கள்  எழுதிக்கொண்டு  இராமல்  அரசியல்  னடவடிக்கைகளில்  ஈடுபட வேண்டும்.

    • lala says:
      12 years ago

      ##விடுதலைப் புலிகளையும் தமிழரின்
      உருமைக்கான போராட்டத்தையும்  சர்வதேசம் பயங்கரவாதமாக்
      பிரகடனப்படுத்தியது,  கையில் ஆயுதமேந்தி  உயிர்நீத்த
      மாவீரர்களால்ல.   புலம்பெயர்  நாடுகளில்  இலங்கைத்தமிழரின்
      பெயரால்  பணத்துடன்   சம்பந்தப்பட்டவர்களாலேயே##

      இரண்டையும்  பிரித்து பார்க்க  முடியாது .வெளிநாடுகளில்  புலிகளின் முதலீடு அந்த  முதலீடுகளிலிருந்து  பெற்ற நிதி என்பன 30 வருட புலிகளின் போராட்டத்தில்  முக்கிய  பங்கினை வகித்திருந்தது  மட்டுமல்லாது  , யுத்த  களத்தில் பல  வெற்றிகளையும்  குவிப்பதற்கு  வழி வகுத்திருந்ததென்பது போராட்டத்தை பற்றிய  குறைந்த பட்ச  அறிவுள்ளவர்களும் ஒப்புக்கொள்வார்கள் .

       நான் சொல்வது அதுவல்ல . இந்த  கட்டுரையும்  அதைப்பற்றி அலசவில்லை.

      இந்த கட்டுரை  தமிழ் முதாலாளித்துவத்தை  குறி  வைத்து  தாக்கியிருக்கிறது. அதுவும் சமீப  நாட்  களாக  லைகா , லிபராவை  குறி  வைத்திருக்கிறது .

      இதற்குநிச்சயம்  உள்னோக்கம்   இருக்க வேண்டும் .

      தாங்கள்  சொல்வது போல்  எந்த  முதலாளித்துவமாக  இருந்தாலும் அத்ற்கு இனம் மொழி , மதம் கிடையாது தான் .

      ஆனால் இங்கு முதளாலித்துவத்தை  அம்பலப்படுத்துவதாக கூறுபவர்கள் இன மத மொழி பேதம் பார்த்து விமர்சிக்கிறார்கள் ?
      அது எப்படியென்பதை எனது  முன்னைய பின்னூட்டங்களிலேயே  தங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன் .

      ஆனால் அதற்கு பதில் தராமல் வேறு ஏதேதோ  சொல்கிறீர்கள் .

  6. mannan says:
    12 years ago

    //இரண்டையும்  பிரித்து பார்க்க  முடியாது .வெளிநாடுகளில்  புலிகளின் முதலீடு அந்த  முதலீடுகளிலிருந்து  பெற்ற நிதி என்பன 30 வருட புலிகளின் போராட்டத்தில்  முக்கிய  பங்கினை வகித்திருந்தது  மட்டுமல்லாது  , யுத்த  களத்தில் பல  வெற்றிகளையும்  குவிப்பதற்கு  வழி வகுத்திருந்ததென்பது போராட்டத்தை பற்றிய  குறைந்த பட்ச  அறிவுள்ளவர்களும் ஒப்புக்கொள்வார்கள்//

    புலிகளின் அதிகாரம் இலங்கையில் அழிக்கப்பட்டவுடன்  இலங்கை
    அரசுடன் உடனடியாக  தொடர்பு கொண்டு  போய்வந்தவ்ர்கள் புலிகளிற்கு
    நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு அழித்தவ்ர்கள்தான்.

    இலங்கை அரசாங்கம் கைகொடுத்து வரவேற்பதும்  பணத்தோடு
    போகும் புலம்பெயர் தமிழரைத்தான்.. இது ஊரறிந்த உண்மை
    இவ்வாறு இலங்கைக்கு போய்நீண்டகால்ம்  தங்கி வந்தவர்கள்  புலம்பெயர்
    நாடுகளில்  வேலையில்லாதவ்ர்கள்தான்.

    வேலையில்லாமலிருந்தும், அழவுக்கதிகமான பணமும்,  தமிழர்களை  அழிப்பவ்ர்கள் என்று  குற்ரம்சாட்டபட்ட  இலங்கை அரசுடன்  வர்த்தக்த்தொடர்பும்  கொண்டுள்ள  பலநூறு   தமிழர்கள் உண்டு.

    இவ்வாறனவர்களை   சாதரண  தமிழரென்பதா? அல்லது  தமிழீழவிடுதலைபுலிகள் என்பதா?அல்ல்து   தமிழ் முதலாளித்துவம் என்பதா?  இவர்களை எவ்வாறு  அழைப்பது.-மன்னன்.

  7. lala says:
    12 years ago

    நீங்கள் இங்கு தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கும் , இந்த கட்டுரையில் அலசப்பட்ட லைகா , லிபரா , முதளாளித்துவத்திற்கும் , அது சம்ப்ந்த்தமாக நான் கொடுத்த பின்னூட்டங்களுக்கு ம் , யாதொரு சம்பந்தமும் இல்லை.

    நீங்கள் உங்களுக்கு தோன்றியதை கருத்தாக தெரிவித்து வருகிறீர்கள் .

    ஒரு வேளை சொல்வதற்கு பதில் இல்லாததால் விடயத்தை திசை திருப்பி வருகிறீர்களோ என சந்தெகமாக இருக்கிறது.

    இனி ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரானதென்றால் இன மத , மொழி பேத
    மற்று எல்லா முதலாளித்துவதையுமல்லவா எதிர்க்க வேண்டும் ?

    ஆனால் அப்படியல்லவே , இனி ஒரு தமிழ் முதலாளித்துவத்தை மட்டுமே , இன்னும் சொல்லப்போனால் லைக்க , லிபாரவை மட்டும் குறி வைத்து எதிர்த்து வருகிறது .

    தாங்கள் சொன்னீர்கள் , முதலாளித்துவத்திற்கு இன . மத மொழி பேதமெல்லாம் கிடையாதென்று.

    சரி , ஆனால் முதாலாளித்துவத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்களுக்கு அந்த இன மொழி , மத பேதமெல்லாம் எருக்க்கிறது போலிருக்கிறது .

    புலம்பெயர் தமிழ்கர்களிடையே வியாபாரம் செய்யும் ச சிங்களநிறுவனங்கள் , மற்றும் இலங்கை அரசநிறுவனக்களை ப்பற்றி மூச்சு விடாதவர்கள் , தமிழ் நிறுவனங்கள் , தமிழ் முதலாளிகளைப்பற்றி மட்டு ம் திட்டி தீர்ப்பதன் மர்மம் என்ன என்றுதான் கேட்டிருந்தேன் .
    இன்று வரை பதில் இல்லை .

    நீங்கள் கூட இது வரை , புலம்பெயர் தமிழ் . தமிழ் முதலாளி , புலி , புலிகளி பணம் , என்று குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஒட்டி வருகிறீர்கள் . இந்த கட்டுரை குறித்த எனது கேள்விகளுக்கு பதில் இன்றுவரை இல்லை.

    • Bela says:
      12 years ago

      உங்கள் அப்பட்ட மான  பொய்களை இனொயொரு ஏன்  அனுமதிக்கிறது  என்று  தெரியவில்லை.  கருத்துச் சுதந்திரம் என்பது பொறுக்கிகளின் பொய்கள் அல்ல. இது வரைக்கும் இனியொரு நூற்றுக்கணக்கான உலக முதலாளிகளில் இருந்து இலங்கை முதலாளிகள் வரை பல செய்திகளையும் கட்டுரைகளையும் கொடுத்திருக்கிறது. வெலிவேரியப் படுகொலைகளின் பின்னால் இருந்த நிறுவனங்களை சிங்கள ஆங்கில ஊடகங்கள் அம்பலப்படுத்தாத அளவுக்கு உள் விவகாரங்களை இனியொரு மட்டுமே எழுதியது. தமிழ் மக்களின் போராட்டத்தைத் தரகு முதலாளிகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் புரோக்கரா நீங்கள்? நீங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பொய்களை எழுதி வாசகர்களித் திசை திருப்புகிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் மகிந்தவின் படைகள் ஒரு போத்தல் கள்ளுகே விலைக்கு வாங்கலாம். முதலில் நேர்மையாக இருங்கள். பிறகு கருத்தைச் சொல்லுங்கள்.
      உங்கள் பொறுக்கித் தனத்திற்குக் களம் கொடுப்பது இனியொருவின் தவறு. அரசியல் தெரியாமலிருப்பது தவறு அல்ல. ஆனால் அதனைத் தெரிந்த மாதிரி பொய்களை அப்படமாகக் கூறுவதுதான் பொறுக்கித்தனம். முதலாளிகளில் தரகு முதலாளிகள், தேசிய முதலாளிகள் என்ற இரண்டு வகையில் தரகு முதளாளிகள் அன்னிய மூலதனத்தின் முகவர்கள். இன்றைக்கு இனியொருவில் வந்திருக்கும் ராஜபக்ச ஏகாதிபத்திய அடியாள் என்ற செய்தி அதற்கு உதாரணம். லைக்கா இன்னுமொரு உதாரணம். நூற்றுக்கணக்காக இனியொருவில் வந்துள்ள தரகு முதளாளிகள் தொடர்பான கட்டுரைகள் அதற்கு உதாரணம்.

      • lala says:
        12 years ago

        வர்க்கம் , தரகு அரசியல் என பேசி வருவதால் உலக அளவில் முதலாளித்துவம் பற்றி இனி ஒரு பேசி வருகிறதுதான் . அதனால் யாருக்கு ம்நனமையுமில்லை , தீமையுமில்லை.

        இலங்கையை பொறுத்தவரை அங்கு தமிழர்களும் , சிங்களவர்களும் இணைந்து முதலாளித்துவ , போலி முதலாளித்துவ அரசுகளை அகற்றி வர்க்க புரட்சியை மேற்கொள்ள வேண்டுமென இடது சாரிகளின் பழைய புளித்துப்போன பல்லவியைத்தான் இனி ஒரு தாளம் சுதி மாறாமல் பாடி வருகிறது.
        எனவே வெலிவேரிய சம்பவங்களிற்கு பின்னாலுள்ளவர்களைப்பற்றி காட்டமாக கட்டுரை வரைந்திருக்கலாம் .

        நான் சொல்வது அதை அல்ல.

        புலம் பேயர் தமிழர்களிடையே தமிழ் முதலாளிகள் மட்டும் வியாபாரம் , தொழில் செய்யவில்லை . இலங்கையிலிருந்து சிங்கள முதலாளிகளின்நிறுவனங்களும் , இலங்கை அரசநிறுவனங்களும் தமது பொருட் களை சேவைகளை வழங்கி இலாபம் சம்பாதித்து வருகிறது .

        தமிழ் முதலாளித்துவத்திற்கெதிராக வாய் கிழிய பேசும் இனி ஒரு புலம்பெயர் தமிழ் மக்களிடையே வியாபாரம் செய்து வரும் சிங்கள முதலாளித்துவத்தையோ , இலங்கை அரசநிறுவனக்கள் சுரண்டுவதைப்பற்றியோ வாய் திறப்பதில்லை.
        இலங்கை பொருட் களை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்தபோது கள்ள மவுனம் சாதித்தது .

