இனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்களுக்கு உள்ளாகவே உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான ராஜபக்சவின் நிழலில் வியாபாரம் நடத்துவதைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கூச்சமின்றிக் கூறுமளவிற்கு புலம்பெயர் படைப்பாளிகள் தேய்ந்து போயுள்ளனர்.கன் அன்ட் த ரிங் படத்தைத் தயாரித்த லெனின் சிவம் இத்தேய்வின் முக்கிய உதாரணம்.
ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்புவது தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் விடுதலையைப் பெற்றுத்தராது. அவர் தண்டிக்கப்படாவிட்டால் மனிதகுலத்தின் இன்னொரு பகுதியை இன்னொரு இனக்கொலையாளி அழித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி சுதந்திரமாக உலாவர வழிசெய்யும் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானிகள் ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அது நடைமுறைச் சாத்தியமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் தண்டிக்கவேண்டும் என்று கோருவது மனிதகுலத்தின் கடமை.
இந்த நிலையில் லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்கள் ராஜபக்சவுடன் நடத்தும் வியாபாரம் அவர்களின் பணவெறிக்கு உதாரணம். இது போன்றே டாட்டா, ஆதித்யா பிர்லா, வேதாந்தா போன்ற பல்தேசிய நிறுவனங்கள் பிணங்களின் மீது பணத்தைச் சுரண்ட இலங்கை அரசுடன் இணைகின்றன.
இந்த நிலையில் லைக்கா லிபாரா என்ற இரண்டு தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்கள் புலம்பெயர் ஊடகத் துறையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. சரி, தவறு என்பதற்கு அப்பால் மக்கள் பணத்தின் ஒரு பகுதியில் செயற்பட்ட ஊடகங்கள் லைக்கா, லிபாராவின் பண வெறிக்குள் ஈர்க்கப்பட்டன.
இதனால் அந்த ஊடகங்கள தமது அரசியல் வலுவை இழந்து வெறும் கேளிக்கை ஊடகங்களாக மாறியுள்ளன.
இச் சூழலில் லைக்கா நிறுவனத்தின் வியாபாரக் குப்பையாகக் கத்தி என்ற திரைப்படம் வெளியாகிறது. தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களின் தென்னிந்தியக் குப்பைகளின் இறக்குமதி புலம்பெயர் மற்றும் ஈழப் படைப்புகளுக்கு எஞ்சியிருந்த சிறிய இடைவெளியையும் இல்லாதொழித்துள்ளன. லைக்காவிற்கு முன்னரே தென்னிந்தியக் கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரான எழுத்துப் போராட்டம் இனியொருவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது, தென்னிந்தியாவின் கோப்ரட் கூத்தாடிகளின் வருகைக்கு எதிராக்ப் பல்வேறு கட்டுரைகள் வெளியாகியிருந்தன.
லைக்கா என்பது எமக்கு முன்னால் தெரியும் குறியீடே தவிர லைக்கா மட்டுமே எமது குறியாக முடியாது. புலம்பெயர் மற்றும் ஈழப் படைப்புக்களை வளர்ப்பதற்கான போராட்டத்தில் லைக்கா என்பது எதிர்மறைக் குறியீடு. ஈழப் படைப்புக்களை நோக்கி லைக்காவிற்கு எதிரான உணர்வுகளை உள்வாங்கிக்கொள்வதும் அவற்றை ஈழக் கலைகளை நோக்கித் திசைவழிப்படுத்துவதும் அவசியமானது.
லைக்காவின் கத்திபற்றிய சர்ச்சை தேவையற்றது என்று கூறி லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் கலை கலாச்சார அழிப்பு நடவடிக்கைகளை புலம்பெயர் சூழலின் காட்சியிலிருந்து நீக்க முனைகிறார்.
Gun and the ring என்ற திரைப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் லைக்காவின் கத்தி குறித்து பேசத்தேவையில்லை என்று கூறியிருப்பது வேடிக்கையானது. அது கண்டிக்கத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் சமூகத்தொண்டாற்ரிய துரையப்பாவை தமிழரின்
உருமைப்போராட்டத்திற்கு தடையாக இருக்கின்றார் என்று சொல்லிபடுகொலைசெய்து ஆரம்பித்ததே தமிழீழ விடுதலையின்
ஆயுதப்போராட்டம்.. காரணம் அவர் இலங்கை அரசுடன் நட்பாக இருந்தார்
என்பதாலாகும்.
அவரிடம் புலம்பெயர் தமிழீழ கோடீஸ்வரர்கள் போல் சொத்துக்கள்
இருக்கவில்லை. அவர் அரசிடமிருந்து உதவிகளைப்பெற்று
தமிழர்களிற்கு கொடுத்தார்.
