இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு கலை பண்பாட்டுத்தளத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியல் அவலங்கள் தென்னிந்திய சினிமாவின் ஊடாகத் திணிக்கப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளால் மறைக்கப்படுகின்றன. ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவங்களும் அவற்றின் சுய கலாச்சார வடிவங்களும் தென்னிந்திய வர்த்தக கலாச்சாரத்தின் வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.லிபாரா மற்றும் தமிழ்வின் ஆதரவில் விஜை தொலைக்காட்சி புலம்பெயர் நாடுகளில் நடத்திய சுப்பர் சிங்கர் நிகழ்வின் பின்னர் லிபாராவின் ஆதரவில் விஜய்பிரசாத் சின்மாயி போன்ற சினிமா பாடகர்களுடன் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதே வேளை லைக்கா மோபைல் நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் சென்னையில் நிறைவடையும் நிலையிலுள்ளது. வன்முறைக் கலாச்சாரத்தின் குறியீடான இத் திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் திரையிடப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுடன் வர்த்தக்த் தொடர்புகளைக்கொண்டிருப்ப்தாகக் கருதப்படும் நிறுவனங்கள் ஈழத் தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்கும் இலங்கை அரச பாசிசத்தின் நோக்கங்களுக்குத் துணைசெகின்றனவா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
வழியில் தேங்காயை எடுத்து தெருவு பிள்ளையாரிற்கு அடித்தான் என்பார்கள்.
அதேபோல்தான் மேற்குலகம் சர்வதேச நிதிநிறுவனத்தை காப்பாற்றுகின்றது. அவர்கள் செய்தது வேறு நாடுகளின் செல்வங்களை அபகரித்து ஏழை நாடுகளையும் மக்களையும் மேலும் மேலும் ஏழ்மையாக்கி தாங்கள் செல்வந்தராக என்றுமே வாழ வழிசெய்கின்றார்கள். உதவியும் செய்கின்றார்கள்.
தமிழர்கள் வாழும் தமிழக்த்தில் கூட இந்த மேற்குலக்த்தைப்
போன்றே திமுக அதிமுக அரசியல் வாதிகழும் செயற்படுகின்றார்கள்.
ஊழல் நிறைந்த அரசியல்,. கறுப்புப் பணம், சொத்துகுவிப்பு, போன்றவையுள்ளன.
இவர்களின் தொப்புள் கொடிகள் அல்லவா இந்த லைக்கா, லெபரா நிறுவனங்கள். இவ்ர்களி டம் தென்னிந்திய அரசியல் வாசனையும்
கொள்கைகழும் இல்லாமலா இருக்கும்.