அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியின் சமூக அரசியல் பின்புலம் குறித்த ஆய்வுகள் பல சந்தர்பங்களில் உணர்ச்சி மிக்க வெற்று முழக்கங்களாக மரணித்துவிடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய உலக சூழல், புதிய அரசியல் மாற்றங்கள், மேற்கின் மீள முடியாத பொருளாதார நெருக்கடி, தன்னை மறு ஒழுங்கமைக்க முயலும் ஏகாதிபத்தியம் போன்ற அனைத்து அரசியல் நகர்வுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அரபு நாடுகளின் மக்கள் எழுச்சி குறித்த ஆய்வுகளில் மட்டுமன்றி உலகின் ஒவ்வொரு மூலையிலும் நிகழ்கின்ற மாற்றங்களின் பின்னணியில் இவற்றின் மறு தாக்கங்களைக் காணமுடியும். இலங்கையின் இனப்படுகொலையின் பின்னான அதிகார நிறுவனங்களின் அணிசேர்க்கை தெற்காசியாவின் குறிப்பான புறச் சூழலின் புதிய மாற்றங்களை அறிவிக்கின்றது.
ஈழப் போராட்ட வரலாற்றில் பின் தங்கிய பழமைவத சிந்தனையை உருவாக்கிய அரசியல் தலைமையைப் போன்றே அரபு நாடுகளின் பின் தங்கிய உற்பத்தி முறையும் கூட அமைந்திருந்தது. எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே அமரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், கழுகுகள் போல அரபு நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அரபு நாடுகளிலிருந்த பெரு நிலப் பிரபுக்கள் எண்ணைப் பிரபுக்களானார்கள்.எண்ணைப் பிரபுக்கள் அதிகாரம் செலுத்தும் சமூக அமைப்பு முறையை வளர்ச்சிகளின்றிப் பாதுகாப்பதற்கு மேற்கு நாடுகள் தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டன.
அரபு நாடுகளின் உற்பத்தியின் வளர்ச்சி திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. பிரபுக்களின் அதிகாரத்தை நிலைபெறச் செய்வதற்கான சிந்தனை முறை, சட்டவமைப்புக்கள், நீதித்துறை, மத ஒழுங்கமைப்பு என்பன உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாறா நிலைச் சமூகம் என்பதும் அதன் உற்பத்தி முறை என்பதும் ஒற்றைப் பரிமாணத் தலைமைக்கு உரியதாக அமைக்கப்பட்டது. சில நாடுகளில் மன்னர்களும், சில நாடுகளில் மன்னர்கள் போலச் செயலாற்றிய சர்வாதிகாரிகளும் நிலவிய நிலப்பிரபுத்துவம் சார்ந்த சமூகக் கட்டமைப்பின் தலைவர்களானார்கள்.
எண்ணை தவிர எந்த வகையான ஏனய உற்பத்தியும் அங்கு வளர்ச்சியய்டைவில்லை. மனித குல வரலாற்றின் முன்னோக்கிய வளர்ச்சி என்பது இயற்கைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாகிறது. அரபு நாடுகளில் இயற்கையைப் பயன்படுத்துகின்ற நிகழ்வுப் போக்கே காணப்பட்டது. பண்ணையடிமை முறை அங்கு இலாதிருந்தாலும், எண்ணை விற்பனையில் பங்குபோட்டுக்கொண்ட வருவாய் என்பது மாற்று உற்பத்திக்கான தேவையை அருகச் செய்திருந்தது. இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மன்னர்கள் அல்லது சர்வாதிகாரிகளின் அதிகாரம் போதுமானதாக இருந்தது. உழைக்கும் வர்க்கம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அரபு நாடுகளின் அடிப்படைவாதம் இழையோடிய இஸ்லாமும் இந்த சமூக கட்டமைப்பை மேலும் வலுப்பெறச் செய்வதாக அமைந்திருந்தது.
மேற்குலக ஏகாதிபத்தியங்களும் இவ்வகையான உழைக்கும் வர்க்கத்தைக் கொண்டிராத சமூக அமைப்பை பேணுவதனை ஊக்குவித்தன. அவர்கள் இந்த நாடுகளைச் சுரண்டுவதற்கு ஏதுவாக அமைந்ருந்த அவ்வகையான அமைப்புக்கள் நிலப்பிரபுத்துவ சிந்தனை முறையையே கொண்டிருந்தன.
முதலாளித்துவப் பொருளாதாரம் எழுபதுகளில் நெருக்கடிக்கு உள்ளான போது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. வறிய நாடுகள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தும் உலக மயமாதல் 90 களின் பின்னான காலப்பகுதியில் அதன் உச்ச நிலையை அடைகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுகளின் பின்னர் உலகமயமாதல் கொள்கையின் முழுமையான திட்டமிடல் நடைமுறைக்கு வருகின்றது. மேற்குக் கலாச்சாரத்தின் ஏற்றுமதி, மொழி ஆதிக்கம், தன்னார்வ நிறுவனங்களின் விரிவாக்கம் என்ற பல சமூக மற்றும் நிர்வாக அலகுகளை இது கொண்டிருந்தது.
2000 இற்குப் பின்னான பத்தாண்டுகளில் உலக மயமாதல் அரபு நாடுகளிலும் ஊடுருவுகின்றது. அங்கே எண்ணை தவிர்ந்த புதிய உற்பத்திகளும் உருவாகின்றன. தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், ஆடைத் தொழில், கட்டுமானத் தொழில், சேவைத் துறை, உல்லாசப் பயண நிறுவனங்கள் போன்ற பல்வேறு உப உற்பத்தித் துறைகள் உருவாகின்றன.
இவ்வாறான உற்பத்தி வளர்ச்சியில் பங்கேற்ற படித்த மத்திய தர வர்க்கமும், உழைக்கும் மக்கள் பிரிவும் உருவாகின்றது. இவர்களின் பணச் சுழற்சிக்கு மன்னராட்சி அல்லது சர்வாதிகார அரசுகள் ஏதுவானதாக இருக்கவில்லை.
தவிர உலகமயமாதலின் பின்னான சுரண்டல் அமைப்பு எண்ணை மூலதனத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.
அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான வெறுப்புணர்வு மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது. துனிசியவைத் தொடர்ந்து யெமென், எகிப்து, ஈராக், சிரியா போன்ற பல நாடுகளில் மக்கள் எழுச்சிகள் சர்வாதிகார அரசுகளை அசைத்துப் பார்க்கின்றன.
உலகின் எந்தப் போராட்டமும் இரண்டு வர்க்கங்களின் தலைமையை உருவாக்க வல்லது. ஒன்றில் ஒடுக்கும் வர்க்கம் அன்றி ஒடுக்கப்படும் வர்க்கம். வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்ற போராட்டங்களை இந்த எல்லைக்கு அப்பால் சென்று நியாயம் கற்பிக்க முடியாது. முதலாளித்துவப் பொருளதார அமைப்பில் ஒடுக்கப்படும் வர்க்கம் பாட்டாளிகளாகவும், ஒடுக்கப்படும் வர்க்கம் தேசிய முதலாளிகளாவும் திகழ்கின்றன. உலக மயமாதலின் பின்னான சூழலில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்பதன் இருப்பு கெள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆக, இரண்டு எதிர் எதிர் வர்க்கங்களாக ஏகாதிபத்திய மூலதனத்தின் தரகர்களாகத் செயற்படும் தரகு முதலாளித்துவ வர்க்கமும், சமூகத்தின் அடிநிலையிலுள்ள உழைக்கும் மக்களும் உருவாகின்றன.
தேசிய இனங்கள் ஒடுக்கபடும் போதோ, தேசிய அரசுகள் அழிக்கப்படும் போதோ, இந்த இரண்டு வர்க்கங்களில் யார் தலைமதாங்குவது என்பது சிக்கலான ஒன்றல்ல. சுய நிர்ணய உரிமை கொண்ட தேசங்களின் தன்னாதிக்கத்திற்கு எதிரான தரகு முதலாளித்துவமா அன்றி அதற்கு எதிரான உழைக்கும் மக்களா என்பது தான் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வினா.
அரபு நாடுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆக, உழைக்கும் மக்களின் தலைமையில் நடத்தப்படாத எந்தப் போராட்டமும் தரகு முதலாளிகளின் அதாவது ஏகாதிபத்தியத் தரகர்களின் பிடியில் சிக்குண்டு சிதைந்துவிடும். ஈழத்தில் கூட இதுதான் நடைபெற்றது.தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கருதும் தேசிய விடுதலை இயக்கப் போராளிகள் இராணுவத் தாக்குதலின் போது கொக்கொகோலா அருந்தும் கலாசாரத்தை ஈழத்தில் மட்டும் தான் காணமுடியும். ஆக, தலைமையற்ற அரபுலக எழுச்சிகளெல்லாம், ஏகாதிபத்தியத் தரகர்களின் கைகளில் மறுபடி சிக்கிக் கொண்டது. இப்போது துனிசியாவிலும், எகிப்திலும் சில்லறைச் சீர்திருத்தங்களோடு அமரிக்க ஏகபோக அணியின் முகவர்களே ஆட்சிக்கு வந்துள்ளனர்.
எது எவ்வாறாயினும் இவ்வாறான போராட்டங்கள் அனைத்தும் அமரிக்க உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வு கூறுவது போன்று எதிர்வரும் பத்தாண்டுகளின் “சிக்கலான”, “எதிர்கொள்ளப்பட வேண்டிய” பிரச்சனையாக அமையும்.
ஆனல் இவ்வாறான போராட்டங்கள்,
1. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மக்கள் போராட்டங்களில் நம்பிக்கை தரவல்லன.
2. அரபு நாடுகளின் மீதான தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் வகையில் அரபுலக மக்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
3. ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம் மிகத்தெளிவாக வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது.
4.ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் ஒருமைப்பட்டையும் ஒன்றிணைந்த சக்தி உருவாவதற்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.
5. மேற்கு அதிகாரவர்க்கத்தின் நிறவாத அரசியலுக்கு அப்பால் போராடும் பிரிவினரிடையேயான ஐக்கியம் வளர்ச்சிய்டைதற்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.
லிபிய நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தப்படும் தாக்குதல்கள் அரபு மக்களுக்கு ஏகபோக அரசுகளை அடையாளம் காட்டியுள்ளது. கடந்த வாரம் மரோக்கோ நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் பிரன்சிற்கு எதிரான சுலோகங்களும் முன்வைக்கபட்டன.
சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் கடாபி எதிர்ப்பு ஆயுதக் குழுக்களை நேட்டோ நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன.
“அரபு தேசியத்தின்” பிதாமகனாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட கடாபி ஆரம்பதில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவே தனது விம்ப்பத்தை உருவமைத்துக்கொண்டர். அமரிக்க இரடைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் ஏகாதிபத்திய அரசுகளோடு தற்காலிகமாகச் சமரசம் செய்துகொண்டதும் அரபு நாடுகளில் கடாபியின் அரபுத் தேசியம் வலுவிழந்து செல்வாக்கற்ற நபராகிவிடுகிறார்.
2008ம் ஆண்டிற்குப் பின்னர் கடாபி இழந்த செல்வாக்கை மீளப் பெறும் நோக்கில் பல முனைப்புக்களை மேற்கொள்கிறார்.
1. வெனிசூலா, கியுபா போன்ற அமரிக்க எதிர்ப்பு நாடுகளோடு உறவை வலுப்படுத்துகிறார்.
2. ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடையும் சீனாவுடனான பல வியாபார ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன, 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள், பெற்றோல் குதங்களிலும், கனிமச் சுரங்கங்களிலும் வேலைசெய்கிறார்கள்.
மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மேற்கிற்கு லிபியாவை கடாபியிடமிருந்து விடுதலை செய்து முற்று முழுதான மேற்குலத்தை சார்ந்த சர்வதிகாரியிடம் ஒப்படைப்பதே நோக்கமாகவிருந்தது. ஆப்கானில் அல்கைதாவை உருவாக்கியது போன்றே லிபியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை லிபிய சர்வாதிகாரி கடாபிக்கு எதிராக அமரிக்கா ஊக்குவித்தது.
380 குடும்ப உறுப்பினர்களை அரசின் பிரதான அதிகார மையங்களில் உயர்பதவிகளில் அமர்த்தியிருக்கும் ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை விஞ்சிய கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியைப் பயன்படுத்திக்கொண்ட மேற்கு ஆதரவு ஆயுதக் குழுக்கள் அமரிக்க ஆதரவுடன் அதிகாரத்தைக் கையகப்படுத்த முனைகின்றன.
இவர்களுக்கு ஆதரவாகவே நேட்டோ நாடுகள் இதுவரைகாலமும் ஆதரவு வழங்கிவந்த முஹ்மவர் கடாபியின் அரசை கவிழ்க்கும் நோக்கோடு மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஆயுத வன்முறையை மேற்கொள்கின்றன.
ஈராக்கிலும் ஆப்கானிலும் லிபியாவிலும் மட்டுமல்ல, சரிந்துவிழும் ஏகாதிபத்திய அமைப்பை மறுசீரமைத்துக்கொள்வதற்காக அமரிக்க அரசு இன்னும் பல நாடுகளில் “ஜனநாயகத்தை” மீட்கும் பணிக்காக மக்கள் குடியிருப்புக்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்துவது தவிர்க்கமுடியாதாகிவிட்டது.
உலகில் இரண்டு முகாம்கள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவதாகப் பலவீனமடைந்துவரும் ஏகாதிபத்தியம் இரண்டாவதாக பலமடைந்துவரும் ஒடுக்கப்படும் மக்கள்.
அமரிக்க ஐரோப்பிய நலன்களுக்காகவன்றி, லிபிய மக்களின் நலன்களை முன்வைத்து கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முகாமில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் தன்னை இணைத்துக்கொள்ளுவதனூடாகவே தேசியத் தன்னுரிமையை வென்றெடுக்க முடியும்.








நல்ல கட்டுரை எழுதியுள்ளீர்கள்.வரவேற்கத்தக்க சிந்தனை.
ஏகாதிபத்தியவாதிகள் தமது நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கு யுத்த இயந்திரத்தை இயக்க ஆரம்பித்துள்ளார்கள்,எப்போதும் போல பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்ற நிலையிலேயே அவா்கள் செயற்படுவது நாமறிந்ததே,அடிப்படையில், அவா்கள் கொள்கைகளிலுந்து நாம் வேறுபட்டாலும் யுத்த இயந்திரம் நகரும் வேகத்தில் நமக்கு சில நன்மைகள் ஏற்படுமாயின் அதை பற்றிப்பிடித்துக்கொள்வதே சாணக்கியமும் காலத்தின் தேவையுமாகும்.
தற்போதய நிலைமையை மிகவும் தெளிவாக விளக்கியுள்ள ஆக்கம் நன்றி நாவலன் அவா்களே.
முதாலித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் போது உலகத்து வளங்களை மறுபங்கீடு செய்யும். இதுவே பாட்டாளிவர்க்கத்தை யுத்தத்தில் மூழ்கடிப்பது…இறுதியில் பாட்டாளிவர்கத்தை தொழிலாளவர்கம் தலைமையேற்று புரட்சிக்கு (சமூகமாற்றம்) இட்டுச் செல்லும்.
முதலாம்உலகயுத்தமும் இரண்டாம்உலகயுத்தமும் இந்த பாடத்தைத் தான் கற்றுத்
தருகிறது. யூகோசுலவக்கியாவும் ஆப்பானிஸ்தான் ஈராக்யுத்தங்கள் லிபியா யுத்தங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டி நிற்கின்றன. எகிப்து துனேசியா நாடுகளில் எழுச்சிகள் லிபியா எதிர்ப்புரட்சியாளாகள் “அல்லாவோஅக்பர்” என்று கோஷமிட்டது போல் கோஷமிடவில்லை. வேலையில்லா திண்டாட்டம் வானளாவுஉயர்ந்த அத்தியாவசி பொருட்களின் விலைகள் அங்கு ஆட்சிபுரிந்த சர்வாதிகாரப்போக்கு மக்களை அலட்சியம் செய்து சொத்து சேர்த்தது.
பட்டப்படிப்பை முடித்த இளைஞனை மரக்கறிவண்டில் தள்ளவைத்து வாழமுயன்றவனை அதற்கும் அதிகாரிகள் தொந்தரவு கொடுக்கும் போது இந்த ஜனநாயக மறுப்பாளர்களுக்கு சாபம் இட்டுவிட்டு தன்னைதானே தீயிட்டு மாண்டு போனான். அவன் தீயில்இருந்து தான் ஓர்ரிருமாதங்களிலும் எகிப்தும் துனேசியாவும் கொளுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. இன்று எகிப்திலும் துனேசியாவிலும் முபாராக்கும் பென்அலியும் இல்லையென்கிற போதிலும் அவர்களை ஒத்தஉறவுகாரர்களே ஏகாதிபத்திய விசுவாசிகளே ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்களின் போராட்டஉணர்வுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறதேயொழிய அணைந்து விடவில்லை. அடுத்து அடிக்கப் போகிற காற்றில் சுவாலைவிட்டெரியும். லிபியாவில் நடக்கும் யுத்தம் முற்றிலும் வேறுபட்டது.அமெரிக்க பிரித்தானிய பிரான்ஸ் உளவுபடைகளால் நீண்டகாலதயாரிப்பில் தயாரிக்கபட்ட குட்டிமுதாலித்தவ புரட்சிக் கும்பல் ஏகாதிபத்திய விசுவாசிகள். இவர்கள் கடாபியை விட மேலதிகமாக எதையும் செய்யப்போவதில்லை. இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு தமதுவளங்களை விட்டுக்கொடுத்து சரணயடைவதே இவர்களின் இறுதிநோக்கம்.அதுவே “அல்லவேஅக்பர்” என்கிற கோஷம். முதாலித்துவநெருக்கடியதால் விளைந்த பணவீக்கம் வேலையில்லாதிண்டாட்டம் வாழ்க்கைதரத்தின் வீழ்ச்சி மருத்துவகுறைபாடு கடைசி நான்குவருடங்களிலும் மும்மடங்காக ஏறிபோனவிலைவாசிகளின் உயர்வைப்பற்றி எந்தவித கேள்விகளும் இல்லாமலே கிளர்ச்சி செய்கிறார்கள். இவர்களை கூலிப்போராளிகள் என்பதை விட வேறு என்னவென்று சொல்வது? இதுவே இதுவே அரபியநாடுகளில் எழும்கிளர்ச்சிக்கும் லிபியாவில் எழும்கிளர்ச்சிக்கும் இடையில்யுள்ள வேறுபாடு. லிபியா கிளர்ச்சிகளில் சதிகாரர்களான இந்த வல்லரசுகள் வெற்றிபெறுவார்களேயானால் அடுத்தது ஈரான்னையும் வடகொறியாவையும் ரத்ததில் மூழ்கடிக்க தயங்கமாட்டார்கள். அதுவரை சர்வதேசதொழிலாளவர்க்கம் காத்திருக்குமா? என்பதே! எஞ்சியிருக்கும் கேள்வியாகும்.
There is something missing in your comment my brother Chanthiran rasa.
அந்த “சம்திங்” தான் என்னவென்பதை தெளிவு படுத்தலாம் தானே! திருவாளர் தமிழ்மாறன்.
அதுதானே! ஆரோக்கியமானது. அதில் உங்களுக்குகென்ன கஷ்ரம்?.
ஏற்கவே உங்கள் தமிழ் எழுத்துக்கள் கன்னடாவா? ஆந்திராவா ??
என எண்ணத் தோன்றுகிறது. இதற்குள் ஆங்கிலமும் வேறு. இருந்தாலும் பிரச்சனை இல்லை. சைகை பாஷையானிலும் உணர்வுகளை மதிப்பவன் நான். முயற்ச்சி செய்யுங்கள்.
பிரியமுள்ள சந்திரன் ராசா, எப்போதும் நீங்கள் வயிற்றூவலிக்கு மருந்து கேட்டால் தலைவலிக்கு மருந்து தரும் பரியாரி ஆக இருக்குறீர்கள்.ஆனாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூன்றூ கால் என்பதில் உறூதியாக இருக்கிறீர்கள்.இதுதான் எனக்கு உங்களீடம் பிடித்தது.சமயத்திற்கு தகுந்த மாதிரி தொப்பி மாற்றாமல் ஓரே தொப்பியோடு இருப்பது இன்றய உலகில் சாத்தியமில்லை.அது சரி வேர்ல்ட் கப்பை நாங்கள் தூக்குகிறோம்..
பிரியமுள்ள என்று தொடங்குகிறீரே! என்னையும் கிரிக்கெட் ரசிகனாக்கவா? இவற்றில் எனக்கு சற்றும் ஈடுபாடு கிடையாது.
