Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் : தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு : சுதர்சன்

இனியொரு... by இனியொரு...
04/18/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
26
Home பிரதான பதிவுகள் | Principle posts

vijaystarnightசில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள்.

இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் O2 Arena மாபெரும் பிரமாண்டமான மேடையில் லங்காசிறீ – தமிழ்வின் ஆதரவோடு சினிமா நட்சத்திரங்களோடு சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளும் களியாட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதிகம் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் (2013) நடத்தப்பட்ட மாநிலம் தமிழ் நாடு என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அங்கு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உணரத் தலைப்பட்டுள்ள மக்கள் கூட்டம் சினிமா மாயையை உடைக்கத் தயாராகி வருவதையே இது சுட்டி நிற்கின்றது. சனத்தொகையின் அரைவாசி வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒரு தேசத்தை சினிமா மாயைக்குள் புதைத்து வைத்திருக்கும் கலாச்சாரம் மக்களின் அறிவு சார்ந்த அத்தனையையும் தின்று தொலைக்கிறது. அங்கெல்லாம் மக்களும் சமூகத்தின் முன்னேறிய பிரிவினரும் அதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதே கலாச்சாரச் சீர்குலைவு லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது. அரைகுறை ஆங்கிலத்தின் இடையே தமிழ் வார்த்தைகளை இணைத்துக்கொள்வதைத் தமிழ் என்று தமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பெற்றோர் இதன் பின்னணியிலுள்ள கலாச்சாரச் சிதைப்பப்பற்றி துயர்கொள்வதில்லை.

அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் சிறுவர்களுக்கான சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 12வயது குழந்தையிடம் நீ யாரை லவ் பண்ணுகிறாய் என்று நடுவர் கேட்கிறார். பின்னர் தன்னை லவ் பண்ண மாட்டாயா என்கிறார். இன்னுமொரு நிகழ்சியில் சிறுமி பாடிய பாலியல் வக்கிரம் கலந்த பாடலைக் கேட்ட நடுவர் உணர்ச்சி போதவில்லை எனக் குறைப்பட்டுக்கொள்கிறார். இவ்வாறான ரியாலிட்டி ஷோ போன்றவற்றின் ஊடாக பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி அதனைக் கற்பனை கலந்த உலகத்திற்கு அழைத்துச் சென்று காசாக்கிக்கொள்வது தான் தொலைக்காட்சிகளின் வியாபாரத் தந்திரம்.

ஐரோப்பியத் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் வெற்றிபெறுகின்ற ஆண் ஒருவர் அதே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிமுகமில்லாத பெண்ணுடன் விடுமுறைக்குச் செல்லும் பரிசு வழங்கப்படுகின்றது. இவ்வாறான கலாச்சாரத்தை நோக்கி தமிழ் நாட்டின் கனவுலகை அழைத்துச் செல்லும் மற்றொரு நிகழ்ச்சியே சுப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திவாகர் என்பவர் தான் கலந்துகொள்ளும் ரோட் ஷோவில் நிறைய பிகர்ஸ் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியடைவதாகச் சொல்கிறார்.

வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைவியல்லை. நாளந்தம் கொலை, கொள்ளை, கைது, நிலப்பறிப்பு என்று இனச்சுத்திகரிப்பு அதன் உச்சத்தை அடைந்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் போட்டுக்கொடுத்து ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அதே கும்பல், இப்போது தென்னிந்திய பண்பாட்டுச் சீரழிவை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறது.

உலகின் பிரபலமான காப்ரட் கூத்தாடிகள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் மக்களிடமிருந்து மில்லியன்களை அபகரித்துக்கொள்ளும் O2 Arena மேடையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. லைக்கா நிறுவனத்தின் நன்கொடையில் இயங்கும் பிரித்தானியப் பல்கலைக்கழக்த் தமிழ் மாணவர்களின் ஒன்றியம் நடத்தும் தென்னிந்தியச் சினிமாப் பாட்டிற்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் இந்த வருடம் இதே மேடையில் தான் நடைபெற்றது.

தென்னிந்திய சினிமாக் குப்பைகளை கொட்டுமிடமாக தமிழ்த் தேசிய வியாபாரிகளால் மாற்றப்பட்டுள்ள புலம்பெயர் கலாச்சார நிகழ்வுகள் சீரழிவின் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றது. ராஜபக்சவின் குடும்பத்தோடு வியாபாரம் நடத்தும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன், 2500 தமிழ்த் திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்துச்சென்று கலாசார சேவை செய்ததாகக் கூறுகிறார்.

பிகர்களைப் பார்ப்பதற்காக லண்டன் வரும் கூத்தாடி திவாகர் போன்றோர், அதே பிகர்களின் முன்னைய சந்ததி அழிக்கப்பட்டு இரதம் ஆறாக ஓடியது என்பதைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இதே லங்காசிறீயின் இணையங்களில் தேடிப்பார்த்தால் போர்க்காலக் காணொளிகளையும் அவர்கள் கண்டுகொள்ளலாம்.

புலம் பெயர் நாடுகளில் குழந்தை கருவிலிருக்கும் போதே என்ன தொழில் செய்யவேண்டும், யாரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பாவிப் பெற்றோர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள். குழந்தை பிறந்ததுமே அறுக்கப்படுவதற்கான ஆட்டை வளர்பது போன்றே வளர்க்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சியில் பாட்டுப் பாடி வெற்றிபெற்று மில்லியனேராகும் பாடகன் தமது குழந்தைகளுக்கான ரோல் மொடல்! விஜய் தொலைக்காட்சி சொல்லித்தரும் சீர்குலைவு தமிழ்க் கலாச்சாரம்!!

