வழமை போல லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமரை இரைஞ்சும் சுலோகங்கள் தாங்கிச் செல்லப்பட்டன. அழித்தவர்களையே மீண்டும் மீண்டும் அடிபணிந்து வணங்குவது போன்ற நிகழ்வுகள் நான்குவருடங்களின் பின்னும் தொடர்வதை இது நினைவுபடுத்தியது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருந்தபோதும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அந்த நாட்டை பிரிட்டன் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தார்கள்.
அடுத்தவருடம் இதே போன்ற நிகழ்வு புரட்சிகர சுலோகங்களோடும் எதிர்காலத்திற்கான உறுதியான அரசியல் வேலைத்திட்டங்களோடும் அரசியல் பிழைப்புவாதிகளின் அழிவில் நடைபெறும் என எதிர்பார்ப்போம்.