சந்திரன் ராசா நீங்கள் பலவிடயங்களை கனகச்சிதமாக உள்வாங்குகிறீர்கள் வெளிவிடுவதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை இருப்பினும்
எங்கோ தங்களின் தமிழ் மக்கள் பற்றிய புரிதலில் தவறு ஏற்படுகிறது. ஈழவிடுதலை போராட்டத்தில் ஏற்ற்பட்டதவருகள், தமிழ் மக்களிடம் காணப் படக்கூடிய அடிப்படையற்ற சுஜநலம், மற்றவர்களை மதித்து அரவணைத்து உள்வாங்கும் தன்மை இல்லாதது போன்றவற்றால் நான் கூட விசனப் படுகின்றேன் இருப்பினும் உங்களால் விளங்கி கொள்ளக் கூடிய அடக்கப் பட்ட அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் மக்கள் குறித்து நீங்கள் கொண்டிருக்கக் கூடிய கருத்தியல் ஏற்புடையதல்ல. இலங்கையில் மிகச் சிறுபான்மையான இனமாக தெலுங்கு மொழிச்சையலை கொண்டிருக்கக் கூடிய சிறுபான்மை இனமாக ஒரு காலத்தில் சிங்களவர்களே இருந்திருக்கின்றனர். ஏனெனில் மிக கிட்டிய காலத்தில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆட்ச்சிகாலத்தில் ஆங்கிலேயருக்கும்
ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் நடந்த போரில் மன்னனால் 1000 ஆங்கிலேயப் படைகள் கைது செய்யப் பட்டு லெவெல்ல என்ற இடத்தில் வைத்து கொலைசெய்யப் பட்டனர். அதில் ஒரு வீரர் காயத்துடன் உயிர் தப்பி கண்டி, குருநாகல்,
புத்தளம் ஊடாக கொழும்போ தப்பிச் சென்ற போது வழி முழுக்க தமிழ் குடியிருப்புகளே இருந்ததாக குறிப்பிடுகிறார். அனுராதபுரத்தில் காணப் படும் பல தமிழ் ஊர் பெயர்கள் இன்றும் தமிழர்கள் அங்கு வாழ்ந்ததை ஊர்ஜிதப் படுத்தும் D .S இன் காலத்தில் தான் அதிக சிங்களப் பெயர்கள் அனுராதபுரத்தில் உள்ள கிராமங்களுக்கு சூட்டப்பட்டன. வன்னியில் உள்ள தர்மபுரம் அனுராதபுரத்தை பூர்விகமாக கொண்ட தமிழ் மக்கள் 1977 இனக் கலவரத்தின் பின்னர் வந்த மக்களை அதிகம் கொண்டது.
ஆக வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள இடங்களில் வாழ்ந்த மக்கள் தமது சமயத்தையும் பின்னாளில் மொழியையும் மாத்தி/ மறந்து/அல்லது மறக்கடிக்கப் படும் சூழலில் இருந்திருக்கிறார்கள். அநாகரிக தர்மபாலாவின் காலத்தில் அனுராதபுரம் குருநாகல் புத்தளம் கண்டி கம்பகாவின் சில இடங்களில் இருந்த மலையாளிகள், தமிழர்கள் மிக விரைவாக சிங்கள மயமாக்கம் சூழலுக்குள் அகப்பட்டு கொண்டனர். நமது யாழ்ப்பாண ப(த)டித்த கூட்டி கொ(கெ)டுக்கும் கனவான்கள் கருவாக் காட்டில் சிங்களப் பெண்களுடன் குத்தாட்டம் அடித்து தமது மேட்டுக்குடி கலாச்சாரத்துடன் மாத்திரம் வாழ, மேட்டுகுடிகளால் ஒதுக்கப் பட்ட வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள் மெல்ல தமிழ் இனிச் சாகும் என்றார்கள்.
இப்போது மாத்திரம் என்ன? ஒதுக்கும் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கு நாளை சிங்கள மயமாகும் ஏனெனில் ஒருவரை மாறி ஒருவர் ஒதுக்குவதை நாம் இன்னும் கைவிடவில்லை. ஆனால் நல்ல அமைப்பும் நல்ல சமுக உணர்வுள்ள தலைவர்களும் எமக்கு கிடைக்கும் போது நாம் வரலாற்று அழிவில் இருந்து தப்ப முடியும். இல்லையேல் சந்திரன் ராசா சந்திர ராஜே வாகவும் தமிழ் மாறன் தமில மாறே யாகவும் மாறும். குருநாகலில் 1940 களில் எழுது வினையராக கடமையாற்றிய ஒருவர் சொன்ன விடயம் ஒன்றை இங்கு கூறுகிறேன் அங்கு வாழ்ந்த பல சிங்களவர்களின் பெயர்கள் இப்படித்தான் இருந்தன, கந்தசாமிகே முதியான்சே, போன்னுச்சாமிகே பொன்னம் பெருமா. ஆக மொத்தத்தில் நாமும் காலத்தை வெல்ல முடியாத அறிவற்ற இனமாக வாழ்கிறோம் வெறும் வாயளவில் அனைத்திலும் பந்தா காட்டும் அறிவீலிகளாக.
அட தம்பி ராசா, ஐயா துரை என்று பாடம் சொல்லி இவர்கள் இனியும் படிக்கப்போவதில்லை. இப்பேர்வழிகள் முன்பு பாடசாலைகளுக்கு புறமுதுகு காட்டி ஓடிய புண்ணாக்கு வீரர்கள். இன்று இணையத்தில் வந்து தாளம் தப்பாது கத்தல் செய்கிறார்கள். மாரித் தவளை கத்துவதை தடுக்க முடியாது, ஆனால் அது தானே கத்தி அடங்கிவிடும்.
படிக்க மிகவும் பிடித்திருக்கிறது.இன்றூ வெவ்வேறூ தேசங்களீன் கரைகளீல் பெருமூச்சு விட்டு நமது குஞ்சுகள் காணாமல் போய் விடுமோ எனும் கவலையுடன் வானத்தைப் பார்க்கிறோம்.நிலவைப் பார்த்து எத்தனை நாளாச்சு???
திரு.ராகவன் என்னை கேள்விகேட்டு விட்டு அதற்குரிய பெரும்பான்மை பதில்களை
நீங்களே கொடுத்துள்ளீர்கள்(?). இனமா? உழைப்பா?? முன்னுரிமை முதல் பெறவேண்டுமென்றால் அதற்கு தாங்கள்
என்னபதில் சொல்லுவீர்கள்? என்னை கேட்டால் உழைப்புத்தான் முன்னுரிமை பெறவேண்டும் என்பேன். வரும்காலத்தில் சந்திரன்.ராஜா சந்திர.ராஜே எனப்பெயர்மாற்றப்பட்டால் இதில் எனக்கு எந்தநஷ்டமும் ஏனெனில் உலகத்தில் எந்தயினத்தையோ மதத்தையோ நான் பகைமை பாராட்டியதில்லை. முப்பதுவருடங்கள் நான்ஜேர்மனியருடன் வாழ்ந்தும் எழுபது வருடங்களுக்குமுன்பே விற்பனைக்கு மனிதக்கொழுப்பில் இருந்து சவர்காரம் உற்பத்தி செய்ய முயற்சித்தபோதும். பகைமை பாராட்டி நாம்வாழ்ந்திட முடியாது என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். பலஇடங்களில் என்னால் எழுப்பப்பட்ட கேள்வியைத்தான் நான் உங்களிடமும் எழுப்புகிறேன். யார் இந்த தமிழினம்?. மலையகமக்கள் தமிழினத்தில் வேறுபட்டவர்களா? முஸ்லீம்மக்கள் தமிழ்மக்கள் இல்லையா? யாழ்பாணி மட்டக்கிளப்பான் என இருபாகுபாடு நடக்கிறதே இவர்களை எந்த இனத்தில் சேர்ப்பது? மனிதக்கொடுமையில் பெரியகொடுமை சாதியொடுக்கு முறையல்லலவா?
இவர்கள் எல்லாம் தமிழினத்தின் கணக்கில் வரவு வைக்கப் படமாட்டார்களா?
இருபதுமைல்கள் தாண்டிப் பயணம் செய்தால் தமிழ்நாட்டில் பாப்பாபட்டி கீரிப்பட்டி என்கிற கிராமங்கள் இருக்கிறது. இருப்பவர்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்கள். நாட்டிற்கு செல்வத்தை கொடுப்பவர்கள் இவர்களே!.