ஈழத் தமிழர்கள் யுத்தத்தோடு அடித்துச் செல்லப்பட்ட கலைகளையும், கலாசார விழுமியங்களையும் மீட்பதற்காகப் போராடுகிறார்கள். அங்கிருந்து தரம் மிக்க இசையும், கலையும் மண்ணின் வாசனையோடு ஆங்காங்கே நெருடிச் செல்வதைக் காணலாம். இக் கலைகளை வளர்ப்பதற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் போர்க்குரலாக அவற்றை மாற்றுவதற்குமான அத்தனை வலுவும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஜனநாயக முற்போக்குக் கூறுகளுக்கு உண்டு. அவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத ‘தமிழ்த் தேசிய வியாபாரிகள்’ இன்று தென்னிந்தியாவிலிருந்து அந்த நாட்டையே சீரழிக்கும் அவமனத்தை புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறார்கள்.

ராஜபக்ச நடத்தும் கலாச்சார ஒடுக்குமுறைக்கும், தமிழ்த் தேசியத்தின் பேரால் இப் பிழைப்புவாதிகள் நடத்தும் கலாச்சார சிதைப்பிற்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அயோக்கியர்கள் நடத்தும் தமிழ்த் தேசிய வியாபாரத்தைக் கண்டிப்பதற்கும், இந்த நிகழ்ச்சிகளிலிருந்து மக்களை விலகியிருக்கக் கோருவதற்கும் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசியக் கலைகளை வளர்ப்பதற்கும் புலம்பெயர் நாடுகளில் அரசியல் இயக்கங்க்கள் இல்லை. தேசியத்தை மூலதனமாக்கும் பிழைப்புவாதிகளின் கூடாரமே புலம் பெயர் அரசியல் என்பதற்கு வார இறுதியில் இல் நடைபெறும் விஜய் ஸ்டார் நைட் சாட்சி.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீது வழக்குப் பதிவு

Comments 26

  1. Alex Eravi says:
    12 years ago

    So, Mr. sutharshan do you have any plan/ idea to come out from this cinema culture/ Manaada Mayilada or Super Singer culture…?

  2. தமிழ் மூடன் says:
    12 years ago

    தமிழ் மூடன்
    Posted on 04/15/2014 at 23:10
    ” 10 கோடிப் பேர் கொண்ட .. தமிழன் சந்தை …
    இந்தச் சந்தையை வைத்து தமிழன்  தமிழனை
     உயர்த்தலாம் “
    Reply

    lala
    Posted on 04/16/2014 at 22:08
    இந்த உலகமயமாக்கல்  யுகத்தில்  10 கோடி பேர் கொண்ட  சந்தையில்  குண்டு சட்டிக்குள்  குதிரை ஒட்ட  அட்வைஸ் செய்கிறீரா ?
    அப்படியே அந்த  அந்த இனத்தவன் அந்த  இனத்தவனோடுதான்   வியாபாரம்  வைத்துக்கொள்ள  வேண்டுமென ஏனைய  இனத்தவர்களுக்கு  உமது இலவச அடவைஸை  வாரி  வழங்குவீரா ?
    அல்லது  இளிச்ச  வாய் தமிழனுக்கு  மட்டும்தான் இந்த அட்வைஸா ??
    ############################################################
    நாம்  பிணங்களின்  மீது  ஏறி  நின்று  வியாபாரம்  செய்கின்றோம்… நாம்  பிணங்களின்  மீது  ஏறி  நின்று ஆடிப் பாடி மகிழ்கின்றோம் .. இசையை  ரசிக்கின்றோம் 
    புத்தி உள்ள   லங்காசிறீ – தமிழ்வின், லைக்கா, லிபரா ஐங்கரன்  போன்ற  பலர்  பிழைத்துக்  கொள்கின்றார்கள் …  மற்றவர்கள்…(இனிஒரு உட்பட   ) அவர்களைக் கிண்டலடிப்பதிலும் விமர்சனம் – வாக்குவாதத்தில்  இன்பம் காண்கின்றார்கள் …

    விஜய் TV  அந்தமான்  தீவுகளில்  உள்ள  தமிழர்களுக்கு  இசை  நிகழ்ச்சியை  நடத்த  மாட்டாது … வறிய  மக்களுக்கு  இசை  நிகழ்ச்சியில்  கிடைக்கும்  இலாபத்தின்  ஒரு பகுதியைக்  கொடுக்காது …
    விஜய் TV   இலங்கைத்  தமிழர்களுக்கு  இலங்கையில்  நிகழ்ச்சி  நடத்தினால்  அது  தமிழ்த் துரோகம் என்று புலம்பெயர் தமிழர்கள் புலம்புவார்கள் … ஆனால்  ஐரோபியாவிலும் கனடாவிலும்  வாழும்  வசதிபடைத்த  தமிழர்களுக்காக  நடத்தலாம் . …அதைக் கலாச்சார பிணைப்பு  என்று கொண்டாடுவார்கள்  
    ஈழத்தில்  வாழும்  தமிழ்கள்  சபிக்கப்பட்ட மக்களா??  அவர்களின் 
    பொருளாதார  உதவிசெய்ய  எவரும்  இல்லையா  ???.. 
    “நெஞ்சு பொறுக்குதில்லையே .. இந்த நிலை மறந்த தமிழரை நினைத்துவிட்டால் … ”  என்று புலம்பாமல்  ” புதியதோர் உலகம் செய்து தனிஒரு மனிதன் பசியோடு தவிக்கும்   நிலையைத்  தவிர்க்க முயல்வோம்  
     

  3. mannan says:
    12 years ago

    புலம்பெயர் தமிழர்களை  சிந்தனையில் தமிழ்நாட்டுப் பிரசைகளாக  வைத்திருப்பதன்   மூலமே  தமிழ் மொழியின்  பெயரால்  அரசியலும்
    வியாபாரங்கழும்  செய்ய முடியும்.  வழியில் தேங்காயை எடுத்து கோவில்
    பிள்ளயாரிற்கு அடிப்பது போல்  தமிழக சினிமா உலகினை புலம்பெயர்
    தமிழ்ரிற்கு காட்டி  பிழைப்பவ்ர்களின்  பின்னணியென்ன?