அரசிடம் புலம்பெயர் நாடுகளில் ஏதோ வழிகளில் சேர்த்த பண்த்தை
தமிழர்களை கொன்ற குற்ரவாளியென்று குற்ரம் சாட்டப்படும் ஒருவரிற்கு
கொண்டு போய் ஒரு தமிழர் கொடுப்பாரானால் அவர் துரையப்பாவிலும்
கொடியவரா? அல்லது சிறந்தவ்ரா?
லைக்கா ராஜபக்ச குடும்பம் நடாத்திய முதலாவது பாரிய களவை (ஒரு கள்ளக் கொம்பனியின் பங்குகளை) ஸ்பெயினில் மதெய்ராவில் பதியப்பட்ட லைக்கா குழூமத்தின் கள்ளப் பதுக்க மையத்தினூடாக 2007ல் பெரும்பான்மை சிங்களமக்களைக் கொண்ட சிரீலங்காவிலிருந்து ராஜபக்ச குடும்பத்துக்காக சுருட்டியது.
அதைப் புறந்தள்ளி ஏதோ துரையப்பா, புலத்துத் தமிழர் என புலம்பிக்கொண்டிக் கொண்டிருந்தால் மேற்குறிப்பிட்ட உண்மைதான் மறைக்கப்படும்.
லைக்கா,லெபரா, இரு நிறுவனங்களின் பின்னால் இலங்கை,இந்திய
பாரிய பண மோசடிகள் மறைந்துள்ளன. இந்த மோசடிகள் கடந்த
30 ஆண்டுகளிற்கு மேலாக நடைபெற்று வரும் விடயங்கள்.
தமிழீழ போராட்டம் புலம்பெயர்நாடுகளில் இவ்வாறான மோசடிக்கார்ர்களிற்கு தகுந்த பாதுகாப்பை கொடுத்துவந்தன.
அதற்காக இவ்வாறான மோசடிகாரர்களை வெளிப்படுத்தும்
ஊடக்னக்களையும் தனிப்பட்டவ்ர்களையும் துர்ரோகிப் ப்ட்டம்
கொடுத்து கொலை செய்ய பின்னால் இருந்தவ்ர்கள் பணமோசடிக்காரரே
தவிர தமிழ் மக்கள் மீது அக்கறைகொண்ட்வர்களல்ல.
இந்த துரோகிப்பட்டம்தான் இவர்களின் கவசமாக இருந்தது.
அதற்கு அன்று கொலைசெய்யப்பட்ட துரையப்பாவை
இவர்கள் முன்வைத்தே தமது கொலைகளை தொடர்ந்தார்கள்.
தமிழரின் தமிழீபோராட்டம் இராஜ்பகசவின் சிங்கள அரச குடும்பத்தின்
ஊழல்களை காக்கும் கவசமாக செயற்படுகின்றது.
இதில் மக்களின் உயிரினையும் உருமைகளையும் மதிக்காத
பணமோசடிக்கும்பலான சகல இனத்தவ்ரும் ஒன்றாக கையோடு
கைசேர்த்து செயற்படுகின்றார்கள்.
லைக்க , லிபரா . முப்பது வருடம் முன்னால் . துரையப்பா , துரோகிப்பட்டம்,, தமிழீழ போராட்டம் , ராஜபஷ்ச குடும்ப ஊழல் , பண மோசடி , சகல இனத்தவரும் கை கோர்த்து ???
ஏதாவது புரியுதா ??
இவைகளைப் புரியக்கூடியவ்ர்களாக
இலங்கைத்தமிழரில் பெரும்பான்மையினர்
இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அழிவு
இடம்பெற்ரிருக்காது
ஐயா மட்டும் எல்லாவற்றையும் புரிஞ்சு வச்சிருக்கார்போல. இந்த மேதாவி ஒருநாட்டுக்கு தலைவராக இருக்கவேண்டியவர் இந்த மேலுலகம் வந்து குப்பை கொட்டிக்கிட்டு இருக்கார்.
போராட்டம் என்பது மக்களால் ஆரம்பிக்கப்பட வேண்டியது. லைகா, ராஜபக்ஷவின் ஆள் என்பதால், முதலில் ஈழத்தமிழர்கள் லைகா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் வியர்வைதானே லைகாவின் வளர்ச்சி. அதனை செய்தால் அனைத்து நிற்கும்.
எரிவதை இழுத்தால், புகைவது தானாகவே நின்றுவிடும்தானே?
அதை செய்வார்களா எம்மக்கள்? அதனைவிடுத்து யாராக்கோ, ஏதோ ஒரு படத்திற்கு ஏன் வீணான பப்ளிசிட்டி கொடுக்க வேண்டும்.!