இவர்களுக்கு கல்விமறுக்கப் படுகிறது( பணம் இருந்தால் படிக்கமுடியும் என்பது என்காதில் விழுகிறது). சுகந்திரமாக எல்லாதெருக்களிலும் நடக்கமுடியாது. மதில் கட்டிவைத்திருக்கிறார்கள். வரட்சிகாலத்தில் அவர்களுக்கு உயிரை பாதுகாக்க உணவாக அனுமதி கொடுப்பது காய்ந்த வயல்களிலுள்ள எலிபொந்துகளே! அவர்களுக்கு எலியும் உணவாக கிடைக்கும்.எலிசேர்த்து வைத்த நெற்கதிர்களும் உணவாகக் கிடைக்கும். நிச்சியமாக கைகொடுப்பது நீங்கள் சொல்லும் தமிழினம் அல்ல. ஈழத்து அனுபவங்கள் கண்டதும் கேட்டதும் உங்களுக்கு நிறையவே இருக்கிறது. இந்த குட்டிமுதாலித்துவ வர்க்கம் (ஏழைகளை-உழைப்பாளிகள் தான் ஏழைகளாக போனார்கள்) மற்றவர்களை பலிகொடுத்துவிட்டு சாதுரியமாக தப்பித்துக் கொள்ளும்.
யாழ்பாணத்து வக்கீல்-முதாலித்துவ சட்டநிபுணர்களுக்கு யாரும் தமிழினத்தை குத்தகையாக கொடுத்துவிட வில்லை. தமிழினத்தில் தோன்றிய உழைப்பாளிமக்களுக்கும் அந்த தகுதி உண்டு. யார்? தமிழினம் என்று தெரியாதவர்கள் தமிழினத்தைப் பற்றி கதைப்பது விந்தையல்லவா? யாழ்பாணத்தில் ஒருவிதாணை ஒருஓவசியர் ஒரு ரீ.ஏ. ஒருசங்கடை மனோஜர் ஒரு ஒரு சீ.ஓ. ஒரு டி.ஆர்.ஓ ஊழல் செய்யாத பேர்வழிகளை எங்கேயாவது போகிற பாதையில் கண்டீர்களா? ராகவன்.
ஆகவே இங்கு இனம் என்பது பசாங்குவார்த்தை இது தமிழனத்தின் மேல்தட்டு வர்க்கத்தால் அடிக்கடி உச்சரிக்கப் படுகிறது. இந்த உச்சரிப்பு ஒருசில அடையாளங்களை தவிர ஒன்றுபட்டிருக்கிற இரு இனங்களுக்கான மோதலையும் ஏற்படுத்துகிறது. உங்கள் சிந்தனை மேல்தட்டு சிந்தனையென்றால் எனதுசிந்தனை கீழ்தட்டு நிந்தனை
இதில் வர்க்கமுரண்பாடுகளே முன்நிற்ப்பதை கண்டு கொண்டோம்.
இன்றைய அமெரிக்கர் நேற்றைய ஐரோப்பியர். அடிமையை சங்கிலியுடன் உட்புகுந்து வந்த இனத்தில் ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி.
காலங்கள் மாறும்போது அதன்வீச்சுகளும் கண்ணில் படும்.
பொருளாதரநலன்களுடன் சுருக்கபட்ட இந்த உலகமயமாக்கலில் இனங்கள் அழிவதும் இருந்த இடமில்லாது போவதும் சிலவேளைகளைளில் ஒருசில காலகட்டங்களில் சிலயினங்கள் நின்றுபிடிப்பதும் தவிர்க்க முடியாதைவையே.
எக்காலத்திலும் என்நேரத்திலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பதே உயர்ந்தவழி என்பதே எனது தாழ்மையான கருத்து. இனத்திற்கு எதிராக இனத்தையும் மதத்திற்கு எதிராக மதத்தையும் ஏவிவிடுவதில் பயன்பெறப் போவது யார் என்பது தங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன். ராகவன்.
குறிப்பு; ஒரு பொதுகருத்தை பெறுவதற்காகவே இங்கு விவாதிக்கிறோம்.இதில் யாரின் சுயநலத்திற்கும் இடமில்லை. இதில் அறுவடைசெய்யப் போகிறவர்கள் தமிழரும் இல்லை.சிங்களவரும் இல்லை. ஈழத்துதொழிலாளவர்க்கமே. இந்த நம்பிக்கைதான் என்னில் மிஞ்சியிருக்கிறது. தங்களுக்கு எப்படியோ?.
சந்திரன் ராசா,
உங்கள் வாக்கியங்கள் சில இடங்களில் முற்றுப்பெறாமலும் தெளிவின்றியும் உள்ளன புரிந்துகொள்ள முடியவில்லை.
இனம் என்ற ஒன்றுக்குள்ளேயே மனிதா்களை மனிதா்கள் அடக்கியும் ஒடுக்கியும் மிருகங்களை விட கேவலமாக நடத்துகின்றபோது இனம் என்ற ஒன்று தேவையா என்று கேட்பதும் அதற்காக போராட வேண்டுமா என்பதும் நியாயமாகவே தோன்றுகிறது இருந்தாலும் நம்பிக்கையை நாம் இழக்க முடியாதல்லவா சில வேளை நாளை ஒரு புது நாளாக இருந்துவிடலாம்.
எந்த நஷ்டமும் இல்லை என்பதுதான் வரவேண்டிய வசனம் அதில் “இல்லை” என்பது தான் தவறுப்பட்ட சொல்.
மற்றையது.. கொழுப்பு சவர்காரம் என்று வருகிதே! அது ஜேர்மனியில் தொழிலாளவர்கப் போராட்டங்கள் ஸ்டாலிசத்தால்…போல்சிவேக்தேட்டங்களை அழித்துபோது நாசிகள் யந்திரதொழில்துறை நாடுகளில் உருவானார்கள்.
இவர்கள் தமது இறுதிகாலங்களில் மனிதநாகரீகத்தை அவமானப்படுதியதும் அல்லாமல் 1940-45 காலங்களில் பல கொடுரங்களையும் புரிந்தார்கள். இன்னொருவகையில் முதாலித்துவத்தின் ஆதாயம் தேடும் முறையை உலகத்திற்கு பகிரங்கப்படுத்தினார்கள். அவர்கள் பொருள்தேடுவதற்கு பலவழிகளைக் கையாண்டார்கள். அதில் ஒன்றுதான் அடிமையாக பிடிக்கப்பட்ட தொழிலாளவர்கத்திடம் இருந்து பற்களை பிடுங்கி பவுண்சேகரித்தார்கள். தலைமயிரை விரிப்புபடுக்கை தொழிசாலைகளுக்கு அனுப்பினார்கள். மனிதத்தோலில் விளக்குமூடிகள் செய்துபார்த்து மகிழ்ந்தார்கள்.
அதில் ஒன்றே தாம்பிடித்து வைத்திருந்த யூதர்கள் கம்யூனிட்டுக்கள் ஓர்யினசேர்கையாளர்கள் கிப்பீஸ்களாவர்களின் கொழுப்பில் சவர்காரம் அரைக்கதொடங்கினார்கள்.
