லைக்கா நிறுவனம் தயாரித்த தென்னிந்திய சினிமாவான கத்தி திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறும் பலர் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராக புலம் பெயர் நாடுகளில் விழிப்புணர்வைச் சிதைக்க முற்படுகின்றனர்.
இவர்ககளை நோக்கியும் இவர்களை முன்னிறுத்தும் இணையங்களை நோக்கியும் சில கேள்விகள். லைக்கா இலங்கை அரசுடன் வியாபாரம் நடத்தும் நிறுவனம் என்பதால் போராட்டம் தேவையானதே ஆனல் அதன் நோக்கம் தவறானதாக அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சில கேள்விகள்:
1. நீங்கள் பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலுக்கு எதிரானவர்களா?
2. நீங்கள் தென்னிந்திய சிரழிந்த கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களா?
3. நீங்கள் ஈழத்தமிழர்களின் முற்போக்குக் கலை கலாசார வளர்ச்சிக்காக உழைப்பவர்களா?
4. நீங்கள் பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை செல்லும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரானவர்களா?
5. லைக்காவின் போட்டி நிறுவனமான லிபாரா நிறுவனத்தின் விளம்பரங்களை உங்கள் இணையங்களிலிருந்து நீக்கத் தயாரா?
6. லிபாரா நிறுவனம் இலங்கை இனக்கொலை அரசின் அனுமதியுடன் பெரும் பணத்தொகையில் கிராம அபிவிருத்தி வேலைகளைச் செய்கிறது. இலங்கை அரச தொடர்பில்லாமல் அது சாத்தியமில்லை. அது குறித்து லிபாராவிடம் கேள்வியெழுப்பத் தயாரா?
7. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுடன் லிபாரா இணைந்து புலம்பெயர் நாடுகளில் களியாட்டங்களை நடத்துவதை வெளிப்படையாகக் கண்டிக்கத் தயாரா.
8. புலிப்பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் உரிமையாளர் பாரிவேந்தர் பச்சை முத்துவின் நிறுவனங்களைக் கண்டிக்கத் தயாரா?-பச்சைமுத்துவும் இலங்கையில் வியாபாரம் செய்கிறார்.-
9. தமிழகத்திலேயே கல்வியை விற்பனைப் பொருளாக்கி தமிழனின் கல்வியை அழிக்கும் பச்சைமுத்துவிற்கு எதிராக இயன்ற வழிகளில் போராடவும் அம்பலப்படுத்தவும் தயாரா?
10. லைக்கா லிபாரா ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் நிதிவளத்துடன் இயங்கும் ஊடகங்களைப் புறக்கணிக்கத் தயாரா?
11. லிபாராவின் ஐ.பி,.சி மற்றும் ஐ,எல்,சி வானொலி ஆகியன நடத்தும் தென்னிந்திய சினிமாக் களியாட்ட விழாக்களைப் புறக்கணிக்கக் கோருவீர்களா?
30 வருடத்திற்கு மேலாக வேரூன்றிய விடயங்கள். இதில் சம்பந்தப்பட்டவ்ர்கள் முதலைகளாகிவிட்டார்கள். இந்த முதலைகழுடன்
செர்ந்தால்தான் தாங்கழும் வாழலாம் என்ற எண்ணம் பல தமிழர்களின்
மனதில் வேரூன்றி விட்டது.
இலங்கையில் தமிழர் தினந்தோறும் அல்லல்படும்போதும், சிங்கள
இராணுவத்தாலும் தமிழ் ஆயுததாரிகளாலும் கொல்லப்படும்போதும்
மெளனமாக இருந்து தங்கள் திருட்டு சேமிப்புகளை வளர்தெடுத்த்வர்கள்.
இன்று இலங்கை இந்திய அரசின செல்லப்பிள்ளையாகிவிட்டவர்கள்
எதிர்காலத்தில் தமிழர்களிற்கு எதிரான அரசுகளின் கைக்கூலிகள் இவர்கள்தான்.
இவர்களா திருந்தப்போகின்றார்கள்?