        அதனைத்தான் முதலாளித்துவத்திற்கு சாதி , மொழி , இன , மத பேதம் கிடையாதென்ற போதிலும் அந்த முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களிடம் இன , மொழி பேதம் இருப்பதாக குறிப்பிட்டேன்.

        கருத்து சுதந்திரத்தை பற்றி உங்களைப்போன்றவர்களிடம் ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும்போலிருக்கிறது.

        புலிகள் இருக்கும்போது கருத்து சுதந்திரத்துக்காக , மாற்று கருத்துக்காக ஒப்பாரி வைத்தீர்கள் .
        புலிகள் இல்லாதபோது , கருத்து சுதந்திரத்தை தவறாக பயபடுத்துபவர்கள் இருக்கிறார்கள் , ஆகவே கருத்து சுதந்திரத்தை தடை செய்யுங்கள் என்பது..
        இதைத்தான் கருத்து பாஸிஸம் என்பது.
        இது வர்க்கம் , புரட்சி , தரகு , என்று பேசுபவர்களிடம் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியமானது.

        • Bela says:
          12 years ago

          //வர்க்கம் , தரகு அரசியல் என பேசி வருவதால் உலக அளவில் முதலாளித்துவம் பற்றி இனி ஒரு பேசி வருகிறதுதான் . அதனால் யாருக்கு ம்நனமையுமில்லை , தீமையுமில்லை.
          இலங்கையை பொறுத்தவரை அங்கு தமிழர்களும் , சிங்களவர்களும் இணைந்து முதலாளித்துவ , போலி முதலாளித்துவ அரசுகளை அகற்றி வர்க்க புரட்சியை மேற்கொள்ள வேண்டுமென இடது சாரிகளின் பழைய புளித்துப்போன பல்லவியைத்தான் இனி ஒரு தாளம் சுதி மாறாமல் பாடி வருகிறது.
          எனவே வெலிவேரிய சம்பவங்களிற்கு பின்னாலுள்ளவர்களைப்பற்றி காட்டமாக கட்டுரை வரைந்திருக்கலாம் .
          நான் சொல்வது அதை அல்ல.//
          நீங்கள் இப்படி எழுதிய போது முன்னர் ஒருவர் பதில் சொல்லியிருந்தார். நீங்கள் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறீர்கள். அவரது பதில் இதுதான்: இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே ஆக, தேசிய விடுதலைப் போராட்டமே முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை இனியொருவில் ஒவொரு கட்டுரைகளிலும் காணலாம். உங்களுக்கு நேரடியாகப் பதில் சொன்ன பிறகும் நீங்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி எழுதுவது பொறுக்கித்தனம். உங்கள் போன்றவர்கள் மக்கள் சாகும் போது பிணத்தை வைத்து பணம் பார்ப்பார்கள், இந்த ஒரு உதாரணமே போதும் உங்களது நோக்கம் விடுதலைக்கான வழியைத் தேடுவதல்ல. அதனை நோக்கி முன்வரும் கொஞ்சப் பேரையும் அழிப்பது என்பதே.
          //புலம் பேயர் தமிழர்களிடையே தமிழ் முதலாளிகள் மட்டும் வியாபாரம் , தொழில் செய்யவில்லை . இலங்கையிலிருந்து சிங்கள முதலாளிகளின்நிறுவனங்களும் , இலங்கை அரசநிறுவனங்களும் தமது பொருட் களை சேவைகளை வழங்கி இலாபம் சம்பாதித்து வருகிறது .
          தமிழ் முதலாளித்துவத்திற்கெதிராக வாய் கிழிய பேசும் இனி ஒரு புலம்பெயர் தமிழ் மக்களிடையே வியாபாரம் செய்து வரும் சிங்கள முதலாளித்துவத்தையோ , இலங்கை அரசநிறுவனக்கள் சுரண்டுவதைப்பற்றியோ வாய் திறப்பதில்லை.
          இலங்கை பொருட் களை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்தபோது கள்ள மவுனம் சாதித்தது .//
          தேசியம் என்பது முதலாளித்துவமே. அது சில ஜனநாயக விழுமியங்களையும் கொண்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் பல வியாபாரிகள் இருக்கிறார்கள், அவர்கள் கூட லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். சிறிய கடை வைத்திருப்பவர்கள் பல்தேசிய அங்காடிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் வறியவர்களாக மாறும் உதாரணங்களைப் பாருங்கள். ஆக, ராஜபக்சவும் லைக்காவும் பல்தேசிய முதலாளிகளும் அவற்றின் தரகர்களும். ஆகவே அவரகள் எதிரிகள். தேசியப் பொருளதாரத்தை அழிக்கும் இவர்கள் தேசியத்தின் எதிரிகள். அதற்கு தமிழ் சிங்களம் என்ற வேறுபாடு கிடையாது. ஆக, தமிழர்களது போராட்டம் தரகு முதலாளிகளின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான கருத்தியல் போராட்டத்தை இனியொரு மட்டுமே நடத்துகிறது.
          //கருத்து சுதந்திரத்தை பற்றி உங்களைப்போன்றவர்களிடம் ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும்போலிருக்கிறது.
          புலிகள் இருக்கும்போது கருத்து சுதந்திரத்துக்காக , மாற்று கருத்துக்காக ஒப்பாரி வைத்தீர்கள் .
          புலிகள் இல்லாதபோது , கருத்து சுதந்திரத்தை தவறாக பயபடுத்துபவர்கள் இருக்கிறார்கள் , ஆகவே கருத்து சுதந்திரத்தை தடை செய்யுங்கள் என்பது..//
          கருதுச் சுதந்திரம் என்பது அப்பட்டமான பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதல்ல, ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல இன்னும் சில நாட்களில் அதே பொய்யை திரும்பச் சொல்லுவீர்கள். அதற்கு கருத்துச் சுதந்திரம் என்று சொல்லுவீர்கள். நீங்கள் உண்மையாகவே சமூகத்தை நேசிப்பவரானால் ஒன்றைச் செய்யுங்கள். தேசியம், வர்க்கம், மக்கள், சமூகம் போன்றவற்றை நேர்மையாக இதய சுத்தியோடு அறிந்துகொள்ள முற்படுங்கள். இரண்டாவதாக உங்கள் கருத்தை நியாயப்படுத்த பொய் சொல்லிவிட்டு அதனைப் பிரசுரிக்க கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று பீற்றிக்கொள்ளாதீர்கள்.

  8. mannan says:
    12 years ago

    // கேள்விகளுக்கு பதில் இன்றுவரை இல்லை.//

    லைக்காவும்,லெபராவும் மட்டும் தமிழ் முதலாளித்துவமல்ல..
    ஆனால் இவை மலைபோல் வள்ர்ந்துள்ள தமிழ்நிறுவனங்கள் 
    இலங்கை அரசினையோ இந்திய அரசினையோ  தமிழரின்  அர்சியல்
    நலன்களிற்ககாக எதிர்த்துநிற்க முடியும்.

    லைக்கா இலங்கை அரசுடனும், லெபரா இந்திய அரசுடனும்   இலங்கைத்
    தமிழர்  நலன்களிற்காக குரல் கொடுக்கவில்லை.. பதிலாக அரசுகளின் செல்லப்பிள்ளையாக  விளங்குகின்றனர்.

    முதலாளித்துவம் என்பது  மக்களையும் மக்களால்   தெரிவு செய்யப்பட்ட
    அரசினையும்  ஆட்டிப்படைக்க வல்லமை உள்ளவை. இவர்களால்  புலம்பெயர்  நாடுகளில் குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்  அர்சியல்
    தாக்கத்தினை ஏற்படுத்தமுடியாமலிருக்கலாம்.

    இவர்களின் செயல்கள் இவர்கள் இலங்கைத்தமிழினத்தைச் சேர்ந்தவ்ர்கள்
    என்பதைக் காட்டுகின்ற்னவா இவர்களை தமிழ்ரென்றும்  தமிழ்முதலாளிதுவமென்றும் ஏற்றுக்கொள்வதற்கு.-மன்னன்

    • Kumar says:
      12 years ago

      சாியான கருத்து மன்னன்,நம் எல்லோருடய வேதனையும் அதுதான், இவா்கள் ஏன் தமிழ் தேசியப்போராட்டத்திற்கு ஆதரவாக இல்லாமல்- அல்லது விலகிக்கூட இருக்கலாம் -அதன் எதிாிகளுடன் கைகோா்த்து நிற்கவேண்டும் என்பதே நமது வேதனை. இவா்கள் விரும்பினால் எத்தகய அழுத்தங்களை பயன்படுத்தலாம் என்பதை யாவரும் அறிவா்.

    • lala says:
      12 years ago

      தமிழ்நிறுவனமென்றல்ல , எந்தநிறுவனமாக இருந்தாலும் வளரும்நிலையில் , ஏன் வளர்ந்த பிற்பாடும் கூட அரசுகளை எதிர்த்துநின்றால் அழிந்து விடும் .

      இது உங்களுக்கும் நன் கு தெரியும் . இது கூட தெரியாத பித்துக்குளியாக இருப்பீர்கள் எனநான்நினைக்கவில்லை.

      பின் ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?
      அதுதான் உங்கள் மனதில் இருக்கும் ஆசை . தமிழர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது. தமிழ் முதலாளித்துவம் , முதலாளிகள் , பெரும்நிறுவனங்கள் இருந்துவிடக்கூடாதென்பது தமிழின எதிரிகளுக்கு மட்டுமல்ல , தமிழர்களாக இருக்கும் அந்த எதிரிகளின் அடி வருடிகளுக்கும் அதுதான் ஆசை..

      • mannan says:
        12 years ago

        //தமிழ்நிறுவனமென்றல்ல , எந்தநிறுவனமாக இருந்தாலும் வளரும்நிலையில் , ஏன் வளர்ந்த பிற்பாடும் கூட அரசுகளை எதிர்த்துநின்றால் அழிந்து விடும்// .

        அப்போ  மானமுள்ள தமிழரென்பது  ஆயுதமேந்தியழிந்தவ்ர்கழும்,அனியாயமாக  உயிர் கொடுத்த தமிழரும்
        போராட்டத்திற்கு  நிதியுதவி கொடுத்தவ்ர்கழும் மட்டும்தானா?
        வியாபாரிகள்  தாங்கள்  நினைத்தபடி சுயநலனிற்கா  யாரின் காலில்
        விழுந்து வணங்கினால்  ஏற்பீர்களா?

        தமிழர்சியல்வாதியோ,தனிமனிதனோ  தமிழரின்  நலன் கருதி
        இந்திய அரசுடனோ இலங்கை அர்சுடனோ பேசினால்  துரோகியெனெ
        இவ்வளவு காலமும் எதற்காக கூறிவந்தீர்கள்.-மன்னன்

        • lala says:
          12 years ago

          ##அப்போ மானமுள்ள தமிழரென்பது ஆயுதமேந்தியழிந்தவ்ர்கழும்,அனியாயமாக உயிர் கொடுத்த தமிழரும்
          போராட்டத்திற்கு நிதியுதவி கொடுத்தவ்ர்கழும் மட்டும்தானா?##

          மானமுள்ள தமிழர்களைப்பற்றி நானும் பேசவில்லை ,நீங்களும் இது வரையில் பேசவில்லை .

          எப்படியோ சம்ப்ந்தமில்லாமல் வேறு ஒரு தலைப்பிற்கு தாவி விட்டீர்கள்

        • lala says:
          12 years ago

          ##வியாபாரிகள் தாங்கள் நினைத்தபடி சுயநலனிற்கா யாரின் காலில்
          விழுந்து வணங்கினால் ஏற்பீர்களா?##
          பெரு முதலாளிகள் , பன்னாட்டு கம்பனி முதலாளிகள் அரசுகளின் கால்ல்ளில் விழுவதில்லை.

