Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில் ராஜபக்சேவைப் பதவியேற்ற விடாதீர்கள் : மோடியின் வை.கோ கோரிக்கை

இனியொரு... by இனியொரு...
02/14/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

‘இரண்டாம் உலக யுத்தத்தின்போது லட்சக் கணக்கான யூதர்களை vaikoபடுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆஸ்விஸ் சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம்.’

இவ்வாறு வை.கோபாலசாமி தனது புதிய அறிக்கையை ஆரம்பித்துள்ளார். வை.கோ இன் புதிய அரசியல் தலைவரான நரேந்திர மோடி முசோலீனி, ஹிட்லர் ஆகியோரால் ஆட்கொள்ளப்பட்டவர். மேடியின் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கும் போதே ஹிட்லரைப் போன்று இனத் தூய்மையை இந்தியாவும் பேணவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தது. மோடி அதனைத் தனது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தினார்.

இவற்றையெல்லாம் வை.கோ அறிந்திராதவரல்ல. இனப்படுகொலை குறித்துப் பேசுவற்கு தார்மீக நியாயத்தை இழந்து இனக்கொலையாளி மோடியுடன் கூட்டுவைத்திருக்கும் வை.கோ இன் அறிக்கை மேலும் தொடர்கிறது:

ஆனால், நாஜிகள்கூட செய்யாத மிகக் கொடூரமான அழிவுகளை ஈழத் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசின் இராணுவத்தினர் செய்தனர் என்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அண்மையில் மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைகப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள், குழாய்கள் பதிப்பதற்காக மண்ணை அகழ்ந்தபோது வெளிப்பட்டன. 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்கள இராணுவத்தினர் ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வதையும், குறிப்பாகத் தமிழ் இளைஞர்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொல்வதையும், தமிழ்ப் பெண்கள் மிகக் கோரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதையும் உலகத்துக்கு சுட்டிக்காட்டியபோது நமது குரல் அலட்சியப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் செவிகள் செவிட்டுக் காதுகள் ஆகின. விழிகள் குருட்டுக் கண்களாக இருந்தன. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி, சேனல்-4 காணொளியில் 8 இளம் தமிழர்கள் கைகள், கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி மனிதாபிமானம் உள்ளோர் மனங்களை உலுக்கியது. தமிழர்கள் நெஞ்சில் விழுந்த பேரிடி என 2010 டிசம்பர் 2 ஆம் தேதி அதே சேனல்-4 காணொளியில், இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்கு ஆளாகி, சிதைந்து நிர்வாண சடலமாக மண்ணில் கிடந்த காட்சி தமிழ் இனப்படுகொலையின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தியது. மாவீர மகன் பாலச்சந்திரன், மார்பிலே 5 குண்டுகள் தாங்கி பூமியில் கிடந்த காட்சியை சேனல்-4 இல் கண்டு தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எரிமலையாய் சீறினார்கள். 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது.

அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது. தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதற பலாத்காரம் செய்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது. இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்த இனக்கொலை குற்றத்துக்கு ‘சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்’ என்ற ஆவேச முழக்கம், மார்ச் 10 ஆம் தேதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் விண்முட்ட எழுவதற்கு புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் சங்கமிக்க உள்ளனர். அதற்கு ஆயத்தப்படுத்தவும், நீதி கேட்கும் குரல் உலகெங்கிலும் ஒலிக்கவும் பிப்ரவரி 26 ஆம் தேதி, தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் தன்மானத் தமிழர்கள் சாதி, மதம், கட்சிகள் கடந்து நீதி கேட்கும் போர் முழக்கத்தை எழுப்பிட தயாராகிக்கொண்டுள்ளனர். இந்தச் சூழலில், கொடியவன் மகிந்த ராஜபக்சே மார்ச் 10 ஆம் தேதி லண்டனில் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளான். கூண்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய மகிந்த ராஜபக்சேவுக்கு காமன்வெல்த் அமைப்பு தலைவனாக முடிசூட்டியது மன்னிக்க முடியாததாகும்.

ஹிட்லரையும் மகிந்த ராஜபக்சவைவும் ஏன் வை.கோ இன் மோடியையும் தீனி போட்டு வளர்ப்பவர்கள் மேற்கு உலகம் என்பதும் வை.கொ இற்குத் தெரியாததல்ல. ராஜபக்சே இனக்கொலையாளி என்றால் இனப்படுகொலையை வியாபாரமாக்கும் வை.கோ போன்ற பிழைப்புவாதிகளும் அதற்குத் துணை செல்கின்றவர்களே.

முருகதாசன் தீக்குளித்து மடிந்த மார்ச் 10 ஆம் தேதியில், தமிழர்கள் ஜெனீவாவில் நீதி கேட்டு அறப்போர் நடத்தும் நாளில், லண்டனில் பதவியேற்பு விழாவுக்கு திட்டமிட்டுள்ளான். முன்பு லண்டன் மாநகரிலே ஈழத் தமிழர்கள் ஆர்த்தெழுந்து சிங்கள அதிபரை விரட்டி அடித்த அதே பாடத்தை மீண்டும் புகட்ட வேண்டும். ‘பிரித்தானிய மண்ணுக்குள் நுழையாதே! இங்கிலாந்து அரசே இந்த அநீதிக்குத் துணைபோகாதே!’ எனும் அறப்போருக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டுகிறேன்” இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜபக்சவிற்கு எதிரான போராட்டத்தைப் புலம் பெயர் தமிழர்கள் நடத்துவார்கள். ஆனால் அப்போராட்டம் நரேந்திர மோடி போன்றவர்களுக்கும் எதிராக விரிவடைந்து உலகில் இனப்படுகொலைகக்கு எதிராகப் போராடும் மக்கள் பிரிவுகளோடு இணைந்து கொள்ளும் போதே அதன் உண்மையான மனிதாபிமான உள்ளர்த்தம் வெளிப்படும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா : முருகபூபதி

இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா : முருகபூபதி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...