    தமிழ்நாட்டு தமிழர்களிற்கு உதவுகின்றார்களா?
    புலம்பெயர் தமிழரிடம்  வியாபாரம் செய்கின்றார்களா?
    இலங்கையில் வாழும் தமிழர்களிற்கு  உதவுகின்றார்களா?

    30 வருடத்திற்கு முன்பு  தமிழீழப்போராட்டம் சம்பந்தமான  கூட்டங்கள்  
    புலம் பெயர்  நாடுகளில்    நடக்கும் போது  தமிழ்நாட்டுத்தமிழரென்றால்
    வெளியேற்ரிய சம்பவங்கழுமுண்டு.  இப்போ  இவர்களை பாவித்தால்தான்
    தமிழ் அரசியலும், வியாபார்ங்கழும்  செய்யலாமென்பதை  நன்கு  உணர்ந்து
    கொண்ட  இலங்கைத்தமிழர்களின்  செயல்களே இவைகள்.

    இலங்கைத் தமிழரை  கலைகளில்  முன்னேற்ரி  புலம்பெயர்தமிழரிடம்
    புகழ் பெற வைப்பதற்குப்  பதிலாக     அவ்ர்களிற்கு  காலமுழுக்க  பிச்சை
    கொடுக்கும்  தமிழர்களா  வாழவே  பலர்  விரும்புகின்ரார்கள்.

    • lala says:
      12 years ago

            ##      தமிழக சினிமா உலகினை புலம்பெயர்
      தமிழ்ரிற்கு காட்டி  பிழைப்பவ்ர்களின்  பின்னணியென்ன?   ##

                                                    ராஜபக்ஷவின்  பணத்தில்    படத்தை  தயாரித்த  மலையாள  இயக்குனரிடமிருந்து  தமிழ்நாட்டை   சேர்ந்த  லிங்குசாமி   படத்தை  வாங்கி   இந்தியா உட்பட உலகம்  முழுவதும்  ரிலீஸ்  செய் த  
      இனம்  படத்தை  தூக்கி  பிடித்து  கட்டுரை வரைந்த  இனி ஒருவின்  பின்னணி  என்ன ??

        ## வருடத்திற்கு முன்பு  தமிழீழப்போராட்டம் சம்பந்தமான  கூட்டங்கள்  
      புலம் பெயர்  நாடுகளில்    நடக்கும் போது  தமிழ்நாட்டுத்தமிழரென்றால்
      வெளியேற்ரிய சம்பவங்கழுமுண்டு  ##

      அப்படியா  யார்  யாரை  எந்தெந்தநிகழ்ச்சியில்  வெளியேற்றினார்களேன  சொல்ல முடியுமா ??

      ##   இப்போ  இவர்களை பாவித்தால்தான்
      தமிழ் அரசியலும், வியாபார்ங்கழும்  செய்யலாமென்பதை  நன்கு  உணர்ந்து
      கொண்ட  இலங்கைத்தமிழர்களின்  செயல்களே இவைகள். ##

      ## அவ்ர்களிற்கு  காலமுழுக்க  பிச்சை
      கொடுக்கும்  தமிழர்களா  வாழவே  பலர்  விரும்புகின்ரார்கள்.##

                                 யாரிற்கு ? தமிழ்  னாட்டு  தமிழர்களுக்குத்தானே .
      அப்படியானால் முன்னர் குறிப்பட்ட  கருத்துக்கு  மாறான  கருத்தை  இப்போது  தெரிவித்திருக்கிறீர்களே ?

      முதலில் இலங்கை தமிழர்கள்   தமிழ்  னாட்டு தமிழர்களை    பயன்படுத்தி 

      வியாபாரமும்  அரசியலும் செய்கிறார்ள்  என்றீர்கள்.

      இப்போது   காலம் முழுக்க   தமிழ்நாட்டு  தமிழர்களுக்கு   பிச்சை கொடுக்கும்  தமிழர்களாகவே  இருக்க  இலங்கை தமிழர்கள்  விரும்புகிறார்கள் என  செப்பியுள்ளீர்கள் .

       இலங்கை  தமிழர்கள் மீது  துவேசத்தை  கக்கும்  ஆவேசத்தில்நிதானம் தவறியுள்ளிர்கள் .

      பார்த்து, எதுவும் ஒவராகமால்  பார்த்து கொள்ளுங்கள் .  துவேசத்தையும்தான்.

      • Bela says:
        12 years ago

        லாலா என்ற ஆசாமி, இலங்கை அல்லது இந்திய அரசின் ஆள் என்றதை முந்தியே சொல்லியிருந்தேன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கற்பளிக்க அனுமதி கேக்கிறவர்கள் இவர்கள்.
        முந்தியும் இது சொன்ன அப்பட்டமான பொய்யை சொல்லி இந்த ஆசாமியின் சமூக விரோதக் கருத்துகளை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டேம். இனியொரு காதில் விழவில்லை. உங்களது நோக்கத்தை திசைதிருப்ப காசு வாங்கிக்கொண்டு 24 மணி நேர சேவை செய்பவர். இனம் படத்தை தடை செய்பவர்கள் ஏன் பாலியல் வக்கிரம் நிறைந்த படங்களுக்கும், கலாசாரத்தை சீரழிக்கும் படங்களுக்கும் அனுமதியளிக்கிறார்கள் என்று எழுதியதை எப்படி இந்த ஜந்து மாற்றுகிறது பாருங்கள்.

        • lala says:
          12 years ago

           வழக்கம்போல் மன்னன் என்பவருக்காக  பீலா  விட  வரிந்து கட்டிக்கொண்டு  வந்திருக்கிறீர்கள் 

          ##    லாலா என்ற ஆசாமி, இலங்கை அல்லது இந்திய அரசின் ஆள் என்றதை முந்தியே சொல்லியிருந்தேன் ##

                                       உங்களைப்போன்றவர்களின்  உண்மை முகத்தை  தோலுரித்து  காட்டினால் , உடனேயே துரோகி , அந்த அரசின் கையாள் இந்த அரசின் கையாள்   என சொல்லி  தப்பி விடுவது.. 

          ஆனால்  இன்று இதெல்லாம்  பழைய  டெக்னிக் ஆகி  விட்டது ,
          மக்கள்ஸ்  ரொம்ப  விவரமா  இருக்காங்க .
          உங்களது ம் , மன்னனது ம் , எனதும் பின்னுட்டங்களை  வாசித்து  வருபவர்களுக்கு,  யார் , யார்  எப்படிப்பட்டவர்களென்பது   ப்ட்டவர்த்தனமாக   புரிந்திருக்கும்.

          ## கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கற்பளிக்க அனுமதி கேக்கிறவர்கள் இவர்கள். ##

                                                  பொய்களாலும்  புனை  கதைகளாலும்    தன்னை சுற்றி பொய்யான  பிம்பத்தை  வைத்திருப்பவன்  கொஞஞம் கொஞஞமாக  அந்த  பொய்கள் புனைவுகள்  அம்பலப்படுத்தப்படும்போது  தான்  கற்பழிக்கப்படுவதாக்வே  உணருவான்  என்பது  உங்களளவில்  எவ்வளவு உண்மையாக  போய் விட்டது  பார்த்தீர்களா ?

          ##  இனம் படத்தை தடை செய்பவர்கள் ஏன் பாலியல் வக்கிரம் நிறைந்த படங்களுக்கும், கலாசாரத்தை சீரழிக்கும் படங்களுக்கும் அனுமதியளிக்கிறார்கள் என்று எழுதியதை எப்படி இந்த ஜந்து மாற்றுகிறது பாருங்கள்.##

                                 நான்  மாற்றவில்லை .நீங்கள்தான் நான்   சொன்னதை மாற்றியிருக்கிறீர்கள்.
                               
                                           கத்தி , இனம் படம்பற்றியே நான் பேசியிருந்தேன்.

               இனி  ஒருவில்  கத்தி பற்றி  ஒரு கட்டுரை  வந்திருந்தது . அதாவது அந்த படம்  ராஜபக்ஷவின்  பண்த்தில்  தயாரிக்கப்படுவ்தாக  புலனாய்ந்து  எழுதியிருந்தது. கத்தியின்  தயாரிப்பாளர்  ஈழத்தமிழர்  அய்ங்கரன் என்றும் , அவருக்கு  லைக்க  முதலாளி நிதி வழ்ங்குகிறார்   என்றும்  அந்த நிதி  ராஜ பக்சவிடமிருந்து  ம்பெறப்பட்டதென்றும் ( உஸ்  அப்பாடா ) ஏகத்துக்கு  புலனாய்வு செய் து  இனி ஒருவில் அவிழ்த்து விட்டிருந்தார்கள் .

          அப்படியானால்  ராஜ பக்சவின் பணத்தினால்   தயாரிக்கப்பட்டதாக  ஊடகங்கினாள்  பரவலாக  சொல்லப்பட்ட   இனம் படத்தைப்பற்றி  எதுவும் சொல்லாது  விட்டிருந்தாலாவது பரவாயில்லை , ஆனால் இனத்தை  பாராட்டி   கட்டுரை வரைந்து  னற்சான்றிதழ் வழங்கியது ஏன்  என்றுதான்  கேட்டிருந்தேன்.
          ஆனால்நீங்களொ அதனை திரித்து பாலியல்  வக்கிரம்நிறைந்த  படங்களொடு  இனம் படத்தை   ஒப்பிட்டிருக்கிறீர்கள்.

  4. mannan says:
    12 years ago

    //இலங்கை  தமிழர்கள் மீது  துவேசத்தை  கக்கும்  ஆவேசத்தில்நிதானம் தவறியுள்ளிர்கள் .//

    உலகில்  தமிழ்  சிங்கள்  துவேசத்தை தங்கள்  அரசியலிற்கும், வியாபாரத்திற்கும்   பயன்படுத்டுவது யார்?  

    இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தையும்,உயிரையும் உலகிற்கு காட்டி
    வியாபாரம் செய்து முதலாளிகளாக வந்தது யார்?

    தொடர்ந்தும் இலங்கைத் தமிழர்களை  அங்கவீனர்கள் போல் ஆக்கி
    புலம்பெயர்  நாடுகளில் பொருளாதாரத்தையும், இலங்கையில் தமிழரின்
    அரசியலையும் கட்டுப்படுத்த  முனைவது யார்?

    அரசியல் பேசுவோரையும்,நடிகர்களையும்  வரவேற்பது
    வியாபார தந்திரமே. 

  5. lala says:
    12 years ago

      ##உலகில்  தமிழ்  சிங்கள்  துவேசத்தை தங்கள்  அரசியலிற்கும், வியாபாரத்திற்கும்   பயன்படுத்டுவது யார்?  ##

                                           துவேசத்திற்கு  புது  வரையறை யெல்லாம்  தருவீர்கள்  போலிருக்கிறது ?

    ஒரு  இனம்  தனது  விடுதலைக்காக  போராடுவது  இனத்துவேசம் ஆகாது .

    வர்க்கப்போராளிகளினதும் , காம்ரேடுகளினதும் , தோழர்களினதும்  காமாலை கண்களுக்கு அப்படி  தெரிகிறது போலும் .

    இனத்துக்கு  இனம் துவேசம் கொள்வதை விட  இனத்துக்குள்ளெயே   பிரிவுகளையும் , துவேசத்தையும்  மூட்டி  விடுவது  மோசமான செயல்.
    தோழர்களுக்குத்தான்  அதற்கெல்லாம்  சொல்லி  கொடுக்க  வேண்டியதில்லையே ?

    ##தொடர்ந்தும் இலங்கைத் தமிழர்களை  அங்கவீனர்கள் போல் ஆக்கி
    புலம்பெயர்  நாடுகளில் பொருளாதாரத்தையும், இலங்கையில் தமிழரின்
    அரசியலையும் கட்டுப்படுத்த  முனைவது யார்?  ##

                              யார் ? முன்னுக்கு ப்பின்  முரணாக  பேசி  வரும்நீங்கள்தான்  அதை  சொல்ல  வேண்டும் .

    ##   அரசியல் பேசுவோரையும்,நடிகர்களையும்  வரவேற்பது
    வியாபார தந்திரமே.  ###

                                          இந்தியாவிலிருந்து  கழிசடை காம்ரேடுகளையும்  தோழர்களையும் அழைக்கவில்லை என்  கிற   கோபம்  போலும்.

  6. mannan says:
    12 years ago

    //ஒரு  இனம்  தனது  விடுதலைக்காக  போராடுவது  இனத்துவேசம் ஆகாது//

    ஆடுகளோ,மாடுகளோ  உருமை கேட்டு போரிடாவிடினும் தமக்குள்
    ஒன்றை ஒன்று கொல்வதுமில்லை பெரிது,சிறிது பார்ப்பதுமில்லை.

    தமிழினம் என்று  நீங்கள்  கூறுபவர்கள்  தமிழீழவிடுதலைப்  போர் என்ற பெயரில்  எவ்வாறு  நடந்தார்கள்  நடக்கின்றார்கள். ஓர் இனமென்று
    எவ்வாறு  கூறுகின்றார்கள்.   வெட்கமாயில்லையா?

    //இந்தியாவிலிருந்து  கழிசடை காம்ரேடுகளையும்  தோழர்களையும் அழைக்கவில்லை என்கிற   கோபம்  போலும்//

    தீமூட்டிதற்கொலை செய்வதற்கு  யார் ?

    • lala says:
      12 years ago

      ##          தமிழினம் என்று  நீங்கள்  கூறுபவர்கள்  தமிழீழவிடுதலைப்  போர் என்ற பெயரில்  எவ்வாறு  நடந்தார்கள்  நடக்கின்றார்கள். ஓர் இனமென்று
      எவ்வாறு  கூறுகின்றார்கள்.   வெட்கமாயில்லையா? ##

                                      ஆமாம் உலகில்  எல்லா  இனங்களும்  தமக்க்குள்  சண்டையிடாமல்   ஒற்றுமையாகத்தான்  உள்ளது .

      தமிழினத்துக்குள்தான்  இதெல்லாம்  இருக்கிறதென்பதை  வர்க்கத்தோழர்  கண்டு  பிடித்திருக்கிறார் .

      அதனால்தான்  இன்னமும் முட்டிக்கொண்டு  சாகட்டுமென்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இனத்துக்குள்  நாடு , பிரதேச  , பொருளாதார  வேற்றுமைகளை  தூண்டி  விட்டு  குளிர்  காய்கிறார்..

    • lala says:
      12 years ago

      ##          தீமூட்டிதற்கொலை செய்வதற்கு  யார் ? ##

                                            ட்
                         கமிழ்நாட்டில்  கட்சி தொண்டர்கள்தான்  தீ மூட்டி  தற்கொலை  செய்கிறார்கள்  என்று இல்லை . அங்குள்ள   காம்ரேட்  தலைவர் ஒருவர் குட்டையில்   விழுந்து  அண்மையில்   தற்கொலை செய்திருந்தார் .

      இது தவிர  காம்ரேடுகள் பலமாக  இருக்கும்  கேரளாவில்  மாற்று கட்சியினர் ,தவிர தமது  சொந்த கட்சியினர் பலரையே வெட்டி  கொன்றிருக்கிறார்கள் .

      • K SHANMUGAM says:
        12 years ago

        It is not the problem of communisam or socialisam. But the problem of some spent force COMMUNISTS OF INDIA..

      • mannan says:
        12 years ago

        இதுபோல விடயங்கள்  எங்கள் தமிழை உயிராக மதித்து வாழ்ந்த
        அமைப்புகளிடையேயும்  நடைபெற்றுள்ளது.  உங்களிற்கு  மனித
        உயிர் சர்வசாதாரணமென்கின்றீர்கள். 

        • lala says:
          12 years ago

          ##இதுபோல விடயங்கள் எங்கள் தமிழை உயிராக மதித்து வாழ்ந்த
          அமைப்புகளிடையேயும் நடைபெற்றுள்ளது. உங்களிற்கு மனித
          உயிர் சர்வசாதாரணமென்கின்றீர்கள். ##

          நடந்திருக்கிறது . அதனை முன்பே சொல்லியிருக்கிறீர்கள் . ஆனல் ஏதோ த்மிழினத்துக்குள் மட்டும்தான் இதெல்லாம்நடக்கிறதென்பது போலவும் அதனால் இன விடுதலை போராட்டத்தைநடத்துவதற்கான யோக்யதை அதற்கு இல்லை என்பது போலவும் , உலகில் மற்றைய இனங்கள் , இயக்கங்கள் தமக்குள் சணடை சச்சரவு இல்லாமல் இருப்பது போலவும் தமிழின துவேச கருத்துக்களை தெரிவித்திருந்தீர்கள் .

          அதற்கு பதிலடியாகத்தான் மேற்கூறிய கருத்துகளை தெரிவித்திருந்தேன்.

          உங்களிப்போன்றவர்களின் தாசர்களான கம்ரேடுகளே ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டு செத்து போயுள்ளனர் .
          அதனால் அவர்களுக்கு வர்க்க போராட்டத்தை நடத்துவதற்கான யோக்யதை இல்லை என்றுநான் சொன்னா\ல் ஏற்பீர்களா ?