          மாறாக அரசுகளுடன் டீல் வைத்து ப்பேசி தமது காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் .
          அது தனிப்பட்ட வியாபார நலன் களாகவும் இருக்கலாம் , தமது இனத்தின்நலன் களாகவும் இருக்கலாம் .
          அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம் .

          யூத முதலாளிகள் தாம் வாழும் , வியாபாரம் செய்யும் நாடுகளை கட்டுப்படுத்தி தமது இன நலன் களை பேணிக்கொள்வதை உதாரணமாக கொள்ளலாம்.

          • mannan says:
            12 years ago

            //யூத முதலாளிகள் தாம் வாழும் , வியாபாரம் செய்யும் நாடுகளை கட்டுப்படுத்தி தமது இன நலன் களை பேணிக்கொள்வதை உதாரணமாக கொள்ளலாம்.//

            ஜேர்மனியில்  யூதரின் வர்த்தக ஆதிகம் கிட்லரிற்கும்,  நாசிகளிற்கும்  ஜேர்மன் மக்களிடையே  ஆதரவைத்தேடிக்கொடுத்தது. இதேபோல்
            தென்னிலங்கையில்   தமிழரின்   வர்த்தகமும்,  அரசசேவைகளில்
            பெரும்பான்மையாக் இருந்த்தும்  சிங்கள் இனவாத சக்திகளிற்கு
            வளர இடம்  கொடுத்த்து.   இந்த  இரண்டு விடயங்களால்   அழிந்த்து
            ஏழைகளாக இருந்த யூதர்க்ழும்    இலங்கையில்   தமிழர்கழும்தான்.

            இதே  நிலமை சரியானதாகப் படுகின்றதா?-மன்னன்

    • lala says:
      12 years ago

      ##லைக்கா இலங்கை அரசுடனும், லெபரா இந்திய அரசுடனும் இலங்கைத்
      தமிழர் நலன்களிற்காக குரல் கொடுக்கவில்லை.. பதிலாக அரசுகளின் செல்லப்பிள்ளையாக விளங்குகின்றனர்.##

      இலங்கை இந்திய அரசுகளின் செல்லப்பிள்ளைகளை விடுங்கள் .

      அந்த செல்லப்பிள்ளைகளின் அரசுகளே அவற்றின்நிறுவங்களே , புலம்பெயர் தமிழ் மக்களிடம் வியாபார்ம் செய்து சம்பாதிக்கிறதே ?

      அந்த பொருட் களை பகிஷ்கரிக்க வேண்டுமெனவும் புலம்பெயர் தமிழர்களிடையே பைரச்சரப்படுத்தப்பட்டதே ?

      அப்போதெல்லாம் வாய் மூடி இருந்தீர்களே ?
      இன்று தமிழ் நிறுவனம் ஒன்று தமிழர்களிடம் மட்டுமல்ல உலக மக்களிடம் வியாபரம் செய்து முன்னேறியுள்ளது மட்டும் பொறுக்கவில்லயா ?
      இதற்குத்தான் பதில் தராமல் சுற்றி வளைத்து எதேதோ கூறி வருகிறீர்கள்

      • mannan says:
        12 years ago

        //இன்று தமிழ் நிறுவனம் ஒன்று தமிழர்களிடம் மட்டுமல்ல உலக மக்களிடம் வியாபரம் செய்து முன்னேறியுள்ளது மட்டும் பொறுக்கவில்லயா ?
        இதற்குத்தான் பதில் தராமல் சுற்றி வளைத்து எதேதோ கூறி வருகிறீர்கள்//

        வியாபாரமும்,பணமும்,பெயரும்,அதிகாரமும்  ஒரு இனத்தின் அழிவிலும்
        பார்க்க மேம்பட்ட தென்று  கருதி வாழும் யாவரும்      அவர்கள் சார்ந்த
        இனத்தின்  துரோகிகள்தான். என்வே  தமிழரின் அழிவிற்கு காரணமாக இருந்த அரசுடன்  கூட்டு வியாபாரம் செய்பவர்களையும் போற்றுங்கள்.
        அதே  நேரம்  தமிழரிற்காக ஆயுதமேந்தி அழிந்தோரிற்காகவும்,
        அனியாயமாக உயிர்நீத்த  தமிழர்களிற்காகவும் குரல் கொடுங்கள்.

        போரிடும் இருநாடுகளிற்கு  ஆயுதவியாபாரம் செய்யும் முதலாளித்துவத்திற்கு ஒப்பானதே  உங்கள் கருத்து.-மன்னன்

        • lala says:
          12 years ago

          ##வியாபாரமும்,பணமும்,பெயரும்,அதிகாரமும் ஒரு இனத்தின் அழிவிலும்
          பார்க்க மேம்பட்ட தென்று கருதி வாழும் யாவரும் அவர்கள் சார்ந்த
          இனத்தின் துரோகிகள்தான். ##

          துரோகி பட்டமளிப்பதற்கு உங்களை மிஞஞ ஆளில்லை .

          ஒரு இனம் தன்னை அழிவிலிருந்து காப்பதற்கு நீங்கள் மேற்கூறிய அனைத்தும் தேவை .
          அது தேவையில்லை , அப்படி தேவை எனக்கூறுபவர்கள் துறொகிகள் எனக்கூறி உசுப்பேத்துபவர்கள் , அந்த இனத்தின் அழிவையே விரும்புகிறார்கள் .

  9. kumar2 says:
    12 years ago

    national capitalists:தேசிய முதலாளி;who supports domestic produce

    தரகு முதலாளித்துவமும்; :it is not a type of capitalsim but part of capitalsim of they don’t produce ,or not involved in national/ domestic products ie; no GDP

    simply brokers for multinational companies: ie simple eg:agent for COKE, or sony, or :sole rep;

    GOSL is sole rep of multinational companies and CEO of domestic produce…

    this is how I understand the term தரகு முதலாளித்துவமும். correct me

  10. kumar2 says:
    12 years ago

    “We are really owned and run by a few corporations, who can shut India down when they want,” Roy says.

    http://www.straight.com/life/616401/arundhati-roy-explains-how-corporations-run-india-and-why-they-want-narendra-modi-prime-minister:

  11. kumar2 says:
    12 years ago

    1.Let தரகு முதலாளித்துவம் making money;

    but denying rights in the name of making money is wrong..

    . 2.

    why do we still go back to binary thinking? shall we grow up..

    see the better side of communisim and or capitalism and better side for the rights/people as well.

  12. kumar2 says:
    12 years ago

    “This luxury holiday, apparently organised by a known supporter of the regime, was intended to have British politicians unsuspectingly launder the government’s abysmal record by carrying home the state’s narrative about what’s going on there,” he said.

    He was referring to the funding of the trip, including business class travel, by former cricketer Muttiah Muralitharan’s charity, Foundation of Goodness, during which the MPs were to meet with senior Sri Lankan ministers and officials and President Mahinda Rajapaksa.
    .

    http://www.tamilguardian.com/article.asp?articleid=10603

    .

    http://www.mvnodynamics.com/2012/07/11/murali-receives-cheque-from-lycamobile-on-behalf-of-british-asian-trust/

  13. lala says:
    12 years ago

    ##இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே ஆக, தேசிய விடுதலைப் போராட்டமே முன்னெடுக்கப்பட வேண்டும்.##

    அது பொத்தாம் பொதுவாக சொல்லப்படுவது . எனது கேள்விகளுக்கு மன்னன் என்பவர் பதிலளிதிருந்தார் . பின்னர் அவர் களைத்துப்போனாரோ என்னவோ பேலா என்ற பெயரை வைத்துக்கொண்டுநீங்கள் களமிறங்கியிருக்கிறீர்கள் . ஆனால்நான் கேட்ட புலம்பெயர் தமிழர்களிடையே உள்ள தமிழ் முதலாளீத்துவம் பற்றி வக்கணை சொல்பவர்கள் புலம்பெயர் தமிழ் மக்களிடையே வியாபாரம் செய்து வரும் சிங்கள முதலாளித்துவத்தையோ , இலங்கை அரசநிறுவனக்கள் சுரண்டுவதைப்பற்றியோ வாய் திறப்பதில்லை என்ற எனது கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பி வந்து விட்டு ,நான் திரும்ப திரும்ப பழைய பல்லவியை பாடுவதாக குறைப்படுகிறீர்கள் .

    இப்போது மூன்று நாட் களாக யோசித்து விட்டு இப்போதுதான் ஒன்றை கண்டு பிடித்து சொல்லியிருக்கிறீர்கள் .
    அதாவது முதலாளிகளில் சின்ன முதளாளி , பெரிய முதலாளி என்றிருக்கிறார்கள் . ( இப்போது தரகு முதலாளித்துவம் காணாமல் போய்விட்டது ) அவர்களில் சின்ன முதலளிகள் , பெரிய முதலாளிகளால் பாதிக்கபடுகிறர்கள் . அதனால் பாவம் அவர்களை விட்டு விடுவோம் . அதனால்தான் அவர்கலை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டோம் என பொருள் படும்படியாக ஏதோ கூறியிருக்கிறீர்கள் .

    புலம்பெயர் தமிழர்களிடம் வியபாரம் செய்யும் சிங்கள முதலாளிகளும் , இலங்கை அரசநிறுவனக்களும் உங்களுக்கு பரிதாபத்திற்குரிய சின்ன முதலாளிகளாகி விட்டார்கள் .

    நீங்கள் லைக்க முதலாளியும் கூட உங்களைப்போல் , என்னைப்போல் சாதாரண மனிதராக இருந்தவர்தான் , பின்னர்நீங்கள் சொல்லும் சின்ன முதலாளியாகவும் இருந்து அதன் பின்னர்தான் பெரிய முதலாளியானவர்.
    இன்று சின்னனாக இருப்பவர்நாளை பெரிய முதலாளி ஆகலாம்

    இன்று மேற்குலக நாடுகளிலும் சரி , இந்தியாவிலும் சரி பெரும் முதலாளிகள்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார்கள் . பின்பு ஆட்சிக்கு வரும் கட்சியினை தமது தேவைகளுக்கேற்ப அஆட்டிப்படைக்கிறார்கள் என்பது தெரியாதா ?
    அரசுகள் சொலவ்தை முதலாளிகள் கேட்பதில்லை . நிதி தரும் முதலாளிகள் சொல்வதைத்தான் அரசுகள் கேட் கின்றன.
    லைக்கா நிறுவனத்தால் தமிழ் மக்களுக்கு நனமை இல்லையென சொல்ல முடியுமா ?
    சரிநீங்கள் சொலவது போல் தீமைதான் என்றால் அதனை பட்டியலிடுங்களேன் .

    இனம் படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த படத்தை புறக்கணிக்காது ஏன் கத்தியை மட்டும் புறக்கனீக்க வேண்டும் ?

    இனம் தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளரின் அடுத்த படத்தை புறக்கணிக வேண்டுமென்ற கோரிக்கதான் முதலில் வந்தது .பின்பு அதனைநீர்க்து போகச்செய்யும் முகமாக கத்தி படத்தையும் அய்ங்கரனையும் முடிச்சு போட்டு அதன் பின் அய்ங்கரனையும் லைக்காவையும் முடிச்சு போட்டு , அதற்கு பிறகு லைக்கவையும் ராஜபக்சவையும் முடிச்சு போட்டு ( உஸ்ஸ் அப்பாடா ) ஏதெதோ கூறி கத்தியை புற்க்கணிக்க வேண்டுமென வந்துநிற்கிறார்கள் .

