ஐரோப்பிய நாடுகளில் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் சொர்க்கபுரிகளில் பிரித்தானியாவும் ஒன்று. சில்லைரை வரிகளுக்காக சாமனிய மக்களின் வீட்டுக்கதவுகளைத் தட்டும் பிரித்தானிய அரசு பல்தேசியப் பெரு வியபார நிறுவனங்கள் வரிப்பணத்தை செலுத்தாமலிருப்பதற்கு பல்வேறு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வெளி நாட்டு வேலையாட்களிடமிருந்து வரிப் பணம் என்ற தலையங்கத்தில் பகல்கொள்ளை நடத்தப்படும் போது, மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டவர்கள் உறிஞ்சிக் கொழுக்கிறார்கள் என்று நிறவாதிகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
வரிப்பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக வியாபார முதலைகளுக்கு பிரித்தானிய அரசு ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறைகளில் ஒன்று தான் கோப்ரட் சமூகப் பொறுப்பு (Corporate social responsibility (CSR) )என்பதாகும். கோப்ரட் நிறுவனங்கள் சில சமூகத் திட்டங்களை மேற்கொண்டால் ஒரு குறித்த பகுதி வரிவிலக்கு வழங்கப்படும் என்பதே இதன் உட்பொருள். ஒரு குறித்த தொகைக்கு மேல் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் சீ,எஸ்,ஆர் சேவையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோப்ரட் வியாபார நிறுவனங்கள் பிரித்தானியா தவிர்ந்த நாடுகளில் சேவை செய்யத் தலைப்படும். சேவை என்ற பெயரில் செலவிடப்படும் பணத்தின் அளவு பல மடங்காக அதிகரித்துக் காட்டப்பட்டு வரிப்பணம் செலுத்துவதிலிருந்து இந்த இலாப வெறியர்கள் விதிவிலக்குப் பெற்றுக்கொள்வார்கள்.
வறிய நாடுகளில் இவர்கள் சேவை செய்யும் போது அந்த நாடுகளிலுள்ள அரசுகளுடனும் சர்வாதிகாரிகளுடனும் வியாபார ஒப்பந்தங்களையும், திருட்டுப்பணப் பதுக்கல்களிலும் ஈடுபடுவார்கள். பொதுவாக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இந்த அமைப்புக்கள் போராட்டங்களும், அரச எதிர்ப்புக்களும் தோன்றாமல் பார்த்துக்கொள்வதன் ஊடாக உள் நாட்டு அரசுகளுக்குச் சேவை செய்யும்.
இவ்வாறான உதவிகள் ஊடாக ஒட்டச்சுரண்டப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட வளம் மிக்க நாடுகளில் பிரதானமானது பங்களாதேஷ். அறக்கட்டளைகளும், தொண்டு நிறுவனங்களுமே இந்த நாட்டை நடத்திவருகின்றன.
அரசியலில் தலையிடமாட்டோம் என்றும், நடுநிலமையாளர்கள் என்றும் கூறும் இந்த அறக்கட்டளைகள் சர்வாதிகார அரசியலுக்குத் துணை செல்கின்றன. மக்களைப் போராடவிடாமல் தடுத்து தாம் போடும் பிச்சையில் தங்கி நிற்கும் மனோபாவத்தை ஏற்படுத்தும் இந்த அமைப்புக்கள் அரசுகளின் சமூகவிரோதச் செயல்களைக் கண்டுகொள்வதில்லை. ஆக, அவர்கள் அரசியலில் தலையிடுகிறார்கள்.
தாம் இலங்கை உட்பட பல நாடுகளில் சேவை செய்து வருவதாக மார்தட்டிக்கொள்ளும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் பின்னால் உள்ள நோக்கம் சேவையல்ல இலாப வெறி! சி,எஸ்,ஆர் இன் அடிப்படையில் ஞானம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.
லைக்கா மட்டுமல்ல பிரித்தானியாவின் மிகப்பெரும் வங்கியான பார்கிலேஸ் வங்கி சி.எஸ்.ஆர் ஐ நடத்தி வருகிறது. வங்கியின் உதவித் தலைவர் நைஜெல் ரட் இன் தலைமையில் இயங்கும் அறக்கடளை பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஷெல் நிறுவனம் சுற்றுச் சூழல் உயர்கல்விக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறது. லிபாரா நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. லைக்கா நிறுவனம் மட்டுமல்ல உலகின் எந்த நிறுவனமும் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக அவர்கள் மக்களுக்கு வழங்குவதை விட அதிகமாக மக்களைச் சுரண்டுகிறார்கள். அமசோன் காட்டுகளை நாசப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடிய போது அவர்களை சாந்தப்படுத்தி போராட்டத்தைச் சிதைத்து வளங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அமெரிக்க எண்ணை நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களை நடத்தின.
Lyca Mobile. You are looking good Mr. President.
http://www.growthbusiness.co.uk/the-entrepreneur/best-business-decisions/2403537/the-importance-of-corporate-social-responsibility.thtml
In Sri Lanka, we are currently providing £1 million support to the British Asian Trust for a range of health and livelihood programmes. Whilst, last year in the UK, we sponsored the Vaisakhi, Eid and Diwali In The Square festivals in Trafalgar Square which attracted over 70,000 people.
Very early on we saw CSR as a way to do business and it has allowed us to successfully build a brand which both customers and staff can relate to on a personal level
What you are trying to say through your article? Is it wrong tamils are running big companies? They should not help nay people? What is your suggestion? In which way they have to help? In my view Lyca is cheating the UK government not the people in the Sri lankna. Many Tamil organisations pocketed huge amount of money during the tsunami period and during the sri lanakan civil war time. People who are collected money to LTTE are milliners in the UK and running several business and they never helped our people or maveerar families after end of civil war in sri lanka. The still some organisations are pocketing huge amount of money without helping people. My question is why media people are talking about Lyca mobile? Please tell me the way to help people in sri lanka without government or any political involvement? Please make us clear if you are genuine .
Thank you
Robin
http://www.oecd.org/tax/exchange-of-tax-information/42232037.pdf
Robin and Skynet
Answers??
http://corporatewatch.org/news/2013/nov/12/top-tory-donors-visit-sri-lanka-commonwealth-business-deals
As LycaMobile stated they went there with their 50 bussiness partners and friends, we would like to know is that includes the bussiness elites/giants of britain and india who loot and pollute most of the coutries?
What is the connection between LycaMobile and the connection of Lasantha’s murder?
What LycaMobile is doing in Srilanka from 2005?
LycaMobile influenced the political decisions of britain by giving donation to the ruling pary during the war?
Why LycaMobile’s every action in in west mostly with in tamil diaspora held during the memorial events of eelam and also includes the representative of srilankan government rather supporting for the cause of eelam?
தீபாவளி பொங்கல் வெசாக் எல்லாம் தங்கள் சொந்தப் பணத்தில் மக்கள் கொண்டாட வேண்டும். நீங்கள் யாரோ கொடுதது அவர்கள் கொண்டாடுகிநார்கள் என்றால் மக்களின் உழைப்பை நீங்கள் கொள்ளைடித்துள்ளீர்கள் என்பதே உண்மை. போராட்டத்தின் பெயரால் நீங்கள் குறிப்பிடுவது போல் எல்லாதிருடர்களும் கொள்ளையிட்டுள்ளார்கள். லைக்கா பகிரங்மான ஆதாரங்களோடு நிற்கிறது. மக்கள் சுயமரியாதையுடன் தங்கள் சொந்த உழைப்பில் வாழ அவர்களின் தலைவிவிதியை தாமே தீர்மானிக்க அவர்களுக்கான அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். வேறு குறுக்கு வழிகள் கிடையாது. ஆனால் மக்கள் அத்திசையில் சிந்திக்கா வண்ணம் தடுப்பதே லைக்கா போன்ற தொண்டு நிறுவனங்களின் வேலை.
அதாவதுநம்ப மக்களெல்லாம் முட்டாப்பசங்கநீங்க மட்டும் புத்திசாலி.நீங்கநம்ப ஊருக்கு போயி அரசியல் பண்ணி இந்த சாம்பிராணி பசங்கள ஒரு வழிக்கு கொண்டுவரலாமே.நீங்க ஒருநாளும் மற்றவர் உழைப்பில் கிடைத்த தர்ம பணத்தில் இருந்ததில்லை தானெ தீபாவளியும் கொண்டாடவில்லை ?
பிரபாகரனின் தலைமைல் இந்த போராட்டத்திற்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதையே உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போன நிலமையில் லைக்கா மற்றும் தொண்டு நிறுவனங்கள் கண்ணுக்கு புலப்பட மாட்டாது.
லைக்காதான் ஆதவன். ஆதவன்தான் லைக்கா .
தே …..சிய ஒட்டகங்கள் ரொம்ப நல்லாத்தான் விளையாடுதுங்க.
லைகாவுக்கு எதிராய்ப் பேசாமல் கப்சிப் என்று இருக்கிறார்கள்.
விளம்பரப் பணம் வந்தால் செக்கென்ன சிவனென்ன .
அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா . வரி வட்டி வானம் பொழிகிறது பூமி விலைகிறது ..எதற்கு கொடுப்பது வட்டி ???? என்ன சவுண்டு விட்டாலும் நம் ஆச்சான் வள்ளுவனிடத்தில் மன்டியிட்டே ஆகவேண்டும் .தன் வினை தன்னை சுடும் ….என்னால் முடையாதை என்னுமொருவன் செய்கின்றான் இதையே ஆபிரிக்காவுக்கோ காசாவுக்கோ செய்யுங்கள் என்பது இடது சரி சிந்தனை .பில்கேட் செய்தால் தப்பில்லை பில்லேடன் செய்தால் தப்பில்லை நம்ம புள்ளைகள் நம்ம நாட்டுக்கு அன்னிய நாட்டுக்கு வரிப்பணத்தை கட்டாமல் வரிப்பணத்தை நம்தேசத்து உறவுகளுக்கு கொடுப்பது குற்றமா???????? செரி யூன்னோவும் யூனிசப்பும் செய்வது செரியென்று சொள்ள வருகின்றீர்களா???? எங்களிடமும் 2009 ஆண்டு தொடங்கிய என் ஜீ ஓ முன்னோக்கி என்ற பெயர் கொண்ட என் ஜீ ஓ உள்ளது என்னால் சிறு சிறு விடையங்களை மட்டுமே செய்ய முடிந்தது காரணம் அதிக பணம் தேவை .தயவு செய்து செய்பவர்களை செய்ய விடுங்கள் …லைக்கா…லிபாரா…போன்ற தன்நிர்வன தொண்டு நிறுவனங்கள் தேவை ..சிங்கள ஆட்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் .நீங்களும் முடிந்தால் வைத்திருங்கள் .சட்டம் எல்லோருக்கும் மகேந்தாக்கு அல்ல
Lasantha’s murder was to neutralise the threat of Sunday Leader exposing anymore.
It was the Sunday Leader that exposed the Lyca – Rajapaksa family dealings to illegally secure WiMAX spectrum and steal $100 million by 2007.
A Sunday Leader article (not the one linked by Corporatewatch) even lists current CEO of Lyca Chris Tooley and recently ex-CEO Milind Kangle with Mahinda Rajapaksa’s sister’s son Himal Hettiarachchi.
So Lyca benefitted from the full story NEVER getting out through the Sunday Leader. Under Fredrica Jansz the Sunday Leader did attempt to re-investigate the Skynet scandal but as we know the editor fled the country soon after Rajapaksa family even bought out the Sunday Leader through another proxy.