  7. Kumar says:
    12 years ago

    மக்கள் மந்தைகளாக இருக்கும்வரை அவா்களை வைத்து பிளைப்பு நடத்தமுனையும் வியாபாாிகளை கடிந்து கொள்வதால் எந்த இலாபமும் இல்லை.
    தமிழ் மக்களிலிருந்து வியாபாாிகளை பிாித்துப்பாா்க்கத்தொியாதவா்கள் இலங்கைத்தமிழன் இந்தியத்தமிழன் என்று முட்டாள்தனமாக உளறுவதை நிறுத்தவேண்டும்.
    சினிமா ஒரு தொழிற்சாலை அதில் உற்பத்தியாகும் பொருள் நமது வாழ்விற்கு உகந்ததா இல்லையா என்று முடிவெடுக்கவேண்டியவா்கள் மக்கள்தான், இன்றும் புலம்பெயா்ந்த தேசங்களில் எவ்வளவோ முற்போக்கான படைப்புகள் மற்றய இனங்களால் படைக்கப்பட்டாலும் அதை ரசிக்கும் பக்குவமற்று நமது இனம் காணப்படுவதாலும் மீண்டும் மீண்டும் ஒரே மசாலாவையே சலிப்பேயின்றி பாா்ப்பதாலும் சினிமாத்தொழிற்சாலை தொடா்ந்து இயங்கவும் குப்பைகளை விற்கவும் முடிகிறது.
    ஆச்சாியத்திலும் ஆச்சாியம் புலம்பெயா்ந்தவா்கள் இன்னும் இவைகளை ரசித்துக்கொண்டிருப்பதும்  அதற்கு வேறு கலாச்சார முத்திரை குத்துவதும்.

    நாம் ஒரு மட்டகரமான ரசனையை விட்டு வெளியேறும் தகுதியை இன்னும் எட்டவில்லை ஆனால் இந்த இயலாமைக்கு நாம் கூறும் நியாயமே” கலாச்சாரம்”.

    • Sutharsan says:
      12 years ago

      Is it only the Tamils? The whole world is like that. If the humans want it that way what is your issue with it. If you want to keep yourself in your own perceived moral high ground you are welcome to do so. But don’t expect the people to follow your preaching. They will do what they like to do. Sorry. As long as they don’t break the law of the land they live in they are good citizens.

  8. Sivaramani says:
    12 years ago

    பீலா வின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். பீலா கூறுவதைப் போல இலங்கை அரச உளவாளி லாலா என்பது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். ராஜபக்ச குடும்பத்தோடு நெருங்கிப் பழகி பிஸ்னஸ் பண்ணும் லைக்காவை நியாயப்படுத்த லைக்காவிடம் சில்லரை பெற்றுக்கொள்ளும் லோக்கல் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். லாலா சொல்லிவரும் கருத்துக்க்ள் இதுவே.:
    1.லைக்கா ராஜபக்சவோடு உறவு வைத்துக்கொள்ளலாம் எனென்றால் அவர்கள் தமிழர்கள்.
    2. லைக்கா எடுக்கும் கத்தி படத்தைத் தாக்காதீர்கள் ஏனென்றால் அது தமிழர்கள் எடுக்கும் படம்
    2. லைக்கா தமிழர்கள் என்பதால் கொள்ளையடிக்கும்முதலாளிகள் என்றாலும் பரவாயில்லை தாக்கதீர்கள். எங்காவது சிங்கள முதலாளிகள் இன்ருந்தால் தேடிப்பிடித்துத் தாக்குங்கள்.
    இப்பேர்பட்ட தத்துவ முத்துக்களை உதிர்க்கும் லாலாவிற்கு யார் சில்லை கொடுத்திருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  9. Sakivara says:
    12 years ago

    கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த மக்கள்  இந்த பிரமாண்ட மண்டபங்களில் தமது  விடுதலைக்கு ஆகுதியாகிய போராளிகளுக்கு  அஞ்சலி செலுத்தி  தம்மை புனிதப்படுத்தி கொன்டார்கள். இன்று……..?

    • lala says:
      12 years ago

      அந்த மண்டபங்களின் உரிமையாளர்கள் மண்டபத்துக்கு யார் வாடைகை தந்தாலும் மண்டபத்தை தருவார்கள் .

      வெறும் மண்டபத்துக்கெல்லாம் செண்டிமென்ட் வைத்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் .

  10. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    இலங்கையின் மிகவும் பிரபல்யமான இசையமைப்பாளர் மோகனராஜ் அவர்களை 17/02/2008 பாரீசில் நிகழ்சியை குழ‌ப்பி அடித்து மிகவும் திட்டம் போட்டு தேசதுரோகிகள் என்ற பட்டம் தீட்டி இரவேடு இரவாக கண்ட இடங்களிளும் போஸ்ரர்கள் ஒட்டியதை இவர்கள் மறந்து .அந்த களைஞனையும் ஏற்பாட்டார்களுக்கும் துரோகப் பட்டம் கொடுத்து விட்டு இந்திய களைஞர்களை பணத்துக்காக ஊக்கிவிப்பது . கேட்க நாதிஅற்ற தமிழ் இணம் என்பதை மறுபடியும் மறுபடியும் கூறிக்கொண்டு இருப்பது .காலம் பதில் சொள்ளும் காலம் வந்துவிட்டது

    • lala says:
      12 years ago

      ##இலங்கையின் மிகவும் பிரபல்யமான ( ?? ) இசையமைப்பாளர் மோகனராஜ் #

      அவரது பாடல்களை இலங்கையில் இருக்கும்போது நானும் கேட்டிருக்கிறேன் . மெல்லிசைப்பாடல்களோடு ஒரு சில இலங்கை திரைப்படஙகளுக்கும் இசையமைத்திருக்கிறார்.

      ஆனால் , என்னவொன்று , அந்த பாடல்களை கேட்ட பின் பாடலை கேட்டவருக்கு இசை மறந்து போய் விடும் அல்லது ஈடுபாடு குறைந்து விடும்.
      அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிலர் இணைந்து பொதுநலன் கருதி ஜெர்மனியில் அவ்வாறு நடந்திருக்க கூடும்..

      காரணம் என்னவாக இருந்தாலும் , அப்படிநடந்திருக்க கூடாதுதான்.
      தப்புதான்..

  11. arun says:
    12 years ago

    What is bad for Srilankan tamil who lives in Sri Lanka, can be good for diasporas ?

  12. Alex Eravi says:
    12 years ago

    I don’t have comments here…

    Already years back wrote about diaspora’s hard earn money & Indian cinema. 