    சிங்கள அரசின் ரகசிய அடிவருடிகள் . அவர்களது நோக்கமெல்லாம் ராஜபக்ச குமப்லகளின் பணத்தில் படமெடுத்த இனம் தயாரிப்பாளரின் அடுத்த படத்திற்கு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாதென்பதே .
    ராஜபக்ச அரசு தமது ரகசிய அடிவருடிகளுக்கு கொடுத்த ரகசிய அசைன்ட்மன்ட் இதுதான் .
    அதனைத்தான் தமது ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல் நாசூக்காக செய்து வருகிறார்கள்..

  14. lala says:
    12 years ago

    ஜேர்மனியில் யூதரின் வர்த்தக ஆதிகம் கிட்லரிற்கும், நாசிகளிற்கும் ##ஜேர்மன் மக்களிடையே ஆதரவைத்தேடிக்கொடுத்தது. இதேபோல்
    தென்னிலங்கையில் தமிழரின் வர்த்தகமும், அரசசேவைகளில்
    பெரும்பான்மையாக் இருந்த்தும் சிங்கள் இனவாத சக்திகளிற்கு
    வளர இடம் கொடுத்த்து. இந்த இரண்டு விடயங்களால் அழிந்த்து
    ஏழைகளாக இருந்த யூதர்க்ழும் இலங்கையில் தமிழர்கழும்தான்###

    ஜேர்மனியில் ஜெர்மனியர் முன்னேறுவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை . அது அவர்களின்நாடு அவர்களது அரசு , அவர்களே அங்கு பெரும்பானமியினர்.
    அப்படியிருந்தும் அவர்களால் யுதர்களைப்போல் முன்னேற முடியவில்லை . அந்த இயலாமையில் வந்த பொறாமைகான் யுதர்கள் மேல் வந்த வெறுப்பு..

    ஆனால் யூதப்படுகலைகளைநாசி படைகளும் , ஜெர்மன்ய அரசும் செய்தன . ஜெர்மனிய மக்கள் அதற்கு தார்மீக ஆதரவு வழஙினர்.

    அதுபோலதான் இலங்கையிலும் சிங்கள இனவெறி அரசாலும் அதன் குண்டர் படைகளாலும் தமிழர்கள் மேல் படுகொலைகளும் சொத்தழிவுகளும் நிகழ்த்தப்பட்டன .
    சிங்கள மக்கள் அதற்கு தார்மீக அதரவு வழங்கினர்.

    ஜெர்மனியில்; ஏழை யுதர்கள் மட்டும் கொல்லப்படவில்லை , பணக்கார ய்தர்கள் அவர்களது வர்த்தக நிறுவனக்கள் யாவும் அழிக்கப்பட்டன .
    அங்குநடந்தது இனப்படுகொலை .
    அதனை ஒப்புக்கொள்ள மனமில்லாமல்தான் ஏழை யுதர் , ஏழை பணக்கர , வர்க்கம் அது இதுவென வர்க்க முலாம் பூசுவதற்கு படாத பாடு படுகிறீர்கள் .

    அது போல்தான் இலங்கையிலும் ஏழை மக்கள் மட்டும் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்படவில்லை . தமிழர்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தமிழ் வர்த்தக மையங்கள் , வியாபார நிறுவனங்கள் எரித்துநாசமாக்கப்ப்ட்டன . தமிழ் வர்த்தகர்கள் , முதலாளிகள் குறிவைத்து கொலை செய்யப்பட்டார்கள் .
    அங்கும் ஏழை , பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கொலை செய்யப்ப்டார்கள் , பாதிக்கப்பட்டார்கள் .
    ஏனவே அங்கும்நடந்தது இனப்படுகொலைதான் .நீங்கள்நிரூபிக்கப்பாடுபடுவது போல் வர்க்க முரண்பாடு அல்ல .

    • mannan says:
      12 years ago

       ஜேர்மனியர்  யூதர்களைப்போல   முன்னெறமுடியவில்லையா?

      அப்போ யுத்தம் முடிந்து யூதர்கழும் அழிந்தபின்  ஜேர்மனிய்ர் அகதிகளாக
      வேறுநாடுகளிற்குப் போனார்களா?  தங்கள்நாட்டையும் கட்டியெழுப்பி
      பிற  நாட்டவரிற்கும் அகதிகளாக இடம்கொடுக்கின்றார்கள்.
      யூதர்கள் தாங்கழும் தங்கள் மதமும் சொந்தங்க்ழுமென்றே வாழ்ந்தார்கள்.

      ஒருநாட்டை  தொழிலாளர்களாலேயே கட்டியெழுப்ப முடியும்.
      தொழிலாளர்களால்  கட்டியெழுப்பப்பட்ட  நாட்டினுள்  வியாபாரிகள்
      சென்று  சுரண்டுவதை  எந்த இனமும் அனுமதிக்காது.

      தேயிலைத்தோட்டங்களில்  இந்தியத்தமிழர் வாழ்கின்றார்கள்  அவர்கள்
      மீது சிங்களவ்ர் ஆத்திரப்படுவதிலும் பார்க்க வடபகுதித் தமிழர் மீதுதான்
      அதிக வெறுப்பு. காரணம்  அரச உத்தியோகம்,வியாபாரம்,

      இப்போ தமிழ் வியாபாரிகளை  முதலாளிகளை இலங்கை அரசு ஆதரிப்பதன் காரணமென்ன?   இனப்படுகொலை அரசு என்று வைத்துக்கொண்டால்  அந்த  நாட்டிற்கும் அரசிற்கும்  நன்  கொடை கொடுக்கும் தமிழ் முதலாளிகளை   ஆதரிபோர்   தமிழினத்தின் மீது
      அக்கறைகொண்fடவ்ர்களா?-மன்னன்

      • lala says:
        12 years ago

        ##ஒருநாட்டை  தொழிலாளர்களாலேயே கட்டியெழுப்ப முடியும்.
        தொழிலாளர்களால்  கட்டியெழுப்பப்பட்ட  நாட்டினுள்  வியாபாரிகள்
        சென்று  சுரண்டுவதை  எந்த இனமும் அனுமதிக்காது.##

         நாடென்று  ஒன்றிருந்தால்  அங்கு   தொழிலாளர்கள்  , வர்த்தகர்கள் , உத்தியோகத்தர்கள் என்று இருக்கத்தான்  செய்வார்கள் .
        அனைத்தும்  சேர்ந்ததுதான் நாடு.

        ஜெர்மனியை  விட்டு  யுதர்களை  விரட்டிய பின்  ஜெர்மனியில்  தொழ்லாளர்கள்  மட்டும்தான்  இருந்தார்களா ?  ஜெர்மனிய வர்த்தகர்கள்  இருக்கவில்லையா ?

        ##தேயிலைத்தோட்டங்களில்  இந்தியத்தமிழர் வாழ்கின்றார்கள்  அவர்கள்
        மீது சிங்களவ்ர் ஆத்திரப்படுவதிலும் பார்க்க வடபகுதித் தமிழர் மீதுதான்
        அதிக வெறுப்பு. காரணம்  அரச உத்தியோகம்,வியாபாரம்,##

         நீங்கள்  சொல்வதை ஏற்க  முடியாது . 56 , 58 . 77 , 81 , 83 இல்நடைபெற்ற   இனப்படுகொலைகளில் எல்லா தரப்பு  தமிழ் மக்களும் கொல்லப்பட்டார்கள் , பாதிக்கப்பட்டார்கள் .குறிப்பாக  81 இல்  தோட்டதொழிலாளர்கள்  மிக மோசமாக  பாதிக்கப்பட்டார்கள் . தாக்கப்பட்டு   காடுகளில்  ஒளிந்து கொண்ட  மலைய க  தமிழர்களை பார்த்து”  உங்களுக்கும் தமிழ் ஈழம் வேண்டுமா ” எனக்கேட்டவர்தான்  அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா .
        அந்த  மக்கள்தான் பின்னர் கிளினொச்சியிலும் , வன்னியிலும்  குடியேறினர்.

        ##இப்போ தமிழ் வியாபாரிகளை  முதலாளிகளை இலங்கை அரசு ஆதரிப்பதன் காரணமென்ன? ##

        அப்படிநீங்கள்தான்  கூறுகிறீர்கள் .கடந்த காலங்களில்   சிங்கள அரசுகள் இனக்கலவர்ம் என்ற  பெயரில்நசுக்கியது , அழித்ததென்பது   வரலாறு.

        திடீரன இப்போது மட்டும்  ஆதரிக்கிறதா ?

        தமது  அடிவருடிகளை  விட்டு  அந்தநிறுவனக்களுக்கு எதிராக ஊடகங்களிலும்  , வலைதளங்களிலும் பரப்புரைகளை   செய்ய   வைப்பதிலிருந்தே  சிங்கள  அரசு தமிழ் வியாபாரிகளை  ஆதரிக்கிறதா ? இல்லயா என தெரிந்து கொள்ளலாம்.

        ##ஜேர்மனியர்  யூதர்களைப்போல   முன்னெறமுடியவில்லையா?
        அப்போ யுத்தம் முடிந்து யூதர்கழும் அழிந்தபின்  ஜேர்மனிய்ர் அகதிகளாக
        வேறுநாடுகளிற்குப் போனார்களா?##

          யுதர்களை  லட்சக்கணக்கில் கொன்று , மிகுதியாக இருந்தவர்களையும்  விரட்டியடித்த பின்  தான் அவர்களால் முன்னேற  முடிந்தது .

        • Mannan says:
          12 years ago

          /திடீரன இப்போது மட்டும் ஆதரிக்கிறதா ?/

          விவாதம் தொடக்கப்பட்டதே இலங்கை அரசுடன்
          தமிழ் வர்த்தகர்களின் தொடர்பு பற்ரியதே. அதற்கு தமிழ்
          முதலாளித்தின்
          பெருமையாக ஏற்பது யார்?

          /

          நாடென்று ஒன்றிருந்தால் அங்கு தொழிலாளர்கள் , வர்த்தகர்கள் , உத்தியோகத்தர்கள் என்று இருக்கத்தான் செய்வார்கள் .
          அனைத்தும் சேர்ந்ததுதான் நாடு
          //

          அவர்கள் அதேநாட்டில் பிறந்து அதே மக்களோடு வளர்ந்திருக்க வேண்டும்.அல்லது அந்தநாட்டின் பற்றாக்குறையைநிவர்த்தி செய்வதற்கு வந்திருக்க வேண்டும்.

          இப்போதும்
          சில நோய்களிற்கு
          வடபகுதித் தமிழர் தென்னிலங்கைக்கே செல்கின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பிரதேசத்திற்கு முதலீடு அவசியமா?

          லண்டனில் வேலைசெய்யும் ஒருவர் யாழ்ப்பாண்த்தினை சுற்ரிப்பார்ப்பதரற்கு இந்தோனிசிய தொழிலதிபர் முதலீடு செய்கின்றார். வடபகுதி மக்கள் ´அவர்களிற்கு சேவையாற்ரவேண்டும்.இதுதான் தமிழ் ஈழ விடுதலையா?