இது ஒளிகமராவிலும் பதிவாகியிருக்கிறது. வேண்டுமானல் தேடிப்பிடிக்கமுடியும். அநேகமாக அதை மறைத்துவிட்டார்கள். அதைத்தான் புரியவைக்க முற்பட்டேன். இதுவே உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது என நினைக்கிறேன். இனிதிரும்பவும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
தமிழீழ விடுதலை போராட்டத்தின் 1986 களுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலை அமைப்புகளில் தளத்தில் இருந்து தலைமறைவு வாழ்க்கையுடன் செயல்பட்ட போராளிகள் ஒவ்வொருவரையும் நீங்கள் கேட்டுப் பாருங்கள் விடுதலை நெருப்பு பற்றி எரிந்ததும் அதற்குரிய செயல் பாட்டு வீச்சு இருந்ததும் போராளிகளுக்கான ஆதரவு இருந்ததும் கீழ்தட்டு மக்களிடமே. நம்ம பாய்ஸ், என்று கதைப்பதுடன் மேல்தட்டு வர்க்கம் தூர நின்று வேடிக்கை பார்த்தது அவ்வளவுதான். வன்னியில் மடிந்த மக்களும் போராளிகளும் நீங்கள் குறிப்பிடும் யாழ்பாண மேட்டுகுடிகளல்ல. மட்டகளப்பு ,அம்பாறை, வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற இடங்களில் அளிக்கப் பட்ட தமிழ் கிராமங்கள் எவையும் யாழ் மேட்டுக்குடிகளின் கிராமங்களல்ல. இந்தியாவில் பயிற்ர்ச்சிக்கு சென்ற போராளிகள் அங்கு நடந்த சாதிய கொடுமைகள், மற்றும் ஊர் நாட்டமைகளின் அடாவடித்தனங்களை பார்த்துவிட்டு கூறிய விடயம் அடே நாங்கள் முதலில் போராடவேண்டிய இடம் இந்தியாவெல்லோ என்று. ஆனால் நாம் முதலில் எமது வாயிற்று வழியை பார்க்க வேண்டும். சமூக விடுதலையும் பொருளாதார அபிவிருத்தியும் சமகாலத்தில் முன்னெடுக்கப் படவேண்டும்.
நீங்கள் சொல்வது உண்மைதான். நான் மறுக்கவில்லை. இன்று தமிழ்மக்களை விடுதலை இயக்கம்-ஆயுதம்-தோற்கடிப்போம் என்கிற வாதங்களுடன் அணுக முடியுமா? எப்படித்தான் வளர்ந்த வளராத நாடுகள் என்று வைத்தாலும் தொழிலாளிவர்கம் தொழிலாளிவர்கமே!. மாற்றுப் பேச்சுக்கு இதில் இடமில்லை. உரியகாலத்தில் தொழிலாளவர்கத்திற்கு வேலைத்திட்டம் போய்சேரவில்லை என்றால் அது பாசிஸவேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே நிர்ப்பந்திக்கும். இது எனது கருத்தல்ல. உலகத்தலைவன் ரொஸ்கியின் கருத்து
நீங்கள் குறிப்பிடும் காலம் குட்டிமுதாலித்துவ தமிழ்லரசியல் தலைவர்கள் விதைத்ததை எமது தொழிலாளர்கள் அறுபடை செய்து வைத்திருந்தார்கள். இதுஅறுபடை செய்தவர்களின் குற்றமல்ல. நச்சுப்பூண்டை விதைத்தவர்களின் குற்றமே!. அதுவே மேல்தட்டுவர்க்கம். சுயநலத்தின் தேவைக்காக அரசியல் சங்கீதப்பாட்டு பாடியது இனியும் பாடும். இதனில் விழிப்புடன் இருப்பதே தொழிலாளவர்க்க கடன் சார்ந்த பணியாகும்.
இலங்கையே எமது தாய்நாடு. அதில் பலமுகங்கள் உண்டு. அனைவரும் இலங்கையரே!.
இதுவே எமது தேசியகீதம்.
I really like this Chanthiran. But please don’t keep on mention 4th world please
இனத்துவத்துடன் கூடிய உழைப்பே மகத்துவமானது. வெறும் உழைப்பில் வரும் வருமானம் முதலாளித்துவ சிந்தனைகளுடன் கூடியதாக இருக்கும்.
உலகவரலாற்றை குறிப்பாக தமிழினத்தின் வரலாற்றை தவறுதலாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஐக்கியதேசியக்கட்சிக்கும் தமிழ் அரசியல்கட்சிகளுக்கும் மேற்குலக முதாலித்துவமும் இந்தியமுதளாலித்துவமும்தான் ஆலோசணைகூறியது என்பதை ஏன் மறுக்கிறீர்கள். ஒருவன் எப்பவும் தன்யெதிரியிலேயே கண்னாக இருப்பான். இலங்கைதழுவிய ரீதியில் ஒரு தொழிலாளர்கட்சி வளரக்கூடாது என்பதில் கண்கருத்துமாக இருக்கிறது முதாலித்துவம். இதற்கு இனமதமோதல்களை உருவாக்குவதற்கே பெரும்தொகையான பணம் முதலீடு செய்யப் படுகிறது. இதன் அகோர ஆதாயப்பசிக்கு உட்பட்டு போனவர்களில் ஒருசிறு பகுதியே சிங்களவர்-தமிழர். இந்து- பெளத்தன். இனவெறியும் மதவெறியும் தனியுடமையின் மகுடம். பொதுவுடமையின் புற்றுநோய். இனியாவது பொதுவுடைமை சித்தாந்தத்தில் கவனம் செலுத்துவீர்களா?
மதம் இனம் கடந்த ஒருயுலகத்தை இலங்கையீ காணமுடியுமா?. தண்டவாளங்கள் இல்லாமல் புகையிரதம் ஓடமுடியாது. மனிதவாழ்வியலை கற்றுகொள்ளாமல் மனிதநேயத்திற்கு பதில் அளிக்கமுடியாது. உலகதொழிலாளவர்க்கத்தின் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் இலங்கையில் தொழிலாளவர்கத்திற்கு பதில் கூறமுடியாது. இதற்கு அனைத்துலக்குழுவால் தலைமைதாங்குகின்ற நான்காம்அகிலம் தவிர இந்தபுவிப் பரப்பில் வேறு எதுவுமே இல்லை. இதுவே எனது சிபார்சு.
அப்போ கீலி. சிலேற்றர் போன்றவர்கள் உங்களை பிழையாக வழிநடத்தினார்கள் என்ற புலம்பல்கள் ?…….
ராகவனின் கருத்துக்கள் மிக உண்மைஆனவை.எனக்கு தெரிந்த கந்தசாமி என்ற தமிழர் சிங்கள பெண்ணை மனம் முடித்ததும் இப்போ கந்தகே என்று பெயரை மாற்றிவிட்டார்.பிள்ளைகள் எல்லாம் சிங்கவர்கலாகவே உள்ளனர்.அவரும் சிங்களவர் தான்.!!!!
ராகவன்,
உங்கள் தரவுகள் உண்மையானவை. ரொப்ர்ட் நொக்ஸ் என்ற மாலுமி, இரண்டு வருடங்கள் கண்டிய மன்னனின் சிறையிலிருந்து தப்பி வடக்கு நோக்கிச் செல்லும் போதே அனுராதபுரத்தை அடைந்தார். கிழக்கிந்தியக் கம்பனிகளின் கப்பற்படைத் தளபதியான நொக்ஸ் விபத்து ஒன்றின் காரணமாகவே இலங்கைக் கரையை அடைய நேர்ந்தது.