  13. lala says:
    12 years ago

    ## பீலா வின் கருத்தோடு நான் உடன்படுகிறேன் ##

    போச்சுடா , மன்னன் களைத்துப்போனால் பீலா வந்து பீலா விடுவார் . இப்போ அவருக்கு ஜால்ராவாக நீங்களா ?

    ### லாலா சொல்லிவரும் கருத்துக்க்ள் இதுவே.:
    1.லைக்கா ராஜபக்சவோடு உறவு வைத்துக்கொள்ளலாம் எனென்றால் அவர்கள் தமிழர்கள். ##

    விடிய விடிய ராமர் கதை விடிந்து விட்டால் ராமன் சீதைக்கு என்ன முறை என கேட்டது போல் இருக்கிறது ?
    நான் அவ்வாறு சொல்ல வில்லை என்பதை எனது பின்னூட்டங்களை ஒழுங்காக வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.

    தமிழ் முதலாளிகள் இலங்கையில் வர்த்தகம் செய்தால் தவறு எனக்கூறுபவர்கள் . இலங்கைநிறுவங்களும் , சிங்கள வர்த்தகர்களும் புலம்பெயர் தமிழர்களிடம் வர்க்தகம் செய்து சம்பாதிப்பதைபற்றி இது வரை மூச்சு கூட விட வில்லை ஏன் என்று கேட்டிருந்தென் இன்று வரை பதி ல் இல்லை . உங்களிடமாவது இருக்கிறதா ?
    எனது கருத்துகளை திரிப்பதை விடுத்து நேர்மையாக பதில் சொல்லுங்கள் ?

    ##. லைக்கா எடுக்கும் கத்தி படத்தைத் தாக்காதீர்கள் ஏனென்றால் அது தமிழர்கள் எடுக்கும் படம் ##

    இது அடுத்த திரிப்பு .

    கத்தி தமிழர்கள் எடுக்கும் படமென்றால் , இனம் யார் எடுத்த படம் ? மலையாளி எடுத்த படும் .
    ஆனால் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் படி . இரு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரு படங்களிற்குமான நிதி இலங்கை அரசிடமிருந்து பெறப்பட்டதென்பது .

    ஆனால் இனி ஒருவில் வந்த கட்டுரையில் கத்தி படமும் , அதன் தயரிப்பாளர்களும் காட்டமாக விமர்சிக்கப்பட்டனர் . அவர்களிடம்நிதி இல்லாமல் ( உலக மக்களை சுரண்டி கொழுத்த பணம் வைத்திருப்பதாகவும் அவர்கள்தான் சொல்கிறார்கள் ) ராஜபக்சவிடம் நிதி பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினர் .
    ஆனால் இனம் படம் பற்றிய விடயத்தை வசதியாக மறந்து அல்லது நறைத்து விட்டது மட்டுமல்லாமல் , அதனை தூக்கி பிடித்து ஒரு ஆக்கமும் இனி ஒருவில் வெளிவந்திருந்தது .
    அதனை சுட்டி காட்டினேன் . இன்று வரை பின்னூட்ட மன்னர்களிடமிருந்து பதில் இல்லை.

    ## லைக்கா தமிழர்கள் என்பதால் கொள்ளையடிக்கும்முதலாளிகள் என்றாலும் பரவாயில்லை தாக்கதீர்கள். எங்காவது சிங்கள முதலாளிகள் இன்ருந்தால் தேடிப்பிடித்துத் தாக்குங்கள்.##

    திரிப்பு மன்னராக இருப்பீர்கள் போலிருக்கிறது. தாக்குங்கள் என்று நான் என்றுமே சொன்னதில்லை .
    புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யவில்லை. மக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அதனை ஆதாரத்துடன் விளக்குங்கள் என்றுதான் கேட்டிருந்தேன் .
    அதேபோல் புலம்பெயர் தமிழர்களிடம் வர்க்தகம் செய்யும் இலங்கைநிறுவங்களும் முதலாளிகளும் மக்களை கொள்ளையடிக்காமல் நேர்மையாக வர்க்தகம் செய்கிறார்க்ளென்றால் அத்னையும் ஆதார்த்துடன் கேட்டேன் .இன்றுவரை மன்னர்களிடமிருந்து பதில் இல்லை . மன்னர்களின் சிப்பாயான உங்களிடமிருந்தாவது பதில் கிடைக்குமா ?

    ## லைக்காவை நியாயப்படுத்த லைக்காவிடம் சில்லரை பெற்றுக்கொள்ளும் லோக்கல் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்#

    இங்கு நான் லைக்காவைநியாயப்படுத்தவில்லை . இனி ஒருவின் ஒரு பக்க சார்பான , ஒரு பக்க இன சார்பான முதலாளித்துவ எதிர்ப்பையே சுட்டி காட்டியிருக்கிறேன்..

    • Sivaramani says:
      12 years ago

      //தமிழ் முதலாளிகள் இலங்கையில் வர்த்தகம் செய்தால் தவறு எனக்கூறுபவர்கள் . இலங்கைநிறுவங்களும் , சிங்கள வர்த்தகர்களும் புலம்பெயர் தமிழர்களிடம் வர்க்தகம் செய்து சம்பாதிப்பதைபற்றி இது வரை மூச்சு கூட விட வில்லை ஏன் என்று கேட்டிருந்தென் இன்று வரை பதி ல் இல்லை . உங்களிடமாவது இருக்கிறதா ?
      எனது கருத்துகளை திரிப்பதை விடுத்து நேர்மையாக பதில் சொல்லுங்கள் ?//
      இங்கே, தமிழ் முதலாளிகள் சிங்கள முதலாளிகள் என்பது அல்ல பிரச்சனை ராஜபக்சாவின் இனப்பாடுகொலை அரசோடு தமிழனின் பெயரால் உறவு வைத்துக்கொள்ளும் முதலாளிகளைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அக்கட்டுரை, அதை அம்பலப்படுத்த வேண்டும். இனி, சிங்கள முதலாளிகளும் தமிழன் என்ற பெயரால் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் பட்டியல் போட்டு எழுதிவிட்டு பேசுங்கள். சிங்கள முதலாளிகள் என்று மேலோட்டமாகக் கூறிவிட்டு லைக்காவை நியாயப்படுத்தாதீர்கள். லைக்கா கட்டுரையில் கூட ராஜபக்சவின் மைத்துனரான சிங்கள் முதலாளியும் அவர் எப்படி மக்களைச் சுரண்டுகிறார் என்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
      தேசியத் தலைவர் இப்படியான பல்தேசிய முதலாளிகளை வளர்க்க விரும்பவில்லை. அதெல்லாம் தேசியத்துக்கு எதிரானது எனத் தெரிந்து வைத்திருந்தார்.
      //கத்தி தமிழர்கள் எடுக்கும் படமென்றால் , இனம் யார் எடுத்த படம் ? மலையாளி எடுத்த படும் .
      ஆனால் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் படி . இரு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரு படங்களிற்குமான நிதி இலங்கை அரசிடமிருந்து பெறப்பட்டதென்பது .