          //தமது அடிவருடிகளை விட்டு அந்தநிறுவனக்களுக்கு எதிராக ஊடகங்களிலும் , வலைதளங்களிலும் பரப்புரைகளை செய்ய வைப்பதிலிருந்தே சிங்கள அரசு தமிழ் வியாபாரிகளை ஆதரிக்கிறதா ? இல்லயா என தெரிந்து கொள்ளலாம்.
          /
          /

          கசக்கும் உண்மைகளை யாராவது எழுதினால் அவ்ர்களை
          அரசின் அடிவருடிகளாக்கி தமிழரின் பகைவராக்கி மூளைச்சலவை
          செய்து பிழைப்புநடத்தியவார்களாலேயே தமிழரிற்கு இந்த நிலைமை என்பதனை இன்னமும் உணரவில்லையா?-மன்னன்

  15. lala says:
    12 years ago

    ##விவாதம் தொடக்கப்பட்டதே இலங்கை அரசுடன்
    தமிழ் வர்த்தகர்களின் தொடர்பு பற்ரியதே. ###

          இதைத்தான் நான் ஆரம்பத்தில்லிருந்தே   சொல்லி வருகிறேன் . அப்போதெல்லாம் அதை ஒப்புக்கொள்ளமல் விடயத்தை திசை திருப்பி  எதேதோ வெல்லாம்  சொல்லி மழுப்பி  விட்டு இப்போது  வழிக்கு  வந்திருக்கிறீர்கள் .

    அதாவது , முதலாளீத்துவத்திற்கு இனம் மதம் மொழி பேதமெல்லாம் கிடையாது . ஆனால் முதலாளித்துவட்த்தை அம்பலப்படுத்துவதாகா கூறி திரியும் உங்களைப்போன்ற  வர்க்கப்போராளிகளுக்கு அதெல்லாம் இருக்கிறது போலிருக்கிறதென  அதைத்தான் கூறினேன்.

    முதலாளித்துவத்தை இன  அடிப்படையில் பிரித்து  விமர்சிக்க  முற்படும்நீங்கள் எத்தைகய  இன  சகதியில் உழன்று  வருகிறீர்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன் .

    புலம்பெயர் தமிழர்க்ளிடையே  வியபாரம் செய்யும்  சிங்களா முதலாளிகள் , இலங்கை அரசநிறுவனங்களை  விட்டு விட்டு ,  தமிழ் முதலாளிகளை மட்டும் குறி வைக்கும்நோக்கம்  என்ன ?

     த்மிழ் வியாபாரநிறுவங்கள் தலயெடுக்காது  முடக்க வேண்டும் என  எண்ணும்  த்மிழின எதிரிகளின் அசைன்ட்மன்டைநிறை வேற்றும் முயற்சிதான் இது என்பது அப்பட்டமாக தெரிகிறது.

    ##அவர்கள் அதேநாட்டில் பிறந்து அதே மக்களோடு வளர்ந்திருக்க வேண்டும்.அல்லது அந்தநாட்டின் பற்றாக்குறையைநிவர்த்தி செய்வதற்கு வந்திருக்க வேண்டும்.##

       ஜெர்மனியில் அப்போது வசித்த யுதர்களில் பலர் அங்கு பிறந்து  வளர்ந்தவர்கள்தான். மேலும்  எல்லோரும்   பணக்காரர்கள் அல்ல .
    ஏழை   யுதர்களும்   இறந்தார்களென  முதலை கண்ணீர்   வடித்தீர்களெ ?
    எனவே அவர்களிலும்  தொழிலளர்களும்  இருந்தார்கள் , ஏழைகளு இருந்தார்கள் . 

    எல்லோரும்நாசிப்படையால்  கொல்லப்பட்டார்கள் . எனவே அது இனப்படுகொலைதான்  நீங்கள் சொல்ல விரும்புவது போல் வர்க்க முரண்பாடோ அல்லது வர்க்க கொலையோ அல்ல .

    ##லண்டனில் வேலைசெய்யும் ஒருவர் யாழ்ப்பாண்த்தினை சுற்ரிப்பார்ப்பதரற்கு இந்தோனிசிய தொழிலதிபர் முதலீடு செய்கின்றார். வடபகுதி மக்கள் ´அவர்களிற்கு சேவையாற்ரவேண்டும்##

         விதண்டாவாதம் என்றால் அது இதுதான் . உலகமெங்கும்  னடை முறையில்  உள்ள  ஒரு விடயத்தை தமிழர்கள் செய்தால் அது மாபாதகமாகிவிடுகிறது  இந்த வர்க்க புண்ணியவாஙளுக்கு.

    உல்லாச பயணத்துறை என் கிற ஒன்று  இர்ப்பதாவது தெரியுமா ?

    இலங்கை அரசு  உல்லாச பயண துறையைநாட்டின் முக்கிய வருமானத்துறையாக கருதுகிறது . அந்த துறையில் பல சிங்களவர்களும் தமிழர்களும் வேலை இலங்கை அரசிடம் போய்  வெளினாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலங்கையர்கள் ஏன் சேவை செய்ய  வேண்டுமென கேட்பீர்களா ?
    உலகம் முழுவதுமே அந்த அந்தநாடுகள் உல்லசப்பயணத்துறையை  வைத்திருக்கின்றன . அந்த அந்த  நாடுகளில்  அந்த அந்த  நாட்டு மக்கள்தான் வேலை செய்கிறார்கள் .

     அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒன்று தமிழர்களிடம் இருக்க வேண்டுமென  தமிழகளுக்கு மட்டும் தடி ஒட்டி கொண்டிருப்பதன் காரணம் என்ன ?

    வேறொன்றுமில்லை எசமானர் சொல்லி தந்ததை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறீர்கள் .

    ##கசக்கும் உண்மைகளை யாராவது எழுதினால் அவ்ர்களை
    அரசின் அடிவருடிகளாக்கி தமிழரின் பகைவராக்கி மூளைச்சலவை
    செய்து பிழைப்புநடத்தியவார்களாலேயே தமிழரிற்கு இந்த நிலைமை என்பதனை இன்னமும் உணரவில்லையா?-##

    எது கசக்கும் உண்மை ?

     முதலாளித்துவத்தையே  இனவாதக்கண்ணொட்டத்தோடு அணுகும் போலி வர்க்க[ப்போராளிகளை அம்பலபடுத்திய  உண்மையையா ?

    • mannan says:
      12 years ago

      //முதலாளித்துவத்தையே  இனவாதக்கண்ணொட்டத்தோடு அணுகும் போலி வர்க்க[ப்போராளிகளை அம்பலபடுத்திய  உண்மையையா ?//

      புலம்பெயர் தமிழ்  முதலாளிகள் என்பதும்,  தமிழ் முதலாளிகள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.  சிங்களவ்ரால் பாதிக்கப்ப்ட்டது   இலங்கையில் வாழும் தமிழ் முதலாளிகள்.   புலம்ப்பெயர்  தமிழர் மத்தியில் உருவான  தமிழ் முதலாளிகள் சிலர்  கேள்விக்குறிக்கு உட்படுத்தப்பட்ட  நிலையிலுள்ளனர்.  .

      பொய்,ஏமாற்று,மூளைச்சலவை,பணச்சலவை,கறுப்புபணம்  இவ்வாறு
      சமூக துரோக செயல்கழுடன்  ஈடுபாடுள்ள  மேற்குலக முதலாளித்துவடன்
      இணந்துள்ள  தமிழர்களை அடையாளம்  காணும் வல்லமையற்ர சமூகமாக
      புலம் பெயர் தமிழ்ர்  பலர் வாழ்கின்றனர்.  இவர்களாலேயே   தமிழர்கள்
      நிலமை  இவ்வாறுள்ளது. இதில்  உங்கள்  கருத்து என்ன என்பதை விளக்குவீர்களா?-மன்னன்

  16. lala says:
    12 years ago

    ##புலம்பெயர் தமிழ்  முதலாளிகள் என்பதும்,  தமிழ் முதலாளிகள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.##

           சரியாப்போச்சு ,  தாங்கள்தான்   இந்தக்கட்டுரை தமிழ் முதலாளிகளுக்கும் இலங்கை அரசுக்குமான  தொடர்பு பற்றியதென  செப்பியிருந்தீர்கள் .
    அந்த  தமிழ்  முதலாளிகளிலும்.  குறிப்ப்பாக புலம்பெயர் தமிழ் முதலாளிகள் பற்றியதென  இப்போது  சொல்கிறீர்கள் .இப்படியே  குறுக்கிகொண்டு  போய்  கடைசியில் லைக்கா முதலாளி  பற்றி மட்டும்தான் பேசுவோம்  என சொல்வீர்கள்  என எதிர்பார்க்கிறேன் .

    எப்படியோ, நீங்கள்  வழமையாக செய்வதைப்போல் இப்போது தமிழ் முதலாளிகளிலிருந்து   புலம்பெயர்  தமிழ் முதலாளிகளுக்கு ஒரே யடியாக பல்டி  அடுத்துள்ளீர்கள் .

     பொதுவாக  தமிழ் மக்கள்  மத்தியிலும்  குறிப்பாக  புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும்  தமது பொருட்  கள் சேவைகளை வழங்கி இலாபமீட்டும் ஏனைய இன  முதலாளிகளையும் , இலங்கை  அரசநிறுவனங்களையும்  தாராளமாக  சகித்துக்கொண்டும்  , மஞஞி பிஸ்கெட்டுகளையும் . யானை மார்க் சொடாக்களையும்  தாரளமாக வாங்கி குடித்துக்கொண்டும் , தின்று  கொண்டும் இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஏன் தமிழ் முதலாளிகளை  மட்டும் ஒதுக்கி  தள்ள  வேண்டும் என்பதற்கான  விளக்கங்களை  ஆதாரங்களோடு  முன் வையுங்கள் .

    • mannan says:
      12 years ago

      //இலங்கை  அரசநிறுவனங்களையும்  தாராளமாக  சகித்துக்கொண்டும்  , மஞஞி பிஸ்கெட்டுகளையும் . யானை மார்க் சொடாக்களையும்  தாரளமாக வாங்கி குடித்துக்கொண்டும் , தின்று  கொண்டும் இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஏன் தமிழ் முதலாளிகளை  மட்டும் ஒதுக்கி  தள்ள  வேண்டும் என்பதற்கான  விளக்கங்களை  ஆதாரங்களோடு  முன் வையுங்கள் .//

      எல்லா தமிழ்முதலாளிகளையல்ல  

      1)இலங்கை வாழ் தமிழ்முதலாளிகள்
      2) புலம்பெயர் வாழ்தமிழ் முதலாளிகள்
         அ)  கஸ்டப்பட்டு  உழைத்து  முதலாளியாக வந்தவ்ர்கள்
           ஆ)  கடன்பட்டு  முதளாளியாக  வந்தவ்ர்கள்
      இ)   உழைப்பில்லாமலும் கடன் படாமலும்  முதலாளியாக வந்தவர்கள்

      இதில் யார் எப்படியென்று  அவர்களிற்குத்தான் தெரியும்

      இவர்களை யார் யார் என்று  கண்டு பிடிக்க முடியாதவ்ர்கள்  விவாதிப்பதால்
      எந்த பயனுமில்லை.    

      காசைக்கொடுத்து  சோடாவை வாங்கி கொடுப்ப்து தறானால்
      கோடிக்கனக்கில்  இனாமாக  அரசுக்கு  கொடுப்ப்தை  எவ்வாறு  ஏற்கின்றீர்கள்.-மன்னன்

  17. lala says:
    12 years ago

    ##எல்லா தமிழ்முதலாளிகளையல்ல  ##

             முதலிலேயே உங்களால் சொல்லப்பட்டது என்ன ?

          முதலாளிகளுக்கு   இன  , மத , மொழி  வர்க்க பேதங்களெல்லம்   இல்ல எனக்கூறியிருந்தீர்கள் .

    அதற்கு பதிலாகத்தான் நான்   , சரி முதலாளிகளுக்கு  அதெல்லாம்  இல்லாவிட்டால்  பரவாயில்லை , ஆனால் தாங்களோ   வர்க்கப்புரட்சி போராளி ( !!! ?? )  முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துவதாக  கூறிகொள்பவர்கள் ,அப்படிப்பட்ட  உங்களுக்கு முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தும்போது  இன  , மொழி  எல்லாம் முன்னால்  வந்து  னிற்கும்போலிருக்கிறது .

    வர்க்கப்போராளிகள் இன , மதம் மொழியை  கடந்தவர்கள் என்னும் அடிப்படை உண்மையே இங்கு உங்கள்  விடயத்தில் அடிப்பட்டு போய்  விடுகிறது .

    முதலில்  இலங்கை அரசுக்கும் , தமிழ் முதலாளிக்க்ளுக்குமான  தொடர்பு பற்றி  பேசுகிறோ  ம்  என்றீர்கள் . பின்பு  இல்லையில்லை  புலம்பெயர் தமிழ் 

    முதலாளிகள்  பற்றித்தான் பேசுகிறோம்  என்றீர்கள் .
    இப்போது புலம்ப்பெயர் தமிழ் முதலாளிகளையும் மூன்று நான் கு வகையாக  பிரித்து மேய்ந்து  விட்டீர்கள்  மேய்ந்து .

    ##இதில் யார் எப்படியென்று  அவர்களிற்குத்தான் தெரியும்##

    சரியாகத்தான்  சொன்னீர்கள் . அது அவர் அவர்களுக்குத்தான்  தெரியும் . ஆதார்ங்களுடன்  ஏதாவது  நீரூபிக்கப்பட்டாலே  தவிர .

    அதற்குள் நீ  ங்கள்  அவசரக்குடுக்கைத்தனாமக   சொல்வதை ஏற்றுக்கொள்ள  முடியாது .

    ##காசைக்கொடுத்து  சோடாவை வாங்கி கொடுப்ப்து தறானால்
    கோடிக்கனக்கில்  இனாமாக  அரசுக்கு  கொடுப்ப்தை  எவ்வாறு  ஏற்கின்றீர்கள் ##

         நான் ஏற்கிறேன் , ஏற்கவில்லை என்பதெல்ல  இங்கு விடயம் . அது போல் ஒரு ரூபாயா , ஒரு கோடியா என்பதுமல்ல .

    இலஙையிலிருந்து  உற்பத்தியாகி வரும் பொருடகள்  புலம்பெயர்நாடுகளில்   விற்பனை செய்யப்படுவதும்  அதனை  மக்கள்  வாங்கிசெல்வதும்  வெளிப்படையா தெரிகின்ற  விடயம் . அதனை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் பிரச்சாரப்படுத்தப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
    அப்போது எதிலும் பங்கு பற்றாது கள்ள  மவுனம் சாதித்தவர்கள் , இப்போது தமிழ் முதலாளிகளுக்கெதிராக  துள்ளி  குதிப்பது சந்தேகத்துக்கிடமானது .

    ஆனால்நீங்கள் குறிப்பைடுகின்ற  தமிழ் முதலாளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான  தொடர்பென்பது  இது வரை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வதந்தி  அளவிலேயே நின் று  விட்ட  விடயம்.

    • mannan says:
      12 years ago

      //ஆனால்நீங்கள் குறிப்பைடுகின்ற  தமிழ் முதலாளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான  தொடர்பென்பது  இது வரை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வதந்தி  அளவிலேயே நின் று  விட்ட  விடயம்.//

      கண்ணால் கண்ட சாட்சியில்லாதபடியால்  கற்பழித்தவனை விடுதலை
      செய்யும்  நீதிபதிக்கு  ஒத்தவையானவையே  லாலாவின்நருத்துக்கள்.

      //இலஙையிலிருந்து  உற்பத்தியாகி வரும் பொருடகள்  புலம்பெயர்நாடுகளில்   விற்பனை செய்யப்படுவதும்  அதனை  மக்கள்  வாங்கிசெல்வதும்  வெளிப்படையா தெரிகின்ற  விடயம்//

      ஆனால்  தேனீரைக்குடிக்கும்போது  கடைகளில்  வடதுருவத்தில் உற்பத்திசெய்யப்பட்ட தேயிலையே வாங்கி  லாலா  குடிக்க்கின்றார்.எங்கு அதனை வாங்கலாமென்று எல்லோருக்கும் அறியத்தருவாரா?

      • lala says:
        12 years ago

        ##கண்ணால் கண்ட சாட்சியில்லாதபடியால்  கற்பழித்தவனை விடுதலை
        செய்யும்  நீதிபதிக்கு  ஒத்தவையானவையே  லாலாவின்நருத்துக்கள்.##

                           இப்போதெல்லாம்  கண்ணால் கண்ட சாட்சியை   மட்டும்  வைத்து  தீர்ப்பு  வழங்கி விடுவதில்லை .

        மரபணு  பரிசோதனையை  வைத்து   ஆப்படித்து   விடுவார்கள் .

        எந்தக்காலத்தில்  இருக்கிறீர்கள் ?

        உலகில் தேயிலை இலங்கையில் மட்டும் உற்பத்தி செய்யப்படுவதில்லை,,

        • mannan says:
          12 years ago

           //இப்போதெல்லாம்  கண்ணால் கண்ட சாட்சியை   மட்டும்  வைத்து  தீர்ப்பு  வழங்கி விடுவதில்லை .
          மரபணு  பரிசோதனையை  வைத்து   ஆப்படித்து   விடுவார்கள் //

          உண்மைகளையே அறியவோ,அறிந்த உண்மைகளை
          வெளிக்கொண்டுவரவோ, அதன் மூலம் குற்ரவாளிகளத்தண்டிக்கவோ
          முடியாது என்று  கூறுகின்ரீகளா?

          //உலகில் தேயிலை இலங்கையில் மட்டும் உற்பத்தி செய்யப்படுவதில்லை,,//
          உலகில் எங்காவது  இலங்கைத்தேயிலையை புறக்கணிக்கும்
          நாட்டை கூறமுடியுமா?

  18. Bela says:
    12 years ago

    லாலா என்பவரின் சமூகவிரோதக் கருத்துகளின் சாராம்சம் இவை:
    1. தமிழனாகப் பிறந்திருந்தால் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் அனுமதிக்கலாம்.
    2. லைக்கா தமிழ் நிறுவனம் அது லாபமடைய வேண்டுமானால் அரசாங்கத்துடன் சேருவது தப்பே இல்லை.
    3. தமிழ் நிறுவனம் என்றால் அது கொளையடிக்கலாம், கொலை செய்யலாம், நிலம் பறிக்கலாம் இனக்கொலை செய்யலாம்..
    4. புலம் பெயர் நாடுகளில் சிங்கள வியாபாரம் இருக்கிறது.. அதனால் லைக்கா போன்ர நிறுவனங்கள் ராஜப்ச்கவோடு சேர்ந்து சிங்களவர்களையும் தமிழர்களையும் கொள்ளையடிக்கலாம், இனப்படுகொலைக்குத் துணை போகலாம்.
    இவ்வாறான பொறுக்கிகள் சமூகவிரோதக் கருத்துகளை எழுதுபவர்கள், மக்களை குழப்பி ஏமாறுபவர்கள். 19ம் நூற்றாண்டில் கற்பழிப்பு சரியானது என்று கருத்துச் சொன்னவர்களும், இன்றும் முஸ்லீம் நாடுகளில் சந்தேகிக்கப்படும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதும் சரி என்பவர்கள் உண்டு. அதற்கும் கருத்துச் சுதந்திரம் கேட்கிறார்கள். லாலாவின் சமூகவிரோதக் கருத்துக்களை சுந்தந்திரம் என்ற பெயரால் வெளியிடும் இனியொருவை மன்னிக்க முடியாது.

    • Sutharsan says:
      12 years ago

      சரி நீர் மன்னிக்காதேயும், உமக்கு விருப்பமான மட்டுமே பிரசுரிக்கிற இணயத்தளத்த தேடி போயி வாசியும்.

    • lala says:
      12 years ago

      ##புலம் பெயர் நாடுகளில் சிங்கள வியாபாரம் இருக்கிறது.. அதனால் லைக்கா போன்ர நிறுவனங்கள் ராஜப்ச்கவோடு சேர்ந்து சிங்களவர்களையும் தமிழர்களையும் கொள்ளையடிக்கலாம், ##

       நான்  அவ்வாறு சொல்லவில்லை  .முதலாளித்துவத்தை எதிர்க்கும்   வர்க்கப்போராளிகள் (???)   இன மத , மொழி பேதமில்லாமல்  எதிர்க்க வேண்டுமென்றுதான்  குறிப்பிட்டேன் .

      ஒரு உண்மையான  வர்க்கப்போராளி  அப்படித்தான்  இருப்பான் .

         நீங்கள் அப்படியா  இருக்கிறீர்கள் ?

      சிங்கள  , இலங்கை  முதலாளிகளுக்கு  ஒரு  நியாயம் , புலம் பெயர் தமிழ் முதலாளிகளுக்கு ஒருநியாயம் .

      இதுதான் இனி ஒருவின்   வர்க்கப்போராட்ட  இலட்சணம் .

      இதனை அம்பலப்படுத்தினால் , அதற்கு பதில் சொல்ல  வக்கில்லாது ,நான்  சொல்லாதவற்றைஎல்லாம்  சொல்லையதாக   பட்டியலிடுகிறார் .

      இவ்வளவு நாளும்   மன்னன் என்பவர்  பதில் சொல்ல  முடியாமல் ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்திற்கு   தாவி  பிரச்சனையை  திசை திருப்பி  களைத்துப்போனார்  போலிருக்கிறது . இப்போது  பீலா என்றொருவர்  களமிறங்கியுள்ளார் .

      ##தமிழனாகப் பிறந்திருந்தால் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் அனுமதிக்கலாம்  ##

                        இதையும்நான் சொல்லவில்லை . . ஆனால்  தமிழனைத்தவிர  வேறு  யாரும்  குறிப்பாக  சிங்கள  ஆட்சியாளார்கள் , அவர்களோடு  தொடர்புடையவர்கள்  , சிங்கள  முதலாளிகள்  மேற்கூறிய  பாதக  செய்லை  செய்யலாம் . அவர்கள்  அப்படி செய்தாலும் நாம் வாயைப்பொத்திக்கொண்டிருப்போம் .தமிழர்கள் செய்தால்  அது  வதந்தியாகவே இருந்தாலும் துள்ளி  குதித்து  அவதூறு  செய்வோம்  என்று சொல்லி  வருபவர்கள்  நீங்கள்தான்.

      ##புலம் பெயர் நாடுகளில் சிங்கள வியாபாரம் இருக்கிறது##

      அது இருக்கிறது சரி ,   தமிழ்  முதலாளித்துவத்துக்கெதிராக   துள்ளிக்குதிக்கும்  நீங்கள் அதைப்பற்றி  ஒருPஒதும் பேசியதில்லையே ?
       முதலாளீத்துவத்தை   இனம் பாராது  நீங்கள்  விமர்சித்திருந்தால் உங்களைநேர்மையான  வர்க்கப்போராளி  என  ஒப்புக்கொள்ளலாம் .