ஒரு நாட்டில் இயல்பான மூலதன வளர்ச்சி ஏற்படும் போது அந்த நாடு ஒரு தேசிய இனம் சார்ந்த நாடாக இயல்பாக வளர்ச்சியடையும். இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இதற்கு சிறந்து உதாரணங்கள். பிரான்சில் மார்சை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த கபிலி இனப்பிரிவைச் சேந்தத அல்ஜீரீயர்களாயினும், தென்னித்தாலியில் வாழந்த இந்தியர்களாயினும் முதலாளித்துவத்தின் சீரான வளர்ச்சியுடன் ஒரே தேசிய இனமகப் பரிமாணம் பெற்றார்கள்.
தேசிய இனங்கள் ஒரு குறிப்பான வரலாற்றுக் கட்டத்திற்குரிய மக்கள் கூட்டம், பல இனக் குழுக்கள் இயல்பாக இணைந்து புதிய தேசிய இங்கள் உருவாகும். தெற்காசியாவில் இந்தியாவைப் போலன்றி, முதலாளித்துவ உருவாக்கம் போத்துகீசர் வருகைக்கு முன்னமே ஆரம்பமாகிவிட்டதெனலாம்.
பால்கன் நாடுகளைப் போன்று முதலாளித்துவம் சீராக வளர்ச்சிய்டையாத நாடுகளில் பல பிரதேசங்களில் மூலதனச் சந்தைகள் உருவாவதால் பல தேசிய இனங்களும் உருவாகின்றன. இலங்கை அதற்கு ஒத்த சூழலையே கொண்டிருந்தது.
முதலாளித்துவம் சீராக வளர்ச்சியடைந்திருக்குமானால் முழு இலங்கையுமே, தமிழ் – சிங்களம் இணைந் புதிய மொழியாக உருவாகியிருக்கவே அதிகம் வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
காலனியத்தின் பிந்திய காலப்ப்குதியில் திட்டமிட்ட தேசிய இன அடக்கு முறை உருவானது, அதன் பின்னரே திட்டமிட்ட சிங்கள மயமாக்கலும் உருவாகிறது. ரொபெட் நொக்ஸ் காலத்தில் உருவான இயல்பான கலத்தலையும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கலையும் ஒப்பிட முடியாது.
இப்போது சிங்கள பொளத்த மயமாக்கலுக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்னொரு புறத்தில் மக்களின் இயல்பான கலத்தலன்றி ஒரு தேசிய இனத்தைச் சிங்கள மயமாக்கல் என்பது நடைபெறக்கூடிய ஒன்றல்ல.
“2000 இற்குப் பின்னான பத்தாண்டுகளில் உலக மயமாதல் அரபு நாடுகளிலும் ஊடுருவுகின்றது. அங்கே எண்ணை தவிர்ந்த புதிய உற்பத்திகளும் உருவாகின்றன. தொலைத் தொடர்புஇ தகவல் தொழில் நுட்பம்இ ஆடைத் தொழில்இ கட்டுமானத் தொழில்இ சேவைத் துறைஇ உல்லாசப் பயண நிறுவனங்கள் போன்ற பல்வேறு உப உற்பத்தித் துறைகள் உருவாகின்றன.”
2000ற்கு முன்னர் இந்நாடுகள் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை பண்ணவே கஷ்டமாக இருக்கிறது.
“நாவலன் – மக்களின் இயல்பான கலத்தலன்றி ஒரு தேசிய இனத்தைச் சிங்கள மயமாக்கல் என்பது நடைபெறக்கூடிய ஒன்றல்ல.” சிறிலங்காவில் இயல் பானகலத்தல், திட்டமிட்ட கலத்தல் இரண்டுமே நடை பெற்றுள்ளன வரலாற்று காலம் முதல் இன்றுவரை இரண்டுமே நடை பெற்று இருக்கின்றன.
அம்பாறையில் பாணமை, அம்பாறை நகருக்கும் அக்கரைபற்றுக்கும் இடைபட்ட பிரதேசம், மட்டக்களப்பு பொலநறுவை எல்லை கிராமங்களில் உள்ள தீவுச்சேனை ,மன்னம்பிட்டி, வெலிகந்தையை அண்டிய பிரதேசங்கள், வவுனியாவில் தேக்கவத்தை(1980 களில் சிங்களமயமாகி பின்னர் பெருமளவு யாழ் வன்னி மக்கள் தேக்கவத்தையில் குடியேறிய பின்னர் மீண்டும் சிங்களம் பேசிய தமிழர் அல்லது கலப்பு தமிழர் தமிழ் பேசியது காணக் கூடியதாக இருக்கின்றது இதற்கு பிளாட் அமைப்பின் பாதுகாப்பும் புலிகளின் போராட்டமும் ஒரு காரணமாகும்), புத்தளத்தில் முந்தல், மாம்புரி, உடப்பு போன்ற இன்னும் பல கிராமங்கள் அத்துடன் மலையகத் தமிழர் பலர் கண்டி, கடுகண்ணாவை, உட்பட பல இடங்களிலும்,மற்றும் கொழும்பில் கொறன, நாவலை , ராஜகிரிய போன்ற இடங்களிலும் மிக நேரிடையாக தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருவது காணக் கூடியதாக இருக்கின்றது. இதில் சிங்களவர்களாக மாறும் தமிழர்கள் பயம், தமது கடமைகளை இலகுவாகச் செய்தல், தமிழ் பாடசாலைகள் சிங்கள மயமாக்கியமை மற்றும் சைவ மத வழிபாட்டு முறைக்கு ஏற்பட்ட பல்வேறு நேருக்கு வாரங்கள் என்பன காரணமாகும். கொழும்பில் பாணமையைச் சேர்ந்த முன்னாள் டெலோ போராளியைச் சந்தித்தேன் (இவர் உயர் கல்வி மாணவனும் அரச உத்தியோகத்தரும் ஆவார்) அவர்கள் 1977 இனக்கலவரத்தின் பின் பொத்துவில் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள் அவர் சொன்னார் தனது உறவினர்கள் பலர் அவர்களது பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் படிப்பதாகவும் பிள்ளைகளின்
பெயர்களை என் பெற்றோர் தமது பெயர்களை கூட சிங்களத்தில் மாற்றியிருப்பதாகவும் கூறியிருந்தார் காரணம் அதிரடிப்படை மற்றும் சிங்கள காடையர்கள் என்போரிடம் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டும் எனில் அவர்கள் தம்மை சிங்களவர்களாக இனங்காண்ட வேண்டும். ஆம் மிகவும் வரலாற்று பழமை வாய்ந்த 100 விகிதம் தமிழர்களை கொண்ட பாணமை மாத்திரம் அல்ல பல கிராமங்கள் மிகத் திட்ட மிட்ட முறையில் தமிழ் மக்கள், சிங்கள மக்களாக மாற்றப் பட்டார்கள். இதில் புத்தளத்தில் வீரம் சேர்ந்த மண்ணாக உடப்பு இன்றளவிலும் அதன் எல்லை பரப்பு குறிகிய நிலையிலும் சிங்கள விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. வன்னியில் நான் வாடா கிழக்கிற்க்கு அன்னியப் பட்ட பலரை கண்டிருக்கிறேன் (போராளிகள் உட்பட) அவர்களில் பலபேரின் சகோதரர்கள், உறவினர்கள் புத்தளம், குருநாகல், அனுராதபுரம் போன்ற இடங்களில் 1977 இனக்கலவரத்தில் இடம் பெயர்ந்து வன்னியில் குடியேறியோர் இவர்கள் மலையாக வம்சாவளியினர் அல்லர் மேல் நான் கூறிய பிரதேசத்தின் குடியானவர்கள். இவர்களில் அனுராதபுரத்தில் இருந்து தர்மபுரம் பகுதியில் குடியேறிய ஒருவரை சந்தித்தேன் அவர்களுக்கு இன்றும் அனுராதபுரத்தில் காணிகள் உண்டு அங்கு அவர்களின் உறவினர்களும் உண்டு. அந்நபர் சொன்னார் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு தமிழ் தெரியாது தனக்கு சிங்களம் தெரியாது என்று இத்தனைக்கும் இவர்களது தாய் தகப்பன் இருவரும் தமிழர்கள் ஆக 1977 களில் தமிழர்களாக இருந்தவர்கள் மிக குறுகிய காலத்தில் சிங்களவர்களாக மாறும் சூழல் திட்டமிட்ட இனவெறிச் செயல் பாடுகள் மூலமாக நடந்தேறியது. முல்லைத்தீவைச் சேர்ந்த போராளி ஒருவரின் தகப்பனார் புத்தளத்தைச் சேர்ந்தவர் அவர் சொன்னார் தனது மாமிக்கு தமிழ் தெரியாது சமாதான காலத்தில் அவர் புத்தளம் சென்றபோது கோவில் திருவிழாவுக்கு வந்த தனது தகப்பனாரின் பல உறவுக் காரர்களுக்கு தமிழ் தெரியாது என்றார். (உடப்பில் இருக்கும் தமிழர்கள் இன்றும் யாழ்பாணம் வன்னி மன்னார் போன்ற இடங்களில் திருமண தொடர்பை பேணுகின்றனர்) – (இலங்கை ராணுவம் இரட்டை முகவர்களாக இவ்வாறு வன்னியில் உறவினரை கொண்டிருக்க கூடியோரை பயன் படுத்தியிருந்ததன் மூலம் இறுதிப் போரில் அதிக லாபத்தைச் சந்தித்து இருந்தனர் என்பதை விடயம் அறிந்தோர் பலர் தெரிந்து இருப்பர் – நான் குறிப்பிடுவோர் இரட்டை முகவர்கள் அல்ல .)
