லிபியா மீதான நேட்டோ நாடுகளின் விமானத் தாக்குதல்களுக்கு எதிராகவும் லிபியாவுக்கு ஆதரவாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களின் பிரதிநதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இன்று காலை 10 மணியளவில் ஐ.நா அலுவலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட மேற்குல நாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அத்துடன் லிபியாவிலிருந்து எண்ணெய் வளத்தை கொள்ளையிடவே அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் கொலைககளை செய்வதாகவும், நாங்கள் என்றுமே லிபியாவுடனேயே இருப்போம் எனவும், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையை ஒபாமாவிடம் காட்டி கொடுத்துவிட்டார் என்றும், மீண்டும் ஒரு உலக யுத்தத்தை ஏற்படுத்த பான் கீ மூன் முயற்சிசெய்கின்றார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேற்கு நாடுகள் ஒரு புறத்திலும் லிபிய அரசிற்கு ஆதரவானகள் மறுபுறத்திலுமாக இரண்டு மக்கள் விரோத அணிகளிடையே நடைபெறும் யுத்தத்தை அரபு நாட்ட்டு ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகின்றன.








யானை(சிங்கம்?)தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொள்ளுமாம்!
இதற்குத தான் சொல்வது சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன என்று. ஈழவள நாட்டின் வளங்களை திருடி விற்க அண்டை நாடுகளுடன் சேர்ந்து வெறிச் செயல்புரிந்த இந்த இனம் இன்று லிபியாவை காக்க போராடுகிறதா? யாரிடம் போய் சொல்லி அழ. இனியாவது மேற்குலக நாடுகள் சிஙக்ளவனின் பயங்கரவாத செயல்களை புரிந்து கொள்ளட்டும்.
ஆட்டைகடித்து மாட்டைக்கடித்து மனிதனையும் கடித்து இறுதியில் தமிழயினத்தையே கடித்தபுலிகளைப்பற்றி கேள்வி எழுப்பாமல் தனியொரு ஒரு மனிதனின் கற்பனைஎண்ணத்தில் வந்து விழுந்த தமிழீழம் என்ற கோஷம் இலங்கையரசியலில் எவ்வளவு தூரம்சாத்தியம் என்பதைக் கூடா கலந்தாலோசிக்காமல் விவாதிக்க திராணியல்லா புலிவாலுகள் சும்மா! டைரக்டர் சினிமாநடிகர் சீமான்போல் தமிழனம்….தமிழினம் என்று சவுண்டு விடாதீர்கள்.
இன்னொரு இனத்தை மதிக்ககற்றுக் கொள்ளுங்க. அப்பொழுதுதான் தமிழினமும் மரியாதைக் குரிய இனமாக கணிக்கப்படும். கொலைசெய்ய குண்டடிக்க ஒரு இனத்திற்கு பயிற்ச்சிவழங்காதிங்க… ஆதரவுகொடுக்காதீங்க.. அது முள்ளிவாய்காய்காலுடன் முடிவுரை எழுதப்பட்டாயிற்று. அமெரிக்க கப்பல்நந்திகடலை வந்தடையவில்லை என்பதற்காக ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு ஆதரவு கொடுகாதீங்க. நீங்கள் இப்படிஅர்த்தம் இல்லாமல் எழுதவதைப் பார்த்தால் இன்னும் திருந்தவில்லைபோல் இருக்கிறது. முடிந்தால் உங்களாலும் திருந்தமுடியும்.முயற்சி செய்யுங்க..தமிழினத்திற்கு நன்மைசெய்யமுடியும். இதற்கும் தேசியதவைருக்கு வந்தகோபம் தான் உங்களுக்கும் வரும். கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் பயனளிக்கும்.
இந்த விடயத்தில் ஜே.வீ.பி யின் நிலைப்பாடு சரியானதே.நல்லதை வரவேற்க இனியாவது பழகுவோம் .