      ஆனால்நீங்கள்  இனவாத வர்க்கப்போராளியாகவல்லவா  இருக்கிறீர்கள் ?
      இதனை சுட்டிக்காட்டினால்  வீண் அவதூறு   பரப்புகிறீர்கள் .

      ## லைக்கா போன்ர நிறுவனங்கள் ராஜப்ச்கவோடு சேர்ந்து சிங்களவர்களையும் தமிழர்களையும் கொள்ளையடிக்கலாம், ##

                  புலம்பெயர் தமிழ் முதலாளிகள்  வியபாரம் செய்கிறார்களா அல்லது கொள்ளையடிக்கிறார்களா ?

      கொள்ளையடிக்கிறார்கள்  என்றால் எப்படி  கொள்ளையடிக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன்  தாருங்கள் .

       அத்துடன் ஏனைய  இலங்கை சிங்கள  முதலாளிகள்   கொள்ளையடிக்கவில்லை  வியாபாரம்தான் செய்கிறார்கள்  என்றால் அதனையும் எவ்வாறென  விளக்குங்கள் .
      அதாவதி தமிழ் முதலாளிகள் எவ்வாறு  வியாபாரம் செய்யாது  கொள்ளையடிக்கிறார்கள்  என்பதையும் , ஏனைய இலங்கை சிங்கள  முதலாளிகள் கொள்ளையடிக்காது எவ்வாறு நேர்மையாக  வியாபார்ம் மட்டும் செய்கிறார்கள்  என்பதை ஆதாரத்துடன்  விளக்குங்கள்.

      மேலும் கருத்து பாசிச வாதிகள்  கருத்து சுதந்திரம் பற்றி  பேசக்கூடாது.

      • mannan says:
        12 years ago

        //இவ்வளவு நாளும்   மன்னன் என்பவர்  பதில் சொல்ல  முடியாமல் ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்திற்கு   தாவி  பிரச்சனையை  திசை திருப்பி  களைத்துப்போனார்  போலிருக்கிறது . இப்போது  பீலா என்றொருவர்  களமிறங்கியுள்ளார் .//
        //ஆனால்நீங்கள்  இனவாத வர்க்கப்போராளியாகவல்லவா  இருக்கிறீர்கள் ?
        இதனை சுட்டிக்காட்டினால்  வீண் அவதூறு   பரப்புகிறீர்கள் .//

        இங்கு  விவாதிக்க தொடங்கியது   லைக்காநிறுவனம்   இலங்கை அரசுடன்
        தொடர்பு கொள்வது பற்ரியது.  லைக்கா    நிறுவனம்  தமிழர்கழுடையதென்பதாலேயே    விவாதம் எழுந்தது.
        இதில்  இனவாதா வர்க்கம் என்பது தொட்ர்பில்லாத விடயம்.

        சிங்களவ்ரின்  சோடவை வாங்கி குடிக்க வேண்டாமென்பது சம்பந்தமில்லாத விடயம்.  இலங்கை  சோடா முதலாளிகள்
        தமிழீழ  விடுதலைக்கான  போராட்டத்திற்கு பண உதவி செய்தார்களா?
        இலங்கைநாட்டிற்கு  விசுவாசமாக  இருந்தார்கள். அவ்வாறு ஏன் லைக்கா
        நிறுவனம்  தமிழர்களிற்கு  விசுவாசமாக் இருக்கவில்லை.  செய்தது  தவறு
        இதில்  வர்க்க ரீதியான  விவாதத்திற்கே  இடமில்லை.

        தமிழர் மீதான  விசுவாசமும்   தமிழ் வர்த்தக்ர்கழும்  என்பதே கருப்பொருள்.

  19. lala says:
    12 years ago

    ##லாலாவின் சமூகவிரோதக் கருத்துக்களை சுந்தந்திரம் என்ற பெயரால் வெளியிடும் இனியொருவை மன்னிக்க முடியாது.####

                 நானாவது  கருத்துதான்  தெரிவிக்கிறேன் .

      ஆனால்  நீங்கள்  கொலை செய்தார்கள் , கொள்ளையடித்தார்கள்  என  நாட்டாமை  தீர்ப்புகள் அல்லவா  வழங்கி  கொண்டிருக்கிறீர்கள் .

  20. Kumar says:
    12 years ago

    60 வருடங்களாக ஒரு இனம் தனது உாிமையை நிலைநாட்ட போராடி இன்று யாவையும் இழந்து நாதியற்று நிற்கின்றது. போினவாதிகளோ இவா்களுக்கு தேவை அபிவிருத்திதானேயன்றி வேறெதுவுமில்லை என்று ஏளனமாக கூறிவருகின்றாா்கள் இளைஞா்கள்,யுவதிகள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து போராடிய வேளை அதை சாதகமாக பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறி அகதி தஞ்சம் பெற்று இன்று முதலாளிகளானவா்கள் அந்த இளைஞா்கள் யுவதிகளின் இரத்தவாடை ஆறும் முன்பே போினவாதிகளின் கூற்றை நியாயப்படுத்துவதுபோல் அவா்களுடன் கைகோா்த்து நிற்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்தவோ ஆதாிக்கவோ எவருக்கும் உாிமை கிடையாது.
    எதிாிகளைவிட இந்த துரோகிகளே மிகவும்  ஆபத்தானவா்கள்.

    • lala says:
      12 years ago

      ##எதிாிகளைவிட இந்த துரோகிகளே மிகவும்  ஆபத்தானவா்கள்##

      இந்த  ரேஞஞில்  போனால்  சாதாரண  தமிழ் மக்கள் தொகையை விட     துரோகிகள் தொகை அதிகமாகி விடும்போலொருக்கிறதே ….

  21. தமிழ் மூடன் says:
    12 years ago

    “இளைஞா்கள்,யுவதிகள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து போராடிய வேளை அதை சாதகமாக பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறி அகதி தஞ்சம் பெற்று இன்று முதலாளிகளானவா்கள்…..”

    முதலாளிகள்  மாத்திரமல்ல … மாற்று  உடுப்பும்  இன்றி  …
    …அகதியாக  வந்து  …. .. பகட்டாக  இலங்கைக்குச்  சுற்றுலா  போய்வரும் .. புலம் பெயர்  தமிழரும்  மறைமுகமாக   …
    பேரின வாதிகளுடன்  கை கோத்தவர்கள்தான்.

    தமது  பிள்ளைகளுக்கு ( மிருகக்  காட்சி சாலையில் மிருகங்களைக் காண்பிப்பதுபோல் …. தமக்குக்  கிடைத்த  …. அகதியாக  வந்திருக்கக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுப் … பரிதாபமாக    எலும்பும்  தோலுடன் .. ஓட்டைக்  குடிசையில்  வாழும் தமிழர்களைக்  காட்டவும்…
    ….. கோவில்  திருவிழாக்களில்  தங்கச்  சங்கிலியுடன்  தேர் வடம் பிடிக்கவும்…
    …”அப்படி  இருந்த  நான் (எமது  குடும்பம்) இப்படி ஆகியதைப்  பார் ” என்ற   அகம்பாகத்துடன்  பகட்டுக்  காட்டவும்  .. 
    இலங்கை  போய்வரும்  இவர்கள்…. எதிரிகளா??? துரோகிகளா??? மூடர்களா??? அரக்கர்களா???
    அவர்கள் எப்படியாகவும்  இருக்கட்டும் ……..
    லைக்கா, லெபாரா, தமிழ்த் தொழிலதிபர் வாசுதேவன் இராசையா.. . போன்றவர்களை  விமர்சித்து  .. விவாதம்  நடத்துவதை ஒருபுறம்  ஒதுக்கிவிட்டு …….
    அன்றாடம்  ஒருவேள  உணவுக்கு  அவதிப்படும் இலங்கை   ..(தமிழ்  முஸ்லிம் மலையக ……சிங்கள )   மக்களுக்கு .
    மஞஞி பிஸ்கெட்டுகளையும் . யானை மார்க் சொடாக்களையும் .. விற்பனை செய்தாவது  கிடைக்கும் இலாபத்திலிருந்து .. ஒரு இறாத்தல்  பாண் வங்கிக்  கொடுக்கும்  முயற்ச்சியில்  … இறங்க  எவராவது முன்வருவீர்களா???
    அல்லது….
    ..அப்படி  முன்வருபவர்களின்  வியாபாரத்துக்கு  ஆதரவளிப்பீர்களா??? 

    …இந்தக்  கருத்தைக்  கூறிய இந்ததமிழ் மூடனை  ..நீங்களும்  இவன் உண்மையில் “மூடன்தான்  “என்று உறுதி செய்ய முயலாமல்  .. ஏதாவது .ஆக்கபூர்வர்மாகச்   செய்ய  முயலுங்கள்     

    • lala says:
      12 years ago

      மூடனுக்கு  சொந்த  அனுபவம்  நன்றாகவே  பேசுகிறது  .

      • தமிழ் மூடன் says:
        12 years ago

        உங்கள்  பதிவிற்கு  நன்றி….
        ……சொந்த அனுபவம்….. பற்றி ..?????
        எதை அவனுடைய சொந்த அனுபவம்
        என்று கூற
         நினைக்கின்றீர்கள்????

        …தாயக  சுற்றுலா என்ற போர்வையில் சொந்த ஊரில்
         பகட்டுக்  காட்டுபவர்களைப் பற்றி  குறிப்பிட்டதையா????
        … வியாபாரத்தில் கிடைத்த இலாபத்தில் பாண் வாங்கிக்
        கொடுப்பது  பற்றி  குறிப்பிட்டதையா????
        அல்லது…….?????
         10 கோடிப் பேர் கொண்ட .. தமிழன் சந்தை …
        இந்தச் சந்தையை வைத்து தமிழன்  தமிழனை
         உயர்த்தலாம் “ நீங்களும் ஒத்துழைத்தால்!!!!!!

        • lala says:
          12 years ago

          ##எதை அவனுடைய சொந்த அனுபவம்
          என்று கூற
           நினைக்கின்றீர்கள்????##

          மன்னிக்கவும் . சரியாக  வாசிக்காமல்  தவறுதலாக  புரிந்து கொண்டு  பதிலளித்து விட்டேன் .

    • Sutharsan says:
      12 years ago

      அதாவது அகதியாக வந்தவனெல்லாம் ஊருக்கு போகக்கூடாதிங்குறீங்க. சிலர் போய் பகடு காட்டுறான் ஆனால் எல்லோரும் அப்பிடியில்லியே. இலங்கயுலதான் வியாபாரம் செய்து உதவி பண்ணணுமா வேற ஊருல பண்ணிவாற காசு செல்லுபடியாகாதா ஒரே கொளப்புறீங்கலளே சாமி.

  22. தமிழ் மூடன் says:
    12 years ago

    ” 10 கோடிப் பேர் கொண்ட .. தமிழன் சந்தை …
    இந்தச் சந்தையை வைத்து தமிழன்  தமிழனை
     உயர்த்தலாம் “

    • lala says:
      12 years ago

      இந்த உலகமயமாக்கல்  யுகத்தில்  10 கோடி பேர் கொண்ட  சந்தையில்  குண்டு சட்டிக்குள்  குதிரை ஒட்ட  அட்வைஸ் செய்கிறீரா ?