ஆக நாவலன் குறிப்பிட்ட மக்களின் இயல்பான கலத்தலன்றி ஒரு தேசிய இனத்தைச் சிங்கள மயமாக்கல் என்பது நடைபெறக்கூடிய ஒன்றல்ல என்பது ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சரியான கண்ணோட்டம் அல்ல என்பதே எனது வாதம்.
ராகவன்
நீங்கள் கூறும் தரவுகளை மீண்டும் நான் மறுக்கவில்லை. நீர்கொழும்புப் பகுதியில் பெரும்பாலான தமிழர்கள் சிங்களவர்களாக முழுமையாக மாற்றமடைந்துள்ளனர். முன்னை நாள் அமைச்சர் ஜெயராஜ் பர்ணாடோ புள்ளை கூட தன்னைத் தமிழராகக் கருதியதில்லை. தவிர, கராவ என்ற சிங்கள சாதியினைச் சேர்ந்தவர்கள் தென்னிந்தியாவிலிருந்து குடியேறிய கெளரவர் சாதியினரைச் சார்ந்தவர்கள் என்ற வரலாறும் உண்டு. இந்த மாற்றங்கள் பல ஆண்டுகளாக பல்வேறு புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன. ஆனால் தேசிய இனம் ஒன்றை இனச் சுத்திகரிப்பினூடாக அழிக்க முடியாது என்பதே எனது கருத்து. ஆனால் பலவீனப்படுத்த இயலும். இதனை எதிர்கொள்ள வேண்டும்.
லத்தின் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் இஸ்பானிய கலப்பு உண்டாகி இன்று ஸ்பானிஷ் பேசும் மக்களை அதிகம் கொண்ட நாடாக உள்ளது அத்துடன் கியூபா செவிந்திய ஸ்பானிய கலப்பின் உருவாக்கமே இன்றைய கியூபாவாகும். இந்தியாவின் 40 விகித மக்கள் ஷேடுல் பழங்குடி வகுப்பினராக அழைக்கப் படுகின்றனர் இவர்கள் வட இந்திய ஆதிக்க மொழிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் அடிமைபட்டு வாழ்கின்றனர். இவர்களின் நிறம், சனத்தொகை பரம்பல் என்பவற்றால் இவர்கள் இன்னும் முழுமையான ஆரிய மயமாக்கலில் சிக்காமல் உள்ளனர். வட இந்தியாவில் வாழும் ஷேடுல் பழங்குடி களை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவின் ஆரியர்களின் சனத்தொகை மிகக் குறைவானதே. முற்று முழுதாக அழிக்க முடியாது எனக் கூறுவது பின்வரும் உதாரணங்களின் மூலம் தவறாகலாம் என்பது எனது கருத்து. கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏறக்குறைய பூர்விக மக்கள் அளிக்கப் பட்டுவிட்டனர். இருப்பினும் நியூசிலாந்து பூர்விக குடிகளின் இனத்துவத்தை அங்கீகரித்து உள்ளது.
கீலி சுலோட்டர் யார்? என்பது இனியொரு வாசகர்களுக்கு புரிவது கஷ்ரமானது சுகந்தன் முதல் அவர்கள் யாரென்பதையாவது புரியவையுங்கள். சர்வதேச தொழிலாளவர்க்கத்திற்கு வழங்கும் பணிகளில் அது தலையானது என கருதுகிறேன். முடியுமா? சுகந்தன்.
உண்மையில் நீங்கள் மேலே குறிப்பிட்டவா்களைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை இருந்தாலும் இனியொரு வாசகா்கள் எல்லோருமே என்னைப்போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை அப்படி நீங்களும் குறிப்பிடமுடியாதல்லவா, எனக்கும் சில பெயா்கள் தெரியும் அவையாவன Antonio Gramsci, Palmiro Togliati, Enrico Berlinguar இவா்களை உங்களுக்குத்தெரியுமா? இவா்களும் தொழிலாளா் வா்க்கத்திற்காக போராடிய மேற்குலகின் மிகவும் பலம் வாய்ந்த இத்தாலிய பொதுவுடமை கட்சியின் ஸ்தாபகா்கள்.
நாம் வாழ்கின்ற சூழலில் நாம் எல்லோருமே ஏதாவதை அறிந்தோ வாசித்தோ உள்ளோம் ஆதலால் நான் மட்டுமே அறிந்திருக்கின்றேன் என்று தம்பட்டம் அடிப்பது நான் அறிந்தது கையளவு என்பதையே உணா்த்துவதாகும்.
Let put it this it’s all about oil. When things went wrong they went there straight away why can’t they not there in sri Lanka or. Zimbabwe or Yemen. There is worst night mate as well. We have no oil so they won’t be coming to our nations that’s it. That’s the truth
ஐயா! எல்லாவற்றிற்குமான சர்வரோகநிவாரணியாக நா.அகிலம் என்று இராமயணத்தில் செடிக்காக மலையையே பெயர்த்து வானத்தில் பறந்த அனுமாரை போல வானத்தில் பறந்தீர்கள் உஙகளை வையகத்திற்கு கொண்டுவருவதற்காகவே கீலி ,சிலேற்றர் பற்றி குறிப்பிட்டேன். கை மேல் பலன். பதட்டம் வேண்டாம் அன்பரே!