      ஆனால் இனி ஒருவில் வந்த கட்டுரையில் கத்தி படமும் , அதன் தயரிப்பாளர்களும் காட்டமாக விமர்சிக்கப்பட்டனர் . அவர்களிடம்நிதி இல்லாமல் ( உலக மக்களை சுரண்டி கொழுத்த பணம் வைத்திருப்பதாகவும் அவர்கள்தான் சொல்கிறார்கள் ) ராஜபக்சவிடம் நிதி பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினர் .
      ஆனால் இனம் படம் பற்றிய விடயத்தை வசதியாக மறந்து அல்லது நறைத்து விட்டது மட்டுமல்லாமல் , அதனை தூக்கி பிடித்து ஒரு ஆக்கமும் இனி ஒருவில் வெளிவந்திருந்தது .
      அதனை சுட்டி காட்டினேன் . இன்று வரை பின்னூட்ட மன்னர்களிடமிருந்து பதில் இல்லை.//
      இனம் படத்தை சரியானது என்று இனியொருவில் கட்டுரை வரவில்லை. இனிஒருவில் வந்த கட்டுரை இனம் படத்தை பகிஸ்கரிக்கக் வேண்டும் என்பவர்கள் ஏன் செக்ஸ் படங்களையும், குத்துவெட்டுப் படங்களையும் அனுமதிக்கிறார்கள் என்பதே. இனம் படம் ராஜபக்சா உடன் வியாபாரம் செய்பவர்களால் எடுக்கப்படவில்லை. ஒரு கருத்தை வைத்து எடுக்கப்பட்டது. வேண்டுமானால் இந்திய உளவுத்துரை அதற்குப் பணம் கொடுத்திருக்கலாம். லைக்காவின் கதை வேறு, அகில இலங்கை வியாபாரத்தை ராஜபக்சவோடு கூடிக்கூலாவின் இன்னும் நடத்துகிறது, இதற்கு, வியாபாரிகள் என்றால் அரசோடு உறவு வைத்திருக்கத் தானே வேண்டும் என்று உங்கள் கொமன்டிலேயே நிங்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்போது கதையை மாற்றுகிறீர்கள்.
      இதைவிட, கத்தி படத்தை பகிஸ்கரியுங்கள் என்று இனியொரு கட்டுரையிலோ செய்தியிலோ இதுவரை கூறவில்லை.
      கத்தி படத்தை தூக்கிப்பிடித்து இனிஒருவில் ஒரு ஆக்கமும் வரவில்லைல். இனியொரு சொன்னதெல்லாம் இதை தடை செய்யக் கேட்டால், ஏன் செக்ஸ் படங்களை ஏன் அனுமதிக்கிறீர்கள் என்பதே, அது சரியானது, நீங்கள் இல்லாதவற்றை போய்யாக திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் இதைத்தான் பீலா கேட்டார் ஏன் பொய்களை அனுமதிக்க வேண்டும் என்று. பொய் தகவல் என்று தெரிந்தால் இனிஒரு நீக்கிவிடலாம்.
      //புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யவில்லை. மக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அதனை ஆதாரத்துடன் விளக்குங்கள் என்றுதான் கேட்டிருந்தேன் .
      அதேபோல் புலம்பெயர் தமிழர்களிடம் வர்க்தகம் செய்யும் இலங்கைநிறுவங்களும் முதலாளிகளும் மக்களை கொள்ளையடிக்காமல் நேர்மையாக வர்க்தகம் செய்கிறார்க்ளென்றால் அத்னையும் ஆதார்த்துடன் கேட்டேன் .இன்றுவரை மன்னர்களிடமிருந்து பதில் இல்லை . மன்னர்களின் சிப்பாயான உங்களிடமிருந்தாவது பதில் கிடைக்குமா ?//
      புலம்பெயர் தமிழர்களை என்று பொதுப்பட கட்டுரை கதைக்கவில்லை, லைக்கா பற்றியே கதைத்தது, அவர்களின் கொள்ளை அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் லைக்காவை நியாயப்படுத்த பொய்களுக்கு மேல் பொய்களைச் சொல்லி மற்றவர்களின் நேரத்தை விரையமாக்கி வருகிறீர்கள். உங்களது நோக்கம் லைக்கா விற்கு ஆதரவாக பிராச்சாரம் செய்வதே.
      //இங்கு நான் லைக்காவைநியாயப்படுத்தவில்லை . இனி ஒருவின் ஒரு பக்க சார்பான , ஒரு பக்க இன சார்பான முதலாளித்துவ எதிர்ப்பையே சுட்டி காட்டியிருக்கிறேன்..//
      நீங்கள லைக்காவை நியாயப்படுத்த எப்படி பொது வெளியில் பொய்யான கதைகளைக் கட்டிவிடுகிறீர்கள் என்று தெளிவாக மேலே சொல்லியிருக்கிறேன்,

  14. Alex Eravi says:
    12 years ago

    In London… “Star Vijay Night”  
    In Toronto… “Star Dance Music Night” 

    What is in Vijay TV Stars…?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...