      அப்படியே அந்த  அந்த இனத்தவன் அந்த  இனத்தவனோடுதான்   வியாபாரம்  வைத்துக்கொள்ள  வேண்டுமென ஏனைய  இனத்தவர்களுக்கு  உமது இலவச அடவைஸை  வாரி  வழங்குவீரா ?

      அல்லது  இளிச்ச  வாய் தமிழனுக்கு  மட்டும்தான் இந்த அட்வைஸா ??

  23. lala says:
    12 years ago

    ##  இங்கு  விவாதிக்க தொடங்கியது   லைக்காநிறுவனம்   இலங்கை அரசுடன்
    தொடர்பு கொள்வது பற்ரியது.   ##

               அந்த தலைப்பை  ஒட்டியே  நான்  ஆரம்பத்திலிருந்தே  விவாதித்து வருகிறேன் .  நீங்கள்நேரடியாக  பதில் சொல்வதற்கு  முடியாதபோது வேறு  விடயத்திற்கு  தாவி   தலைப்பின் கருப்பொருளை  திசை திருப்பி  வந்திருக்கிறீர்கள் . பின்பு இப்போது  மறுபடியும்  தலைப்பிற்குள்  என்று யு  டேர்ன் அடித்து  திரும்பி வந்திருகிறீர்கள் . 

    ##      இலங்கை  சோடா முதலாளிகள்
    தமிழீழ  விடுதலைக்கான  போராட்டத்திற்கு பண உதவி செய்தார்களா ##

                         இல்லை . ஆனால்   தமிழர் போராட்டத்தை  கருவறுக்க  துடித்த  இலங்கை அரசுக்கும் , இன  வெறி  ராணுவத்துக்கும்  உதவி செய்தார்கள் .
    அதனால்தான்   இலங்கை பொருடகளை  பகிஷ்கரிக்கும்படி  பிரச்சாரம்  செய்யப்பட்டது .

    அப்போது  உங்களைப்போன்ற  போலி  வர்க்கப்போராளிகளும்  இனி ஒருவும் கள்ள  மவுனம்  சாதித்து  மறைமுகமாக இலங்கை இன வெறி அரசுக்கு  உதவியது .

    ##    தமிழர் மீதான  விசுவாசமும்   தமிழ் வர்த்தக்ர்கழும்  என்பதே கருப்பொருள்.  ##

                  சரி , ஈழப்போராட்டத்துக்காக  இவ்வளவு  பாடுபடுவதாக  ( !!!!!)  கூறிக்கொள்ளும்  , அதற்காக  அதோடு  தொடர்புபட்டவர்கள் , இயக்கங்கள் , கட்சிகள் , தனிப்பட்டநபர்கள் , அரசுகள்  , முதலாளிகள்  என  ஒன்று விடாமல்  அலசி  ஆராய்ந்து  குறை சொல்லி  திட்டி   தீர்க்கும் இனி ஒரு ஏன் இது வரை  தமிழர் போராட்டத்தை கருவறுப்பதற்கு உதவும் இலங்கை நிறுவனங்களும்   புலம்பெயர்  தமிழ்  மக்களும் என்ற தலைப்பில் கட்டுரையோ அல்லது ஆக்க்ங்களோ  வெளியிடவில்லை ?

    இதுவரைதான் இல்லை  இனி மேலாவது  வருமா ?

    ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன் …

       ###       இதில்  வர்க்க ரீதியான  விவாதத்திற்கே  இடமில்லை.  ###

                       ஆனால் மொழி , இன  ரீதியான  விவாதத்திற்கு இடம் உள்லது போலும் .

    வாழ்க  வர்க்க போராளிகள்  இஸம்…

  24. mannan says:
    12 years ago

    //இனி ஒரு ஏன் இது வரை  தமிழர் போராட்டத்தை கருவறுப்பதற்கு உதவும் இலங்கை நிறுவனங்களும்   புலம்பெயர்  தமிழ்  மக்களும் என்ற தலைப்பில் கட்டுரையோ அல்லது ஆக்க்ங்களோ  வெளியிடவில்லை ?
    இதுவரைதான் இல்லை  இனி மேலாவது  வருமா ?
    ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன் …//

    30 வருடபோராட்டமும் கோடிக்கணக்கான செலவில் இலங்கை அரசிற்கும்
    சிங்களவ்ரிற்கும் எதிரான பிரச்சாரமும்  விவாதங்கழும் உலக்முழுக்க
    நடத்தியவ்ர்களால்  முள்ளிவாய்க்கால் அழிவைனத்தவிர  வேறு ஏதாவது
    பெற்றுக்கொடுக்க முடிந்ததா?    அதனையே  திரும்பவும்  யாராவது செய்வார்களென  எதற்காக  எதிர்பார்க்கின்றீர்கள்.

  25. lala says:
    12 years ago

        ###       30 வருடபோராட்டமும் கோடிக்கணக்கான செலவில் இலங்கை அரசிற்கும்
    சிங்களவ்ரிற்கும் எதிரான பிரச்சாரமும்  விவாதங்கழும் உலக்முழுக்க
    நடத்தியவ்ர்களால்  முள்ளிவாய்க்கால் அழிவைனத்தவிர  வேறு ஏதாவது
    பெற்றுக்கொடுக்க முடிந்ததா?

       அதனையே  திரும்பவும்  யாராவது செய்வார்களென  எதற்காக  எதிர்பார்க்கின்றீர்கள்.  ###

                                       இப்போது  தலைப்பை   விட்டு  முள்ளிவாய்க்காலுக்கு  ஒடி விட்டீர்கள் .
    கடந்த  30 வருட  போராட்ட  காலத்தில்    தமிழ் மக்களோடு சேர்ந்து நின்று கொண்டு தேசியம் பேசிக்கொண்டு  மறைமுகமாக   இன வெறி அரசுக்கு  துணை   புரிந்தவர்களால்தான்  முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டது ,

    இன எதிரி இப்போதும் கூட  இறுதிப்போரில்   தமிழர்கள் எவ்வளவு கேவலமாக தோற்றார்கள் என்று காட்டுவதற்காக  அவ்வப்ப்போது  அது சம்பந்தமான செய்திகளையும் , புகைப்படங்களையும் , ஒளிநாடாக்களையும்  வெளியிட்டு வருகிறார்களோ அதே போல் அவர்களோடு  மறை முகமாக  உறவு பூண்டிருக்கும் சில  ஈனத்தமிழர்கள் சக தமிழர்களோடு விவாதித்து  வெற்றி  காண  முடியாது போனால் , அல்லது சொல்வதற்கு ஒன்றுமே இல்லாது  போய் விட்டால்  உடனே கையில் எடுப்பது முள்ளி வாய்க்கலை . இதற்கு  பின்னால்  இருப்பது எமக்குள்ளெ   தேசியம்  சுயநிணயம் என்று பேசிக்கொண்டு உள்நுழைந்து  விட்ட  புல்லுருவிகளின்  கையாலாகாத்தனம்தான் .

    ##  அதனையே  திரும்பவும்  யாராவது செய்வார்களென  எதற்காக  எதிர்பார்க்கின்றீர்கள்.  ###

                             தமிழ் முதலாளித்துவம்  பற்றி  தாராளமாக  பேசலாம் , சிங்கள  முதலாளித்தூவம் .  இலங்கை  அரசநிறுவங்கள்  புலம்பெயர்  தமிழ்  மக்களை  சுரண்டுவது பற்றிநாமும்  பேச  மாட்டோம் . தமிழ்  மக்களும்  பேசக்கூடாது . அவ்வறு பேசினால்  இருக்கவே  இருக்கிறது  முள்ளிவாய்க்கால் ..இனி ஒருவுக்கு  பேச்சாளராக  இருப்பதற்கு பதில்   இன வெறி  அரசின்  பேச்சாளராக இருக்கலாம்

      மாற்று கருத்து , கருத்து சுதந்திரம்  என்றெல்லாம்நாம்  பேசுவது , புலிகளையும் , தமிழர்  போராட்டத்தையும்  கொச்சைப்படுத்துவதற்குத்தான் , மற்றப்படி நமக்கு அதெல்லாம்  கிடையாது.

    ##   அதனையே  திரும்பவும்  யாராவது செய்வார்களென  எதற்காக  எதிர்பார்க்கின்றீர்கள்.##

    30    வருட  காலம்  போர்ட்டத்தை  சரி  வர நடத்தவில்லை  எனநீங்கள்தானே  வாய்  ஒயாமல்  கூறி  வருகிறீர்கள் . தேசியம்  ,சுயநிர்ணயம் என்று நீங்கள்தானே  புதிதாக  வாயால்  வெட்டி  கிழிக்கும்  வீரர்களாக நுழைந்திருக்கிறீர்கள் .
    தமிழ்  முதலாளித்துவத்தை  பற்றி  வாய்  கிழிய  பேசும்  இருட்டு  வீரர்களுக்கு   சிங்கள்  முதலாளித்துவத்தை பற்றியும் , இலங்கநிறுவங்கள் பற்றியும் பேசுவதற்கு தில் இருக்கிறதா ? என கேட்டேனே  தவிர ,நீங்கள் செய்வீர்களென  எதிர்பார்க்கவில்லை.

  26. mannan says:
    12 years ago

    //மாற்று கருத்து , கருத்து சுதந்திரம்  என்றெல்லாம்நாம்  பேசுவது , புலிகளையும் , தமிழர்  போராட்டத்தையும்  கொச்சைப்படுத்துவதற்குத்தான் , மற்றப்படி நமக்கு அதெல்லாம்  கிடையாது//

    புலிகள் எத்தனை வகையாக  உலகில் வாழ்ந்தார்கள்
    தமிழர் போராட்டம் எந்த வடிவத்தில் எங்கெல்லாம்  நடைபெற்ரது.

    இவையிரண்டிற்குமானா  பதிலை முதலில்  கண்டறிந்தபின்
    இலங்கைத்தமிழரைப்பற்ரி  பேசினால்  யாவருக்கும்  உதவியாகவிருக்கும்.

    • lala says:
      12 years ago

      இப்போது மீண்டும்   தலைப்பை  விட்டு   புலிகள்  எத்தனை வகை , தமிழர் போராட்ட  வடிவம்  போன்றவற்றை  ஆராய  வேண்டுமென கூறுகிறார் .

  27. Sivaramani says:
    12 years ago

    பீலா வின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். பீலா கூறுவதைப் போல இலங்கை அரச உளவாளி லாலா என்பது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். ராஜபக்ச குடும்பத்தோடு நெருங்கிப் பழகி பிஸ்னஸ் பண்ணும் லைக்காவை நியாயப்படுத்த லைக்காவிடம் சில்லரை பெற்றுக்கொள்ளும் லோக்கல் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். லாலா சொல்லிவரும் கருத்துக்க்ள் இதுவே.:
    1.லைக்கா ராஜபக்சவோடு உறவு வைத்துக்கொள்ளலாம் எனென்றால் அவர்கள் தமிழர்கள்.
    2. லைக்கா எடுக்கும் கத்தி படத்தைத் தாக்காதீர்கள் ஏனென்றால் அது தமிழர்கள் எடுக்கும் படம்
    2. லைக்கா தமிழர்கள் என்பதால் கொள்ளையடிக்கும்முதலாளிகள் என்றாலும் பரவாயில்லை தாக்கதீர்கள். எங்காவது சிங்கள முதலாளிகள் இன்ருந்தால் தேடிப்பிடித்துத் தாக்குங்கள்.
    இப்பேர்பட்ட தத்துவ முத்துக்களை உதிர்க்கும் லாலாவிற்கு யார் சில்லை கொடுத்திருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...