ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலையில் லண்டனில் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த போட்டிகளுக்கு டோவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்தியாவின் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த பயங்கர பேரழிவுக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம் (டோவ் கெமிக்கல்ஸ் குரூப்பை சேர்ந்தது), ஒலிம்பிக் போட்டிக்கு ஸ்பான்சர் செய்வதற்கு இந்தியாவில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் நெறிமுறை கமிட்டி கமிஷனர் பதவியை மெரிடித் அலெக்சாண்டர் ராஜினாமா செய்துள்ளார். அவர் லண்டனில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ÔÔபோபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் டோவ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட விரும்பவில்லை. விஷவாயு கசிவு நடந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த இடத்தை இன்னும் சுத்தப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்ÕÕ என்று கூறியுள்ளார்.
லண்டன் விளையாட்டுகளை நெறிமுறை கமிட்டி கண்காணிக்கும். இந்த கமிட்டியில் மொத்தம் 13 கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு கவுரவ பதவி. இந்த பணிக்கு சம்பளம் கிடையாது. எனினும், தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மெரிடித் அலெக்சாண்டர். ஆனாலும், ஒலிம்பிக் போட்டியில் டோவ் நிறுவனத்தின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது என்று ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
தொடர்பான பதிவுகள்:







